ஆயுள் ரேகை, புத்தி ரேகை மற்றும் இருதய ரேகை குறித்து சென்ற அத்தியாயங்களில் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில், விதி ரேகையைப் பற்றிப் பார்ப்போம்.

உள்ளங்கையில் பல ரேகைகள் படுக்கைவசமாகவும், செங்குத்தாகவும் ஓடுகின்றன. இவற்றில் செங்குத்தாக ஓடும் விதி ரேகை, மணிக்கட்டுப் பகுதியிலோ, சந்திர மேட்டிலோ ஆரம்பித்து மேல்நோக்கிச் செல்லும். உள்ளங்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட விதி ரேகைகள்கூட இருக்கலாம். சிலரின் கைகளில் இந்த ரேகை, மிகச் சிறிய கோடாகவோ, அல்லது தெளிவில்லாமலோ இருக்கலாம். பொதுவாக விதி ரேகை, சூரிய மேடு மற்றும் சனி மேட்டை நோக்கியே செல்லும். சிலநேரங்களில் குரு விரலுக்கும் சனி விரலுக்கு நடுவிலும் செல்லலாம்.

விதி ரேகையானது ஒருவரது வாழ்க்கை அமைப்பு, தொழில், அதனால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், செல்வம், செல்வாக்கு, வசதி அந்தஸ்து, கெளரவம் ஆகியவற்றைக் குறிக்கும். இனி, பலவிதமான விதி ரேகையின் அமைப்புகளையும், அதற்கான பலாபலன்களையும் தெரிந்துகொள்வோம்.

அமைப்பு1: உள்ளங்கையின் கீழ்ப்பகுதியில் மணிக்கட்டில் தொடங்கி, உள்ளங்கையின் குறுக்காக பல்வேறு ரேகைகளை வெட்டிக் கொண்டு, சனி மேடு வரை மேல் நோக்கிச் செல்லும் (படம்1).

இத்தகைய விதி ரேகை சிறப்பானது. இந்த ரேகையானது ஆழமாகவும் தெளிவாகவும் இருந்தால், அவர்களுடைய வாழ்க்கை படிப்படியாக முன்னேறி, வெற்றிக்கு மேல் வெற்றிகள் குவியும். சிறப்பான தொழிலாலும், தொடரும் முன்னேற்றங்களாலும் சிறப்படையும். இவர்கள், பிறக்கும்போதே சீரிய நோக்கங்களும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் எனும் எண்ணமும் கொண்டவர்களாக இருப்பார்கள். தோல்விகளைச் சந்திக்க நேர்ந்தாலும் தன்னம்பிக்கையுடன் சமாளித்து வெற்றி பெறுவர்.

இத்தகைய விதி ரேகையில் பல்வேறு இடங்களில் பெருக்கல் குறியோ அல்லது குறுக்குக் கோடுகளோ இருந்தால், அவர்கள் பல தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டியிருக்கும்.

அமைப்பு2: ஆயுள் ரேகையின் கீழ்ப்பகுதியில் ஆரம்பித்து, செங்குத்தாக சனி மேடு வரை நீண்டு செல்வது (படம் 2).

இதுவும் முன்னேற்றத்தையும் வெற்றியையும் அடையும் மனித வாழ்க்கையைக் குறிக்கும். ஆனால் வாழ்வின் பல்வேறு கால கட்டங்களில், பல முயற்சிகளில் தோல்வியுற்று, மீண்டும் வெற்றி பெறும் வாய்ப்பை இந்த விதி ரேகை அமைப்பு குறிப்பிடும்.

இத்தகைய அமைப்பைப் பெற்றவர்கள் வலிமையும் வைராக்கியமும் மிகுந்தவர்களாக இருப்பார்கள். இளமைப் பருவத்தில் கஷ்டங்களைச் சகித்து, அதன் பிறகு முன்னேற்ற வாழ்க்கையை அடைவார்கள். இத்தகைய ரேகைகளில் பக்கவாட்டு ரேகைகளோ, குறுக்கு ரேகைகளோ இருந்தால், அவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக இருக்கும். பொதுவாக, இத்தகைய ரேகை உடையவர்கள் நல்ல எதிர்காலத்துக்காக பொறுமையோடு காத்திருக்க வேண்டும்.

