சிறப்பு கட்டுரை
Published:Updated:

திருமண தோஷம் நீங்கும் !

ராம்திலக்

க்னத்துக்கோ அல்லது சந்திரனுக்கோ, சுக்ரனுக்கோ 2, 4, 7, 8, 12ம் வீட்டில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு என்பது பொது விதி. இருப்பினும் லக்னத்திலிருந்து முக்கியத்துவம் கொடுத்துப் பார்ப்பதே சிறப்பு.  இதில் லக்னத்துக்கு 7, 8ல் செவ்வாய் இருந்தால் மிகக் கடுமையான தோஷம். 4ல் இருந்தால் கடுமையான தோஷம். அடுத்து 12ல் இருந்தால் மிதமான தோஷம். செவ்வாய் 2ம் இடத்தில் இருந்தால் மிகவும் குறைந்த அளவே செவ்வாய் தோஷ பாதிப்பு ஏற்படும். 

மிதுனம், கன்னி லக்னத்துக்கு 2ம் இடமாக வந்து அதில் செவ்வாய் இருந்தாலும், ரிஷபம், துலாம் 12ம் இடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் இல்லை.

அதேபோன்று, மேஷம், விருச்சிகம் 4ம் இடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும், மகரம், கடகம் 7ம் இடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும், தனுசு, மீனம் 8ம் இடமாகி அதில் செவ்வாய் இருந்தாலும், கடகம், சிம்மம், மேஷம், விருச்சிகம், மகரம் போன்ற ராசிகளில் செவ்வாய் எங்கு

திருமண தோஷம் நீங்கும் !

இருந்தாலும், அப்படியான ஜாதகர்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லை எனலாம்.

குரு, புதன் போன்ற கிரகங்களுடன் செவ்வாய் சேர்க்கை பெற்றாலும், மேற்கண்ட கிரகங்கள் செவ்வாயை பார்த்தாலும், தோஷம் இல்லை. கடகம், சிம்ம லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கு இருந்தாலும் தோஷம் இல்லை.

செவ்வாய் தோஷம் உடையவர்கள், செவ்வாய்க் கிழமைகளிலும், சஷ்டி திதிநாட்களிலும் விரதம் இருந்து, முருகப்பெருமானை மனமுருகி வழிபடவேண்டும். இதனால், செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் கெடுபலன்கள் குறைந்துவிடும். கீழ்க்காணும் அற்புதமான பாடலைப் பாடி வழிபட்டும் முருகனிடம் வரம் பெறலாம்.

விறல்மாரன் ஐந்து மலர்வாளி சிந்த

மிகவானில் இந்து வெயில்காய

மிதவாடை வந்து தழல்போல ஒன்ற

வினை மாதர் தம்தம் வசைகூற

குறவாணர் குன்றில் உறைபேதை கொண்ட

கொடிதான துன்ப மயல் தீர

குளிர்மாலை யின்கண் அணிமாலை தந்து

குறைதீர வந்து குறுகாயோ

திருச்செந்தூர் முருகனைப் போற்றும் திருப்புகழ் பாடல் இது.  அனுதினமும் இந்தப் பாடலைப் பாடி, சிவப்பு வண்ண மலர்கள் சமர்ப்பித்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதித்து, முருகப்பெருமானை வழிபடுவதால், இன்னல்கள், தடைகள் யாவும் நீங்கும். கல்யாண பாக்கியம் விரைவில் கைகூடும்.