Published:Updated:

அனுகூல சந்திராஷ்டமம்!

அனுகூல சந்திராஷ்டமம்!

பிரீமியம் ஸ்டோரி

ருவரது ஜென்ம ராசிக்கு, அதாவது சந்திரன் இருக்கும் இடத்துக்கு எட்டாவது இடத்தில் கோச்சாரப்படி சந்திரன் வருவது சந்திராஷ்டமம் ஆகும். எட்டில் சந்திரன் இரண்டேகால் நாள் உலவுவார். மனோகாரகன் சந்திரன் எட்டில் உலவுவதால் மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். உடலுக்கு காரகனான சந்திரன் எட்டில் உலவுவதால் உடல் நலம் பாதிக்கவும் வாய்ப்பு உண்டு என்றாலும், சந்திரன் ஜென்ம நட்சத்திரத்துக்கு அனுகூலமான நட்சத்திரத்தில் உலவும் போது பாதிப்பு நிச்சயம் குறையும்.

சந்திர வழிபாடு!

சந்திர பலம் குறைவான காலகட்டத்தில், குறிப்பாக சந்திராஷ்டம தினங்களில், கணபதியையும் சந்திரனின் அதிதேவதையான பார்வதிதேவியையும் நெய்தீபம் ஏற்றி வழிபடுவதால், கெடுபலன்கள் குறையும்.

அனுகூல சந்திராஷ்டமம்!

திங்கட்கிழமைகளில் நீர், பசும்பால், அரிசி ஆகியவற்றை தானம்  தருவது விசேஷம். சோமாவார (திங்கட் கிழமைகளில்) விரதம் இருந்து பிறைசூடிய பெருமானை வழிபடுவதாலும் சந்திரனின் திருவருளை பரிபூரணமாகப் பெறலாம். வெள்ளிப் பாத்திரங்களை உபயோகிப்பது, வெண்ணிற ஆடை அணிவது ஆகியன எளிய பரிகாரங்கள் ஆகும்.

தொகுப்பு: ராமமூர்த்தி, நெல்லை-2

சந்திரனுக்கு உகந்த முத்து...

நவ ரத்தினங்களில் சந்திரனுக்கு உரியது முத்து. ஒளி பொருந்திய  உருண்டை வடிவானது. சிப்பிக்குள் நுழையும் அந்நிய பொருள் சிப்பியை உறுத்த, அதன் விளைவாக சுரக்கும் திரவமே முத்தாக மாறுகிறது. முத்துக்களில் உருண்டை வடிவானவையே சிறப்பானதாகும். ஒழுங்கற்ற வடிவம் கொண்ட முத்துக்களும் உண்டு. வடிவத்தின் அடிப்படையில் முத்துக்களை மணி, துளி என்ற பெயர்களில் அழைப்பார்கள். செயற்கையாகவும் முத்துக்கள் தயாரிக்கப்படுகின்றன.

நல்லதரமான முத்துக்கள் ஒருவரது  மன ஆற்றலை மேம்படுத்தும். உணர்வுகளை அமைதிப்படுத்தும். மன அமைதியும் உண்டாகும். தியானம் இருப்பவர்கள் முத்துமாலை அணிந்துகொண்டு தியானிப்பது சிறப்பு. இதன் வடமொழிப் பெயர்  மோதி. முத்து பதித்து மோதிரம் அணிபவர்கள் மோதிர விரலில்  திங்கள் கிழமைகளில் (முதல் முறை) அணிவது விசேஷம். சந்திரன் சுப வீட்டில் இருப்பது, சுபவீட்டு அதிபதியாக இருப்பது அல்லது சுபவீட்டு அதிபதியாக இருந்தாலும் பலவீனப்பட்டு இருப்பது... இத்தகைய அமைப்பு உள்ளவர்கள் முத்து நகைகளை அணிவதன் மூலம் சந்திர பலம் கூடும்; சந்தோஷம் பெருகும்.

ஜென்ம நட்சத்திரம் -- அனுகூல சந்திராஷ்டம நட்சத்திரம்

அசுவினி -- அனுஷம், கேட்டை

பரணி - -கேட்டை, விசாகம்

கார்த்திகை -- அனுஷம்

ரோகிணி -- பூராடம், உத்திராடம்

மிருகசீரிஷம் -- உத்திராடம், திருவோணம்

திருவாதிரை -- திருவோணம், அவிட்டம்

புனர்பூசம்--  அவிட்டம், சதயம்

பூசம் -- சதயம், பூரட்டாதி

ஆயில்யம் -- அவிட்டம், பூரட்டாதி்்

மகம் -- உத்திரட்டாதி, ரேவதி

பூரம் -- பூரட்டாதி, ரேவதி

உத்திரம் -- அசுவினி, பரணி

அஸ்தம் -- பரணி, கார்த்திகை

சித்திரை -- கார்த்திகை, ரோகிணி

சுவாதி -- ரோகிணி, மிருகசீரிஷம்

விசாகம் -- மிருகசீரிஷம், திருவாதிரை

அனுஷம் -- திருவாதிரை, புனர்பூசம்

கேட்டை -- மிருகசீரிஷம், புனர்பூசம்

மூலம் -- பூசம், ஆயில்யம்

பூராடம் -- புனர்பூசம், ஆயில்யம்

உத்திராடம் -- மகம், பூரம்

திருவோணம் -- பூரம், உத்திரம்

அவிட்டம் -- உத்திரம், அஸ்தம்

சதயம் -- அஸ்தம், சித்திரை

பூரட்டாதி -- சித்திரை, சுவாதி

உத்திரட்டாதி -- சுவாதி, விசாகம்

ரேவதி -- சித்திரை, விசாகம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு