Published:Updated:

ராசிபலன்

ஏப்ரல் 28 முதல் மே 11 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

தார்த்தவாதிகளே! 

புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், நிர்வாகத் திறன் கூடும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீடு, வாகனம் உங்கள் ரசனைக்கேற்ப அமையும். உறவினர், நண்பர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஆனால் சூரியன் ராசிக்குள் தொடர்வதால், தொண்டை வலி, காது வலி, காரியத் தாமதம் வந்து செல்லும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குரு 4ல் தொடர்வதால், வேலைச் சுமை, வீண் டென்ஷன், தாயாருடன் வாக்குவாதம், மனஉளைச்சல் வந்து நீங்கும். ராகு வலுவாக அமர்ந்தி ருப்பதால், வேற்று மாநிலத்தினரால் நன்மை உண்டு. புது பொறுப்புகள், பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

அஷ்டமத்துச் சனி தொடர்வதால், இடைத்தரகர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது.

ராசிநாதன் செவ்வாய் 2ம் தேதி முதல் 2ல் அமர்வதால், பேச்சால் பிரச்னை, சகோதர வகையில் செலவுகள், பணப் பற்றாக்குறை, வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். கூடுதலாக வேலை பார்க்க நேரிடும்.

விட்டுக்கொடுத்து வெற்றி பெறும் வேளை இது.

ராசிபலன்

சொன்ன சொல் தவறாதவர்களே!

புதன் சாதகமாக இருப்பதால், புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். புது சொத்து வாங்குவீர்கள். பிரபலங்களின் ஆதரவும் கிட்டும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளை களுடன் சுற்றுப்பயணம் சென்று வருவீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்களின் சந்திப்பு நிகழும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.

சுகாதிபதி சூரியன் 12ல் மறைந் ததால், வீண் செலவு, அலைச்சல், வேலைச்சுமை வந்து போகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். ராசிநாதன் சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், தடைப்பட்ட வேலைகள் முடியும். வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

2ம் தேதி முதல் செவ்வாய் ராசிக்குள் நுழைவதால், முன்கோபம், சகோதர வகையில் மனத்தாங்கல், மனக்குழப்பம் வந்து நீங்கும். குரு 3ல் மறைந்து நீடிப்பதால், திடீர்ப் பயணங் கள், ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச் சுமை வந்து செல்லும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். கணிசமான லாபம் கிட்டும். உத்தியோகத்தில் ஓடிஓடி உழைத்தும் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று அலுத்துக் கொள்ளாதீர்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள்.

கோபத்தை அடக்குவதால் மகிழ்ச்சி பொங்கும் காலம் இது.

ராசிபலன்

மன்னிக்கும் மனம் உள்ளவர்களே!

சூரியன் லாப வீட்டில் அமர்ந்ததால், எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். எதிர்பார்த்த பணம் வரும். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணருவார்கள். அயல்நாட்டில் இருக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் பிரச்னையைத் தீர்த்து வைப்பீர்கள். செவ்வாய் 2ம் தேதி முதல் 12ல் மறைவதால், வீண் அலைச்சல், செலவுகள், தூக்கமின்மை, கடனை நினைத்து பயம் வந்து போகும். சுக்ரன் சாதகமாக இருப்பதால், புதியவர்கள் நண்பர்களாவார்கள் உறவினர்களிடமும் வெளிவட்டாரத்திலும் அந்தஸ்து உயரும்.  

குரு 2ம் வீட்டில் நிற்பதால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவதற்கும் வாய்ப்பு உண்டு. ராகுவும் கேதுவும் சரியில்லை என்பதால், எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தி யோகத்தில் உயர்வு பெறுவீர்கள்.  சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

சாதிப்பவர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் தருணம் இது.

ராசிபலன்

சீர்திருத்தவாதிகளே!

செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவி யில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புது வேலை அமையும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.

சூரியன் 10ல் நிற்பதால், பிரப லங்களின் உதவியால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அரசு காரி யங்கள் விரைந்து முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மகனின் படிப்புக்குத் தகுந்த நல்ல உத்தியோகம் கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புதனும் சுக்ரனும் சாதகமாக இருப்பதால், மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.

ஆடை, ஆபரணங்கள் சேரும். ராசிக்குள் குரு நிற்பதால், அடுத்தடுத்து தோல்விகளையும், ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். சனி 5ல் தொடர்வதால், பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணிப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

மாறுபட்ட அணுகுமுறையால் விட்டதைப் பிடிக்கும் நேரம் இது.

ராசிபலன்

எளிமையை விரும்புபவர்களே!

ராசிநாதன் சூரியன் உச்சம் பெற்றிருப்பதால், தன்னம்பிக்கை துளிர்விடும். அதிரடியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நாடாளு பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன்மனைவிக்குள் பிணக்குகள் நீங்கும்.பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர் களால் ஆதாயமும் உண்டு. அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

உங்களின் யோகாதிபதி செவ்வாய் சாதகமாக இருப்பதால், பணவரவு, திடீர் யோகம் உண்டு. பேச்சில் கம்பீரம் பிறக்கும். பாதிப் பணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். சகோதர வகையில் பயனடைவீர்கள்.

புதனும் சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், நட்பு வட்டம் விரியும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். குரு 12ல் மறைந் திருப்பதால், திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால், குடும்ப விஷயங்களை வெளி நபர் களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகள் தேடி வரும்.

எதிர்ப்புகளைக் கடந்து முன்னேறும் காலம் இது.

ராசிபலன்

கூடிவாழும் குணம் உடையவர்களே!

உங்கள் யோகாதிபதி சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், சமயோசித அறிவால் சாதிப்பீர்கள். பணவரவு உண்டு. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும் பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிரபலங்கள் உதவுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். நவீன மின்னணுச் சாதனங்கள் வாங்குவீர்கள்.

2ம் தேதி முதல் செவ்வாய் 9ம் வீட்டில் நுழைவதால், முன்கோபம் குறையும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். சகோதர வகையிலிருந்து வரும் மன வருத்தம் நீங்கும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்து வந்த வில்லங்கம் விலகும். சூரியனும் 8ல் மறைந்திருப்பதால், உடல் உஷ்ணம் அதிகரிக்கும்.

ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், விருந்தினர் களின் வருகையால் வீடு களை கட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிக ரிக்கும். ராகு ராசிக்குள் நிற்பதால், யூரினரி இன்பெக்‌ஷன், தோலில் நமைச்சல் வந்து போகும். கேது 7ல் தொடர்வதால், மனைவிக்கு ஆரோக்கியம் பாதிக்கப்படும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்பு களையும் தாண்டி லாபம் சம்பாதிப் பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும்.

சத்தமின்றிச் சாதிக்கும் வேளை இது.

ராசிபலன்

மனவலிமை மிக்கவர்களே!

கேது 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், தைரியமாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மூத்த சகோதரிக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். பழைய சொத்தை விற்று புது வீடு, மனை வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். ஆனால் சூரியன் 7ல் தொடர்வதால், மனைவிக்கு ஹார்மோன் பிரச்னை, வீண் குழப்பம், டென்ஷன் வந்து போகும்.

அரசுக் காரியங்கள் தடைப்பட்டு முடியும். புதன் சாதகமாக இருப்பதால், கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நட்பால் ஆதாயமடைவீர்கள். ராசிநாதன் சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாகப் போகவேண்டுமென்று நினைத்திருந்த சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 2ம் தேதி முதல் செவ்வாய் 8ம் வீட்டில் மறைவதால், வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

கணவன்மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போகவும். சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரி பார்த்து வாங்கவும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பாக்கி களைப் போராடி வசூலிக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

பதறாமல் பக்குவமாகச் செயல்பட வேண்டிய தருணம் இது.

ராசிபலன்

கலகலப்பானவர்களே!

குருபகவான் வலுவாக அமர்ந்தி ருப்பதால், புது திட்டங்கள் நிறைவேறும். பழைய பிரச்னைகள் தீரும். பிள்ளைகளின் பொறுப்பு உணர்வு அதிகமாகும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சூரியன் 6ல் வலுவாக இருப்பதால், அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு வாங்கவும் கட்டவும் கடன் உதவி கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு.

குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், பொன், பொருள் சேர்க்கை உண்டு. நீண்ட நாட்களாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தவரை சந்தித்து மகிழ்வீர்கள். புதனும் சாதகமாக இருப்பதால், உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

2ம் தேதி முதல் ராசிநாதன் செவ்வாய் 7ல் அமர்வதால், வீண் சந்தேகத்தைத் தவிர்க்கவும். மனைவி உங்கள் குறைகளை சுட்டிக் காட்டினால், அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். ஜன்மச் சனி தொடர்வதால், செரிமானக் கோளாறு, நெஞ்சு எரிச்சல், தலைச்சுற்றல், ஒருவித படபடப்பு வந்து செல்லும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள்.

மன உறுதியுடன் போராடி வெல்லும் நேரம் இது.

ராசிபலன்

மனசாட்சியை மதிப்பவர்களே!

பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், புகழ், கௌரவம் உயரும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வி.ஐ.பிக்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். கம்பீரமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளை களின் நீண்ட நாள் ஆசைகளை நிறை வேற்றுவீர்கள். சகோதரிக்கு இருந்த பிரச்னை நீங்கும். உங்கள் ரசனைக் கேற்ற சொத்து வாங்குவீர்கள்.  

ஆனால், 5ல் சூரியனும் நிற்பதால், வீண் டென்ஷன், அடிவயிற்றில் வலி, உறவினர்கள் பகை, காரியத் தாமதம் வந்து செல்லும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தும் உட்கொள்ள வேண்டாம். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். சுக்ரன் 6ல் மறைவதால், மின்சார, மின்னணுச் சாதனங்கள் பழுதாகும். வாகனப் பழுது வந்து நீங்கும்.

3ம் தேதி முதல் சுக்ரன் 7ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேருவீர்கள். புதனும் 6ல் மறைந்தி ருப்பதால், நண்பர்கள், உறவினர்களால் பண இழப்பு, மறைமுகப் பகை வரக்கூடும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனையையும் புரிந்துகொண்டு அதற்கேற்ப கொள்முதல் செய்யப் பாருங்கள். உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் மோதல் சூழ்நிலை உண்டாகும்.

சகிப்புத் தன்மை தேவைப்படும் தருணம் இது.

ராசிபலன்

செய்நன்றி மறவாதவர்களே!

புதன் சாதகமாக இருப்பதால், புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கு வீர்கள். எதிர்பார்த்த இடத்தில் கடன் கிடைக்கும். வீடு, வாகனச் சேர்க்கை உண்டு. பால்ய நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். உறவினர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். தந்தைவழியில் ஆதாயமடைவீர்கள். 3ம் தேதி முதல் சுக்ரன் 6ல் மறைவதால், தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு, வாகன விபத்து, மின்னணு, மின்சார சாதனப் பழுது வந்து நீங்கும். வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் கணவன்மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும்.

சூரியனும் 4ல் நிற்பதால், புதுத் திட்டங்கள் நிறைவேறும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். சிலர் வீட்டை இடித்துக் கட்டுவது குறித்து யோசிப்பீர்கள். 2ம் தேதி முதல் செவ்வாய் 5ம் வீட்டில் நுழைவதால், பிள்ளைகள் கோபப்படுவார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைதூக்கும். குருவும் சனியும் வலுவாக இருப்பதால், எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும்.

திருமணப் பேச்சு வார்த்தை கைகூடும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புதுப் பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் புது ஒப்பந்தங்கள் வரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சமயங்களில் உங்களைக் கடிந்து பேசினாலும் அன்பாக நடந்து கொள்வார். சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும்.

ஒருசில வெற்றிகளை சந்திக்கும் காலம் இது.

ராசிபலன்

சிந்தனைச் சிற்பிகளே!

சூரியன் 3ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், தைரியம் பிறக்கும். மனோபலம் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.

யோகாதிபதி சுக்ரன் சாதகமாக இருப்பதால், வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். புதன் சாதகமாக இருப்ப தால், எதிர்பாராத உதவிகள் கிட்டும். நண்பர்களின் அன்புத் தொல்லை குறையும். வேற்று மொழியினரால் நிம்மதி அடைவீர்கள். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணர்வார்கள்.

சர்ப்பக் கிரகங்கள் உங்களுக்குச் சாதகமாக இல்லாததால், வீண் விரயம், இனம்தெரியாத பயம் மனைவியுடன் மோதல்கள் வந்து போகும். குரு 6ல் நிற்பதால், முக்கிய கோப்புகளை கவனமாகக் கையா ளுங்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். உத்தி யோகத்தில் மூத்த அதிகாரிகளைப் பற்றிக் குறை கூறாதீர்கள். சக ஊழியர் களை அரவணைத்துப் போகவும்.

காலநேரம் கனிந்து வரும் வேளை இது.

ராசிபலன்

கற்பனைவாதிகளே!

புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டு. நண்பர்களின் ஆதரவு கிட்டும். வி.ஐ.பிக்களின் தொடர்பு ஏற்படும். திருமணப் பேச்சு வார்த்தை கைகூடும்.

உங்களின் தனபாக்யாதிபதி செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வ தால், ஷேர், கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். சொத்து வாங்குவது, விற்பதில் இருந்த இழுபறி நிலை மாறும். ராசிநாதன் குருபகவான் வலுவாக இருப்பதால், எதிலும் வெற்றி கிட்டும். உடல் நலம் சீராகும்.

வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். 2ல் சூரியன் அமர்ந்திருப்பதால், கண் எரிச்சல், நெஞ்சு வலி, படபடப்பு, வீண் அலைச்சல் வந்து போகும். சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால், வீண் டென்ஷன், முன்கோபம், எதிலும் ஒருவித பிடிப்பற்ற போக்கு வந்து செல்லும். வியாபாரத்தில் நவீன வசதிகளைப் புகுத்தி வாடிக்கையாளர் களைக் கவருவீர்கள். புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதுப் பொறுப்புகள் தேடி வரும். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.

பகுத்தறிவால் பலனடையும் நேரம் இது.