Published:Updated:

ராசி பலன்கள்

மே 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை

ராசி பலன்கள்

மே 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை

Published:Updated:

பெரிய திட்டங்கள் நிறைவேறும்!

ராசி பலன்கள்

மேஷம்: விட்டுக்கொடுத்து வெல்பவர்களே! ராகு 6-ம் வீட்டில் நிற்பதால், பெரிய திட்டங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். 15-ம் தேதி முதல் சூரியன் ராசியை விட்டு விலகுவதால், தடைப்பட்ட அரசு காரியங்கள் முடியும். செவ்வாய், குரு மற்றும் சனியின் போக்கு சரியில்லாததால், குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்னை கள் தலைதூக்கும். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உத்யோகத்தில் உயரதிகாரியின் ஆலோசனையின்றி புது முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். உழைப்பால் உயரும் காலமிது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீடு களைகட்டும்!

ராசி பலன்கள்

ரிஷபம்: கடந்து வந்த பாதையை மறவாதவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், தடைகள் இருந்தாலும் ஓயமாட்டீர்கள். உறவினர், தோழிகளின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். செவ்வாய் ராசிக்குள் நிற்பதுடன், 15-ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால்... வீண் டென்ஷன், உடல் உபாதை வந்து போகும். கண்டகச் சனி தொடர்வதால், மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய வேளையிது.

உத்யோகத்தில் பாராட்டு!

ராசி பலன்கள்

மிதுனம்: மனசாட்சிக்கு பயந்தவர்களே! சனியும், குருவும் வலுவாக இருப்பதால், உங்களை பல விஷயங்களையும் விரைந்து முடிக்க வைப்பார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால்... வீண் விரயம், இனம்தெரியாத கவலைகள் வந்து போகும். உறவினர் ஏதேனும் குறை கூறினாலும் அதை பெரிதாக்க வேண்டாம். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும், அதிகாரிகளின் பாராட்டால் உற்சாகமடைவீர்கள். எதிலும் ஏற்றம் பெறும் நேரமிது.

நிம்மதி நிலவும் நேரம்!

ராசி பலன்கள்

கடகம்: கடமை தவறாதவர்களே! சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஜென்ம குரு தொடர்வதால், யாரும் உங்களை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று சில நேரங்களில் ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் தொந்தரவுகள் வந்து போகும். அதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த காலமிது.

தெளிவான சிந்தனை தேவைப்படும் காலம்!

ராசி பலன்கள்

சிம்மம்: நேரம் தவறாதவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், அழகு, இளமை கூடும். குரு 12-ல் மறைந்திருப்பதால், வேலைச்சுமையால் மனஇறுக்கம் ஏற்படலாம். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால், சிலருக்கு வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் தவறுகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டினால், அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். அதிகம் உழைக்க வேண்டிய வேளையிது.

திடீர் யோகம் ஏற்படும்!

ராசி பலன்கள்

கன்னி: மகிழ்வித்து மகிழ்பவர்களே! ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் அமர்ந்து உங்களைக் கொஞ்சம் பதற்றப்பட வைத்து, நிம்மதியில்லாமல் செய்தாலும், லாப வீட்டில் நிற்கும் குருவும், 3-ல் அமர்ந்திருக்கும் சனியும் திடீர் யோகத்தை தருவார்கள். குடும்ப வருமானம் உயரும். தம்பதியர் இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்களின் அன்புக்குப் பாத்திரமாவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி இடம் மாறுவார். தொட்ட காரியம் துலங்கும் தருணமிது.

பிரச்னைகளை சமாளிக்கும் சமயம்!

ராசி பலன்கள்

துலாம்: நியாயத்தின் பக்கம் நிற்பவர்களே! கேது 6-ல் நிற்பதால், இழுபறியான வேலைகள் உடனே முடியும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். சிலர் வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். குரு 10-ல் நிற்பதால், தர்மசங்கடமான சூழ்நிலையை அவ்வப்போது சமாளிக்க வேண்டி வரும். சூரியன் சாதகமாக இல்லாததால், அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் லாபம் சுமார்தான். உத்யோகத்தில் நீங்கள் சக ஊழியர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். சிக்கல்களைக் கடந்து வெற்றி பெறும் காலமிது.

இதயத்தில் இன்பம் நிறையும்!

ராசி பலன்கள்

விருச்சிகம்: எதார்த்தமாக பேசி காரியம் சாதிப்பவர்களே! சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். குரு சாதகமாக இருப்ப தால், வாழ்க்கைத் துணைவர் உங்களை நேசிப்பார். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். ஜென்ம சனி தொடர்வதால், உடல் நலக் கோளாறுகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுப் பாடு அவசியம். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களுக்கு  பிரச்னை தந்த அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். சந்தோஷம் நிறைந்த வேளையிது.

சாதிக்க வைப்பார் சுக்கிரன்!

ராசி பலன்கள்

தனுசு: வாழ்க்கைப் பாடத்தை கற்றவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். பிள்ளைகளை சிறந்த கல்வி நிறுவனத்தில் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். புதன் 6-ல் மறைந்து கிடப்பதால், உறவினர், தோழிகளால் பிரச்னைகள் ஏற்படலாம். குரு 8-ல் மறைந்திருப்பதால், வேலைச்சுமை, தடுமாற்றம், வந்து செல்லும். வியாபாரத்தில் ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். சகிப்புத்தன்மையால் சங்கடங்கள் தீரும் தருணமிது.

தன்னம்பிக்கை பிறக்கும்... முன்கோபம் விலகும்! 

ராசி பலன்கள்

மகரம்: எதையும் வெளிப்படையாக பேசுபவர்களே! புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களுக்கு தன்னம்பிக்கை பிறக்கும். முன்கோபம் விலகும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். சுக்கிரன் 6-ல் மறைந்து கிடப்பதால்... உடல் உபாதை ஏற்படலாம்.  வியாபாரத்தில், கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றும் நேரமிது.

நல்ல செய்தி வரும்!

ராசி பலன்கள்

கும்பம்: குத்தலாகப் பேசத் தெரியாதவர்களே! புதனும், சூரியனும் சாதகமாக இருப்பதால், மாறுபட்ட அணுகுமுறையால் சாதிப்பீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். 6-ல் குரு மறைந்திருப்பதால்... வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள், வேலைச்சுமை, திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். சின்னச் சின்ன ஆசைகள் நிறைவேறும் தருணமிது.

உதவிகரமானஉறவினர், தோழிகள் !

ராசி பலன்கள்

மீனம்: சுற்றத்தாரை அரவணைத்துச் செல்பவர்களே! செவ்வாய் வலுவாக இருப்பதால், சவாலில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உறவினர்கள், தோழிகளால் உதவிகள் உண்டு. வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். வியாபாரத்தில் அயல்நாடு தொடர்புடைய நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் சவாலான காரியங்களைக்கூட சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தன்னடக்கத்தால் சாதிக்கும் வேளையிது.

‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism