தேனி - கூடலூர் வழியில் சுமார் 37 கி.மீ தொலைவில் உள்ளது உத்தமபாளையம். இங்கு உள்ள பாறையடி ஸ்ரீ முத்துக்கருப்பண்ணர் திருக்கோயில் மிகவும் பிரபலமானது.

ஒவ்வொரு மாதமும் சிவராத்திரியன்று இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. இதே கோயிலில் ஸ்ரீ முக்திவிநாயகரும் தனிச் சந்நிதி கொண்டிருக்கிறார். நவகிரகங்கள் மற்றும் நாகர் பிரதிஷ்டையுடன் திகழும் இவரது சந்நிதி கோஷ்டத்தில், விசேஷ திருக்கோலத்தில் அருள்கிறார் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி.

அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா?

கல்லால மரம், திருக்கரங்களில் டமருகம், அக்னி, திருவடியின் கீழ் முயலகன், சனகாதி முனிவர்கள் என எதுவும் இல்லாமல் காட்சி அளிக்கிறார் இந்த தட்சிணாமூர்த்தி. இடக்காலை மடக்கி, யோகப்பட்டை அணிந்து சின்முத்திரையுடன் அருள்கிறார். இப்படியான கோலத்தில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை வேறெங்கும் காண்பது அரிது. குருப் பெயர்ச்சியை ஒட்டி பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள், இந்தத் தலத்துக்கு வந்து கருப்பண்ண சாமியை வழிபடுவதுடன், விநாயகரையும் இந்த தட்சிணாமூர்த்தியையும் தரிசித்து வழிபட்டால், வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

இ.ராஜவிபீஷிகா, படங்கள்: வீ.சக்தி அருணகிரி