Published:Updated:

பிறந்த நாள் பலன்கள்

17-2-2015 முதல் 2-3-2015 வரை‘நவக்கிரக ரத்னஜோதி’ சந்திரசேகரபாரதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

பிறந்த தேதிகள்: 1, 10, 19, 28  

உங்கள் திறமைக்கும் உழைப் புக்கும் உரிய பயன் கிடைக்கும் நேரம் இது. செய்துவரும் தொழிலில் முன் னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். பொதுப் பணிகளில் ஈடுபாடு கூடும். கலைத்துறையினருக்கு யோகமான காலம் இது. குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தினால் நஷ்டப் படாமல் தப்பலாம். உடன் பிறந்தவர் களால் அனுகூலம் ஏற்படும்.

மக்கள் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். எதிரிகள் இருப்பார்கள் என்றாலும் சமாளிப்பீர்கள். பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது. புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். பேச்சில் கடுமையைக் குறைத்து, இனிமையைக் கூட்டிக் கொண்டால் குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் உங்கள் மதிப்பைக் காத்துக் கொள்ளலாம்.

1ம் தேதி பிறந்தவர்களுக்கு: தொழிலில் வளர்ச்சி காணலாம். பல வழிகளில் வருவாய் வந்து சேரும்.

10ம் தேதி பிறந்தவர்களுக்கு: சுப விரயம் ஆகும். முன்பின் தெரியாத வர்களால் பிரச்னைகள் ஏற்படும்.  

19ம் தேதி பிறந்தவர்களுக்கு: உடன்பிறந்தவர்களால் நலம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும்.

28ம் தேதி பிறந்தவர்களுக்கு: பொதுப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். போட்டி, பொறாமைக் காரர்களால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட தேதிகள்: பிப்ரவரி 18, 19, 22, 27, 28, மார்ச் 1.

பிறந்த தேதிகள்: 2, 11, 20, 29

புதியவர்கள் உங்களுக்கு உதவி புரிய முன்வருவார்கள். பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். ஏற்றுமதிஇறக்குமதி இனங்கள் லாபம் தரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். தான, தர்மப்பணிகளிலும், தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும்.

உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கெல்லாம் பிரச்னைகள் சூழும். பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும். அரசாங்க அபராதம் கட்ட வேண்டிவரும். தொழில் ரீதியாக ஒரு மாற்றம் உண்டாகும். பொருள் கொடுக்கல்வாங்கல் இனங்களில் விழிப்பு தேவை. பிறருக்கு வாக்கு கொடுக்க வேண்டாம்.

2ம் தேதி பிறந்தவர்களுக்கு: புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும்.

11ம் தேதி பிறந்தவர்களுக்கு: மக்களால் சில பிரச்னைகள் சூழும். உடல் நலனில் கவனம் தேவை. அரசாங்கத்தாரால் பிரச்னைகள் ஏற்படும். தந்தையால் மன வருத்தம் உண்டாகும்.

20ம் தேதி பிறந்தவர்களுக்கு: திரவப் பொருட்கள் லாபம் தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும்.

29ம் தேதி பிறந்தவர்களுக்கு: சுப காரியங்கள் நிகழும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.

அதிர்ஷ்ட தேதிகள்: பிப்ரவரி 20, 23, 28, மார்ச் 2.

பிறந்த தேதிகள்: 3, 12, 21, 30

மனத்துக்கு இனிய சம்பவங்கள் நிகழும் நேரம் இது. தொலைதூரத் தொடர்பு ஆக்கம் தரும். சுகானுபவம் உண்டாகும். புதிய சொத்துக்கள் சேரும். கலைத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு கூடும். பெரியவர்களது ஆசிகள் கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழிலில் வளர்ச்சி காணலாம்.

ஆராய்ச்சியாளர்களது மதிப்பு உயரும். ஆன்மிகவாதிகளுக்கு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படும். பொருள் கொடுக்கல்வாங்கலில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. கண் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். மக்களால் மன அமைதி குறையும். தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.

3ம் தேதி பிறந்தவர்களுக்கு: புனிதப்பணிகளில் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும்.  

12ம் தேதி பிறந்தவர்களுக்கு: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெரியவர்கள், மேலதி காரிகளிடம் பணிவு தேவை.

21ம் தேதி பிறந்தவர்களுக்கு: சிறு சங்கடம் ஏற்படும். உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. அரசுப் பணிகளில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும்.

30ம் தேதி பிறந்தவர்களுக்கு: வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்ட தேதிகள்: பிப்ரவரி .19, 20, 21, 26, மார்ச் 1.

பிறந்த தேதிகள்: 4, 13, 22, 31

நிர்வாகத்திறமை கூடும் நேரம் இது. அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். முக்கியப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவுவார்கள். மக்களால் அனுகூலம் உண்டாகும். மேலதிகாரி களின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாகவும், அதனால் அனுகூலம் பெறவும் சந்தர்ப்பம் கூடிவரும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும்.

அறிவாற்றல் பளிச்சிடும். தொழிலா ளர்கள், உத்தியோகஸ்தர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு, இடமாற்றம் ஆகியவை கிடைக்கும். வாழ்க்கைத்துணைவரால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். சகிப்புத் தன்மை தேவை. பிறரிடம் கோபப் படாமல் நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது. தொழில் கூட்டாளிகளால் பிரச்னைகள் சூழும். பக்குவமாகச் சமாளிக்கவும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை.

4ம் தேதி பிறந்தவர்களுக்கு: பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். மக்களால் நலம் உண்டாகும். உயர்பதவி கிடைக்கும்.

13ம் தேதி பிறந்தவர்களுக்கு: அரசு உதவி கிடைக்கும். முக்கியஸ்தர்களது சந்திப்பு பயன்படும். முக்கியமானதொரு எண்ணம் ஈடேறும்.

22ம் தேதி பிறந்தவர்களுக்கு: ஜலப்பொருட்கள் லாபம் தரும். மன உற்சாகம் பெருகும். மக்களால் அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும்.

31ம் தேதி பிறந்தவர்களுக்கு: உயர் பொறுப்புகள் தேடிவரும். நல்லவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பொருள் வரவு கூடும்.

அதிர்ஷ்ட தேதிகள்: பிப்ரவரி 18, 19, 21, 22, 27, 28, மார்ச் 1.

பிறந்த தேதிகள்: 5, 14, 23

துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும் நேரம் இது. போட்டிகளில் வெற்றி கிடைக்கும். நல்ல தகவல் வந்து சேரும். முக்கியமான எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். வழக்கில் சாதகமான திருப்பமும் வெற்றியும் கிடைக்கும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். நல்லவர்கள் உங்களுக்கு நலம் பல புரிவார்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தொழிலாளர் களுக்கும் விவசாயிகளுக்கும் செழிப் பான சூழ்நிலை நிலவிவரும். உடன் பிறந்தவர்கள் நலம் புரிவார்கள்.

மக்களாலும் வாழ்க்கைத் துணை வராலும் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் அமைதி காண பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. கண் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். ரேடியோ, வீடியோ, டி.வி., பத்திரிகை போன்ற தகவல் தொடர்பு இனங்களைச் சேர்ந்தவர் களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். சமுதாய நல முன்னேற்றப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்களால் ஆதாயம் கிடைக்கும். தர்ம காரியங் களில் ஈடுபாடு உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். தனவந்தர் ஆதரவு கிடைக்கும்.

5ம் தேதி பிறந்தவர்களுக்கு: மனத்துணிவு கூடும். செயலில் வேகம் பிறக்கும். போட்டிகளில் வெற்றி கிட்டும்.

14ம் தேதி பிறந்தவர்களுக்கு: தந்தையால் சங்கடம் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவைப்படும். குடும்பத்தில் சலசலப்புகள் உண்டாகும்.

23ம் தேதி பிறந்தவர்களுக்கு: சுபிட்சம் கூடும். மன மகிழ்ச்சி பெருகும். சுப காரியங்கள் நிகழும். பண நடமாட்டம் அதிகரிக்கும். வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.  

அதிர்ஷ்ட தேதிகள்: பிப்ரவரி 18, 22, 23, மார்ச் 2.

பிறந்த தேதிகள்: 6, 15, 24

உங்கள் சுயபலம் கூடியிருக்கும் நேரம் இது. எண்ணங்களில் மலர்ச்சி உண்டாகும். பண நடமாட்டம் அதிகரிக்கும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். மக்களால் மன மகிழ்ச்சி பெருகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு உதவுவார்கள். ஜலப் பொருட்கள் லாபம் தரும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். மாதர்களது நிலை உயரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மாணவர்களது நோக்கம் நிறைவேறும்.

கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். அரசியல், நிர்வாகம் போன்ற துறையினருக்கு முன்னேற்றம் காணக் குறுக்கீடுகள் முளைக்கும். அரசாங்கத்தாரால் சங்கடம் ஏற்படும். அரசு அபராதம் கட்ட வேண்டிவரும். கண், கால் பாதம் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு இப்போது ஏற்படும். மருத்துவச் செலவுகள் சற்று அதிகரிக்கவே செய்யும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஞான மார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்குத் தெளிவு பிறக்கும்.

6ம் தேதி பிறந்தவர்களுக்கு: சுபிட்சம் கூடும். மக்களால் மன மகிழ்ச்சி பெருகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். சுப காரியங்கள் நிகழும்.

15ம் தேதி பிறந்தவர்களுக்கு: நண்பர்கள் உதவுவார்கள். வாழ்க்கைத்துணை நலம் சிறக்கும். தந்தை நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

24ம் தேதி பிறந்தவர்களுக்கு: பயணத்தால் நலம் உண்டாகும். சுகானுபவம் ஏற்படும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட தேதிகள்: பிப்ரவரி 20, 23, 24.

பிறந்த தேதிகள்: 7, 16, 25

உங்கள் அறிவாற்றல் பளிச்சிடும் நேரம் இது. நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவுவார்கள். நிலங்களால் ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். மாணவர்களது நிலை உயரும். தாயாராலும் தாய் வழி உறவினர்களாலும் நலம் பெருகும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு, கமிஷன் ஏஜென்ஸி போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள்.

எதிர்ப்புகள் குறையும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு அதிகரிக்கும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும்.ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரும். தந்தை நலனில் கவனம் தேவைப்படும். அரசியல்வாதிகளும், அரசுப்பணியாளர் களும் பொறுப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கும் சரிவுக்கும் ஆளாகாமல் தப்பலாம்.

7ம் தேதி பிறந்தவர்களுக்கு: மன உற்சாகம் பெருகும். பண வரவு கூடும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். நண்பர்களாலும், தொழில் பங்கு தாரர்களாலும், வாழ்க்கைத்துணை வராலும் அனுகூலம் உண்டாகும்.

16ம் தேதி பிறந்தவர்களுக்கு: எதிர்ப்புகள் இருக்கும். உடல்நலம் பாதிக்கும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும்.

25ம் தேதி பிறந்தவர்களுக்கு: சுபிட்சம் கூடும். மக்களால் நலம் உண்டாகும். சுப காரியங்கள் நிகழும். பெரியவர்களின் ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும்.  

அதிர்ஷ்ட தேதிகள்: பிப்ரவரி 20, 23, 24, 25, 28, மார்ச் 2.

பிறந்த தேதிகள்: 8, 17, 26

பொது நலப் பணிகளில் ஈடுபாடு கூடும் நேரம் இது. முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். பண வரவு அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். மக்களால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். புதிய பதவி கிடைக்கும். பொறுப்புகள் கூடும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். தொலைதூரப் பயணத்தால் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்களுக்கு ஆதாயம் பன்மடங்கு கூடும். எதிர்ப்புகள் இருந்தாலும் அவற்றைச் சமயோசிதமாக  சமாளித்து விடுவீர்கள்.

வயிறு சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். உத்தியோகஸ்தர் களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். ஆசிரியர்களது நிலை உயரும். மருத்துவர்கள் போற்றப் படுவார்கள். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறை களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றம் காணக் குறுக்கீடுகள் இருந்துவரும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினால்தான் நல்லமுறையில் தேர்ச்சி பெற முடியும். மக்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. சற்று விட்டுக்கொடுத்துச் செல்லவும்.  

8ம் தேதி பிறந்தவர்களுக்கு: அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடும். புதிய பதவி கிடைக்கும். சுப காரியங்கள் நிகழும்.

17ம் தேதி பிறந்தவர்களுக்கு: உயர் பொறுப்புகள் கூடிவரும். மக்களால் சிறு சங்கடம் உண்டாகும்.

26ம் தேதி பிறந்தவர்களுக்கு: புனிதப் பணிகளில் ஈடுபாடு கூடும். சுப காரியங்கள் நிகழும். பண நடமாட்டம் அதிகமாகும். கலைத்துறை ஊக்கம் தரும். பெண்களால் நலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட தேதிகள்: பிப்ரவரி 17, 21, 25, 26, 28.

பிறந்த தேதிகள்: 9, 18, 27

நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். நற் பணிகளில் ஈடுபாடு கூடும். பண வரவு அதிகமாகும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் சேர்க்கை நிகழும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். எதிரிகள் அடங்குவார்கள். வியாபாரம் பெருகும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.

கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்களால் நலம் உண்டாகும். அரசியல்வாதிகளும் அரசுப் பணியா ளர்களும் பொறுப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். தந்தை நலனில் அக்கறை தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும். கண், கால் பாதம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். திடீர்க் கோபம் வரும்; அதனால் சஙகடமும் உண்டாகும்.

9ம் தேதி பிறந்தவர்களுக்கு: பொருளாதார நிலை உயரும். மன மகிழ்ச்சி கூடும். புதிய பொருட்கள் சேரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.  

18ம் தேதி பிறந்தவர்களுக்கு: காரியத்தில் வெற்றி கிட்டும். தொழில் முன்னேற்றத்திட்டங்கள் ஈடேறும். தந்தை நலனில் அக்கறை தேவைப்படும்.

27ம் தேதி பிறந்தவர்களுக்கு: தெய்வ தரிசனம் கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். ஞான மார்க்கத்தில் ஈடுபாடு உண்டாகும். திரவப் பொருட்கள் லாபம் தரும். மனத்தில் தெளிவு பிறக்கும்.

அதிர்ஷ்ட தேதிகள்: பிப்ரவரி 17, 18, 24, 26, 27.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு