Published:Updated:

ராசி பலன்கள்

ஜூன் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை

ராசி பலன்கள்

ஜூன் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை

Published:Updated:

தொட்ட காரியங்கள் துலங்கும்!

ராசி பலன்கள்

மேஷம்: சீர்திருத்த சிந்தனை கொண்டவர்களே! ராசிக்கு 2-ம் வீட்டில் புதன் நிற்பதால், தொட்ட காரியங்கள் துலங்கும். பழைய தோழிகளை சந்தித்து மகிழ்வீர்கள். குரு 4-ம் வீட்டிலேயே தொடர்வதால், வேலைச்சுமை அதிகமாகும். சுக்கிரன் 4-ல் நிற்பதால், உறவினருடன் கருத்து மோதல் வரலாம். உங்கள் ராசிக்கு செவ்வாயும், சூரியனும் சாதகமாக இருப்பதால், அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தை புது முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் சம்பள உயர்வு உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தஸ்து ஒருபடி உயரும் நேரமிது.

ஓடி ஓடி உழைக்கும் நேரம்!

ராசி பலன்கள்

ரிஷபம்: திட்டமிடுவதில் வல்லவர்களே! உங்கள் ராசிநாதனாகிய சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 2-ல் இருக்கும் செவ்வாயால் பேச்சில் காரம் அதிகமாகும். உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டுக்குள் ராகு அமர்ந்திருப்பதால், ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குரு 3-ல் மறைந்திருப்பதால், அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ளாதீர்கள். 

புதிய பாதையில் பயணிக்கும் தருணமிது.

பணப்புழக்கம் அதிகரிக்கும்!

ராசி பலன்கள்

மிதுனம்: மனசாட்சி சொல்வதை மறுக்காதவர்களே! குருபகவான் ராசிக்கு 2-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகன வசதி பெருகும். சூரியனும், செவ்வாயும் ராசிக்குள் நிற்பதால், உடல்நலக் கோளாறு வந்து செல்லும். ராகு 4-ம் வீட்டில் தொடர்வதால், வாகனப் பழுது ஏற்படும். வியாபாரத்தில் தள்ளுபடி விற்பனை மூலமாக லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் இடையூறுகள் உண்டாகும். எதிர்பாராத இடமாற்றமும் ஏற்படலாம்.

சாதுர்யமான பேச்சால் முன்னேறும் வேளையிது.

சாமர்த்தியம் கைகொடுக்கும்!

ராசி பலன்கள்

கடகம்: தங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்தவர்களே! புதன் லாப வீட்டில் நிற்பதால், பிரச்னைகளை சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சுக்கிரன் ராசிக்குள் அமர்ந்திருப்பதால்... அழகு, இளமை கூடும். கேது 9-ல் அமர்ந்திருப்பதால், சேமிப்புகள் கரையும். சூரியன் 12-ல் மறைவதால் திடீர் பயணங்கள் செய்ய நேரிடலாம். ராகு 3-ம் வீட்டில் நிற்பதால், ஷேர் மூலம் லாபம் வரும். ஜென்ம குரு நடப்பதால், சில வேலைகளை போராடி முடிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம்.

வேலைச்சுமை அதிகரிக்கும் நேரமிது.

உள்ளம் விரும்பும் இல்லம்!

ராசி பலன்கள்

சிம்மம்: தொலைநோக்குச் சிந்தனையால் சாதிப்பவர்களே! ராசிநாதன் சூரியன் லாப வீட்டில் நிற்பதால், உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால்,  உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள். 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் தொடர்வதால், உடல் உபாதை வரக்கூடும். குரு 12-ல் மறைந்திருப்பதால், தூக்கம் குறையும். வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும்.

ரகசியங்களைக் காக்க வேண்டிய காலமிது.

நிம்மதி நிலவும்!

ராசி பலன்கள்

கன்னி: `தர்மம் தலைகாக்கும்’ என்பதை உணர்ந்தவர்களே! குருபகவான் லாப வீட்டில் நிற்பதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ராகு, ராசிக்குள்ளேயே நிற்பதால்... உடல்நலக் கோளாறு வந்து போகும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், திருமணம் தாமதமானவர்களுக்கு, விரைவில் கூடி வரும். சூரியன் 10-ல் கேந்திரபலம் பெற்று நிற்பதால், வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்யோகத்தில் நிம்மதி நிலவும்.

புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் வேளையிது.

எச்சரிக்கை தேவைப்படும் நேரம்!

ராசி பலன்கள்

துலாம்: `எல்லோரும் ஓரினம்’ என்பதை அறிந்தவர்களே! ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், நண்பர்கள், உறவினர்கள் பாசமாக இருப்பார்கள். குரு 10-ம் வீட்டில் நிற்பதால், யாருக்காகவும் உறுதி மொழி தர வேண்டாம். சூரியன் சாதகமாக இல்லாததால்... வீண் டென்ஷன், செலவுகள் வந்து செல்லும். கேது 6-ல் நிற்பதால், பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி சிலர் வதந்தி கிளப்பக்கூடும்.

செல்வாக்கு கூடும் தருணமிது.

உறவுகள் மதிக்கும்!

ராசி பலன்கள்

விருச்சிகம்: யதார்த்தமாக பேசி சாதிப்பவர்களே! குருபகவான் 9-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், பணவரவு அதிகரிக்கும். ராகு 11-ம் வீட்டில் நிற்பதால், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால்... உங்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். கேது சரியில்லாததால், பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணிப்பது நல்லது. உங்கள் ராசிநாதனாகிய செவ்வாய் 8-ல் நிற்பதால், சகோதர வகையில் அலைச்சல் ஏற்படலாம். உத்யோகத்தில் உங்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும்.

நீண்ட நாள் கனவு நனவாகும் வேளையிது.

பணம் கரையும்!

ராசி பலன்கள்

தனுசு: தன்னம்பிக்கையால் சாதிப்பவர்களே! உங்கள் ராசிநாதனாகிய குருபகவான், உங்கள் ராசிக்கு 8-ல் நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் செலவாகிவிடும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், கௌரவம் உயரும். சூரியன் 7-ல் நிற்பதால், அரசாங்க விஷயம் தாமதமாகி முடியும். புதன் 6-ல் மறைந்திருப்பதால்... உறவினர், தோழிகளுடன் நெருடல்கள் வந்து நீங்கும். கேதுவால் வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். ராகு 10-ல் அமர்ந்திருப்பதால், உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாக இருக்கும்.

வீட்டு உபயோக சாதனங்களைப் புதுப்பிக்கும் நேரமிது.

உற்சாகம் பொங்கும் வேளை!

ராசி பலன்கள்

மகரம்: சுயமரியாதை சிந்தனை அதிகமுள்ளவர்களே! சுக்கிரன் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், உங்களுக்கு திடீர் பணவரவு உண்டு. புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள்.  குருவும் வலுவாக இருப்பதால், உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். ராகு 9-ல் நீடிப்பதால், அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். கேதுவால் மனோபலம் கூடும். வியாபாரத்தில் தரமான சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள்.. உத்யோகத்தில் அதிகாரியின் ஆதரவால் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய காலமிது.

புதிய தோழிகளால் மகிழ்ச்சி!

ராசி பலன்கள்

கும்பம்: கூட்டுமுயற்சியை அதிகம் விரும்புபவர்களே! புதன் சாதகமாக இருப்பதால், புதிய தோழிகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால், உடல் உபாதை வந்து நீங்கும். குரு பலவீனமாக இருப்பதால், நல்ல வர்களின் நட்பை இழக்க நேரிடலாம். சூரியன் 5-ல் நிற்பதால், அரசு காரியங்கள் இழுபறியாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 5-ல் நிற்பதால், பூர்வீக சொத்து பிரச்னை தலைதூக்கும். ராகு, கேது சரியில்லாததால், அலைச்சல் ஏற்படும். உத்யோகத்தில் உயரதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள்.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய வேளையிது.

நன்மைகள் குவியும் நேரம்!

ராசி பலன்கள்

மீனம்: புள்ளிவிவரத்துடன் பேசுபவர் களே! உங்கள் ராசிநாதனாகிய குரு பகவான் 5-ம் வீட்டில் நிற்பதால்... ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்கள் உங்கள் நல்ல மனதைப் புரிந்துகொள்வார்கள். உங்கள் ராசிக்குள் கேதுவும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால், முன்கோபம் அதிகமாகும். சுக்கிரன் 5-ம் வீட்டில் நிற்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வார்கள்.

அழகு, இளமை கூடும் தருணமிது.

‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism