Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்

ராசி பலன்கள்

ராசி பலன்கள்

Published:Updated:

மார்ச் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

பணம் புழங்கும்!

ராசி பலன்கள்

மேஷம்: காலம் தவறாமையைக் கடைப்பிடிப்பவர் களே! உங்களின் தனாதிபதி சுக்கிரன் 13-ம் தேதி முதல் ராசிக்குள் அமர்வதால் அழகு, இளமை கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ராசிநாதன் செவ்வாய் 12-ல் கேதுவுடன் சேர்ந்து மறைந்திருப்பதுடன், 15-ம் தேதி முதல் சூரியனும் சேர்வதால்... திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால்... பிரச்னைகளும், போராட்டங்களும் இருந்து கொண்டேயிருக்கும். வியாபாரத்தில் போட்டிகளைத் திறமையாக சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள்.

இழுபறியான வேலைகள் முடியும் வேளையிது.

வெற்றிகள் குவியும்!

ராசி பலன்கள்

ரிஷபம்: 'வெளுத்ததெல்லாம் பால்' என நினைத்து ஏமாறுபவர்களே! முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள்.  ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்கள், தோழிகள் உங்கள் நல்ல மனதைப் புரிந்து கொள்வார்கள். 13-ம் தேதி முதல் ராசிநாதன் சுக்கிரன் கேதுவை விட்டு விலகுவதால், ஆரோக்கியம் சீராகும். ராகு மற்றும் சனியின் போக்கு சரியில்லாததால்... டென்ஷன், சோர்வு வந்து போகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துகொள்வீர்கள்.

வாக்கு சாதுர்யத்தால் பிரச்னைகளைத் தீர்க்கும் தருணமிது.

சொத்து வாங்கும் யோகம்!

ராசி பலன்கள்

மிதுனம்: குலம், கோத்திரம் பார்க்காமல், மனித நேயத்துடன் உதவுபவர்களே! 15-ம் தேதி முதல் சூரியன் 10-ல் அமர்வதால், குடும்ப வருமானம் உயரும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். சனியும், குருவும் வலுவாக இருப்பதால், தன்னம்பிக்கையுடன் செயல்படத் தொடங்குவீர்கள். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால்... மறைமுக எதிர்ப்புகள், சிறுசிறு அவமானங்கள் வந்து போகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துகொள்வீர்கள். உத்யோகத்தில் ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும் வேளையிது.

சாதிக்கும் சமயம்!

ராசி பலன்கள்

கடகம்: எதையும் உடனடியாக கிரகித்துக்கொள்ளும் அறிவாற்றல் மிக்கவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், முடியாது என்றிருந்த காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். சொத்துப் பிரச்னை தீரும். 15-ம் தேதி முதல் 9-ம் வீட்டில் சூரியன் நுழைவதால், தந்தையாருடன் கருத்து வேறுபாடு வந்து போகும். ஜென்ம குரு தொடர்வதால், யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மற்றவர்களுடன் ஈகோ பிரச்னை வந்து போகும்.

தொடர் முயற்சியால் சாதிக்கும் காலமிது.

பொறுமை காக்க வேண்டிய பொழுது!

ராசி பலன்கள்

சிம்மம்: பிரச்னைகளைப் பெரிதுபடுத்தாமல், சமாதானத்தால் சரிசெய்பவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், மனப்போராட்டங்கள் குறையும். பணப்பற்றாக் குறை நீடித்தாலும், கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். செவ்வாய், கேதுவுடன், 15-ம் தேதி முதல் சூரியனும் 8-ல் நுழைவதால்... வீண் செலவுகள் ஏற்படும். அர்த்தாஷ்டமச் சனி நீடிப்பதால், உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயல்வார்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்யோகத்தில் உங்கள் நிலையைத் தக்கவைத்துக்கொள்ள போராட வேண்டியிருக்கும்.

எங்கும், எதிலும் பொறுமை காக்க வேண்டிய நேரமிது.  

தொட்டது துலங்கும்!

ராசி பலன்கள்

கன்னி: கலை ஆர்வம் மிக்கவர்களே!  ராஜ கிரகங்களான சனிபகவானும், குருபகவானும் சாதகமாக இருப்பதால், தொட்ட காரியங்கள் துலங்கும். பணவரவு அதிகரிக்கும். ராசிநாதன் புதன் பலவீனமாக இருப்பதால், உறவினர், தோழிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். 7-ம் வீட்டில் செவ்வாயும், கேதுவும் நிற்பதுடன் 15-ம் தேதி முதல் சூரியன் சென்று சேர்வதால்,  உடல்நலக் கோளாறு வந்து போகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

எதிர்பார்ப்புகளில் ஒருசில நிறைவேறும் வேளையிது.

