சிறப்பு கட்டுரை
Published:Updated:

ராசிபலன்

மே 12 முதல் 25 வரை’ ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

மனித நேயம் அதிகம் உள்ளவர் களே!  

ராசிபலன்

உங்களின் தனாதிபதி சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வ தால், துணிந்து முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த பண வரவு உண்டு. பிரப லங்களுக்கு நெருக்கமாவீர்கள். புதிதாக நிலம், வீடு, ஆடை, அணிகலன்கள்  வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர ஒற்றுமை பலப்படும்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், பழைய சொந்தங்களைச் சந்திப்பீர்கள். மனைவி வழியில் உதவிகள் உண்டு. புது வேலை அமையும். கடந்த ஒரு மாதமாக உங்கள் ராசிக்குள் நின்ற சூரியன், ராசியை விட்டு விலகி 15ம் தேதி முதல் 2ல் நிற்கும் செவ்வாயுடன் இணைவதால், வீண் செலவு, அலைச்சல், டென்ஷன், சிறுசிறு பிரச்னைகள் வரக்கூடும்.  

அஷ்டமத்துச் சனி தொடர்வதால், உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்து வார்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். ராகு 6ல் நிற்பதால், புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். தள்ளிப்போன வாய்ப்புகள் எல்லாம் தேடி வரும்.          

வேலைகளை வெற்றிகரமாக முடிக்கும் காலம் இது.

உழைப்பால் உயர்ந்தவர்களே!

ராசிபலன்

ராசிக்குள் புதன் வலுவாக அமர்ந்திருப்பதால், மன அமைதி கிட்டும். உங்களின் பிடிவாதப் போக்கை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள் என்றாலும், 5ம் வீட்டில் ராகு நிற்பதால், அவர்களால் அலைச்சல், செலவுகள் வந்து விலகும். ராசிக்குள் செவ்வாய் நிற்பதுடன் சூரியனும் 15ம் தேதி முதல் நுழை வதால், உஷ்ணத்தால் வயிற்று வலி, நெஞ்சு மற்றும் பல் வலி, மறைமுக அவமானம் வந்து நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

கணவன்மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உடன் பிறந்தவர்களால் சிறுசிறு ஏமாற்றம் வந்து போகும். மின்சார சாதனங்களைக் கையாளும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்டாதீர்கள்.

7ல் சனி அமர்ந்திருப்பதால், மனைவிக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் வாக்குவாதம் வந்து நீங்கும். ராசிநாதன் சுக்ரன் சாதகமாக இருப்பதால், பணப்பற்றாக்குறை நீடித்தாலும், கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். புதிய முதலீடுகளை யோசித்துச் செய்வது நஷ்டங்களைத் தவிர்க்க உதவும். உத்தியோகத்தில் உங்களைத் தாக்கிப் பேசினாலும் பதற்றப்படாதீர்கள்.  

நாவடக்கம் தேவைப்படும் நேரம் இது.

மேதாவித்தனம் அதிகம் உள்ளவர்களே!

ராசிபலன்

குருபகவான் வலுவாக அமர்ந் திருப்பதால், நினைத்த காரியங்கள் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். தள்ளிப்போன திருமணம் கைகூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.  

புதனும் சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், குழந்தை பாக்கியம் கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் உங்களைப் பற்றி பெருமை யாகப் பேசுவார்கள். பதவி, புகழ் தேடி வரும். சனிபகவான் 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், ஷேர் மூலம் லாபம் வரும். வேற்று இனத்தவர்களால் உதவிகள் உண்டு.

செவ்வாய் 12ல் மறைந்திருப்பதால், திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.15ம் தேதி முதல் சூரியன் 12ல் மறைவதால், கடனை நினைத்துக் கலங்குவீர்கள், பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். புதிய கிளைகள் தொடங்குவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழ்நிலையே நிலவும். உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.

அனைவராலும் மதிக்கப்படும் தருணம் இது.

தோல்வி கண்டு துவளாதவர்களே!

ராசிபலன்

புதன் சாதகமான வீடுகளில் செல்வ தால், புத்திசாலித்தனம் வெளிப்படும். தினந்தோறும் எதிர்பார்த்திருந்த பணம் வந்துசேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டம் விரியும். 5ல் சனி அமர்திருப்பதால், பிள்ளைகளின் எதிர் காலம் பற்றி கவலைகள் வந்து நீங்கும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

ராகு 3ம் வீட்டில் அமர்ந்ததால், ஷேர் மூலம் பணம் வரும். பிரச்னைகளின் ஆணி வேரைக் கண்ட றிவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். தனாதிபதி சூரியன் ராசிக்கு 11ல் சாதகமாக இருப்பதால்,  அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.

அயல்நாடு தொடர்புடைய நிறுவனத் தில் வேலை கிடைக்கும். யோகாதிபதி செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால், சொத்து சேரும். வழக்கு சாதகமாகும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். ஜென்ம குரு தொடர்வதால், மற்றவர் களை நம்பி முக்கிய வேலைகளில் ஈடுபடாதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியால் மறைமுக எதிர்ப்புகளும் பிரச்னைகளும் ஏற்படக்கூடும்.

