Published:Updated:

ராசிபலன்

மே 26 முதல் ஜூன் 8 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

மே 26 முதல் ஜூன் 8 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

Published:Updated:

தவறுகளைத் தட்டிக் கேட்கும் நெஞ்சுரம் கொண்டவர்களே! 

ராசிபலன்

ராகு வலுவாக 6ம் வீட்டில் நிற்பதால், இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளிடம் நல்ல மாற்றம் உண்டாகும். எதிர்பாராத பணவரவு உண்டு. மனைவி வழியில் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீட்டை அழகு படுத்துவீர்கள். நட்பு வட்டம் விரியும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் உதவிகள் உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அஷ்டமத்துச் சனி தொடர்வதால், கோபம், ஏமாற்றம், மறைமுக விமர்சனம் வந்து போகும். சூரியனும், செவ்வாயும் 2ல் நிற்பதுடன், சனியும் பார்த்துக் கொண்டிருப்பதால் பல் வலி, காது வலி, கண் எரிச்சல் வந்து போகும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குரு 4ல் நீடிப்பதால் தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. நீண்ட நாள் கனவு நனவாகும். பெற்றோரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களைப் பற்றிக் குறை கூற வேண்டாம்.

நிதானம் தேவைப்படும்  நேரம் இது.

காலம் கனியும் வரை காத்திருப்பவர்களே!

ராசிபலன்

கேது வலுவாக இருப்பதால் தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். பழைய பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். பழைய உறவினர்களுடன் இருந்த நெருடல்கள் நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். ராசிநாதன் சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உடல் வலி, சோர்வு, களைப்பு விலகும். தடைப்பட்ட வேலைகள் முடியும். புது வாகனம் வாங்குவீர்கள்.

செவ்வாயும், சூரியனும் ராசிக்குள் நிற்பதால், உடன்பிறந்தவர்களால் செலவுகள் வந்து போகும். திடீர்ப் பயணங்கள் உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து செல்லும். குரு 3ல் மறைந்திருப்பதால் வேலைச்சுமை, எதிர்ப்பு, கவலைகள் வந்து போகும். கண்டகச் சனி தொடர்வதால், கணவன்மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையைத் தவிர்க்கப் பாருங்கள். மனைவிக்கு ஹார்மோன் பிரச்னை, மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பிப் பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள்.

வளைந்து கொடுக்க வேண்டிய தருணம் இது.

மலர்ந்த முகத்துடன் அனைவரிடமும் மனம்விட்டுப் பேசுபவர்களே!

உங்களின் பூர்வ புண்யாதிபதி சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜித புத்தியால்

ராசிபலன்

சாதிப்பீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணபலம் உயரும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் வாங்குவீர்கள். கணவன்மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மனைவி வழியில் உதவிகள் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். குருபகவான் 2ல் அமர்ந்திருப்பதால், செல்வாக்கு உயரும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள்.

கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். உறவினர்களால் பாராட்டப்படுவீர்கள். சனி 6ம் வீட்டில் நிற்பதால், சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்களால் திடீர்த் திருப்பம் உண்டாகும். உடல் நலம் சீராகும். சூரியனும், செவ்வாயும் 12ம் வீட்டில் மறைந்திருப்பதால், வீண் கவலைகள் வந்து போகும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சூட்சுமங்களைச் சொல்லித் தருவார்.

தன்னம்பிக்கையால் சாதிக்கும் காலம் இது.

கலங்கி நிற்கும் மனிதர்களைக் கலகலப்பாக்குபவர்களே!

லாப வீட்டில் சூரியனும், செவ்வாயும் நிற்பதால் புகழ், கௌரவம் உயரும். ஆட்சியில் இருப்பவர்கள்

ராசிபலன்

அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த பதவி தேடி வரும். புது வேலை கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பழைய சொத்தை விற்று, புது வீடு வாங்குவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சகோதரிக்குத் திருமணம் நிச்சயமாகும்.

சனி 5ல் நிற்பதால், பிள்ளைகளை வேறு பள்ளியில் சேர்க்க வேண்டி வரும். ராகு வலுவாக அமர்ந்திருப்பதால் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைத் தெரிந்துகொள்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புதன் சாதகமாக இருப்பதால் பால்ய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. பழைய கடனை பைசல் செய்வீர்கள். ஜென்ம குரு தொடர்வதால், சிலர் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வார்கள். கெட்டவர்களை் ஒதுக்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

விவேகமான முடிவுகளை எடுக்கும் வேளை இது.

மக்களின் நலனுக்காக அயராது போராடுபவர்களே!

ராசிநாதன் சூரியனும், யோகாதிபதி செவ்வாயும் 10ல் நிற்பதால் நீண்ட கால ஆசைகள்

ராசிபலன்

நிறைவேறும். அதிகாரப் பதவியில் அமர்வீர்கள். பாதியில் முடங்கிக் கிடந்த வீடு கட்டும் பணி முழுமையடையும். புது வேலை அமையும். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும். பழைய கடன், கைக்கு வரும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். சகோதர வகையில் பயனடைவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஆலயத்தைப் புதுப்பிக்க உதவுவீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள்.

சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. நம்பிக்கைக்குரியவர்கள் சிலர் கைகொடுத்து உதவுவார்கள். நண்பர்கள், உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். ராசிக்கு 2ல் ராகுவும், 8ல் கேதுவும் நிற்பதால் ஏமாற்றம், பசியின்மை, தூக்கமின்மை, வந்து போகும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் உதவிகள் உண்டு.

எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நேரம் இது.

பகைவனுக்கும் உதவும் பரந்த மனசு கொண்டவர்களே!

சனி பகவான் 3ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பெரிய

ராசிபலன்

பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். ஏளனமாக  திட்டியவர்கள் எல்லாம், இனி பாராட்டுவார்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்று மதத்தவரால் ஆதாயம் உண்டு. யோகாதிபதி சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், பணப் புழக்கம் அதிகமாகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். உறவினர்கள் முக்கியத்துவம் தருவார்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

குரு லாப வீட்டில் நிற்பதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சூரியன் 9ல் நிற்பதால் அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். செவ்வாயும் 9ம் வீட்டில் நிற்பதால் அலைச்சல், டென்ஷன் குறையும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப புது முதலீடு செய்வீர்கள். பங்குதாரர்கள் பனிந்து வருவார்கள். உத்தியோகத்தில் உங்களுடன் பகைமை பாராட்டிக் கொண்டிருந்த உயரதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார்.

தொட்ட காரியம் துலங்கும் தருணம் இது.

விருப்பு வெறுப்பு இல்லாமல் எதையும் செய்பவர்களே!

சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஊக்கம், உற்சாகம் பிறக்கும். புது வாகனம்

ராசிபலன்

வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். செவ்வாய் 8ல் மறைவதால் வேலைச்சுமை, சிறுசிறு விபத்து, வந்து போகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.

சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து போகும். ஏழரைச் சனி தொடர்வதால் மந்தம், மறதி வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். சூரியனும் 8ல் நிற்பதால், அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். பெற்றோரை அனுசரித்துப் போங்கள். குரு 10ல் தொடர்வதால் உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். ஆசை வார்த்தைகளை நம்பி, ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள்.

முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டிய  காலம் இது.

காசுபணத்துக்கு விலை போகாதவர்களே!

ராகு லாப வீட்டில் நிற்பதால் தடைகளும், ஏமாற்றங்களும் இருந்தாலும் ஓயமாட்டீர்கள்.

ராசிபலன்

விடாப்பிடியாகச் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். கடன் பிரச்னைகளை சமாளிப்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். பூர்வீக சொத்தை விற்று பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

7ல் செவ்வாயும், சூரியனும் தொடர்வதால், குடும்பத்தில் நடக்கும் சின்னச் சின்ன சண்டை சச்சரவுகளை எல்லாம் பெரிதாக்க வேண்டாம். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கழுத்து வலி வந்து நீங்கும். ராசிக்குள் நிற்கும் சனியால் கை, கால் வலி, செரிமானக் கோளாறு வந்து விலகும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சுக்ரன் சாதகமாக இருப்பதால், சோர்வு நீங்கும். மனைவியுடனான கருத்து மோதல்கள் விலகும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்து செல்லும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு பாராட்டுக் கிடைக்கும்.

பொறுமையால்  புகழடையும் நேரம் இது.

லட்சியக் கனவுடன் வாழ்பவர்களே!

சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நல்லவர்களின் நட்பு

ராசிபலன்

கிடைக்கும். பணபலம் உயரும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். விலகி நின்ற சொந்தம் விரும்பி வரும். புது வேலை கிடைக்கும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியைத் தொடங்க பணம் கிடைக்கும். பூர்வபுண்யாதிபதி செவ்வாய் 6ல் அமர்ந்திருப்பதால், பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். குழந்தை பாக்யம் கிட்டும்.

பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் மேம்படும். அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். அயல்நாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். சூரியன் சாதகமாக இருப்பதால் மதிப்பு, மரியாதை கூடும். தாயாரின் உடல் நலம் சீராகும். கேது 4ல் நிற்பதால் வாகன விபத்து, வீண் பழி, சளித் தொந்தரவு, வீண் டென்ஷன் வந்து போகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும்.

சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறும்  தருணம் இது.

உண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களே!

சனிபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், எதையும் சாதிக்கும் வல்லமை கிட்டும். நேர்மறை

ராசிபலன்

எண்ணம் பிறக்கும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். மகனுக்கு மேற்படிப்பு தொடர இடம் கிடைக்கும். சுபகாரியங்களால் வீடு களை கட்டும். மூத்த சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், கனத்த மனசு லேசாகும். வீட்டை அழகுபடுத்துவீர்கள்.

செவ்வாய் வலுவாக இருப்பதால், உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வீடு,மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். 29ம் தேதி வரை சுக்ரன் 6ல் நிற்பதால், மனக்குழப்பம் வந்து செல்லும். 30ந் தேதி முதல் சுக்ரன் 7ல் நுழைவதால், சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். சூரியன் 5ல் இருப்பதால், தலை வலி வந்து போகும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் ஆதரிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கடின உழைப்பால் இலக்கை எட்டும்  காலம் இது.

தலைமைப் பண்பு அதிகமுள்ளவர்களே!

ராசிக்கு 4ம் வீட்டில் சூரியன் கேந்திரபலம் பெற்றிருப்பதால், சொன்ன சொல்லை

ராசிபலன்

நிறைவேற்றுவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். எதிர்ப்புகள் அடங்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பண வரவு உண்டு. பிள்ளைகளின்  திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

30ந் தேதி முதல் சுக்ரன் 6ல் நுழைவதால், காய்ச்சல் வந்து போகும். கணவன்மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னைகள் ஏற்படக்கூடும். குரு 6ல் மறைந்திருப்பதால், சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால், நிதானித்து செயல்படப்பாருங்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து, லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் கவனம் தேவை. மேலதிகாரி மதிப்பார்.

சகிப்புத் தன்மையால் சாதிக்கும் நேரம் இது.

போராட்டங்களைச் சளைக்காமல் எதிர்கொள்பவர்களே!

சூரியன் 3ல் அமர்ந்திருப்பதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். நீண்ட நாளாகத் தள்ளிப் போன

ராசிபலன்

சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். பிள்ளைகளின் போக்கில் அக்கறை செலுத்துவீர்கள். வழக்குகள் சாதகமாகும். செவ்வாய் சாதகமாக இருப்பதால் பேச்சில் முதிர்ச்சி தெரியும். வீடு, மனை, வாகனச் சேர்க்கை உண்டு. உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். மனைவி வழியில் இருந்த பிணக்குகள் நீங்கும்.

சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், புது நகை வாங்குவீர்கள். எதிராகச் செயல்பட்டவர்களெல்லாம் அடங்குவார்கள். வீட்டை மாற்றியமைப்பீர்கள். புதுவேலை கிடைக்கும். உங்கள் வளர்ச்சியைக் கண்டு, உறவினர்கள் சிலர் பொறாமைப்படுவார்கள். வேற்று மதத்தவர்களால் அனுகூலம் உண்டு. குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு, பதிலடி கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும்.

நினைத்த காரியம் நிறைவேறும் வேளை இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism