Published:Updated:

மன்மத வருடம்... ராகு, கேது பலன்கள் !

14-4-2015 முதல் 13-4-2016 வரை‘நவக்கிரக ரத்னஜோதி’ சந்திரசேகரபாரதி

ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்றும், நிழல் கிரகங்கள் என்றும் சொல்லப்படுபவை.  இந்த கிரகங்களுக்கு, இதர கிரகங்களுக்கு இருப்பதுபோல் சொந்த வீடுகள் இல்லை. இவர்கள் இருக்கும் இடம், இவர்களுடன் சேர்ந்த கிரகம், இவர்களைப் பார்க்கும் கிரகம் ஆகியவற்றின் பலத்தைத் தம் பலமாகக் கொண்டு பலன் தருவார்கள். 

மன்மத வருடம்... ராகு, கேது பலன்கள் !

மேஷம், கடகம், சிம்மம், கும்பம் ஆகியன ராகு மற்றும் கேதுவுக்கு பகை ராசிகள்; ரிஷபம் நீச ராசி;

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மன்மத வருடம்... ராகு, கேது பலன்கள் !

மிதுனம், கன்னி, துலாம் தனுசு, மகரம், மீனம் ஆகியவை நட்பு ராசிகள் ஆகும். ராகுவும் கேதுவும் சர்ப்பக் கிரகங்கள். ராகு கரும்பாம்பு; கேது செம்பாம்பு. ராகு யோக காரகர். ராகு பொதுவாக மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ராசிகளில் இருந்து அந்த இடத்தின் அதிபதி வலுத்திருந்தால், ராஜ யோகம் உண்டாகும். ராகுவும் கேதுவும் கோசாரப்படி அதாவது சந்திர ராசிக்கு 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் இருந்தால் நலம் புரிவார்கள்.

ராகு பலம் (ஜாதகத்திலோ, கோசாரத்திலோ) உள்ளவர்களுக்கு மாந்திரீகம், துஷ்ட தேவதை உபாசனை, குறுக்கு வழிகளில் பணம் சேர்த்தல், ஸ்பெகுலேஷன், அரசுக்கு எதிரான காரியங்கள், காடு மலைகளில் சுற்றித் திரிவது, புனித நதிகளில் நீராடுதல், அந்நிய தேசம் சென்று வாழ்தல், இடமாற்றம், பயணம், விஷத்தைக் கொண்டு செய்யும் வைத்தியம், பெரு வியாதிகள், நவீன விஞ்ஞானம், ரசாயனம், நிழற்படம், சினிமா, அதிக காமம் ஆகியவற்றில் ஈடுபாடு உண்டாகும். விதண்டாவாதம், புதுமையை விரும்புதல், பிறரை எதிர்த்துப் பேசுதல், புதியனவற்றைக் கண்டுபிடித்தல் ஆகியவற் றுக்கும் ராகு காரகர் ஆவார்.

கேது, ஞான காரகனும் மோட்ச காரகனும் ஆவார். அதனால், மோட்சமும் முக்தியும் தருவார். நல்லவற்றுக்குத் துணையாவார். மந்திர, தந்திர, யந்திர சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற வைப்பார். தேவதா வசியம், தேவதா உபாசனை மூலம் பல அரிய காரியங்களைச் செய்ய வைப்பார். கேதுவின் பலம் குறைந்திருந்தால் கீழ்த்தரமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆவிகளுடன் தொடர்பு, ஆணவம், அகங்காரம், திருட்டு, கலகம், கொள்ளை அடித்தல் போன்ற காரியங்களில் ஈடுபடச் செய்து சிறைத் தண்டனை பெற வைப்பார். நீரில் விபத்து, உடல் வலி, விஷக் காய்ச்சல், உடலில் அடியும் காயமும் படுதல், எதிரிகளுக்குத் தொல்லை கொடுத்தல், கொம்புள்ள மிருகங்களாலும் பறவைகளாலும் சங்கடம் ஆகியவை உண்டாகும்.

ராகுவுக்கு அதிதேவதை துர்கை. இவரது பலம் குறைந்திருக்கும்போது துர்கை அல்லது காளியின் ஆலயத்துக்குச் சென்று வழிபடுவதன் மூலம் நலம் உண்டாகும். கேதுவுக்கு அதிதேவதை விநாயகர். கேதுவின் பலம் குறைந்திருக்கும்போது விநாயகரை வழிபடுவது சிறப்பு.

மன்மத வருடம்... ராகு, கேது பலன்கள் !

இனி, இந்த மன்மத வருஷத்தில் கோசார ரீதியாக ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ராகு, கேது ஆகியோரால் விளையக்கூடிய பொதுப்பலன்களைப் பார்ப்போம். 

மன்மத வருடம்... ராகு, கேது பலன்கள் !

மன்மத வருட ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு 6ல் ராகு உலவுவதால், திடீர்ப் பொருள் வரவு உண்டாகும். வரவேண்டிய பாக்கிப் பணம் வசூலாகும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். எதிரிகள் விலகுவார்கள். கடன் தொல்லை குறையும். வேற்று மொழி, இனத்தவர்களால் நலம் உண்டாகும். 812016 முதல் ராகு 5ம் இடம் மாறுவது சிறப்பாகாது. மக்களின் நடத்தையில் கவனம் தேவை. வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். தந்தை வழிப் பாட்டனாருக்கும் தாய் வழி மாமனுக்கும் சங்கடம் உண்டாகும். ராகு சூரியனின் வீட்டில் பகைபெற்று உலவுவதால்,  எதிரிகள் இருப்பார்கள். ராகு ஜூலை 5 முதல் குருவுடன் சேர்வதால், தர்ம காரியங்களிலும் தெய்வ காரியங்களிலும் ஈடுபாடு உண்டாகும்.

கேது 12ல் உலவுவதால், பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு உண்டாகும். இடமாற்றம் ஏற்படும். எதிர்பாராத செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். கேதுவை 472015 வரையிலும் குரு பார்ப்பதால், வீண் விரயம் குறையும். 812016 முதல் கேது 11ம் இடம் மாறுவது விசேஷமாகும். கேதுவை குரு பார்க்கும் நிலை அமைவதால், ஆன்மிகம், ஜோதிடம், மாந்திரீகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். எதிர்ப்புகளை வெல்லும் சக்தி பிறக்கும். எதிர்பாராத இனங்களால் ஆதாயம் கிடைக்கும்.  பிற மொழி, இனத்தவர்களால் நலம் உண்டாகும். 

மன்மத வருடம்... ராகு, கேது பலன்கள் !

புத்தாண்டு ஆரம்பத்தில் ராகு 5ல் இருப்பது சிறப்பாகாது. மனதில் ஏதேனும் கவலை உண்டாகும். மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். 812016 முதல் ராகு 4ம் இடம் மாறுவதும் சிறப்பாகாது. அலைச்சல் அதிகமாகும். சுகம் குறையும். தாயாருக்கும் உங்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களால் தொல்லைகள் சூழும். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்பு தேவை. சுகம் குறையும். மருத்துவச் செலவுகள் கூடும். தந்தையாலும் மக்களாலும் செலவுகளும் மன அமைதிக் குறைவும் ஏற்படும்.

கேது வருடம் முழுவதும் சாதகமாக உலவுவதால், ஆன்மிகவாதிகளுக்கும், ஜோதிடர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். திடீர்ப் பொருள் வரவு ஏற்படும். ஆலய தரிசனம், சாதுக்கள் தரிசனம் ஆகியவை கிடைக்கும். தத்துவார்த்தங்களில் ஈடுபாடு கூடும். ஞான மார்க்கத்திலும் பக்தி மார்க்கத்திலும் ஈடுபாடு அதிகமாகும். 812016 முதல் தொழில் ரீதியாக சில இடர்ப்பாடுகள் ஏற்பட்டாலும் கேதுவை குரு பார்ப்பதால், அவை விலகவும் செய்யும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு அதிகமாகும். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும் என்றாலும், முதலில் சில இடர்ப்பாடுகள் ஏற்படவே செய்யும். 

மன்மத வருடம்... ராகு, கேது பலன்கள் !

உங்கள் ராசிக்கு 4ல் ராகு உலவுவது சிறப்பாகாது. அலைச்சலும் உழைப்பும் கூடவே செய்யும். நண்பர்கள், உறவினர்களை நம்பி ஏமாற வேண்டாம். தாய் நலனில் அக்கறை தேவைப்படும். சுகம் குறையும். பயணத்தால் சங்கடம் ஏற்படும். வண்டி, வாகன, வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். 812016 முதல் 3ம் இடம் மாறும் ராகு வெற்றி வாய்ப்புக்களை உண்டுபண்ணுவார். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். சிறுசிறு பயணங்களை மேற்கொள்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். திடீர்ப் பண வரவு உண்டாகும். தொழிலில் வளர்ச்சி காணலாம். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் லாபம் தரும்.

கேது 10ல் இருப்பதால், தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். ஆன்மிக, அறநிலைய, ஜோதிடப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புத்திசாலித்தனம் வெளிப்படும். மந்திர, தந்திர, யந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். 812016 முதல் கேது 9ம் இடம் மாறுவது சிறப்பாகாது. தொலைதூரத் தொடர்பால் அனுகூலமிராது. தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போகும். 9ல் உள்ள கேதுவை குரு பார்க்கும் நிலை அமைவதால், அதிகம் சங்கடங்கள் ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். தொழிலில் இடமாற்றம் ஏற்படும். பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்பு தேவை. 

மன்மத வருடம்... ராகு, கேது பலன்கள் !

புத்தாண்டு ஆரம்பத்தில் ராகு 3ம் இடத்தில், கன்னி ராசியில் உலவுவது சிறப்பாகும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் உண்டாகும். புதியவர்களது தொடர்பால் நலம் பல பெறுவீர்கள். பயணத்தால் முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். பிரச்னைகள் குறையும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபார நுணுக்கம் தெரியவரும்.

812016 முதல் ராகு 2ம் இடம் மாறுவது சிறப்பாகாது. குடும்பத்தில் உள்ளவர்களே உங்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள். பேச்சிலும் உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு தேவை. பொருளாதார நிலை உயரும் என்றாலும் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. கண் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். குடும்பத்தில் அந்நியரால் குழப்பம் ஏற்படும். கொடுக்கல்வாங்கலில் விழிப்புடன் இருப்பது நல்லது.

கேது வருடம் முழுவதும் சிறப்பாக உலவாததால், தடைகளும் குறுக்கீடுகளும் உண்டாகும். வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். குடும்ப நலனில் அக்கறை தேவை. 812016 முதல் விஷத்தாலும் விஷ ஜந்துக்களாலும் பாதிக்கப்பட நேரலாம். இரவு நேரத்தில் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். பயணத்தின்போது எச்சரிக்கை தேவை. இடி, மின்னல், மற்றும் காற்று ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடும். தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களால் செலவுகள் ஏற்படும். 8ல் உள்ள கேதுவை குருபார்க்கும் நிலை அமைவதால், மோசமான நிலை ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். விநாயகருக்கும் துர்கைக்கும் அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்துகொள்ளுங்கள். 

மன்மத வருடம்... ராகு, கேது பலன்கள் !

ங்கள் ராசிக்கு மன்மத வருஷம் முழுவதுமே ராகு, கேதுக்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. தடைகளும் குறுக்கீடுகளும் ஏற்படவே செய்யும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். வாக்குவாதங்கள் அதிகமாகும். உணவுப் பழக்கத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலைக் குறைத்துக் கொள்வதன் மூலம் உடல் அசதியைத் தவிர்க்கலாம். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம்; அவர்களால் ஏமாற்றப்பட நேரலாம். குடும்பத்தில் கலகம் உண்டாகும். கண், வாய், தோல் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.  நண்பர்கள் உறவினர்களால் அனுகூலமிராது. சுகம் குறையும். மருத்துவச் செலவுகள் கூடும்.

812016 முதல் அலைச்சல் அதிகமாகும். உடல் சோர்வு ஏற்படும். இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். எதிரிகள் இருப்பார்கள். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகளும் சண்டை சச்சரவுகளும் ஏற்படும். வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவைப்படும். கூட்டாளிகளையோ, நண்பர்களையோ விட்டுப் பிரிய வேண்டிவரும். பயணத்தால் தொல்லைகள் சூழும். குடும்பத்தில் ஒன்று மாறி மற்றதாகப் பிரச்னைகள் தலைதூக்கும். மனதில் ஏதேனும் குழப்பமும் சலனமும் இருந்து வரும். எடுத்த காரியங்களில் குறித்த நேரத்தில் வெற்றி பெறமுடியாமல் போகும். சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படவே செய்யும். ஜாதகப்படி யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் பிரச்னைகளிலிருந்து விடுபட முடியும். 

மன்மத வருடம்... ராகு, கேது பலன்கள் !

உங்கள் ராசியில் ராகுவும், 7ல் கேதுவும் உலவும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு உதயமாகி இருக்கிறது. ராகுவின் சஞ்சாரம் இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக இல்லை. மன அமைதி குறையும். உடல் ஆரோக்கியம் கெடும். மதிப்பும் அந்தஸ்தும் குறையும். பொருளாதார நிலை சாதாரணமாகவே காணப்படும். 812016 முதல் வீண் செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். விரும்பத்தகாத இடமாற்றமும் உண்டாகும். பயணத்தால் பொருள் இழப்பும், தொல்லைகளும் சூழும். தூக்கம் கெடும். மக்களால் மன வருத்தம் ஏற்படும். கணவன் மனைவி இடையே சலசலப்புகள் அதிகமாகும். கூட்டாளிகளிடமும் நண்பர்களிடமும் சுமுகமாகப் பழகுவது அவசியம்.

கேது 7ல் உலவுவதால், வாழ்க்கைத்துணைவராலும் தொழில் பங்குதாரர்களாலும் சங்கடங்கள் ஏற்படும். பெண்களால் பிரச்னைகள் உண்டாகும். 812016 முதல் கேது 6ம் இடம் மாறுவது சிறப்பாகும். பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆன்மிக, அறநிலைய, ஜோதிடப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். இறை வழிபாடுகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மனத்தெளிவு பிறக்கும். சாதுக்கள், மகான்களது ஆசிகள் கிடைக்கும். எதிரிகள் கட்டுக்குள் அடங்கி இருப்பார்கள். ராகுவுக்குப் பிரீதியாக துர்கை அம்மனை இந்தப் புத்தாண்டு முழுவதும் வழிபடுவது நல்லது. 

மன்மத வருடம்... ராகு, கேது பலன்கள் !

உங்கள் ராசிக்கு 12ல் ராகுவும், 6ல் கேதுவும் உலவும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு உதயமாகி இருக்கிறது. ராகுவின் பலம் குறைந்திருப்பதால், வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். தூக்கம் கெடும். கொடுக்கல்வாங்கலில் விழிப்பு தேவை. மறதியால் அவதி ஏற்படும். நவீன எலெக்ட்ரானிக் பொருட்கள் பழுதடையும். பயணத்தால் செலவுகள் கூடும். அதற்கான பயன் முழுமையாகக் கிடைக்காமல் போகும். 812016 முதல் ராகு 11ம் இடம் மாறுவதால், திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். பிற மொழி, இனக்காரர்களால் அனுகூலம் உண்டாகும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் கரம் வலுக்குறையும். வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். மன உற்சாகம் பெருகும். புதிய பொருட்கள் சேரும்.

6ல் உலவும் கேது மனதில் தன்னம்பிக்கையையும் துணிவையும் தருவார். எதிரிகளைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும்.

812016 முதல் கேது 5ம் இடம் மாறுவது சிறப்பாகாது. மக்கள் நலம் பாதிக்கும். வயிறு சம்பந்தமான கோளாறுகள் ஏற்பட்டு விலகும். எக்காரியத்திலும் ஈடுபடுவதற்கு முன்பு விநாயகரை வழிபடவும். தொழில் சார்ந்த பிரச்னைகளும் வழக்கு வியாஜ்ஜியங்களும் உண்டாகும். பக்குவமாகச் சமாளிக்கவும்.  வீண் செலவுகளைத் தவிர்க்கவும். கேதுவை குரு பார்ப்பதால், தெய்வப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்குத் தெளிவு பிறக்கும். 

மன்மத வருடம்... ராகு, கேது பலன்கள் !

