Published:Updated:

எளிய முறையில் வாஸ்து பூஜை !

வளம் தரும் வாஸ்துவித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

எளிய முறையில் வாஸ்து பூஜை !

வளம் தரும் வாஸ்துவித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

Published:Updated:

வாஸ்து பகவான் நித்திரை விடும் நாட்கள் மற்றும் வாஸ்து நேரங்கள் குறித்தும், நம் வீட்டைக் காக்கும் தெய்வமான அவரை பூஜித்துவிட்டு வீடு முதலான புதிய கட்டடங்களைக் கட்டத் துவங்க வேண்டும் என்றும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். 

மனைகளில் உள்ள குறைபாடுகள், தோஷங்களை நிவர்த்தி செய்யும் வகையில் வாஸ்து பகவானின் திருவருளைப் பெறுவதற்கு, அவரை பூஜித்து மகிழ்விப்பது எப்படி என்பது குறித்து இந்த இதழில் பார்ப்போம்.

எந்த தினங்களில் பூஜிக்கலாம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாஸ்து பகவான் நித்திரை விடும் நாட்களில், அவர் விழித்திருக்கும் 90 நிமிடங்களில் பூஜை செய்யலாம். இந்த நேரப்பொழுதில் அவர் ஒவ்வொரு 18 நிமிடங்களில் முறையே பல் துலக்குதல், ஸ்நானம் செய்தல், பூஜை செய்தல், உணவு உண்ணுதல், வெற்றிலை போடுதல் ஆகிய காரியங்களில் ஈடுபடுவார். இதில், அவர் உணவு உண்ணும் நேரம் மற்றும் வெற்றிலை போடும் நேரத்தில் பூஜிப்பது வெகு விசேஷம் (இதன் அடிப்படையில் மனைகோல நல்ல நேரங்கள் குறித்த பட்டியலும், வாஸ்து புருஷன் நித்திரை விடும் நாட்களின் பட்டியலும் வாசகர்களின் வசதிக்காக இந்த அத்தியாயத்திலும் இடம்பெற்றுள்ளன).

எளிய முறையில் வாஸ்து பூஜை !

பூஜைக்குத் தேவையானவை:

பசும்பால், பன்னீர், மஞ்சள், தேங்காய், விபூதி, ஊதுவத்தி,  நவரத்தினங்கள் (உரிய கடைகளில் கிடைக்கும்), பஞ்ச லோகங்கள், நவதானியங்கள்.

எப்படி பூஜிப்பது?

முதலில் கணபதியை வணங்கிவிட்டு, அவரவர் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்தை வழிபட வேண்டும். பின்னர், புது வீடு கட்டடம் கட்டப்போகும் மனையில் குறிப்பாக கட்டுமானம் அமையும் பகுதியின் (பில்டிங் ஏரியா) வடகிழக்கு மூலையில், மூன்றடி அகலம்; 3 அடி நீள அளவில் (அஸ்திவார பரப்பளவுக்குள் அடங்கும்படியாக) குழி தோண்டிக் கொள்ளவும். அல்லது, ஒன்றரை அடி நீளஅகலத்தில் குழி அமைக்கலாம்.

பின்னர், மீண்டும் முறைப்படி விநாயகர், குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை மனதாரத் துதித்தபடி, மூன்று அல்லது ஐந்து என்ற எண்ணிக்கையில் செங்கற்கள் எடுத்து அவற்றுக்கு சந்தன குங்குமத் திலகம் இட்டு, குழியில் ஊன்ற வேண்டும். தொடர்ந்து, மூன்று கன்னிப்பெண்கள் அல்லது சுமங்கலிப் பெண்களை நிறைகுடத்தில் நீர் எடுத்துவரச் செய்து, மூவரும் ஒரே தருணத்தில் குழியில் நீர்விடச் செய்யவேண்டும்.

எளிய முறையில் வாஸ்து பூஜை !

அடுத்ததாக, தெய்வப் பிரார்த்தனையுடன் குழியில் பால் சமர்ப்பிக்க வேண்டும். அங்கு அமையவுள்ள கட்டடத்தில் வசிக்கப் போகும் நமக்குப் பஞ்ச பூதங்களின் திருவருளும் கிடைக்க வேண்டாமா? அதற்காக, பஞ்சபூதங்களையும் மனதில் துதித்து பஞ்சலோகங்களை குழியில் சமர்ப்பிக்க வேண்டும்.

எளிய முறையில் வாஸ்து பூஜை !

தொடர்ந்து, நவகிரகங்களின் திருவருளைப் பெறும்பொருட்டு,  சூரியதேவனே போற்றி, சந்திரனே போற்றி என்று துவங்கி நவகிரகங்களையும் போற்றிக்கூறி வழிபட்டு நவதானிங்களையும், நவ ரத்தினங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இதன் பின்னர், அஷ்டதிக் பாலகர்களை வணங்கி, பூக்கள்அட்சதையைச் சமர்ப்பித்து வழிபடவேண்டும். நிறைவாக தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு சமர்ப்பித்து மீண்டும் கணபதி பெருமான், குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தையும் அந்தந்த தெய்வங்களுக்கு உரிய துதிப்பாடல்களைப் பாடி வணங்கியபடி, ஊதுவத்தி மற்றும் சாம்பிராணி கொண்டு தூப ஆராதனையும், தீப ஆரத்தியும் காட்டி வழிபடவேண்டும். இதன் பின்னர் கட்டுமான ஆரம்ப வேலைகளைச் செய்யலாம். இந்த முறை எல்லோரும் பின்பற்றக்கூடிய எளிய முறையாகும். வாஸ்து பூஜையில், மந்திரங்களுடன் கூடிய விரிவான முறையும் உண்டு. அதுபற்றி அடுத்த இதழில் தெரிந்துகொள்வோம்.

எளிய முறையில் வாஸ்து பூஜை !

தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism