Published:Updated:

மன்மத வருடம் சுக்கிரன் பலன்கள்

14-4-2015 முதல் 13-4-2016 வரை‘நவக்கிரக ரத்னஜோதி’ சந்திரசேகரபாரதி

சுக்கிரன்  சில தகவல்கள்  

அதிதேவதை : மகாலட்சுமி (இந்திரன்,   இந்திராணியையும்  வழிபடலாம்).

மன்மத வருடம் சுக்கிரன் பலன்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திசை : தென்கிழக்கு

ரத்தினம் : வைரம்

கிழமை : வெள்ளி

எண் :  6

உலோகம் : வெள்ளி

தானியம் : மொச்சை

பாலினம் : பெண்

மலர் : வெண் தாமரை

சமித்து : அத்தி

தசா காலம் : 20 வருஷங்கள்.

குணம் : ரஜோ குணம். (நற்குணம்).

நட்பு கிரகங்கள் : புதன், சனி

பகை கிரகம் : சூரியன், சந்திரன்

சமமான கிரகங்கள் : செவ்வாய், குரு, ராகு, கேது.

ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி சுக்கிரன். துலாமில் ஆட்சி, மூலத்திரிகோணம் பெறுவார். துலாமில் முதல் 15 டிகிரிகள் மூலத்திரிகோண பலம் பெறுவார். மீனம் சுக்கிரனுக்கு உச்ச வீடாகும்.

மேஷம், விருச்சிகம், மிதுனம், கன்னி, தனுசு, மகரம், கும்பம், நட்பு வீடுகளாகும். கடகமும்  சிம்மமும் பகை வீடுகளாகும். கன்னியில் நீசமாவார். பலம் குறையும். சுக்கிரன் குருவுக்கு அடுத்த முழுச் சுபர் ஆவார். சுக்கிரன் கோசாரப்படி, அதாவது சந்திர ராசிக்கு 1, 2, 3, 4, 5, 8, 9, 11, 12 ஆகிய இடங்களில் இருந்தால் நலம் புரிவார். சுக்கிர பலம் (ஜாதகத்திலோ, கோசாரத்திலோ) உள்ளவர்களுக்கு மனைவியால் அனுகூலம் உண்டாகும்.

காதல் நிறைவேறும். உணர்ச்சி வசப்படுவார்கள். குடும்பத்தாரால் அனுகூலம் உண்டாகும். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறைகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.  வர்த்தகம் மூலம் பொருள்வரவு கூடும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களால் லாபம் கிடைக்கும். எதிலும் ஆர்வம் உண்டாகும். உடல் பலம் கூடும். தோற்றப்பொலிவும், புன்சிரிப்புடன் கூடிய முகமும் அமையும்.

தலைமுடி, மறைமுக ஜனனேந்திரிய உறுப்புக்கள், தொடை, சிறுநீர், உடற்கட்டு ஆகியவை சுக்கிர பலத்தால் சிறப்பாக அமையும். சுக்கிர பலம் இல்லாதவர்களுக்கு ஜனனேந்திரியக் கோளாறுகள் ஏற்படும். இல்லறத்தை அனுபவிக்க முடியாமல் போகும். உடல் சக்தி குறையும். பார்வைக் கோளாறு ஏற்படும். வாசனைகளை நுகர முடியாமல் போகும். மேலும், சுக்கிரன் எந்த வீட்டுக்கு அதிபதியாக இருப்பாரோ, அந்த வீட்டின் மூலம் அடையக்கூடிய சுப பலன்களைப் பெற முடியாமல் போகும். சுக்கிரனுக்கு அதிதேவதை மகாலட்சுமி. சுக்கிரன் பலம் குறைந்திருக்கும்போது, மகாலட்சுமியின் ஆலயத்துக்குச் சென்று வழிபடுவதன் மூலம் நலம் உண்டாகும்.

இனி, இந்த மன்மத வருஷத்தில், கோசார ரீதியாக ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சுக்கிர பகவான் அளிக்கக்கூடிய பலாபலன்கள் என்னென்ன என்று விரிவாக அறிந்து கொள்வோம்.

மன்மத வருடம் சுக்கிரன் பலன்கள்

மன்மத வருட ஆரம்பத்தில் சுக்கிரன் உங்களுக்குச் சாதகமாக உலவுகிறார். நவம்பர் 1ம் தேதி வரை பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும். புதிய சொத்துக்கள் சேரும்.

பிறரிடம் சுமுகமாகப் பழகுவீர்கள். அவர்களால் அனுகூலமும் பெறுவீர்கள். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ பெறுவீர்கள். ஜூலை 2 முதல் நவம்பர் 1ம் தேதிக்குள் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அதிகமாகும். மக்களால் அனுகூலம் உண்டாகும்.  

நவம்பர் 2 முதல் டிசம்பர் 25 வரை உள்ள காலத்தில் எதிலும் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. வாழ்க்கைத்துணைவரின் நலனில் கவனம் தேவைப்படும். டிசம்பர் 26 முதல் பிப்ரவரி 12 வரை உள்ள காலத்தில் எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். தான, தர்மப்பணிகளிலும், தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். நல்லவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். விருந்து, விழாக்களில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். பிப்ரவரி 13 முதல் மார்ச் 7 வரை உள்ள காலத்தில் தொழில்ரீதியாகச் சில பிரச்னைகள் ஏற்பட்டு, விலகும். மார்ச் 8 முதல் வருடம் முடிய விசேஷமான நன்மைகள் உண்டாகும். மூத்த சகோதரிகளால் நலம் ஏற்படும். பொன்னும் பொருளும் குவியும்.

மன்மத வருடம் சுக்கிரன் பலன்கள்

உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்கிரன், வருட ஆரம்பத்தில் உங்கள் ராசியிலேயே உலவுவது சிறப்பாகும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். புதிய பொருட்கள் சேரும். மன மகிழ்ச்சி பெருகும். மே 3 முதல் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். முக்கியமான காரியங்கள் ஒன்றிரண்டு இப்போது நிறைவேறும். ஜூன் முதல் நவம்பர் 1 வரை எதிர்ப்புகள் இருக்கும் என்றாலும், சமாளிப்பீர்கள். மார்பு, இதயம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.

புதிய சொத்துக்கள் சேரும். நவம்பர் 2 முதல் 29 வரை உள்ள காலத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மன மகிழ்ச்சி கூடும். நவம்பர் 30 முதல் ஜனவரி 19 வரை சுக்கிரன் பலம் குறைவதால், சோதனைகள் சூழும். எதிர்ப்புக்களின் கரம் வலுக்கும். உடல் ஆரோக்கியம் கவனிக்கப்பட வேண்டிவரும். ஜனவரி 20 முதல் மார்ச் 7 வரை உள்ள காலத்தில் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். நல்ல தகவல் வந்து சேரும். செல்வாக்கு உயரும். வெளிநாட்டில் உள்ளவர்களால் அனுகூலம் உண்டாகும்.

மார்ச் 8 முதல் ஏப்ரல் 1 வரை தொழில்ரீதியாகச் சில பிரச்னைகள் ஏற்படும். பொறாமைக்காரர்களால் சில இடர்ப்பாடுகள் உண்டாகும். ஏப்ரல் 2 முதல் 13 வரை உள்ள காலம் மிகச் சிறப்பானது. எண்ணங்களில் மலர்ச்சி உண்டாகும். புதிய வாகனம், வீடு வாங்க வாய்ப்பு கூடிவரும். பிறர் வியக்கும்படி ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள்.

