சூரியனும் சந்திரனும் ஒளிக் கிரகங்கள் ஆவார்கள். இதில், சூரியன் நெருப்புக் கிரகம் என்பதுடன, நெருப்பு ராசியான சிம்மத்துக்கும் அதிபதி ஆவார். ஒரே ஒரு வீட்டுக்கு அதிபதியான சூரியன், அவர் இருக்கும் இடத்தைப் பொறுத்து. அந்த வீட்டின் ஆதிபத்திய சிறப்புக்களை முழுமையாகத் தருவார்.

நெருப்புக் கிரகமான சூரியன், நெருப்பு வீடான மேஷத்தில், செவ்வாயின் வீட்டில் உச்ச நிலை பெறுவார். செவ்வாயும் நெருப்புக் கிரகம் ஆவார். இதனால், சூரியன் மேஷத்தில் உலவும்போது அதிக பலம் பெறுவார். மேலும், சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்துக்கு 9ம் வீடான மேஷத்தில் உலவும்போது, அதிக உஷ்ணத்தை வெளிப்படுத்துவார்.

ஒவ்வோர் ஆண்டும் சூரியன் மேஷ ராசியில் பரணி நட்சத்திரம் 3ம் பாதத்தில் உலவும்போது, அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகும்.

சூரியன் ரிஷப ராசியில் ரோகிணி 2ம் பாதத்துக்கு மாறும்வரை அக்னி நட்சத்திரம் தொடரும்.

அக்னி நட்சத்திரத்தில், அதாவது சூரியன் மேஷத்திலும், ரிஷபத்திலும் பரணி 3ம் பாதம் முதல் ரோகிணி 1ம் பாதம் வரை உலவும் நேரத்தில், பொதுவாக சித்திரை 21ம் தேதி முதல் வைகாசி 13ம் தேதி வரை சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது.

குறிப்பாக, கிரக ஆரம்பம், கிரகப் பிரவேசம், பந்தல்கால் நடுவது, தெய்வத் திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்வது போன்ற காரியங்களைத் தவிர்க்க வேண்டும்.

அக்னி நட்சத்திரம் தவிர, உஷ்ணசிகை, அக்னி பஞ்சகம், கரிநாள் ஆகியவற்றிலும் சுப காரியங்கள் தவிர்ப்பது நல்லது.

உஷ்ணசிகை என்பது அசுவினி, பூரம்1ம் பாதம், பரணி, அனுஷம் 4ம் பாதம், உத்திராடம், சதயம், 2, 3ம் பாதங்களும் ஆகும்.

அக்னி பஞ்சகம் என்பது, குறிப்பிட்ட நாளின் கிழமை, திதி, நட்சத்திரம், லக்னம் ஆகியவற்றின் எண்களைக் கூட்டி, அத்துடன் மேஷ லக்னமானால் 5ம், ரிஷப லக்னமானால் 7ம், மகர லக்னமானால் 2ம், கும்ப லக்னமானால் 4ம், மீன லக்னமானால் 6ம் கூட்டி, 9ஆல் வகுத்த பிறகு மீதி 2 வருமானால், அக்னி பஞ்சகம் ஆகும்.

கிழமை: ஞாயிறு, திங்கள் 2, செவ்வாய் 3, புதன் 4, வியாழன் 5, வெள்ளி 6, சனி 7 திதி: பிரதமை 1, துவிதியை 2, திரிதியை 3, சதுர்த்தி 4, பஞ்சமி 5, சஷ்டி 6, சப்தமி 7, அஷ்டமி 8, நவமி 9, தசமி 10, ஏகாதசி 11, துவாதசி 12, திரயோதசி 13, சதுர்த்தசி 14, அமாவாசை பௌர்ணமி 15.

நட்சத்திரம்: அசுவினி 1, பரணி 2, கிருத்திகை 3, ரோகிணி 4, மிருகசீரிஷம் 5, திருவாதிரை 6, புனர்பூசம் 7, பூசம் 8, ஆயில்யம் 9, மகம் 10, பூரம் 11, உத்திரம் 12, ஹஸ்தம் 13, சித்திரை 14, சுவாதி 15, விசாகம் 16, அனுஷம் 17, கேட்டை 18, மூலம் 19, பூராடம் 20, உத்திராடம் 21, திருவோணம் 22, அவிட்டம் 23, சதயம் 24, பூரட்டாதி 25, உத்திரட்டாதி 26, ரேவதி 27.

லக்னம்: மேஷம் 1, ரிஷபம் 2, மிதுனம் 3, கடகம் 4, சிம்மம் 5, கன்னி 6, துலாம் 7, விருச்சிகம் 8, தனுசு 9, மகரம் 10, கும்பம் 11, மீனம் 12.

அக்னி பஞ்சகம் வரும் நாளில் சுபகாரியம் செய்தால், தீயால் சேதம் உண்டாகும்.

முன் காலத்தில், அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்குதல் அதிகம் இருந்ததாலும், அப்போது குளிர்சாதனம், மின்விசிறி போன்ற வசதிகள் இல்லாததாலும், அந்த நேரத்தில் சுபகாரியங்களை நடத்தினால், வருவோருக்கு அசௌகரியமாக இருக்கும் என்பதால் சுப காரியங்களைத்் தவிர்ப்பது நல்லது எனச் சொல்லியுள்ளனர் நம் முன்னோர்கள்.

தற்காலத்தில், உஷ்ணத்தால் பாதிக்கப்படாமல் இருக்க பல விஞ்ஞான வசதிகள் வந்துவிட்டதால், சுப காரியங்கள் நடத்துவோருக்கும் கலந்துகொள்வோருக்கும் அசௌகரியம் எதுவும் ஏற்படுவதில்லை. எனவே, அக்னி நட்சத்திரத்திலும் சுப காரியங்களை நடத்துகின்றனர். மேலும், ஆத்மகாரகன் சூரியன் அதிபலம் பெற்றிருக்கும் நேரம் என்பதால், அக்னி நட்சத்திர வேளையில் சுப காரியங்கள் செய்வது நல்லது என்றும் சொல்லப்படுகிறது.

'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்பார்கள். காலத்துக்கேற்ப, சுற்றுச்சூழலுக்கேற்ப நம்மையும் சற்று மாற்றிக்கொள்வதில் தவறில்லையே!

பொதுவாக அக்னி நட்சத்திர நாள்களில் சில காரியங்களைச் செய்யக்கூடாது என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. மரம் செடிகளை வெட்டுவதோ, நிலம் மற்றும் வீடுகளில் பரமாரிப்புப் பணிகள் செய்வதோ கூடாது. வாகனங்களில் நீண்டதூரம் பயணம் செய்யக் கூடாது.

ஆலயங்களுக்குச் சென்று தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதும், தண்ணீர்ப்பந்தல் அமைத்து நீர் மோர், பானகம், இளநீர் வழங்குவதும், ஏழை எளியவர்களுக்கு தயிர்சாதம் வழங்குவதும், காலணி, விசிறி, குடை போன்றவற்றை வழங்குவதும் அக்னி நட்சத்திரத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களில் இருந்து நாம் விடுபடுவதற்கான சிறந்த பரிகாரங்கள் ஆகும்.

பரணி நட்சத்திரத்துக்கு உரிய தெய்வமான மகாலக்ஷ்மி தேவியையும், ரோகிணிக்கு உரிய கௌரியையும் (அம்பாள்) சந்தனாபிஷேகம் செய்து வழிபட, வாழ்வில் வசந்தம் வீசும்.

அக்னி நட்சத்திரத்தின் வெம்மை நம்மைத் தகிக்காமல் இருக்க, தினமும் காலை வேளையில், பூஜையறையில் சூரியனுக்கு உரிய மாக்கோலத்தை மணைப் பலகையில் போட்டு, சூரிய காயத்ரி மந்திரத்தை 21 முறை ஜெபிக்கலாம்.