விடாமுயற்சியால் வெற்றி பெறும் வேளை இது.

அழுத்தமான கொள்கைப் பிடிப்பு உள்ளவர்களே!

ராசிபலன்

உங்களின் யோகாதிபதியான செவ்வாய் வலுவாக அமர்ந்திருப்பதால், எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். அதிகாரிகளின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள்.

சுக்ரனும் புதனும் சாதகமாக இருப்பதால், வர வேண்டிய பணம் கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 15ம் தேதி முதல் ராசிநாதன் சூரியன் 10ம் வீட்டில் வலுவாக அமர்வதால், அரசியலில் செல்வாக்கு கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

12ல் குரு மறைந்திருப்பதால், வீண் செலவு, வேலைச்சுமை வந்து போகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ராகு 2ம் வீட்டிலும், கேது 8லும் மறைந்திருப்பதால், பணத் தட்டுப்பாடு, பார்வைக் கோளாறு, வீண் விரயம் ஏற்படும். வியாபாரத்தில் உங்களுடைய மாறுபட்ட அணுகு முறை யால் லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிக மாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் இல்லையே என அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.  

எதிர்ப்புகளை சமாளிக்கும் நேரம் இது.

கலாசாரத்தை விட்டுக் கொடுக்கா மல் வாழ்பவர்களே!

ராசிபலன்

சுக்ரனும் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உங்கள் செயலில் வேகம் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத் தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவு ரையை ஏற்றுக் கொள்வார்கள். எதிர் பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். உறவினர்களால் நன்மை உண்டு. நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

3ம் வீட்டில் சனிபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், மதிப்பு, மரியாதை கூடும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும்.வெளிநாட்டில் இருப்ப வர்களின் நட்பு கிட்டும். செவ்வாய் 9ம் வீட்டில் நிற்பதால், ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் நன்மை உண்டு. 15ம் தேதி முதல் சூரியன் 9ம் வீட்டில் நுழைவதால், தந்தையுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். அரசு காரியங்கள் இழுபறியாக முடியும்.

அடிவயிற்றில் வலி, தூக்கமின்மை வந்து விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர், தங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும்.

சமயோசித புத்தியால் சாதிக்கும் காலம் இது.

பலன் கருதாமல் உதவுபவர்களே!

ராசிபலன்

கேது வலுவாக அமர்ந்திருப்பதால், எதையும் சாதிப்பீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். தடைப்பட்ட வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகளின் கூடாப் பழக்கம் விலகும். தூரத்து உறவி னர்களைச் சந்திப்பீர்கள். ராசிநாதன் சுக்ரன் சாதகமாக இருப்பதால், மனைவி வழியில் இருந்த மோதல்கள் விலகும். வாகன வசதி பெருகும்.

விலை உயர்ந்த பொருட்கள் வாங்கு வீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புதன் சாதகமாக இருப்பதால், விருந்தினர் வருகை அதிகரிக்கும். பூர்வீகச் சொத்து கிடைக்கும். பாதச்சனி தொடர்வதால், அதிகம் பேச வேண்டாம். முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப விஷயங் களைப் பகிர்ந்துகொள்ளாதீர்கள்.

செவ்வாய் 8ல் நிற்பதுடன், 15ம் தேதி முதல் சூரியனும் 8ல் நுழை வதால், உங்களுக்கு திடீர்ப் பயணங் கள், வாகன விபத்துகள், வீண் செலவுகள், தலைசுற்றல், கண் வலி போன்ற அசௌகரியங்கள் ஏற்படக் கூடும்; கவனம் தேவை. அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் புதியவர்களை நம்ப வேண்டாம். எந்த விஷயத்திலும் சொந்தமாக முடிவெடுத்து செயல்படுங் கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும்.

சூழலுக்கு ஏற்ப செயல்பட வேண்டிய வேளை இது.

மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்படுபவர்களே!

ராசிபலன்

லாப வீட்டில் ராகுவும், 9ல் குருவும் வலுவாக அமர்ந்திருப்பதால், பிரச்னைகளைச் சமாளிக்கும் மனோ பலம் அதிகரிக்கும். வெற்றி பெற்ற மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். யோகா, தியானம் செய்வதால் நிம்மதி கிட்டும். பழைய கடன் பிரச்னை தீரும். நிலுவையில் இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

கேது 5ல் நிற்பதால், மனதில் இனம்புரியாத பயம், முன்கோபம், கால் வலி, உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். மகனை விரும்பிய பாடப்பிரிவில், எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்ப்பதற்காக அதிகம் செலவுகள் செய்ய வேண்டி வரும். ஜென்மச் சனி தொடர்வதால், பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை வந்து நீங்கும். சிலர் உதவுவதைப் போல் உபத்திரவம் தருவார்கள்.

யாருக்காகவும் ஜாமீன் கையெ ழுத்திட வேண்டாம். அரசு விவகா ரங்களில் அவசரம் வேண்டாம். 7ல் நிற்கும் ராசிநாதன் செவ்வாயுடன், 15ம் தேதி முதல் சூரியனும் சேர்வதாலும், சூரியன், செவ்வாயை சனி பார்த்துக் கொண்டிருப்பதாலும் கணவன்மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தி யோகத்தில் அலட்சியம் வேண்டாம்.

கோபத்தைக் குறைக்க வேண்டிய தருணம் இது.

சுயக் கட்டுபாடு உடையவர்களே!

ராசிபலன்

15ம் தேதி முதல் உங்களின் பாக்கியாதிபதி சூரியன் 6ல் நுழை வதால், எதிர்த்தவர்கள் நண்பர்கள் ஆவார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். தந்தை வழியில் உதவிகள் உண்டு. பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். ராசிக்கு 6ல் செவ்வாயும் அமர்ந்திருப்பதால் கமிஷன் மூலம் பணம் வரும்.

உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைத் தெரிந்துகொள்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள்.

புதன் 6ல் மறைந்திருப்பதால், உறவினர்கள், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து விலகும். கழுத்து வலி, நரம்புக் கோளாறு, சளித் தொந்தரவு வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பங்குதாரர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் தவறுகளைச் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களின் உத்தியோகத்தில் முன்னேற்றத்துக்கான சூழ்நிலை ஏற்படும்.

கடின உழைப்பால் முன்னேறும் வேளை இது.

பாகுபாடு பார்க்காமல் பழகுபவர் களே!

ராசிபலன்

யோகாதிபதி புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், கற்பனை வளம் பெருகும். முகப்பொலிவு கூடும். கௌரவப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பாதியில் முடங்கிக் கிடந்த வீடு கட்டும் பணி முழுமையடை யும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. நீண்ட நாட்களாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்த உறவினரைச் சந்திப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.

சுக்ரன் 6ல் மறைந்து இருப்பதால், கணவன்மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப்போவது நல்லது. குரு  பகவான் வலுவாக இருப்பதால், பேச்சில் முதிர்ச்சி தெரியும். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டு. பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். செவ்வாய் 5ல் நிற்பதால், பிள்ளை களால் டென்ஷன் அதிகரிக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு கவனம் தேவை.

15ம் தேதி முதல் சூரியனும் 5ல் நுழைவதால், முன்கோபம், மனக் குழப்பம், அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். சனிபகவான் லாப வீட்டில் இருப்பதால், பணம் வரும். மூத்த சகோதர வகையில் இருந்த பிரச்னை நீங்கும். வியாபாரிகள் பழைய பாக்கிகளைப் பக்குவமாகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். அலுவலகத் தில் அனுகூலமான சூழ்நிலையே காணப்படும்.

திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெறும் வேளை இது.

எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களே!

ராசிபலன்

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், திடீர் பணவரவு உண்டு. சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன்மனைவிக்குள் அந்நி யோன்யம் உண்டாகும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து செயல் படுவார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், சோம்பல் நீங்கி, உற்சாகம் அடைவீர்கள்.

பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. செவ்வாயும் சாதகமாக இருப்பதால், உடன்பிறந்தவர்களின் பிரச்னையைத் தீர்த்து வைப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். தடைகள் நீங்கும். வேலை கிடைக்கும். ஆனால், தாயாரின் உடல் நலம் பாதிக்கும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள்.

குரு 6ல் மறைந்து இருப்பதால், எல்லோருக்கும் நல்லது செய்தும் கெட்ட பெயர்தான் மிஞ்சும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். உத்தியோகத் தில் கூடுதல் நேரம் உழைக்க வேண்டி வரும்.  

இழுபறி நிலை மாறி ஏற்றம் பெறும் நேரம் இது.

தளராத தன்னம்பிக்கை உடையவர்களே!

ராசிபலன்

ராசிநாதன் குருபகவான் வலுவாக இருப்பதால், குழம்பியிருந்த உங்கள் மனதில் தெளிவு பிறக்கும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாகத் தந்து முடிப்பீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

பிள்ளைகள் தங்கள் தவற்றை உணருவார்கள். வீடு கட்டும் பணி முழுமையடையும். தன பாக்யாதிபதி செவ்வாய் சாதகமாக இருப்பதால், தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். சகோதர வகையில் ஆதாயம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தாய்மாமன் வகையில் உதவிகள் உண்டு. 15ம் தேதி முதல் சூரியன் 3ல் அமர்வதால், எதிர்த்தவர் கள் அடங்குவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும்.

சுக்ரனும் புதனும் சாதகமாக இருப்பதால், விலகி நின்ற சொந்தம் விரும்பி வரும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். ராசிக்குள் கேதுவும், 7ல் ராகுவும் அமர்ந் திருப்பதால், உடல் நலக்குறைவு, வீண் டென்ஷன் ஏற்பட்டு விலகும். மனைவியுடன் விவாதங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் பழைய பங்குதாரர்களும் வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். லாபம் அதிகரிக்கும்.உத்தியோகத்தில் கௌரவப் பொறுப்பு கள் தேடி வரும்.

ஒசைப்படாமல் வளரும் தருணம் இது.