செயல் வேகம் அதிகரிக்கும்!

ராசி பலன்கள்

துலாம்: விடாமுயற்சியால் முதலிடத்தைப் பிடிப்பவர்களே! 13-ம் தேதி முதல் ராசிநாதன் சுக்கிரன் 6-ல் நிற்கும் கேதுவை விட்டு விலகி, 7-ம் வீட்டில் அமர்வதால்,  உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். 15-ம் தேதி முதல் சூரியன் 6-ல் நுழைவதால், எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். 6-ம் வீட்டில் கேது நிற்பதால், ஷேர் மூலமாக பணம் வரும். 10-ல் குருவும், பாதச் சனியும் தொடர்வதால்.. ஏமாற்றம், தர்மசங்கடமான சூழ்நிலைகள் வந்து போகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களை எல்லோரும் மதிப்பார்கள்.

உங்கள் பலம், பலவீனத்தை உணரும் காலமிது.

பணம், ஆபரணம் கைக்கு வரும்!

ராசி பலன்கள்

விருச்சிகம்: பல்வேறு துறைகளைப் பற்றிய ஞானம் கொண்டவர்களே! குரு வலுவாக இருப்பதால், வர வேண்டிய பணம் கைக்கு வரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். சுக்கிரன் 13-ம் தேதி முதல் ராசிக்கு 6-ல் மறைவதால்... உடல் உபாதை வந்து நீங்கும். ராசிநாதன் செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 5-ல் நிற்பதுடன், 15-ம் தேதி முதல் சூரியனும் சேர்வதால், முன்கோபம் அதிகமாகும். ஜென்மச்சனி தொடர்வதால், எதிலும் பிடிப்பற்றப் போக்கு வந்து விலகும். வியாபாரத்தில் கமிஷன் மூலம் பணம் வரும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.

நிதானத்தால் நெருக்கடிகளை நீந்திக் கடக்கும் நேரமிது.

முதல் மரியாதை கிடைக்கும்!

ராசி பலன்கள்

தனுசு: 'மறப்போம் மன்னிப்போம்' என்ற கொள்கை உடையவர்களே! சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். கணவரின் வருமானம் உயரும். என்றாலும், பூர்வ புண்யாதிபதி செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 4-ல் நிற்பதால், மகளுக்கு வரன் தேடுவதில் அவசரம் வேண்டாம். மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

காலம் கனிந்து வரும் நேரமிது.

புதிய முயற்சிகள் பலிதமாகும்!

ராசி பலன்கள்

மகரம்: வாழ்க்கையில் உயர்ந்தாலும், கடந்து சென்ற நாட்களை மறவாதவர்களே! 15-ம் தேதி முதல் சூரியன் 3-ம் வீட்டில் அமர்வதால், புதிய முயற்சிகள் பலிதமாகும். செவ்வாயும், கேதுவும் 3-ம் வீட்டில் நிற்பதால், திடீர் பணவரவு உண்டு. ராகு 9-ம் வீட்டில் நிற்பதால் வீண் செலவுகள், சொத்துப் பிரச்னைகள் வந்து போகும். குரு வலுவாக இருப்பதால், நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும்.

துணிச்சலான முடிவுகள் எடுக்கும் நேரமிது.

'ஈகோ' பிரச்னை விலகும்!

ராசி பலன்கள்

கும்பம்: உதவி கேட்டு வந்தவர்களை வாழவைப்பவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். உறவினர்களுடன் இருந்துவந்த

ராசி பலன்கள்

ஈகோ' பிரச்னை விலகும். செவ்வாயும், கேதுவும் 2-ல் நிற்பதுடன், 15-ம் தேதி முதல் சூரியனும் சேர்வதால்... இனந்தெரியாத பயம் வந்து நீங்கும். ராகு 8-ம் வீட்டிலும், குரு 6-லும் மறைந்திருப்பதால், பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து செயல்படுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக்கொள்ளாதீர்கள்.

சிந்தித்து செயல்பட வேண்டிய தருணமிது.

வீடு களைகட்டும்!

ராசி பலன்கள்

மீனம்: 'நடப்பதெல்லாம் நன்மைக்கே' என நினைப்பவர்களே! ராசிநாதன் குருபகவான் வலுவாக இருப்பதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகளை முன்னேற்றப் பாதையில் வழிநடத்துவீர்கள். ராசிக்குள் கேதுவும், செவ்வாயும் நிற்பதால், செலவுகள் துரத்தும். 15-ம் தேதி முதல் சூரியனும் ராசிக்குள் நுழைவதால், கோபம் அதிகரிக்கும். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிதாக வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார்.

சகிப்புத்தன்மையால் முன்னேறும் தருணமிது.

‘ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்