மன்மத வருடம் முழுவதும் ராகுவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால், செல்வ வளம் பெருகும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் பெருகும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். வியாபார நுணுக்கம் தெரியவரும். நவீன விஞ்ஞானத்துறைகள் லாபம் தரும். ஏற்றுமதி, இறக்குமதி, போக்குவரத்துச் சாதனங்கள், பயணம் சார்ந்த தொழில் ஆகியவற்றின் மூலம் அதிக லாபம் கிடைக்கும். வெளிநாடு சென்று தொழில் புரிபவர்களுக்கு வருமானம் அதிகமாகும். எலெக்ட்ரானிக் பொருட்கள் லாபம் தரும். புனிதத் தலங்களுக்குச் சென்று வழிபடும் பாக்கியம் கிடைக்கும்.

கேதுவின் சஞ்சாரம் ஆண்டு முழுவதும் சிறப்பாக இல்லாததால், மனதில் ஏதேனும் குழப்பம் ஏற்படும். மக்களால் மன வருத்தம் உண்டாகும். எதையோ நினைத்துக் குழப்பமடைவீர்கள். வயிறு, இதயம் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். தாய் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். 812016 முதல் கேது 4ம் இடம் மாறுவதால், சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட்டு, குரு கேதுவைப் பார்ப்பதால் விலகும். சுகம் குறையும். மருத்துவச் செலவுகள் சற்று கூடும். மருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத சில உபாதைகளும் ஏற்படும். வண்டி, வாகன, வீடு பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். உழைப்பு சற்று கூடவே செய்யும். 

மன்மத வருடம்... ராகு, கேது பலன்கள் !

உங்கள் ராசிக்கு 4ல் கேதுவும் 10ல் ராகுவும் உலவும்போது இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. ராகு 10ல் உலவுவதால், தொழில் சம்பந்தமான வளர்ச்சி சீராகவே இருக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் வளர்ச்சி பெறும். புதியவர்களது தொடர்பு பயன்படும். தோல் பொருட்கள் லாபம் தரும். போக்குவரத்து மற்றும் பயணம் சம்பந்தப்பட்ட இனங்களால் வருவாய் கூடும். பண நடமாட்டம் சீராகவே இருந்துவரும். 812016 முதல் ராகு 9ம் இடம் மாறுவது சிறப்பாகாது. தந்தையால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். எதிரிகள் இருப்பார்கள் என்பதால் யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது. குடும்ப நலனிலும் தாய் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டிவரும்.

கேது 4ல் உலவுவதால், தாயாராலும் தாய் வழி உறவினர்களாலும் சிறுசிறு இடர்ப்பாடுகள் ஏற்படும். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்பு தேவை. சுகம் குறையும். நண்பர்கள், உறவினர்களால் மன வருத்தம் உண்டாகும். முக்கியமானவர்களை விட்டுப் பிரிய நேரலாம். 812016 முதல் கேது 3ம் இடம் மாறுவதால், எதிர்ப்புகளைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். ஆன்மிக, அறநிலையப்பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். சாதுக்கள், மகான்கள் ஆகியோரது ஆசிகள் கிடைக்கும். மனத்தில் தன்னம்பிக்கை பிறக்கும். எடுத்த காரியங்களை எப்படியும் நிறைவேற்றி விடுவீர்கள். பிரச்னைகள் குறையும். 

மன்மத வருடம்... ராகு, கேது பலன்கள் !

புத்தாண்டு ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு 3ல் கேதுவும் 9ல் ராகுவும் உலவுகிறார்கள். ராகு 9ல் உலவுவது சிறப்பாகாது. தந்தை நலம் பாதிக்கும். தொலைதூரத் தொடர்பால் அதிகம் அனுகூலமிராது. தொழிலில் அதிக கவனம் தேவை. குடும்பத்தில் சலசலப்புகள் இருந்துவரும். சுகம் குறையும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். ராகு தர்ம ஸ்தானத்தில் உலவுவதால், தர்ம சிந்தனை மேலோங்கும்.  812016 முதல் ராகு 8ம் இடம் மாறுவதால், சோதனைகள் சூழும். மறைமுக எதிரிகளால் சங்கடம் உண்டாகும். பயணத்தால் அனுகூலமிராது. மன அமைதி குறையும். பிரச்னைகள் அதிகரிக்கும். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. எதிலும் யோசித்து ஈடுபடுவது நல்லது. வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள் விழிப்புடன் இருந்தால் நஷ்டப்படாமல் தப்பலாம்.

கேது 3ல் உலவுவதால், மனத்துணிவு உண்டாகும். எதிர்ப்புகளைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு கூடும். அறப்பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். 812016 முதல் கேது 2ம் இடம் மாறுவதால், குடும்ப நலம் பாதிக்கும். கண், வாய், முகம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் வெளியாட்களால் குழப்பம் ஏற்படும். கொடுக்கல்வாங்கலில் விழிப்பு தேவை. சகோதர நலனிலும் தந்தை நலனிலும் அக்கறை தேவைப்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. 

மன்மத வருடம்... ராகு, கேது பலன்கள் !

மன்மத ஆண்டு முழுவதும் ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால், எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது. வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். உணவுப் பழக்கத்தில் கவனம் தேவை. விஷத்தாலும் விஷ ஜந்துக்களாலும் ஆபத்து உண்டாகும். இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்கவும். யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது. ஏமாற்றம், இழப்பு ஆகியவை ஏற்படும். கொடுக்கல்வாங்கலில் விழிப்பு தேவை. ஆசைகளைக் குறைத்துக் கொண்டு நேரான வழியில் செல்வதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம்.

கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. கூட்டாளிகளால் பிரச்னைகள் சூழும். முக்கியமான நண்பரையோ, உறவினரையோ பிரிய நேரலாம். மனதில் ஏதேனும் குழப்பம் இருந்துவரும். காரியங்களில் வெற்றி காணக் குறுக்கீடுகளும் தடைகளும் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை எண்ணிக் கைப்பொருளை வீணாக்க வேண்டாம். உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். உடல் நலனில் கவனம் தேவை. உணவு ஒவ்வாமையால் அவதிப்பட வேண்டிவரும். கெட்டவர்களின் தொடர்பு அடியோடு கூடாது. பயணம் சம்பந்தமான இனங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடமும், பிறரிடமும் சுமுகமாகப் பழகினால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்துகொள்வது அவசியமாகும். 

மன்மத வருடம்... ராகு, கேது பலன்கள் !

புத்தாண்டு ஆரம்பத்தில் ஜன்ம ராசியில் கேதுவும், 7ல் ராகுவும் உலவுவது சிறப்பாகாது. அலைச்சல் கூடும். எதற்கெடுத்தாலும் கோபம் வரும். தலை சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கூட்டுத் தொழிலில் கவனம் செலுத்துவது நல்லது. பயணத்தால் அதிகம் அனுகூலமிராது. பிறரால் ஏமாற்றப்பட நேரலாம். கேதுவை குரு பார்ப்பதால் ஆன்மிக, அறநிலைய, ஜோதிடப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு திறமைக்குரிய பயன் கிடைத்துவரும். சாதுக்கள், மகான்கள், யோகிகள் ஆகியோரது ஆசிகள் கிடைக்கும்.

812016 முதல் ராகு 6ம் இடத்துக்கும் கேது 12ம் இடத்துக்கும் மாறுவது நல்லது. செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காண வழிபிறக்கும். இடமாற்றம் நல்லவிதமாக அமையும். பண வரவு கூடும். குறுக்கு வழிகளில் பணம் சேரும். பயணத்தால் அனுகூலம் ஏற்படும். தோல் பொருட்கள் லாபம் தரும்.  ஏற்றுமதிஇறக்குமதி இனங்கள் லாபம் தரும். எதிரிகள் இருப்பார்கள் என்றாலும் சமாளிப்பீர்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் ஆதாயம் கிடைக்கும். திடீர்ப் பொருள்வரவு உண்டாகும். திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் கிடைக்கவே செய்யும். வீண் செலவுகள் குறையும். உடல்நலம் அவ்வப்போது பாதிக்கும். என்றாலும் தகுந்த மருத்துவத்தால் சரியாகும். எக்காரியத்திலும் விநாயகரை வழிபட்ட பின்பு ஈடுபடுவது நல்லது.