Published:Updated:

உங்கள் வீடும், விருட்சங்களும்!

வளம் தரும் வாஸ்துவித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

உங்கள் வீடும், விருட்சங்களும்!

வளம் தரும் வாஸ்துவித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

Published:Updated:

னைவீடு அமைப்பதில் உள்ள குறைபாடுகளை விவரிக்கும் வேதைகளில், சிவ வேதை முதல் காத வேதை வரையிலும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் இன்னும் சில வேதைகளை அறிவோம். 

துக்த விருட்ச வேதை: வீட்டின் கிழக்கிலோ, வடக்கிலோ பால் உள்ள பெரிய மரங்கள் இருந்தால் செல்வக் குறைவு ஏற்படும்   சகட வேதை: தலை வாயிலின் மேற்குப்பக்கத்தில் வேறொரு வாசல் வைத்தால் வீட்டுத் தலைவனின் குலம் திசை மாறிப் போய்விடும் (குலம் என்பதற்கு இடம், தெய்வம், இனம் என்று பொருள்கள் உண்டு).

கண்டக விருட்ச வேதை: இல்லத்தின் முற்றத்தில் முள் உள்ள மரங்கள் வளர்ந்தால் பகைவரால் பதற்றம், முயற்சியில் தோல்வி, மனக் கலக்கம் கூடிவரும் காந்தி வேதை: வீட்டின் சுவர்களில் மாறுபட்ட வண்ணங்கள் இருந்தால், வீட்டுத் தலைவனுக்கு தீய நடத்தையில் நாட்டம் ஏற்படும் அளிந்த வேதை: இல்லத்தின் அறைகள் ஒற்றைபடை எண்ணிக்கையில் அமைக்கவேண்டும். இல்லையெனில் அங்கு வசிப்பவரின் செல்வம், காலப்போக்கில் குறைவுபடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கர்ப வேதை: இல்லத்தின் நடுக்கூடம் வாஸ்து அளவு மாறாது இருக்க வேண்டும். இல்லையெனில் அதீத செலவு, குழந்தைகளுக்கு நோய், ஆகியன ஏற்படும். பசுக்களின் பெருக்கம் தடைப்படும்.

தக்க காஷ்ட வேதை: தீயினால் பாதிக்கப் பட்ட மரங்களை வீட்டுக்கு (கட்டடம்) பயன் படுத்தினால், தீயினால் கண்டம் ஏற்படும்.

திருக்கு வேதை: தலைவாயிலை அடுத்துள்ள வாசல்படி பெரிதாக இருந்தால் தன நாசம், மரண பயம் ஏற்படும்.

குப்ஜம் வேதை: பூர்த்தியாகாத வீட்டில் வசிப்பதால் தோல் நோய்கள் ஏற்படும்.

குடிலம் வேதை: தாழ்ப்பாள் இல்லாமல் கதவுகள் இருந்து, அங்கு வசித்தால் சுவாசக் கோளாறுகள் ஏற்படும்

காணம் வேதை: கதவுகள் இல்லாத வீட்டில் வசிப்பதால் கண்களுக்கு பாதிப்பு உண்டாகும்.

ஸூப்தஜம் வேதை: உரிய அளவுகள் மாறுபட்டு இருந்தால் அந்த வீட்டில் வசிக்கும் தலைவனுக்குக் கெடுதல் உண்டாகும்.

னி, கட்டடங்களில் பயன்படுத்தப்படும் விருட்சங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

பழங்காலத்தில் வீட்டின் கட்டுமானத்துக்கு மரங்களின் தேவை அதிகம் இருந்தது. தற்காலத்தில் மரத்தின் தேவைகளைக் குறைத்து, செயற்கைமுறையிலான உத்திரம், தூண் ஆகியவற்றை (இரும்பு, சிமென்ட் போன்றவற்றால்) அமைத்துக் கொள்கின்றனர். மய மதத்தின்படி மரங்களின் தேர்வே சிறப்பானதாகச் சொல்லப்படுகிறது.

உங்கள் வீடும், விருட்சங்களும்!

வீடுகளுக்குப் பயன்படும் மரங்களை ஆண் மரம், பெண் மரம், நபும்சக (அலி) மரம் என மூன்று வகையாகப் பிரித்துக் கூறுவர். அடிமரம் முதல் நுனிவரையிலும் ஒரே அளவாக இருந்தால் ஆண் மரம். அடிப் பகுதி பருத்தும் நுனிப் பகுதி சிறுத்தும் இருந்தால் பெண் மரம். ஓர் ஒழுங்கற்ற அமைப்பில், நுனிப் பகுதி பெருத்தும், அடிப் பகுதி சிறுத்தும் இருந்தால், அது அலிமரம் எனச் சொல்லப்படுகிறது.

தூண்கள், உத்திரம், நிலை, கதவு போன்ற கட்டுமானத்துக்கு தேவையான மரங்களை வைரம் பாய்ந்ததாகவும், உறுதியானதாகவும், கிழட்டுத்தனம் அடையாததாகவும், தருணாவஸ்தை இல்லாததா கவும், கோணல் இல்லாததாகவும், காயம் படாதவையாகவுமாக தேர்வுசெய்ய வேண்டும். மேலும் புண்ணிய பூமி, மலை, வனம், நதிக்கரை ஆகிய இடங்களில் உள்ள மரங்களாகவும், பார்ப்பதற்கு அழகானதும், அனைத்து வகையான நன்மைகளை அளிக்கத் தக்கதாகவும் அந்த மரங்கள் அமைந்திருப்பது விசேஷம்.

இனிய ஒசையை எழுப்பும் தன்மையுடைய ஒலித் திறன் கொண்ட மரங்கள், ஒரே நிறமுள்ள மரங்கள், தொட்டுப் பயன்படுத்தும் நிலையில் தீங்கு இல்லாத மரங்கள், கிழக்கு மற்றும் வடக்கில் சாய்ந்துசெல்லும் கிளைகள் கொண்ட மரங்களை கட்டுமானத்துக்குப் பயன்படுத்துவதால், சுபிட்சம் உண்டாகும். என்பது மயன் கருத்து.

உங்கள் வீடும், விருட்சங்களும்!

மரங்களைத் தேர்வு செய்யும்போது...

1. கோயிலின் உட்பகுதியில் வளர்ந்த மரங்கள்

2. இடி விழுந்த மரங்கள்

3. காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட மரங்கள்

4. வீடுகளில் வளர்ந்த மரங்கள்

5. ராஜ வழிகளாகிய மகாபதங்களில் வளர்ந்துள்ள

      மரங்கள்

6. கிராமங்களாகிய குடியிருப்புகளில் பராமரித்து

     வளர்க்கப்பட்ட மரங்கள்

7. நீர் ஊற்றி வளர்க்கப்பட்ட மரங்கள்

8. பெரும் காற்றில் சாய்ந்த மரங்கள்

9. யானை போன்ற விலங்குகளினால் சாய்க்கப்

      பட்ட மரங்கள்

10. பறவைகள், விலங்கினங்கள் தங்கிய மரங்கள்

11. சண்டாளர்கள் வசிக்கும் இடங்களில் வளர்ந்த

      மரங்கள்

12. மனிதர்களுக்கு நிழல் தரும், தங்குவதற்கு

       பயன்படும் மரங்கள்

13. ஒன்றோடு ஒன்றாக பின்னி வளர்ந்த மரங்கள்

14. நெருக்கமாக வளர்ந்த மரங்கள்

15. கொடிகளால் சூழப்பட்ட மரங்கள்

16. நரம்புகள் தெரியும் வண்ணம் வளர்ந்த

    மரங்கள்

17. பொந்துகள் உள்ள மரங்கள்

18. கணுக்கள் அதிகம் உடைய மரங்கள்

19. பூச்சிகள் அரித்த மரங்கள்

20. அகாலத்தில் பலன் தரும் மரங்கள்

21. சுடுகாட்டில் வளர்ந்த மரங்கள்

22. ஊர் சபை கூடும் இடங்களில் உள்ள மரங்கள்

23. நான்கு வீதிகள் கூடும் இடங்களில் வளர்ந்துள்ள

      மரங்கள்

24. கோயில் உரிமைக்கு உரிய மரங்கள்

25. குட்டைகளில், குளக் கரை, கிணற்றின் அருகில் வளர்ந்த மரங்கள்

26. பாழ்பட்டு கிடக்கும் இடங்களில் வளர்ந்த   மரங்கள்

இவ்வகை மரங்களைத் தவிர்க்கவேண்டும். இல்லையெனில் இவை தூண்களாக அமைந்த கட்டடங்களுக்கும், அதில் வசிப்பவருக்கும் அனைத்து விதமான துன்பங்களும் உண்டாகும் என்று மய மதம் எச்சரிக்கிறது.

கட்டுமானத்துக்கு மரத்தைப் பயன்படுத்துவது மட்டுமின்றி, வீட்டில் வளர்க்கப்படும் மரங்கள் குறித்தும் சில விளக்கங்கள் உண்டு.

பருத்தி அகத்தி பனைநாவல் நெல்லி

எருக்கு புளிஇல வோடு எட்டும்

பெருக்க முடன் எந்த மனைஆ யிடினும்

இந்திரபதம் ஆனாலும் அம்மனை பாழாம்

பருத்தி, அகத்தி, பனை, நாவல், நெல்லி, எருக்கு, புளி, இலவு மரங்களை இல்லத்தில் வளர்த் தால் அஷ்ட லட்சுமியும் இடம் பெயர்வர். அத்தி, ஆல், இச்சி, அரசு, இலவு, புரசு, குச்சம், இலந்தை, மகிழம், விளா, மரங்கள் பயன்படுத்தினால் செல்வம் அழியும், ஆயுள் குறைவு ஏற்படும் என்கிறது இந்தப் பாடல்!

தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism