சிறப்பு கட்டுரை
Published:Updated:

எந்த வருடம்... என்ன பலன்கள் ?

டாக்டர் எஸ்.முருகேசன்

ன்மத வருடம் பிறந்துவிட்டது. இந்த வருடத்தில் பிறக்கும் குழந்தைகள் செல்வந்தராகவும், விலையுயர்ந்த பொருட்களை அடைபவராகவும், பெண்கள் மத்தியில் புகழ் பெறுபவராகவும் திகழ்வார்கள் என்கின்றன ஜோதிடம் சார்ந்த ஞானநூல்கள். 

மன்மத வருடத்துக்கு மட்டுமல்ல, தமிழ் வருடங்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு, அதில் பிறந்தவர்களுக்கான பொதுவான பலன்களை பட்டியலிட்டு விளக்குகின்றன அந்த ஞானநூல்கள். அதுபற்றி, நாமும் தெரிந்துகொள்வோமா?

பிரபவ: விலையுயர்ந்த அரிய பொருட்களை சேகரித்து வைத்திருப்பார். நல்ல குழந்தைகள், மகிழ்ச்சி, செல்வம், நீண்ட ஆயுள் உண்டு.

எந்த வருடம்... என்ன பலன்கள் ?

விபவ: கற்றவர், செல்வந்தர், கலைத்திறன் கொண்டவர்.

சுக்கில: அழகானவர், நல்ல குணம், நல்ல குடும்பம் உள்ளவர்.

பிரமோதூத: புகழ் உள்ளவர். உதவும் மனம் உண்டு. பலரின் பாராட்டுகளைப் பெறுபவர்.

பிரஜோத்பத்தி: உண்மையானவர், சமூகத்துக்கு சேவை செய்பவர், பிறரால் மதிக்கப்படுபவர்.

ஆங்கிரஸ: அதிர்ஷ்டசாலி. ஆண்குழந்தைகள் அதிகம் உள்ளவர்.

ஸ்ரீமுக: மிகவும் புத்திசாலி. பல விஷயங்களை யும் ஆர்வமுடன் கற்றுக்கொள்வார். வாழ்வில் வெற்றி அடைவார்.

பவ: நல்ல வாழ்க்கை, பெருந்தன்மை, புகழ், உதவும் மனம் கொண்டவர்.

யுவ: நல்ல முகத் தோற்றம், அனைவரிடமும் ஆதரவு, வெற்றிகள், நீண்ட ஆயுள் உள்ளவர்.

தாது: வியாபார வெற்றிகளும், எதிரிகளை வெல்லும் திறனும் உண்டு. வீண் ஆடம்பரச் செலவுகள் செய்யமாட்டார்.

ஈஸ்வர: கோபம், அழகிய தோற்றம், பல செயல்களில் திறமை கொண்டவர்.

வெகுதான்ய: ராணுவம் போன்ற துறைகளில் வெற்றி அடைபவராகத் திகழ்பவர். வாகனங் களோடு தொடர்புடையவர்.

பிரமாதி: விவசாயம், வியாபாரம் இரண்டிலும் வெற்றி உண்டு.

விக்கிரம: இவர்களுக்கு தைரியம் அதிகம் உண்டு. வாழ்வில் மிகப் பெரும் வெற்றிகளைப் பெறுவார்கள்.

விஷூ: எதையும் மெள்ள  நிதானமாகச் செய்பவர்கள். இவரது உழைப்பால் மற்றவர்கள் நன்மை அடைவார்கள்.

சித்ரபானு: சிறந்த கல்விமான், புத்திசாலி. தமக்கென்று ஒரு கொள்கையும், அதில் அதீத பிடிப்பும் கொண்டவர்.

சுபானு: அதிகாரம் உள்ளவர்களால் விரும்பப்படும் அன்பர்கள். இவர்களும் அதிகாரம் மிகுந்தவர்களாகத் திகழ்வார்கள். பயமற்றவர். இவர்கள் வாழ்க்கையை நேர்வழியில் அமைத்துக்கொண்டால், அதீத பலன்கள் கிடைக்கும்.

தாரண: ஒரே நேரத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்துச் சிந்திப்பார்கள். நிலையற்ற மனம் கொண்டவர்.

பார்த்திப: அதிர்ஷ்டசாலிகள். நல்ல நிலையில் வாழ்வார். அதிகாரம், செல்வாக்கு மிக்க மனிதர்களின் நட்பால் சாதிப்பார்கள்.

விய: அயல்நாட்டில் வசிக்கும் வாய்ப்பு உண்டாகும். ஏழைகள் எனினும், தன்னம்பிக்கை கொண்டவர்கள்.

ஸர்வஜித்து: கடும் உழைப்பாளி. விஞ்ஞானத்தில் வெற்றி அடைவார்கள்.

சர்வதாரி: சகல வசதிகள், ஏராளமான வேலை ஆட்கள் என மகிழ்ச்சியாக வாழ்வார்.

விரோதி: பயணம் அதிகம் உண்டு. விரோதிகளும் இவர்களுக்கு அதிகம் உண்டு.

விக்ருதி: மெலிந்த தேகமும், கறுத்த தேகமும் கொண்டவர்களாக இருப்பார்கள். நேரத்துக்கு ஏற்ப செயல்படுவதில் சமர்த்தர்.

கர: உணர்ச்சிவசப்படுபவர். இவருக்கு நுரையீரல் கோளாறுகள் வரக்கூடும்.

நந்தன: வாழ்வில் நிறைந்த மகிழ்ச்சியும் திருப்தியும் கொண்டவர்களாகத் திகழ்வார்கள்.

விஜய: கற்றவர் அனைவராலும் மதிக்கப்படுபவர். பகுத்தறியும் ஆற்றல் உள்ளவர்.

ஜய: வாழ்க்கையில் வெற்றி, அபார வலிமை உள்ளவர்.

மன்மத: செல்வந்தர், விலையுயர்ந்த பொருட்களை அடைபவர். பெண்களின் நட்பைப் பெற்றவர்.

துர்முகி: தீய சக்திகளிடம் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையை நல்வழியில் திருப்புவது அவசியம்.

எந்த வருடம்... என்ன பலன்கள் ?

ஏவிளம்பி: செல்வந்தர், சொத்து சுகம் உள்ளவர். நல்ல குணம், நல்ல வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்கள்.

விளம்பி: சிக்கனவாதி. நிதானமாகச் செயல்படுவார்கள்.

விகாரி: சுய சந்தோஷத்தை விரும்புபவர். அலைபாயும் மனதை அடக்குவதும்,  வீண் கர்வத்தைத் தவிர்ப்பதும் அவசியம்.

சார்வரி: உணர்ச்சி மிகுந்தவர்கள். தகுந்த வழிகாட்டிகளால் முன்னேறுவார்கள்.

பிலவ: முடிவெடுப்பதில் குழப்பம் மிக்கவர்கள். எனினும் உழைப்புக்கும், அலைச்சலுக்கும் அஞ்சாதவர்கள்.

சுபகிருது: நீண்ட ஆயுள், கொள்கையில் பிடிப்பு, நேர்மை, பிறர்க்கு நன்மை செய்தல், நல்ல கல்வி ஆகியன எல்லாம் உண்டு.

சோபகிருது: நல்ல குணமும், தோற்றமும், வெற்றிகளும் கொண்டவர்.

குரோதி: செயலில் வேகம் இருக்கும். அதனாலேயே சில நஷ்டங்களையும் சந்திக்க நேரிடலாம்.

விசுவாவசு: நல்லகுணம், நடத்தை, வாழ்வில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து அனுபவிக்கும் வாய்ப்பு எல்லாம் உண்டு.

பராபவ: ஏழை. எனினும், சுகபோகங்களுக்குக் குறைவில்லை.

பிலவங்க: கடும் உழைப்பாளி, பிறர்க்கு உதவும் பண்பாளர்கள்.

கீலக: நல்ல பேச்சாளர். அதேநேரம் கோபம் மிகுந்தவர்.

சௌமிய: கற்றவர், செல்வந்தர், நல்ல வாழ்க்கை அமையப் பெற்றவர்.

சாதாரண: வாழ்வில் நிறைய ஊர்களுக்குச் செல்லவும், அங்கு வாழவும் வாய்ப்பு உண்டு.

விரோதிகிருது: குடும்பத்திலும் சமூகத்திலும் மாறுபட்ட சிந்தனையாளர்.

பரிதாபி: சிறந்த கல்விமான். வியாபாரத்தில் வெற்றியுண்டு.

பிரமாதீச: உறவுகளின் துணையும் அவர்களது உதவியும் இல்லாமல் வாழ்வைச் சந்திப்பவர்.

ஆனந்த: நல்ல குடும்பம், நல்ல குழந்தைகள் உண்டு.

ராக்ஷஸ: வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்தவர்.

நள: வியாபாரத்தில் வெற்றிகள் பெற்றுச் செல்வந்தர் ஆவார்.

பிங்கள: சுவாரஸ்யம் மிகுந்த வாழ்க்கை. தலைவலி போன்ற பிணிகள் வர வாய்ப்பு உண்டு.

காளயுக்தி: கலைத் திறன் மிகுந்தவர். நல்ல நண்பனாகத் திகழ்வர். பெயர், புகழ், செல்வம், நீண்ட ஆயுள் உண்டு.

சித்தார்த்தி: செல்வ வசதிகள், நீண்ட ஆயுள் உண்டு.

ரௌத்திரி: சிக்கனவாதி. பெரும்பாலும் பருமனான தேகம் கொண்டவர்களாகத் திகழ்வார்கள்.

துன்மதி: தனது நலனில் ஆர்வம் மிகுந்தவர்.

துந்துபி: உற்சாகம் மிகுந்தவர்கள்.

ருத்ரோத்காரி: செயல்களில் ரெளத்ரம் உண்டு.

ரக்தாக்ஷி: நல்லவர், இரக்கக் குணம் மிகுந்தவர், பிறர்க்கு உதவுபவர்.

குரோதன: நிதானமான செயல்பாடுகள் கொண்டவர். மற்றவர்களை ஏமாற்றும்படியான சாமர்த்திய செயல்பாடுகள் உண்டு.

அக்ஷய: வாழ்க்கையை அனுபவிப்பவர்கள். சந்தோஷத்துக்காக எதையும் செய்பவர்கள்.