அமைப்பு 3: இந்த வகையிலான விதி ரேகை சுக்கிரமேட்டில் ஆரம்பித்து, ஆயுள் ரேகையை வெட்டிக்கொண்டு செல்லும் (படம்3). இது, சுக்கிர பலத்தால் உயர்வடையும் ஒரு மனிதனின் வாழ்வைக் குறிக்கும். இந்த அமைப்பிலான விதிரேகை பெற்றவர்களுடைய வாழ்வில் திருமணத்துக்குப் பிறகே உயர்ந்த லட்சியங்கள் நிறைவேறி, பெரும் முன்னேற்றங்கள் ஏற்படும். சிறந்த பதவியும் வசதியான வாழ்வும் ஏற்பட்டாலும், இத்தகையவர்கள், மனைவியின் சௌபாக்கியங்களைச் சார்ந்திருப்பார்கள்.

அமைப்பு 4: சந்திர மேட்டில் இருந்து ஆரம்பமாகி, சற்று சாய்வாக மேல்நோக்கிச் சென்று, சனி மேட்டை அடையும் (படம்4). இதுவும் சிறப்பான விதி ரேகை ஆகும்.

இவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்கள் செய்து ஏராளமாக பொருளீட்டுவார்கள். நடுத்தர வயதுக்கு மேல் பெரும் செல்வந்தர்களாக வாழ்வார்கள். வசதியான வாழ்வும், மனம் விரும்பியபடி செலவு செய்யும் ஆசையும் இவர்களுக்கு இருக்கும். மனைவி மூலமும் இவர்களுக்கு செல்வங்கள் சேரும். முயற்சிகளில் அவ்வப்போது ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் பெரும்பாலும் ஏமாற்றமோ, தோல்வியோ இருக்காது.

அமைப்பு 5: இந்த வகையிலான விதி ரேகை புத்தி ரேகையில் ஆரம்பித்து சனி மேடு வரையிலும் செல்லும்; சிறிய ரேகையாக அமைந்து இருக்கும்

(படம்5). இவர்கள் புத்திக் கூர்மையாலும், புதிய கண்டுபிடிப்புகளாலும் சாதிப்பார்கள். மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சுய முயற்சியாலும் அறிவாற்றலாலும் பெரும் செல்வத்தையும் புகழையும் அடைவார்கள்.

அமைப்பு 6: இருதய ரேகையில் துவங்கி சனி மேட்டில் செல்லும் மிகச் சிறிய விதிரேகை அமைப்பு இது (படம் 6).

இத்தகைய ரேகை அமைந்திருப்பவர்கள் இரக்க குணமும் உதவும் குணமும் மிகுந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பூர்வீகச் சொத்துகளும், செல்வாக்கும் கிடைக்கும். சுய சம்பாத் தியத்துக்கு கடுமையாக உழைக்கவேண்டியது வரும். இத்தகைய சிறிய விதிரேகை, சனி மேட்டுக்கு அருகில் இருகூறாகப் பிரிந்திருந்தால், அது இவர்களது உழைப்பால் கிடைக்கும் இரு வகையான வருமானங்களைக் குறிக்கும்.

அமைப்பு 7: விதிரேகை செவ்வாய் மேட்டில் இருந்து ஆரம்பித்து சனி மேடு வரை செல்லும் அமைப்பு இது (படம் 7). இத்தகைய ரேகையை உடையவர்கள் இளமையில் கஷ்டப்பட்டு, பின்னர் தங்களின் கல்வியாலும் உழைப்பாலும் பல்வேறு தொழில்களைச் செய்து, நடுத்தர வயதுக்கு மேல் முன்னேறுவார்கள்.

மேலே குறிப்பிட்ட ஏழு வகையான விதி ரேகைகளும் சனி மேடு வரை சென்ற பிறகு, அவற்றின் இணை ரேகைகள் குரு மேட்டுக்கோ, சூரிய மேட்டுக்கோ செல்லுமானால், அது நல்ல பலன்களையே குறிக்கும். இப்படியான அமைப்பு பெற்றவர்கள், வாழ்வில் எவ்வளவு உயரத்துக்குச் சென்றாலும் நேர்மையும் நிதானமும் இழக்கமாட்டார்கள். ஒழுக்கத்தையும் தவறவிடமாட்டார்கள். ஞானத்துக்கு உரிய குருவும், புகழுக்கும் பெருமைக்கும் உரிய சூரியனும் விதி ரேகையோடு தொடர்பு கொள்ளும்போது, அறிவின் முதிர்ச்சியும், நன்மதிப்பும் வாழ்க்கையின் லட்சியங்கள் ஆகிவிடும்.

சுக்கிர, சந்திர பலத்தால் மேன்மை அடைகின்ற வகையில் சனி மேட்டை அடையும் விதி ரேகை அமைப்பு, சில நேரங்களில் சுயநலத்தையும், தற்பெருமையையும், அகம்பாவத்தையும், ஒழுக்கமின்மையும் உருவாக்கிவிடும். குரு மேட்டில் இருந்தும், சூரிய மேட்டில் இருந்தும் வருகின்ற ஆதார ரேகைகள், சனி மேட்டை அடையும் விதி ரேகையைத் தொடும்போது, தீய குணங்கள் ஏற்படாமல் தடுக்கப்படும்.

இனி, விதி ரேகையின் மீது அமைந்துள்ள சில குறிகளையும், வடிவங்களையும் வைத்து, அவற்றால் ஏற்படும் பலாபலன்களையும் தெரிந்துகொள்வோம்.

* விதி ரேகை, இருதய ரேகையைத் தொடும் இடத்தில் தீவு போன்ற குறி அமைந்திருந்தால் (படம்8), காதல் திருமண விவகாரங்களால் வாழ்க்கை பாதிக்கப்படும்.

* நேராகச் செல்கின்ற விதி ரேகை ஆங்காங்கே மெல்லியதாகத் தேய்ந்து காணப்பட்டாலும், துண்டுத் துண்டாக இருந்தாலும் (படம்9), வாழ்க்கையின் பல்வேறு காலகட்டத்தில் எதிர்ப்புகளையும், தோல்விகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.

* விதி ரேகையின் மேல் முக்கோணக் குறி இருந்தால் (படம்10), சுய முயற்சியாலும் புத்திக்கூர்மையாலும் முன்னேறுவார்கள்.

* விதி ரேகையின் மேல் சதுரங்கள் அமைந்திருந்தால் (படம்11), முயற்சிகளில் தடங்கள் ஏற்பட்டாலும், நஷ்டங்கள் ஏற்படாது.

* விதி ரேகையின் முடிவில், பல இணை ரேகைகள், குரு, சூரியன் மற்றும் புதன் மேட்டை நெருங்கிச் சென்றால் (படம்12) பெரும் புகழ் அடைவார்கள்.

* விதி ரேகை புத்தி ரேகையோடு நின்று விட்டால் (படம்13), வாழ்க்கை உயர்ந்தும், தாழ்ந்தும் திகழும்.

தொடரும்...

இருதய ரேகையின் வடிவமைப்பும் பலன்களும்!

இருதய ரேகையின் வகைகள் குறித்து சென்ற இதழில் விரிவாகப் பார்த்தோம். அதன் வடிவங்களின் அடிப்படையிலும் சில பலாபலன்கள் விளக்கப்படுவது உண்டு.

* இருதய ரேகையில் இருந்து சிறு துண்டு ரேகைகள் ஆங்காங்கே மேல் நோக்கிச் செல்லும் அமைப்பைப் பெற்றவர்கள் எல்லாவற்றுக்கும் ஆசைப்படுபவராகத் திகழ்வார்கள். அதனால் ஏமாற்றமும் தோல்வியும் ஏற்படும்.

* இருதய ரேகையில் இருந்து துண்டு துண்டான கிளை ரேகைகள் கீழ்நோக்கிச் சென்றால், சிற்றின்பங்களில்் நாட்டம் அதிகரிக்கும். அதனால் உடல்நலம் கெடவும் வாய்ப்பு உண்டு.

* இருதய ரேகை துண்டுத் துண்டாக தொடர்ச்சியின்றி இருந்தால், இருதய நோய் தொடர்பு உள்ளவர்களாக இருப்பர். ஆங்காங்கே தீவுகள் போன்று இருதய ரேகை அமையப் பெற்றவர்கள், அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள். அவர்களுடைய உணர்ச்சிமயமான செயல்பாடுகளால், விரோதங்களும் பகையும் உண்டாகும்.

* சிலருடைய கையில் இருதய ரேகைக்கு இணையான மற்றொரு இருதய ரேகை இருக்கலாம். இவர்கள் வாழ்வில் ஏமாற்றங்களும், மனப் போராட்டங்களும், முடிவு எடுக்க முடியாத தன்மையும், பயமும் நிறைந்திருக்கும்.

ஒருவருடைய உடலில் இதயம் எவ்வளவு அவசியமோ, அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இருதய ரேகை. நீண்டு தெளிவான இருதய ரேகை அமையப்பெற்றவர்கள் நல்ல ஆரோக்கியத்தையும், உயர்ந்த மனோபாவத்தையும், கட்டுப்பாடான உணர்ச்சிகளையும் கொண்டவர்களாக விளங்குவார்கள்.