மன்மத வருடம் சுக்கிரன் பலன்கள்

உங்கள் ராசிக்கு 12ல் சுக்கிரன் உலவும்போது இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. வசதி வாய்ப்புக்கள் கூடும். இடமாற்றம் நல்லவிதமாக அமையும். சொத்துக்களும் வாகனமும் சேரும். மே 3 முதல், சுக்கிரன் உங்கள் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால், மன மகிழ்ச்சி பெருகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மாணவர்களின் நிலை உயரும். ஜூன் மாதத்தில் குடும்ப நலம் சிறக்கும். பொருளாதார நிலை உயரும். ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். மக்களால் பணவரவு உண்டாகும். ஜூலை மாதத்தில் முயற்சி வெற்றி பெறும். அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும்.

அக்டோபரில், போட்டிகளில் வெற்றி கிட்டும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஏற்படும். நவம்பர் மாதத்தில் நூதன பொருட்சேர்க்கை நிகழும். நண்பர்கள், உறவினர்களால் நலம் உண்டாகும். டிசம்பர் 26 முதல் பிப்ரவரி 12 வரை உள்ள காலம் சோதனையானது. வீண் செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம்.

பிப்ரவரி 13 முதல் நல்ல திருப்பம் உண்டாகும். எதிர்பாராத பொருட்சேர்க்கை பெறுவீர்கள். மார்ச் மாதத்தில் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். நல்ல தகவல் கிடைக்கும். ஏப்ரலில் தொழில்ரீதியாக இடமாற்றம் உண்டாகும். மக்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். தொழில் முன்னேற்றத்துக்காகவும் செலவு செய்வீர்கள்.

மன்மத வருடம் சுக்கிரன் பலன்கள்

புத்தாண்டு ஆரம்பம் மிகச் சிறப்பாக அமையும். சுக்கிரனின் சஞ்சாரம் ஜனவரி 19 வரை சாதகமாக இருப்பதால், எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். தாயின் உடல்நிலை சீராகும். உடன்பிறந்த சகோதரிகளால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களாலும் உறவினர்களாலும் அனுகூலம் ஏற்படும். ஆகஸ்ட் மாதத்தில் பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும்.

நவம்பரில் சொத்துக்களை விற்பதற்கும், அதன் மூலம் ஆதாயம் பெறுவதற்கும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும், சமாளித்து விடுவீர்கள். டிசம்பரில் புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். நல்லவர்கள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். வீடு, வாகன யோகம் சிலருக்கு உண்டாகும்.

ஜனவரி 20 முதல் சுக்கிரன் 6ம் இடத்துக்கும், பிப்ரவரி 13 முதல் 7ம் இடத்துக்கும் மாறுவது சிறப்பாகாது. மருத்துவச் செலவுகள் கூடும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும்.

மார்ச் 8 முதல் நல்ல திருப்பம் உண்டாகும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். மன மகிழ்ச்சி கூடும். ஏப்ரல் 2 முதல் 13 வரையிலும் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய பொருட்கள் சேரும். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் ஏற்படும்.

மன்மத வருடம் சுக்கிரன் பலன்கள்

புத்தாண்டு ஆரம்பத்தில் சுப காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொலைதூரத் தொடர்பு ஆக்கம் தரும். எழுத்து, பத்திரிகை, டி.வி., ரேடியோ போன்ற தகவல் தொடர்புத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும், இசைக் கலைஞர்களுக்கும் வெற்றிகள் குவியும். மே மாதத்தில் பொருளாதார நிலை உயரும். ஆடை, அணிமணிகளால் ஆதாயம் கிடைக்கும். உடன்பிறந்த சகோதரிகளால் அனுகூலம் உண்டாகும். மன உற்சாகம் பெருகும். தொழில் ரீதியாக வளர்ச்சி காணலாம். பெண்களாலும் மனைவியாலும் நலம் உண்டாகும். சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் உருவாகும். ஜூன், ஜூலை மாதங்களில் எதிர்ப்புக்கள் சற்று கூடும் என்றாலும், சமாளித்து வருவீர்கள்.

அக்டோபரில் புதிய பதவி கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்பு கூடிவரும். நவம்பரில் பொருளாதார நிலை உயரும். மன மகிழ்ச்சி அதிகமாகும். டிசம்பரில் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். டிசம்பர் 26 முதல் பிப்ரவரி 12 வரை புதிய வீடு, வாகனச் சேர்க்கைக்கு இடமுண்டு. சில இடர்ப்பாடுகளும் அவ்வப்போது ஏற்படும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். பிப்ரவரி 13 முதல் ஏப்ரல் 1 வரை சோதனைகள் சூழும். விரும்பத்தகாத இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும்.

ஏப்ரல் 2 முதல் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். தொழில் முன்னேற்றத்துக்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். அதற்கான சந்தர்ப்பமும் கனிந்துவரும்.

மன்மத வருடம் சுக்கிரன் பலன்கள்

உங்கள் ராசிக்கும் ராசி அதிபதிக்கும் சுக்கிரன் நட்பு கிரகம் ஆவார். அவர் புத்தாண்டு ஆரம்பத்தில் 9ம் இடத்தில் உலவுவது விசேஷமாகும். தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். தந்தை நலம் சீராகும். மே மாதத்தில் தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். பண வரவு திருப்தி தரும். ஜூன் மாதத்தில் பொருளாதார நிலை உயரும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். குடும்பத்தாரால் அனுகூலம் உண்டாகும்.

ஜூலை முதல் நவம்பர் 1 வரை சில பிரச்னைகள் ஏற்படும். நவம்பர் 2 முதல் முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். புதிய பொருட்கள் சேரும். டிசம்பரில் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். தன யோகம் உண்டாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். டிசம்பர் 26 முதல் ஜனவரி 19 வரையிலும் உள்ள காலத்தில் வெற்றி வாய்ப்புக்கள் சற்று அதிகரிக்கும். ஜனவரி 20 முதல் பிப்ரவரி 12க்குள் புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும்.

பிப்ரவரி 13 முதல் மார்ச் 8க்குள் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். மார்ச் 8 முதல் சுக்கிர பலம் குறைவதால், சோதனைகள் தலைதூக்கும். குடும்ப நலம் பாதிக்கும். தசாபுக்திகள் சிறப்பாக இருந்தால், பாதிப்பு அவ்வளவாக இருக்காது.

மன்மத வருடம் சுக்கிரன் பலன்கள்

உங்கள் ராசிநாதன் சுக்கிரன், புத்தாண்டு ஆரம்பத்தில் தன் சொந்த வீடான 8ல் உலவுகிறார். திடீர்ப் பணவரவு உண்டாகும். மே மாதத்தில் தெய்வப் பணிகள் நிறைவேறும். ஜூன் மாதத்தில் தொழில் சம்பந்தமான பிரச்னைகள் தலைதூக்கும். எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். ஜூலை 2 முதல் ஆகஸ்ட் 23 வரை எதிர்ப்புகள் இருக்கும் என்றாலும், பண நடமாட்டம் கூடவே செய்யும். ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 27 வரை எதிலும் யோசித்து ஈடுபடவும். மதிப்புக்கும் செல்வாக்குக்கும் குறை ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும்.

செப்டம்பர் 28 முதல் நல்ல திருப்பம் உண்டாகும். புதிய பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். நவம்பரில் சுபச் செலவுகள் இருக்கும். டிசம்பரில் புதிய பொருள் சேரும். டிசம்பர் 26 முதல் பண நடமாட்டம் அதிகமாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். ஜனவரி 20 முதல் வெற்றி வாய்ப்புகள் கூடும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும்.

பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சொத்துக்கள் சேரும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். மார்ச் மாதம் சிறப்பானதாகும். உற்சாகம் பெருகும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். ஏப்ரல் 2 முதல் 13 வரை பிரச்னைகள் தலைதூக்கும். எதிர்ப்புக்கள் சற்று அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் தேவைப்படும்.

மன்மத வருடம் சுக்கிரன் பலன்கள்

உங்கள் ராசிக்கு வருட ஆரம்பத்தில் சுக்கிரன் 7ம் இடத்தில் உலவுவது சிறப்பாகாது. சுக்கிரனை சனி பார்ப்பதும் குறையாகும். கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. கூட்டாளிகளிடம் சுமுகமாகப் பேசிப் பழகவும். மே மாதத்தில் பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்களும் எதிர்பாராத பொருட்சேர்க்கையும் நிகழும். ஜூன் மாதம் கணவன் மனைவி உறவு நிலை சீராகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். ஜூலை மாதத்தில் எதிர்ப்புகள் கூடும். ஆகஸ்ட் மாதத்தில் வாழ்க்கைத் துணைவராலும் பங்குதாரர்களாலும் பிரச்னைகள் சூழும்.

நவம்பர் 2ம் தேதி முதல் நல்ல திருப்பம் உண்டாகும். பெண்களால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். பண வரவு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். டிசம்பரில் சுபச் செலவுகள் கூடும். இடமாற்றம் உண்டாகும். வாழ்க்கை வசதிகள் பெருகும். ஜனவரி 19 வரையிலும் உள்ள காலத்தில் மன உற்சாகம் பெருகும். ஜனவரி 20 முதல் பிப்ரவரி 12 வரையிலும் உள்ள காலத்தில் குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பல வழிகளில் பணம் வந்து சேரும். வாழ்க்கைத்துணைவரால் ஓரிரு எண்ணங்கள் இப்போது நிறைவேறும்.

பிப்ரவரி 13 முதல் வருடம் முடிய சுப பலன்கள் கூடவே செய்யும். புதிய சொத்துக்கள் சேரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடும். மக்களால் நலம் உண்டாகும்.

மன்மத வருடம் சுக்கிரன் பலன்கள்

வருட ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் சுக்கிரன் உலவுகிறார். இது விசேஷமாகாது. எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும். பெண்களாலும் வாழ்க்கைத் துணைவராலும் சங்கடங்கள் சூழும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரலாம். மே மாதத்தில் சுக்கிரன் 7ம் இடத்தில் உலவுவதும் சிறப்பாகாது. எதிலும் விழிப்பு தேவை. கூட்டாளிகளை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். ஜூன் மாதத்திலிருந்து நல்ல திருப்பம் உண்டாகும். அக்டோபரில் தெய்வப் பணிகள் நிறைவேறும். மனைவியால் யோகம் உண்டாகும். சொத்துக்களின் சேர்க்கை நிகழும். நவம்பரில் தொழில்ரீதியான பிரச்னைகள் ஏற்படும்.

டிசம்பரில் எதிரிகளும் நண்பர்கள் ஆவார்கள். உடல் நலம் சீராகும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். டிசம்பர் 26 முதல் ஜனவரி 19 வரை சுபச் செலவுகள் ஏற்படும். ஜனவரி 20 முதல் செல்வாக்கும் மதிப்பும் உயரும். புனிதப்பணிகளில் ஈடுபாடு கூடும். பிப்ரவரி 13 முதல் மார்ச் 7க்குள் குடும்ப நலம் சிறக்கும். சுப காரியங்கள் நிகழும். செல்வ வளம் பெருகும்.

மார்ச் 8 முதல் ஏப்ரல் 1 வரை வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். ஏப்ரல் 2 முதல் வருடம் முடிய உள்ள காலம் சிறப்பானது. புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும்.

மன்மத வருடம் சுக்கிரன் பலன்கள்

புத்தாண்டு ஆரம்பம் மிகச் சிறப்பாக அமையும். சுக்கிரன் 5ல் இருப்பதால், அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். மே மாதத்தில் மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். தொழில் சம்பந்தமான சிறுசிறு இடர்ப்பாடுகள் ஏற்படும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சுக்கிர பலம் குறைவதால், சங்கடங்கள் சூழும். உடல்நலம் பாதிக்கும். செய்து வரும் தொழிலில் அதிக கவனம் தேவை. நவம்பர் 2 முதல் நல்ல திருப்பம் உண்டாகும். மக்களாலும், பெற்றோராலும் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். டிசம்பர் மாதத்தில் இடமாற்றம் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும்.

ஜனவரியில் பொருளாதார நிலை திருப்தி தரும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். ஜனவரி 20 முதல் சுப காரியச் செலவுகள் சற்று அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். பிப்ரவரி 13 முதல் நல்ல மாற்றம் உண்டாகும். புதிய பொருட்சேர்க்கை நிகழும்.

மார்ச் 8 முதல் பண நடமாட்டம் அதிகமாகும். ஏப்ரல் 2 முதல்  வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். பெண்களால் ஓரிரு நன்மைகள் உண்டாகும். கூட்டாளிகள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.

மன்மத வருடம் சுக்கிரன் பலன்கள்

புத்தாண்டு ஆரம்பம் சிறப்பாக அமையும். சுக்கிரன் 4ல், தன் சொந்த வீட்டில் வலுப்பெற்றிருப்பதால் சுகமும் சந்தோஷமும் உண்டாகும். சொத்துக்கள் சேரும். தாய் நலம் திருப்தி தரும். நல்லவர்களது தொடர்பு நலம் சேர்க்கும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். மன உற்சாகம் பெருகும். மே மாதத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். மகப்பேறு பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் எதிலும் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். பெற்றோர் நலனில் கவனம் தேவைப்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிக்கவும்.

நவம்பர் 2 முதல் அனுகூலமான திருப்பம் உண்டாகும். நவம்பர் 30 முதல் டிசம்பர் 26க்குள் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். டிசம்பர் 26 முதல் ஜனவரி 19 வரை, செய்து வரும் தொழிலில் கவனம் தேவை. ஜனவரி 20 முதல் பிப்ரவரி 12 வரை உள்ள காலத்தில் பொருளாதார நிலை உயரும். மன மகிழ்ச்சி பெருகும். சுப காரியங்கள் நிகழும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். பிப்ரவரி 13 முதல், வாழ்க்கை வசதிகள் பெருகும். மன உற்சாகம் கூடும்.

மார்ச் 8 முதல் நூதன பொருட்களின் சேர்க்கை நிகழும். ஏப்ரல் 2 முதல், வருடம் முடிய விசேஷமான நன்மைகள் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். எண்ணங்களில் மலர்ச்சி உண்டாகும். கொடுக்கல்வாங்கல் லாபம் தரும். வசீகரச் சக்தி கூடும்.

மன்மத வருடம் சுக்கிரன் பலன்கள்

புத்தாண்டு ஆரம்பத்தில் சுக்கிரன் 3ம் இடத்தில் வலுத்திருப்பதால், வெற்றி வாய்ப்புகள் கூடும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். மே மாதத்தில் புதிய சொத்துக்கள் சேரும். காரியானுகூலம் உண்டாகும். ஜூன் மாதத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். மன உற்சாகம் பெருகும். ஜூலை மாதம் சோதனையானது. உடல்நலம் பாதிக்கும். பெண்களுக்கு முன்னேற்றம் தடைப்படும். நவம்பர் முடிய எக்காரியத்திலும் யோசித்து ஈடுபடுவது நல்லது. சுகமும் சந்தோஷமும் குறையும்.

நவம்பர் 30 முதல் எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். டிசம்பர் 26 முதல் தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். நல்ல தகவல் வந்து சேரும். ஜனவரி 20 முதல் பிப்ரவரி 12 வரை, செய்து வரும் தொழில் சம்பந்தமான பிரச்னைகள் தலைதூக்கும். பக்குவமாகச் சமாளிக்கவும்.

பிப்ரவரி 13 முதல் மார்ச் 7 வரை உள்ள காலத்தில் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். மன உற்சாகம் பெருகும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். மார்ச் 8 முதல் ஏப்ரல் 1 வரை சுபச் செலவுகள் அதிகமாகும். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மனத்தெளிவு பிறக்கும். ஏப்ரல் 2 முதல் நூதன பொருட்சேர்க்கை நிகழும். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காண வாய்ப்பு உருவாகும்.