Published:Updated:

பிறந்த நாள் பலன்கள்

3-3-15 முதல் 16-3-15 வரை‘நவக்கிரக ரத்னஜோதி’ சந்திரசேகரபாரதி

பிறந்த நாள் பலன்கள்

3-3-15 முதல் 16-3-15 வரை‘நவக்கிரக ரத்னஜோதி’ சந்திரசேகரபாரதி

Published:Updated:

பிறந்த தேதிகள்: 1, 10, 19, 28  

உங்கள் குடும்பத்தில் நற்காரி யங்கள் நிகழும் நேரம் இது. பொருளா தார நிலை உயரும். பெற்றோரால் நலம் உண்டாகும். கலைத் துறை யினருக்குச் செழிப்பான சூழ்நிலை உருவாகும். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். உழைப்பு வீண்போகாது. 4ம் தேதி முதல் வியாபாரிகளுக்கு மந்த நிலை விலகும். 13ம் தேதி முதல் புனிதப்பணிகளில் ஈடுபாடு கூடும். 15ம் தேதி முதல் எதிர்ப்புக்களின் கரம் வலுக்குறையும்.

நல்லவர்களின் நட்புறவு கிடைக்கும். மகப்பேறும் மக்களால் பாக்கியமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். தந்தை நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1ம் தேதி பிறந்தவர்களுக்கு: உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும். பொதுநலப் பணிகளில் ஈடுபாடு அதிகமாகும்.  

10ம் தேதி பிறந்தவர்களுக்கு: பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. வியாபாரத்தில் முழுக்கவனம் செலுத்தவும்.

19ம் தேதி பிறந்தவர்களுக்கு: பண வரவு அதிகமாகும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். சுப காரியங்கள் நிகழும்.

28ம் தேதி பிறந்தவர்களுக்கு: தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் வருமானம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட தேதிகள்: மார்ச் 4, 8, 9, 12.

பிறந்த தேதிகள்: 2, 11, 20, 29

புனிதமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொலைதூரப் பயணத்தால் அனுகூலம் உண்டாகும். புதியவர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் ஏற்படும். ஏற்றுமதிஇறக்குமதி இனங்களால் ஆதாயம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை உருவாகும். மக்களால் அளவோடு நலம் உண்டாகும். 4ம் தேதி முதல் வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும்.

மாணவர்களது நிலை உயரும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். 13ம் தேதி முதல் ஆண்களுக்குப் பெண்களால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். 15ம் தேதி முதல் பொருளா தார நிலையில் வளர்ச்சி காண வாய்ப்பு உண்டாகும். அரசியல் வாதிகளுக்கும் அரசுப் பணியாளர்க ளுக்கும் சோதனைகள் விலகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும்.

2ம் தேதி பிறந்தவர்களுக்கு: பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கூடும்.

11ம் தேதி பிறந்தவர்களுக்கு: உடல்நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். தந்தையாலும் அரசாங்கத்தாராலும் பிரச்னைகள் சூழும்.

20ம் தேதி பிறந்தவர்களுக்கு: நற்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மக்களாலும் வாழ்க்கைத் துணை வராலும் நலம் ஏற்படும்.

29ம் தேதி பிறந்தவர்களுக்கு: அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களால் நலம் உண்டாகும். தர்ம குணம் வெளிப்படும்.

அதிர்ஷ்ட தேதிகள்: மார்ச் 4, 8, 9, 11, 12, 16.

பிறந்த தேதிகள்: 3, 12, 21, 30

மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் கூடும் நேரம் இது. தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். மக்களால் அளவோடு நலம் உண்டாகும். சில சங்கடங்களும் ஏற்படும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகமும் தொழிலும் வளர்ச்சி பெறும். 4ம் தேதி முதல் வியாபாரத்தில் லாபம் கூடும்.மாணவர்களது நிலை உயரும்.

13ம் தேதி முதல் கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் சில பிரச்னைகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. 15ம் தேதி முதல் பண நடமாட்டம் அதிகரிக்கும். கொடுக்கல்வாங்கல் லாபம் தரும். அரசு மூலம் எதிர் பார்த்திருந்த காரியங்கள் நிறைவேறும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு பிரச்னைகள் விலகி, முன்னேற்றமான பாதை தெரியவரும்.

3ம் தேதி பிறந்தவர்களுக்கு: தொலைதூரத் தொடர்பால் நலம் உண்டாகும். பயணத்தால் அனுகூலம் ஏற்படும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும்.

12ம் தேதி பிறந்தவர்களுக்கு: உஷ்ணாதிக்கம் கூடும். குடும்ப நலனில் கவனம் தேவை. பொருளாதாரப் பிரச்னை ஏற்படும்.

21ம் தேதி பிறந்தவர்களுக்கு: மன அமைதி குறையும். உடல் ஆரோக் கியத்தில் கவனம் செலுத்தவும்.  

30ம் தேதி பிறந்தவர்களுக்கு: திரவப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட தேதிகள்: மார்ச் 3, 5, 10, 12,

பிறந்த தேதிகள்: 4, 13, 22, 31

சமுதாய நல முன்னேற்றப் பணிகளில் ஈடுபாடு கூடும் நேரம் இது. தொழிலாளர்களுக்கும் உத்தியோ கஸ்தர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். பொருளாதார நிலை உயரும். அரசு உதவி கிடைக்கும். மக்களால் அனுகூலம் ஏற்படும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு அனுகூலமான போக்கு தென்படும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். பரம்பரையாகச் செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காணலாம்.

கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிறரிடம் கோபப் படாமல் அன்புடன் பேசிப் பழகினால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. 4ம் தேதி முதல் வியாபாரி களுக்கு லாபம் கூடும். மாணவர்களது நிலை உயரும். 13ம் தேதி முதல் கலைஞர்களுக்குப் பிரச்னைகள் விலகும். 15ம் தேதி முதல் நண்பர் களாலும், தொழில் கூட்டாளிகளாலும் பிரச்னைகள் அதிகமாகும்.

4ம் தேதி பிறந்தவர்களுக்கு: அரசு உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். புதிய பதவி தேடிவரும்.

13ம் தேதி பிறந்தவர்களுக்கு: பொருளாதார நிலை உயரும். மன மகிழ்ச்சி கூடும். நல்லோர் தொடர்பால் நலம் பெருகும்.

22ம் தேதி பிறந்தவர்களுக்கு: திரவப் பொருட்கள் லாபம் தரும். வாழ்க்கைத்துணைவரால் செலவுகளும் பிரச்னைகளும் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் பழகுவது நல்லது.

31ம் தேதி பிறந்தவர்களுக்கு: அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களது சந்திப்பு பயன்படும். பண வரவு கூடும். உயர் பொறுப்புக்கள் தேடிவரும்.

அதிர்ஷ்ட தேதிகள்: மார்ச் 4, 8, 10, 11, 13, 15.

பிறந்த தேதிகள்: 5, 14, 23

வெற்றி வாய்ப்புக்கள் கூடும் நேரம் இது. மன மகிழ்ச்சி பெருகும். நல்லவர்களது நேசம் கிடைக்கும். அதனால் அனுகூலமும் உண்டாகும். பொருள் வரவு அதிகரிக்கும். இயந்திரப்பணியாளர்களுக்கு லாபம் கூடும். எதிரிகளின் கரம் வலுக்குறையும். வழக்கில் சாதகமான திருப்பம் உண்டாகும். சமுதாய நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். கறுப்பு, கருநீல நிறப் பொருட்கள் லாபம் தரும்.

கலைஞர்களது எண்ணம் ஈடேறும். 4ம் தேதி முதல் குடும்ப நலனில் கவனம் தேவை. வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. உஷ்ணாதிக்கத்துக்கு இடம் தரலாகாது. 13ம் தேதி முதல் உடன் பிறந்தவர்களால் நலம் உண்டாகும். நல்ல தகவல் கிடைக்கும். சொத்துக்கள் வகையில் ஆதாயம் கிடைக்கும். 15ம் தேதி முதல் பேச்சிலும் செயலிலும் நிதானம் மிகத் தேவை. தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால், உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். வெளியிடங்களில் உண்பதைத் தவிர்க்கவும்.

5ம் தேதி பிறந்தவர்களுக்கு: பண வரவு கூடும். எதிர்ப்புக்கள் விலகும். கலைத்துறை ஊக்கம் தரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். பொதுநலப்பணிகளில் ஈடுபாடு கூடும்.

14ம் தேதி பிறந்தவர்களுக்கு: குடும்ப நலனில் கவனம் தேவை. வீண்வம்பு கூடாது. எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும்.

23ம் தேதி பிறந்தவர்களுக்கு: எதிர்ப்புக்கள் விலகும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட தேதிகள்: மார்ச் 4, 5, 11, 12, 14.

பிறந்த தேதிகள்: 6, 15, 24

வெற்றி வாய்ப்புக்கள் கூடும் நேரம் இது. வழக்குகளில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். எதிரிகள் விலகிப் போவார்கள். ஜலப்பொருட்கள் லாபம் தரும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். மாதர்களது எண்ணம் ஈடேறும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைத்துவரும். வாழ்க்கைத் துணைவரால் நலம் பெருகும். மன உற்சாகம் கூடும். வீட்டுக்குத் தேவை யான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும்.

பிறரிடம் கோபப்படாமல் இனிமையாகப் பேசிப் பழகினால் நலம் கூடப் பெறலாம். 4ம் தேதி முதல் வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. 13ம் தேதி முதல் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் அனு கூலம் உண்டாகும். செலவுகள் சற்று கூடும். சிக்கன நடவடிக்கை தேவை. பக்தி மார்க்கத்திலும் ஞானமார்க் கத்திலும் தெளிவு பிறக்கும். 15ம் தேதி முதல் அரசு விவகாரங்களில் விழிப்பு தேவை. மக்கள் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும்.

6ம் தேதி பிறந்தவர்களுக்கு: சுபிட்சம் கூடும். வாழ்க்கை வசதிகள் பெருகும். மன மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சுப காரியங்கள் நிகழும்.

15ம் தேதி பிறந்தவர்களுக்கு: நிர்வாகத்திறமை கூடும். நவீன விஞ்ஞானத்துறைகள் லாபம் தரும். புதிய பொறுப்புக்கள் தேடிவரும்.

24ம் தேதி பிறந்தவர்களுக்கு: சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும், அதனால் மன மகிழ்ச்சி பெறவும் சந்தர்ப்பம் உண்டாகும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். திரவப் பொருட்கள் லாபம் தரும்.

அதிர்ஷ்ட தேதிகள்: மார்ச் 4, 6, 13, 15.

பிறந்த தேதிகள்: 7, 16, 25

உங்கள் புத்திசாலித்தனம் பளிச்சிடும் நேரம் இது. வசீகரச் சக்தி கூடும். நண்பர்கள், உறவினர்களது தொடர்பு பயன்படும். கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். பண வரவு திருப்திகரமாக இருந்துவரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பம் கூடிவரும்.

4ம் தேதி முதல் வியாபாரத்தில் முழுக்கவனம் தேவை. 13ம் தேதி முதல் உடன்பிறந்தவர்களால் நலம் கூடும். பிரச்னைகள் குறையும். 15ம் தேதி முதல் அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். தந்தை நலம் சீராகும். திரவப் பொருட்கள் லாபம் தரும். எதிர்ப்புக்கள் இருக்கும் என்றாலும் சமாளித்து வருவீர்கள். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். ஆசிரியர்களுக்குப் பாராட்டுக்கள் குவியும். தியானம், யோகா, ஜோதிடம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண வழிபிறக்கும்.

7ம் தேதி பிறந்தவர்களுக்கு: அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். அறிவாற்றல் பெருகும். புனிதப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

16ம் தேதி பிறந்தவர்களுக்கு: கலைத்துறை ஊக்கம் தரும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். எதிர்ப்புக்கள் குறையும்.

25ம் தேதி பிறந்தவர்களுக்கு: சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். வியாபாரத்தில் முழுக்கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. விளையாட்டு, விநோதங்களைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட தேதிகள்: மார்ச் .5, 7, 9, 11, 14, 16.

பிறந்த தேதிகள்: 8, 17, 26

உயர் பதவிகளும் பொறுப்புக்களும் உங்களைத் தேடிவரும் நேரம் இது. மன உற்சாகம் பெருகும். வாழ்க்கைத் துணை நலம் சிறக்கும். நல்லவர்கள் உங்களுக்குப் பெரிதும் உதவுவார்கள். பயணத்தால் முக்கியமான எண்ணங் கள் ஒன்றிரண்டு நிறைவேறும். அயல்நாட்டுத் தொடர்பு பயன் தரும். இடமாற்றமும் நிலை மாற்றமும் நல்லவிதமாக அமையும். பண நடமாட்டம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். 4ம் தேதி முதல் வியாபாரிகளுக்கு மந்த நிலை விலகும். மாணவர்களது திறமை பளிச்சிடுவதுடன் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறலாம்.

எழுத்தாளர்களுக்கும் பத்திரிகை யாளர்களுக்கும் வரவேற்பு கூடும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். 13ம் தேதி முதல் பெண்களால் பிரச்னைகள் சூழும் என்பதால், பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. 15ம் தேதி முதல் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அதிகமாகும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். அரசாங்கத்தாரால் அனுகூலம் ஏற்படும். நிலங்களால் ஆதாயம் கிடைக்கும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும்.

8ம் தேதி பிறந்தவர்களுக்கு: மன உறுதி கூடும். கலைத்துறை ஊக்கம் தரும். நிலங்கள் வகையில் ஆதாயம் கிடைக்கப் பெறலாம்.

17ம் தேதி பிறந்தவர்களூக்கு: ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். முக்கியஸ்தர்களது சந்திப்பு பயன்படும்.

26ம் தேதி பிறந்தவர்களுக்கு: அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். மக்கள் நலம் சிறக்கும். முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். தெய்வப்பணிகளில் ஈடுபாடு கூடும்.

அதிர்ஷ்ட தேதிகள்: மார்ச் 6, 7, 8, 14, 15.

பிறந்த தேதிகள்: 9, 18, 27

தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு கூடும் நேரம் இது. பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பண நடமாட்டம் அதிகமாகும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். திரவப்பொருட்கள் லாபம் தரும். புத்திசாலித்தனம் வெளிப்படும். கலைஞர்களுக்கு வெற்றிகள் குவியும். குடும்ப நலம் சீராகும். சுப காரியங்கள் நிகழும். ஆன்மிகவாதிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் மதிப்பும் மரியாதையும் உயரும்.

4ம் தேதி முதல் வியாபாரிகளுக் கும் மாணவர்களுக்கும் முன்னேற்றம் காணக் குறுக்கீடுகள் உண்டாகும். அரசியல், நிர்வாகம் போன்ற துறை களைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் காரியமாற்றுவதன் மூலம் சங்கடங் களுக்கு ஆளாகாமல் மீளலாம். தந்தை நலனில் அக்கறை தேவை. 13ம் தேதி முதல் விருந்து, உபசாரங்களில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்.15ம் தேதி முதல் அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். மக்களால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். உஷ்ணாதிக்கத் தால் உடல்நலம் பாதிக்கப்பட நேரலாம்; கவனம் தேவை.

9ம் தேதி பிறந்தவர்களுக்கு: செல்வ நிலை உயரும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். தர்ம குணம் வெளிப்படும்.

18ம் தேதி பிறந்தவர்களுக்கு: காரியத்தில் வெற்றி கிட்டும். தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.

27ம் தேதி பிறந்தவர்களுக்கு: ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களால் நலம் உண்டாகும். கலைத்துறை ஊக்கம் தரும். புதிய பொருட்சேர்க்கை நிகழும்.

அதிர்ஷ்ட தேதிகள்: மார்ச் 3, 7, 9, 10, 16.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism