ஒருவரின் ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தால், தாமதத் திருமணம் ஏற்படுகிறது. இல்லற வாழ்க்கையிலும் சில குறைபாடுகள் இருக்கக்கூடும். மனம் மகிழ்ச்சியும் நிம்மதியும் இன்றித் தவிக்கும். எந்தக் கிரகத்தால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்று அறிந்து, அந்த கிரகத்துக்கும், அதன் அதிமுக்கிய ப்ரத்யதி தேவதைக்கும் வழிபாடு, சாந்தி செய்து, கெடுபலன்களிலிருந்து ஓரளவு நிவாரணம் காணலாம்.

குரு, சுக்கிரன்: இவர்களுக்கு வழிபாடு செய்வதன் மூலம், நல்ல கணவன் அல்லது மனைவி அமையவும், இனிய இல்லறம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

சூரியன்: 7ல் அமர்ந்து நீசம் பெற்றிருப்பின், திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். இதற்கு அந்த ஜாதகர், சூரியனை வழிபாடு செய்ய வேண்டும். சூரியனின் ப்ரத்யதி தேவதையான ருத்ரன் அல்லது சிவபெருமானை வணங்க வேண்டும். சூரியனுக்கு வழிபாடு செய்யும்போது, ஆதித்ய ஹ்ருதயம் படிக்கலாம். சிவனை வணங்கிப் போற்ற, கோளறு பதிகத்தைப் பாராயணம் செய்தும் வழிபடலாம்.

சந்திரன்: சந்திரனுக்கு வலிமை குன்றி, அவர் 7ல் இருப்பின், தாமதத் திருமணம் மற்றும் இல்லற வாழ்க்கையில் குறைகள் ஏற்படும். அப்போது வாசகர்கள் சந்திரனை வழிபட வேண்டும். பௌர்ணமிதோறும் அம்மனை வழிபட்டு வந்தாலும் நற்பலன்கள் கிடைக்கும்.

செவ்வாய்: செவ்வாயால் ஜாதகத்தில் தோஷம் ஏற்பட்டு இருப்பின், செவ்வாயை வணங்குவதுடன், சுப்ரமணியரையும் வணங்கி, சஷ்டி கவசம் படித்துப் பயன்பெறலாம்.

புதன்: புதன் 7க்கு உடையவராகி, பலம் குன்றி ஜாதகத்தில் இருந்தால், அதுவும் தோஷம்தான். அதற்கு, ஜாதகர் புதனை வழிபட்டு வருவதுடன், நாராயண மூர்த்தியை வழிபாடு செய்ய வேண்டும். விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணமும் செய்யலாம்.

குரு: குருபகவான் 7ல் அமர்ந்திருந்தால், அதிக தோஷம் ஏற்படுகிறது. இதற்கு குருபகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வந்தால், நல்லபடியாக திருமணம் நடைபெறும்.

சுக்கிரன்: சுக்கிரனால் ஜாதகத்தில் தோஷமிருப்பின், சுக்கிரனையும், இந்திரனையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டு வந்தால், தடைகள் விலகி, நல்ல வரன் அமைந்து, திருமணம் நடைபெறும். இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்.

சனி: சனி 7ல் இருந்தாலும், 7க்கு உடையவருடன் சேர்ந்தாலும், 7ம் வீட்டைப் பார்த்தாலும் திருமணம் நடைபெறத் தடையும் தாமதமும் ஏற்படும். இதற்கு சனிபகவானை வணங்கி வர வேண்டும். சனி மந்திரம், சனி காயத்ரி கூறி வழிபடவும்.

ராகு அல்லது கேது: ராகு அல்லது கேது 7ல் இருந்தாலும், லக்னத்துக்கு 2ம் வீடு, 8ம் வீடு இவற்றில் இருந்தாலும் நாகதோஷம் ஏற்படுகிறது. அதன் காரணமாக திருமணம் நடைபெறக் காலதாமதம் ஆகும். இதற்கு ராகுகேதுவை வழிபடுவதுடன், சர்ப்பேஸ்வரன், விநாயகர், துர்க்கை அம்மன் ஆகியோரையும் வழிபாடு செய்து வந்தால், சங்கடங்கள் விலகி, நல்ல திருமண வாழ்க்கை அமையும்.

ஒருவரின் ஜாதகத்தில் எந்த கிரகத்தினால் களத்திர தோஷம் ஏற்பட்டுள்ளது என்று பார்த்து, அந்த கிரகத்துக்கு உரிய யந்த்ரத்துடன் கூடிய தெய்வத் திருவுருவப் படத்தை பூஜையறையில் வைத்து, தினமும் காலை மாலை இரண்டு வேளையும், உரிய ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டு வந்தால், தோஷம் விலகி நல்ல திருமண வாழ்க்கை அமையும்.

நவகிரகங்கள் மற்றும் அவர்களின் ப்ரத்யதி தேவதைக்கு உரிய ஸ்லோகங்கள்:

களத்திர தோஷம் நீங்கி, நல்ல மண வாழ்க்கை அமைய, ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய ப்ரத்யதி தெய்வங்களுக்கு உரிய இந்த ஸ்லோகங்களை அனைவருமே பாராயணம் செய்து, நன்மை அடையலாம்.

சூரியன்:

ஆதித்ய க்ரஹச்ய ப்ரத்யதி தேவதாம்

ருத்ரம் த்யாயாமி என்று கூறி, சிவனை வழிபடவும்.

சந்திரன்:

ஸோம க்ரஹச்ய ப்ரத்யதி தேவதாம்

கௌரீம் த்யாயாமி என்று கூறி, அம்மனை வழிபடவும்.

செவ்வாய்:

அங்கார க்ரஹச்ய ப்ரத்யதி தேவதாம்

ஸூப்ரஹ்மண்யம் த்யாயாமி என்று கூறி, முருகனை வழிபடவும்.

புதன்:

புத க்ரஹச்ய ப்ரத்யதி தேவதாம்

ஸ்ரீ நாராயணம் த்யாயாமி என்று கூறி, விஷ்ணுவை வணங்கவும்.

குரு:

குரு க்ரஹச்ய ப்ரத்யதி தேவதாம்

ப்ரஹ்மானாம் த்யாயாமி என்று கூறி வணங்கிவிட்டு, மறுபடியும் 'ப்ரம்மனே நம:’ என்று 12 முறை கூறி, வணங்கவும்.

சுக்கிரன்:

சுக்ர க்ரஹச்ய ப்ரத்யதி தேவதாம்

இந்த்ரம் த்யாயாமி என்று சொல்லி வணங்கிய பிறகு, 'இந்த்ராய நம:’ என்று 12 முறை கூறி, வணங்கவும்.

சனி:

சனைச்சர க்ரஹச்ய ப்ரத்யதி தேவதாம்

ப்ரஜாபதிம் த்யாயாமி என்று சொல்லி வணங்கிய பின்பு, 'ப்ரஜானாம் பதயே நம:’ என்று கூறி, வணங்கவும்.

ராகு:

ராகு க்ரஹச்ய ப்ரத்யதி தேவதாம்

ஸர்ப்பராஜாம் த்யாயாமி என்று கூறி வணங்கிவிட்டு, 'ஸர்ப்பராஜாய நம:’ என்று சொல்லி வணங்கவும்.

கேது:

கேது க்ரஹச்ய ப்ரத்யதி தேவதாம்

கணபதயே த்யாயாமி என்று கூறி வணங்கிவிட்டு, 'கணபதயே நம:’ என்று கூறி வணங்கவும்.

இதுபோல் வணங்குவதோடு, அவரவரின் குலதெய்வத்தையும் வணங்கி வர, தோஷத்தின் வலிமை குறைந்து, நலம் கூடப் பெறலாம்.