Published:Updated:

ராசிபலன்கள்

ராசிபலன்கள்

ராசிபலன்கள்

ராசிபலன்கள்

Published:Updated:

செப்டம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை

'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்கள்

மேஷம்: அனுசரித்துப் போகும் குணம் கொண்டவர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் நீசமானாலும், 4-ல் கேந்திரபலம் பெற்றிருப்பதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணத்தில் ஒரு பகுதி கிடைக்கும். 18-ம் தேதி முதல் சூரியன் சனியுடன் இணைவதால், கடன் பிரச்னை தலை தூக்கலாம். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும். வியாபாரத்தில், பழைய சரக்குகளை தள்ளுபடி விலையில் விற்று முடிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டினால், அமைதி     யாக ஏற்றுக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நேரமிது.  

ராசிபலன்கள்

ரிஷபம்: எங்கும் எதிலும் வெற்றியை விரும்புபவர்களே! புதன் சாதகமாக இருப்பதால், உற்சாகமாக செயல்படுவீர்கள். கணவர் உங்கள் மனம்கோணாமல் நடந்து கொள்வார். உறவினர்கள், தோழிகளால் ஆதாயம் உண்டு. 18-ம் தேதி முதல் 5-ல் நிற்கும் சனியுடன் சூரியனும் சேர்வதால், பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். ராகு, கேதுவால் வீண் விரயம், ஏமாற்றம் வந்து செல்லும். வியாபாரத்தில், புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். ஆனால், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். சகிப்புத்தன்மை தேவைப்படும் தருணமிது.  

ராசிபலன்கள்

மிதுனம்: சுற்றம் சூழ வாழ்பவர்களே! செவ்வாய் வலுவாக இருப்பதால், உங்களின் முயற்சிகள் வெற்றியடையும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். பிள்ளைகள் நல்லபடியாக நடந்து கொள்வார்கள். 18-ம் தேதி முதல் சூரியன் 4-ல் நுழைவதால், தாயாரின் உடல் நலம் பாதிக்கப்படலாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில், பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். கமிஷன், ஷேர் மூலம் லாபம் வரும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி அமையும். திடீர் வெற்றி தரும் வேளையிது.      

ராசிபலன்கள்

கடகம்: கடின உழைப்பால் உயர்ந்த நிலையை அடைபவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். வெள்ளியாலான பொருட்கள் வாங்குவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த உறவினர், தோழியை சந்தித்து மகிழ்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில், வாடிக்கையாளர் எண்ணிக்கை உயரும். குருபகவான் 10-ல் தொடர்வதால் உத்யோகத்தில் மன அமைதி குறைய நேரிடலாம். நாவான்மையால் வெல்லும் தருணமிது.

ராசிபலன்கள்

சிம்மம்: சவால்களை சந்திக்க தயங்காதவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். 18-ம் தேதி முதல் ராசிநாதன் சூரியன், சனியுடன் சேர்வதால்... டென்ஷன், உடல் உபாதை வந்து நீங்கும். 14-ம் தேதி முதல் 15-ம் தேதி மதியம் 1 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தை புது முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் தொந்தரவு தந்த அதிகாரி மாற்றப்படுவார். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய வேளையிது.  

ராசிபலன்கள்

கன்னி: சூழலுக்கு தகுந்தாற்போல் செயல்படுபவர்களே! செவ்வாய் லாப வீட்டில் வலுவாக இருப்பதால், நினைத்தது நிறைவேறும். நிலம், வீடு வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். 18-ம் தேதி முதல் ராசிக்குள் நிற்கும் சனியுடன் சூரியன் சேர்வதால்... முன்கோபம், உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். 15-ம் தேதி மதியம் 1 மணி முதல் 17-ம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். சிக்கனம் தேவைப்படும் நேரமிது.

ராசிபலன்கள்

துலாம்: தடைகளைக் கண்டு தளராதவர்களே! புதன் சாதகமாக இருப்பதால், உங்கள் ரசனைக்கேற்ற வீட்டு மனை வாங்குவீர்கள். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். 18-ம் தேதி முதல் சூரியன் சனியுடன் சேர்வதால்... வீண் டென்ஷன், திடீர் பயணங்கள் ஏற்படலாம். 18-ம் தேதி முதல் 20-ம் தேதி காலை 10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், பொறுமையுடன் செயல்படுங்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்து கொள்வார். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் வேளையிது.

ராசிபலன்கள்

விருச்சிகம்: புரட்சிகரமாக சிந்திப்பவர்களே! செவ்வாய் சாதகமாக இருப்பதால், அலைச்சல் தந்த காரியங்கள் உடனே முடியும். கணவர் பாசமாகப் பேசுவார். உடன்பிறந்தவர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்து கொள்வார்கள். ராகு, குரு பலவீனமாக இருப்பதால் வீண் குழப்பங்களால் மன இறுக்கம் அதிகரிக்கும். 20-ம் தேதி காலை 10 மணி முதல் 22-ம் தேதி மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும் நேரமிது.

ராசிபலன்கள்

தனுசு: சவால்களுக்கு அஞ்சாதவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், எதிர்பாராத வகையில் பணம் வரும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். உறவினர்கள், தோழிகள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். 8-ல் செவ்வாய் மறைந்திருப்பதால், வீண் டென்ஷன் வந்து நீங்கும். உறவினர் வகையில் செலவுகள் வந்து போகும். 22-ம் தேதி மாலை 5 மணி முதல் 24-ம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அதிகாரி களிடம் செல்வாக்கு கூடும். சுற்றியிருப்பவரின் சுயரூபத்தை அறியும் நேரமிது.

ராசிபலன்கள்

மகரம்: ஆரவாரமின்றி சாதிப்பவர்களே! யோகாதிபதி புதன் 19-ம் தேதி முதல் 9-ல் உச்சம் அடைவதால், உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று புது இடம் வாங்குவீர்கள். 25, 26 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால்... உடல் அசதி வந்து நீங்கும். 18-ம் தேதி முதல் சனியுடன் சூரியன் சேர்வதால், தந்தைக்கு மருத்துவ செலவுகள் வரலாம். வியாபாரத்தில் ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். சமய சந்தர்ப்பம் அறிந்து காய் நகர்த்தும் வேளையிது.

ராசிபலன்கள்

கும்பம்: நிர்வாகத் திறமை அதிகமுள்ளவர்களே! செவ்வாய் 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். 18-ம் தேதி முதல் 8-ல் நிற்கும் சனியுடன் சூரியன் சேர்வதால்... டென்ஷன், உடல் உபாதை வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். 27-ம் தேதி சந்திராஷ்டமம் தொடங்குவதால், எதிலும் நிதானம் அவசியம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். தைரியமான முடிவுகளெடுக்கும் காலமிது.

ராசிபலன்கள்

மீனம்: ஈர மனசுக்கு சொந்தக்காரர்களே! சந்திரன் சாதகமாக இருப்பதால்,  பணவரவு திருப்தி தரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 18-ம் தேதி முதல் சனியுடன் சூரியன் சேர்வதால்... வீண் அலைச்சல் ஏற்படலாம். வியாபாரத்தில் வரவு சுமார்தான். வேலையாட்கள், வாடிக்கையாளர்களுடன் விவாதம் வேண்டாம். உத்யோகத்தில் புது பொறுப்புகள் கைக்கு வரும். வெளுத்ததெல்லாம் பாலில்லை என்பதை உணரும் தருணமிது.