Published:Updated:

ராசி பலன்கள்

ஜூன் 3-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை

ராசி பலன்கள்

ஜூன் 3-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை

Published:Updated:

தன்னை அறியும் காலம்!

ராசி பலன்கள்

மேஷம்: எதிலும் மாற்றத்தை விரும்புபவர்களே! சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், மற்றவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். ராகு வலுவாக இருப்பதால், ஷேர் மூலமாக பணம் வரும். 2-ல் அமர்ந்திருக்கும் ராசிநாதன் செவ்வாயை 11-ம் தேதி வரை சனி பார்த்துக்கொண்டிருப்பதால், உடல் உபாதை ஏற்படலாம். 12-ம் தேதி முதல் சனி வக்ரமாகி 7-ல் அமர்வதால், வீண் சந்தேகத்தை தவிருங்கள். வியாபாரத்தில் வரவு சுமார்தான். உத்யோகத்தில் உங்களுக்கு வேலைச்சுமை அதிகமாக இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் பலம், பலவீனத்தை உணரும் காலமிது.

மன இறுக்கம் உண்டாகும்!

ராசி பலன்கள்

ரிஷபம்: தராதரம் அறிந்து பழகு பவர்களே! நெருப்பு கிரகங்களான சூரியனும், செவ்வாயும் ராசிக்குள் நிற்பதுடன், 11-ம் தேதி வரை சனி உங்கள் ராசியை பார்த்துக்கொண்டிருப்பதால், மன இறுக்கம் உண்டாகும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். என்றாலும் சுக்கிரனும், கேதுவும் வலுவாக இருப்பதால், ஓரளவு பணம் வரும்.
ராகு 5-ல் தொடர்வதால், உறவினர் விஷயத்தில் தலையிட வேண்டாம். சனிபகவான் 12-ம் தேதி முதல் வக்ரமாகி 6-ல் அமர்வதால், பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும்.

யோகா, தியானம் தேவைப்படும் நேரமிது.

இலக்கை எட்டும் வேளை!

ராசி பலன்கள்

மிதுனம்: சமயோஜித புத்தியால் சாதிப்பவர்களே! குருபகவான் 2-ம் வீட்டில் தொடர்வதால், சிலர் புது வீடு கட்டுவீர்கள். சூரியனும், செவ்வாயும் ராசிக்கு 12-ல் மறைந்திருப்
பதால்... வீண் அலைச்சல், சகோதர வகையில் செலவுகள் வந்து போகும். சனிபகவான் 11-ம் தேதி வரை 6-ல் நிற்பதால், பலரும் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். 12-ம் தேதி முதல் சனி வக்ரமாகி 5-ல் அமர்வதால், பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக்காட்டுவீர்கள்.

விடாமுயற்சியால் இலக்கை எட்டும் வேளையிது.

நன்மைகள் நிறைந்த நேரம்!

ராசி பலன்கள்

கடகம்: மனதில் பட்டதை மறைக்காதவர்களே! சூரியனும், செவ்வாயும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், பணபலம் உயரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். ஜென்ம குரு தொடர்வதால், ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். என்றாலும், சக ஊழியர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

தொட்ட காரியங்கள் துலங்கும் நேரமிது.

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்!

ராசி பலன்கள்

சிம்மம்: தன்மானத்தை விட்டுக்கொடுக்காதவர்களே! யோகாதிபதி செவ்வாயும், ராசிநாதன் சூரியனும் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சுக்கிரன் 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால்... சுபச் செலவுகள் அதிகமாகும். 11-ம் தேதி வரை அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால்... உடல் அசதி, தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். 12-ம் தேதி முதல் சனி வக்ரமாகி 3-ல் அமர்வதால்... மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் உயரதிகாரியின் அறிமுகம் கிடைக்கும்.

மூளை பலத்தால் முன்னேறும் தருணமிது.

புகழ், கௌரவம்... உச்சத்தில்!

ராசி பலன்கள்

கன்னி: பாகுபாடு இல்லாமல் பழகுபவர்களே! 11-ம் தேதி வரை சனிபகவான் 3-ம் வீட்டில் நிற்பதால், உங்களின் புகழ், கௌரவம் அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள்.  12-ம் தேதி முதல் சனி வக்ரமாகி உங்கள் ராசிக்கு 2-ல் அமர்ந்து பாதச் சனியாக தொடர்வதால், யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். 9-ம் வீட்டில் சூரியன் தொடர்வதால் வீண் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படத் தொடங்குவீர்கள்.

தொலைநோக்குச் சிந்தனையால் சாதிக்கும் வேளையிது.

உறவு, நட்பு உவகை தரும்!

ராசி பலன்கள்

துலாம்: மூடநம்பிக்கை இல்லாதவர்களே! ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், புதிய சிந்தனைகள் தோன்றும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் பாசமாக இருப்பார்கள். 8-ல் சூரியனும், செவ்வாயும் நிற்பதால், படபடப்பு, வீண் விரயம் வந்து செல்லும். 12-ம் தேதி முதல் சனி வக்ரமாகி உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச் சனியாக வருவதால், உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் டென்ஷனாவீர்கள்.

வளைந்து கொடுக்க வேண்டிய நேரமிது.

அதிரடி முன்னேற்றம்!

ராசி பலன்கள்

விருச்சிகம்: ஆணவத்துக்கு அடிபணியாதவர்களே! குருவும், ராகுவும் வலுவாக இருப்பதால், திடீர் பணவரவு உண்டு. பிள்ளைகளின் உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். என்றாலும், உங்கள் ராசிநாதன் செவ்வாயை 11-ம் தேதி வரை சனி பார்த்துக்கொண்டிருப்பதால், உடல் உபாதை  ஏற்படலாம். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்திக் கட்ட முயற்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் கௌரவப் பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

அதிரடி முன்னேற்றங்களை சந்திக்கும் வேளையிது.

வருமானம் உயரும்! 

ராசி பலன்கள்

தனுசு: எதையும் நேருக்கு நேராக பேசுபவர்களே! சூரியனும், செவ்வாயும் 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், வருமானம் உயரும். மாறுபட்ட அணுகுமுறையால் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பீர்கள். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். 12-ம் தேதி முதல் சனிபகவான் லாப வீட்டில் அமர்வதால், ஷேர் மூலமாக பணம் வரும். ராசிநாதன் குருபகவான் மறைந்து காணப்படுவதால்... வீண் பயம், அலைச்சல் வந்து செல்லும். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

தன்னம்பிக்கையால் வெற்றி பெறும் தருணமிது.

அழகு, இளமை கூடும்!

ராசி பலன்கள்

மகரம்: அலட்டிக்கொள்ளாமல் அதிகாரம் செய்பவர்களே! சுக்கிரன் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியை பார்ப்பதால், அழகு, இளமை கூடும். கடனாக கொடுத்த பணம் திரும்ப வரும். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சூரியனும், செவ்வாயும் 5-ம் வீட்டில் நிற்பதால், அரசு காரியங்கள் தாமதமாகும். பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணிப்பது நல்லது. வியாபாரத்தில் புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் மற்றவர்களின் தவறுகளைத் திருத்துவீர்கள்.

சாதுர்யமான பேச்சால் சாதிக்கும் காலமிது.

அயல்நாட்டில் இருந்து ஆதாயம்!

ராசி பலன்கள்

கும்பம்: தயாள குணம் கொண்டவர்களே! புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், தோழிகளால் நன்மை உண்டு. சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால் உடல்நலக் கோளாறு,  வாகனப் பழுது வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை ஏற்படலாம். குருவும் 6-ல் மறைந்து கிடப்பதால், பழக்கவழக்கம் சரியில்லாதவர்களின் நட்பைத் தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்கள் தலைதூக்கும்.

சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறும் வேளையிது.

ஆடை, ஆபரணம் சேரும்!

ராசி பலன்கள்

மீனம்: லட்சியக் கனவுடன் வாழ்பவர்களே! செவ்வாயும், சூரியனும் 3-ம் வீட்டில் வலுவாக நிற்பதால், பணவரவு உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். 7-ல் ராகுவும், ராசிக்குள் கேதுவும் நீடிப்பதால்... ஏமாற்றம், வீண் விரயம் வந்து செல்லும். 12-ம் தேதி முதல் சனி வக்ரமாகி உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து அஷ்டமத்துசனியாக வருவதால், யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக முடித்துக்காட்டுவீர்கள்.

அனுபவ அறிவால் முன்னேறும் காலமிது.

‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism