வாசகிகள் பக்கம்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்

மார்ச் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை

உத்யோகத்தில் முன்னேற்றம்!

ராசி பலன்கள்

மேஷம்: தன்மானச் சிங்கங்களே! உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், பணவரவு உண்டு. ராசிக்கு 12-ல் சூரியன், கேது மற்றும் புதன் மறைந்திருப்பதால்... இனந்தெரியாத பயம், உடல் உபாதை வந்து நீங்கும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால்... பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள். வியாபாரத்தில் சில நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

அறிவுத் திறனால் வெற்றிபெறும் வேளையிது.

மழலை பாக்கியம் கிட்டும்!

ராசி பலன்கள்

ரிஷபம்: வெள்ளை மனசுக் காரர்களே! லாப வீட்டில் மூன்று கிரகங்கள் சாதகமாக இருப்பதால், சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். குலதெய்வக் கோயிலுக்கு சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். ராகுவும், சனியும் சரியில்லாததால் படபடப்பு, ஏமாற்றம் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும்.

தொட்டது துலங்கும் தருணமிது.

புகழ், கௌரவம்... உச்சத்தில்!

ராசி பலன்கள்

மிதுனம்: நேர்மையைக் கடைப்பிடிப்பவர்களே! முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால்... புகழ், கௌரவம் பல மடங்கு உயரும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால்... வீண் கவலை, சோர்வு வந்து செல்லும். வியாபாரத்தில் வேலை யாட்கள் அனுசரணையாக இருப்பார்கள். உத்யோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.

முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் நேரமிது.  

இல்லக் கனவு நிறைவேறும்!

ராசி பலன்கள்

கடகம்: எதிலும் புதுமையை புகுத்துபவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், வராது என்று நினைத்திருந்த பணம் வரும். புது வீடு வாங்குவீர்கள். கண்டும் காணாமல் இருந்த வர்கள் வலிய வந்து பேசுவார்கள். சூரியனும், கேதுவும் 9-ம் வீட்டில் நிற்பதால், தந்தையுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். ஜென்ம குரு தொடர்வதால், முக்கிய கோப்புகளைக் கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையை உயரதிகாரி பரிசோதிப்பார்.

சிக்கனம் தேவைப்படும் வேளையிது.

திட்டமிட்ட காரியங்கள் கைகூடும்!

ராசி பலன்கள்

சிம்மம்: முன் வைத்த காலை பின் வைக்காதவர்களே!  உங்களின் யோகாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால், எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். 8-ல் சூரியனும், கேதுவும் மறைந்திருப்பதால்... உடல்நலக்கோளாறு, காரிய தாமதம் வந்து செல்லும். 2-ல் ராகு நிற்பதால் பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்கவேண்டி வரும்.

விட்டுக் கொடுக்க வேண்டிய தருணமிது.

மனப்பக்குவம் தேவைப்படும் சமயம்!

ராசி பலன்கள்

கன்னி: மனிதநேயம் அதிகமுள்ளவர்களே! ராஜ கிரகங்களான குருவும், சனியும் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்த பணம் வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சூரியனும், கேதுவும் 7-ல் நிற்பதால்... வீண் டென்ஷன், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். செவ்வாய் 8-ல் நிற்பதால், சகோதர வகையில் பிரச்னைகள் வரலாம். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத்தில், பங்குதாரர்களிடம் கவனம் தேவை. உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள்.

பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய தருணமிது.  

வீடு, வாகன வசதி பெருகும்!

ராசி பலன்கள்

துலாம்: பாரபட்சம் பார்க்காமல் பழகுபவர்களே! ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டு      இருப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். சப்தமாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், வீடு, வாகன வசதி பெருகும்.  புதன் 6ல் மறைந்திருப்பதால்... உறவினர், தோழிகளுடன் நெருடல்கள் வந்து விலகும். 10-ல் குருவும், 2-ல் சனியும் நீடிப்பதால், வீண் விரயம், கவலை ஏற்படும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்று தீரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார்.

கடினமாக உழைத்து முன்னேறும் நேரமிது.

புதன் சாதகம்... பணம் வந்து சேரும்!

ராசி பலன்கள்

விருச்சிகம்: தவறுகளைத் தட்டிக் கேட்பவர்களே! புதன் சாதகமாக இருப்பதால், தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். சூரியனும், கேதுவும் 5-ல் நிற்பதால், பிள்ளைகளுடன் வாக்குவாதம் வந்து போகும். ராசிநாதன் செவ்வாய் 6-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். சுக்கிரனும் 6-ல் மறைந்திருப்பதால், வாழ்க்கைத் துணைவருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளைத் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் உதவியால் நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள்.

அலுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டிய தருணமிது

புதிய திட்டங்கள் உதயமாகும்!

ராசி பலன்கள்

தனுசு: எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களே! நான்காம் வீட்டில் சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால், புதிய திட்டங்கள் உதயமாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். செவ்வாய் 5-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், பிள்ளைகளால் பெருமை உண்டு. ராகுவும், கேதுவும் சரியில்லாததால், உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்தக்கூடும். வியாபாரத்தில் கமிஷன் மூலம் பணம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள்.

சாதுர்யமான பேச்சால் சாதிக்கும் வேளையிது.

கனவுகள் பலிக்கும்!

ராசி பலன்கள்

மகரம்: பிறர் வளர்ச்சி கண்டு பொறாமைப்படாதவர்களே! முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால், மனோபலம் கூடும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுய ரூபத்தை உணர்வீர்கள். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

நீண்ட கால கனவுகள் நனவாகும் நேரமிது.

ஆபரண யோகம்!

ராசி பலன்கள்

கும்பம்: கொடுத்து உதவும் குணம் கொண்டவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். சூரியனும், கேதுவும் 2-ல் இருப்பதால்... டென்ஷன், பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். குரு 6-ல் தொடர்வதால், யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள். செவ்வாய் 3-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் சொத்து வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளால் உதவிகள் உண்டு.

காத்திருந்து காய் நகர்த்தும் தருணமிது.

விரும்பியது கைவசமாகும்!

ராசி பலன்கள்

மீனம்: கற்பனாவாதிகளே! சனி பகவான் 9-ம் வீட்டிலும், குருபகவான் 5-ம் வீட்டிலும் தொடர்வதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ராசிக்குள் கேதுவும், சூரிய னும் நிற்பதால்... உடல் உபாதை, சலிப்பு வந்து போகும். செவ்வாய் 2-ல் நின்றாலும், ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால்... வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால், வீண் பிரச்னைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் வரவு சுமார்தான். உத்யோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துகொள்வீர்கள்.

அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது.

'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்