Published:Updated:

ராசிபலன்

ஜூலை 7 முதல் 20 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

எதிர்பார்ப்புகள் இன்றிப் பழகும் நீங்கள் எதிரிகளுக்கும் உதவுபவர்கள். 

பாக்யாதிபதி குருபகவான் சாதகமாக 5ம் வீட்டில் நுழைந்திருப்பதால், எல்லா வகையிலும் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தந்தை வழியிலும் உதவிகள் கிடைக்கும். உங்களின் தனாதிபதி சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீடு வாங்குவதுகட்டுவது சாதகமாக அமையும். வங்கிக் கடன் கிடைக்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிலும் முன்னேற்றம் உண்டு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். சொந்தபந்தங்களுடன் இருந்து வந்த மன வருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். 17ம் தேதி முதல் சூரியன் 4ம் வீட்டில் நுழைவதால், வேலைச்சுமை இருக்கும். 6ம் வீட்டில் ராகு நிற்பதால், பிரபலங்கள் அறிமுகம் ஆவார்கள். புது முயற்சிகள் பலிதமாகும். சனி வக்ரமாகி 7ல் நிற்பதால், எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில், அதிகாரிகள் உங்களிடம் மனம் விட்டுப் பேசுவார்கள்.

தொலைநோக்கு சிந்தனையால் சாதித்துக் காட்டும் நேரம் இது!

ராசிபலன்

தொலைநோக்குச் சிந்தனை மிகுந்தவர் நீங்கள்.

உங்கள் ராசிநாதன் சுக்ரன் சாதகமாக இருப்பதால், சாதுர்யமாகப் பேசி பல காரியங்களைச் சாதிப்பீர்கள். வழக்குகளில் வெற்றி கிட்டும். உங்களின் தனபூர்வ புண்ணியாதிபதியான புதன் வலுவடைந்திருப்பதால், குடும்பத்தில்

கலகலப்பான சூழல் உருவாகும். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வேலை கிடைக்கும். கேது சாதகமாக நிற்பதால், ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

சூரியனும் செவ்வாயும் 2ல் நிற்பதால், சின்ன தடுமாற்றம் இருக்கும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவீர்கள் என்றாலும், துணிச்சலாக முடிவுகள் எடுப்பீர்கள். ராகு 5ம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகளால் பிரச்னைகள் இருக்கும். குரு 4ம் வீட்டுக்கு மாறி இருப்பதால், உணவுப் பழக்கம் மற்றும் பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்கப் பாருங்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில், உயர் அதிகாரிகளால் திருப்தி உண்டாகும்; அவர்கள் மூலம் நன்மைகள் நடக்கும்.

ராஜதந்திரத்தால் முன்னேறும் வேளை இது!

ராசிபலன்

யதார்த்தமான முடிவுகளால் எல்லோராலும் விரும்பப்படும் அன்பர் நீங்கள்!உங்கள் ராசிநாதன் புதன் வலுவாக இருப்பதால், புதிய முயற்சிகள் பலிதமாகும். குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும். விலகிச் சென்ற உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். ஆனால், சூரியனும் செவ்வாயும் ராசியில் நிற்பதால், காய்ச்சல், சளித் தொந்தரவு வந்து நீங்கும். யோகாதிபதி சுக்ரன் 3ல் மறைந்திருந்தாலும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். எதிலும் வெற்றி கிட்டும். கௌரவ பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும்.  

17ம் தேதி முதல் ராசிக்கு 2ம் வீட்டுக்கு சூரியன் வருவதால், பேச்சில் கவனம் தேவை. வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். 4ம் வீட்டில் ராகு நிற்பதால், தாயாருடன் மனத்தாங்கல் வரும். மின்சார சாதனங்களை கவனமாகக் கையாளுங்கள். கணவன்மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில், உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.

கடந்த கால அனுபவங்களால் வெற்றி பெறும் வேளை இது!

ராசிபலன்

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்று நினைப்பவர் நீங்கள்!

உங்கள் ராசிக்கு 12ல் சூரியனும் செவ்வாயும் நிற்பதால், அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். தந்தைவழி உறவினர்களால், சின்னச் சின்ன பிரச்னைகள் தலைதூக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பதில் எச்சரிக்கையாகச் செயல்படவும். எதிர்பார்த்த பணம் சற்று தாமதமாகத்தான் கைக்குக் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தப் பாருங்கள். 2ம் வீட்டில் சுக்ரன் நிற்பதால், ஓரளவு எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மனைவி வழியில் உதவிகள் உண்டு. குரு 2ம் வீட்டுக்குள் நுழைந்திருப்பதால், பண வரவு உண்டு. வெளிநாட்டில் இருப்பவர்களால் உதவிகள் உண்டு.

புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு, பெரிய நிறுவனத்தில் வேலை அமையும்.  மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பெரிய அதிகாரிகள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில், வேலையாட்கள் உங்கள் மனம்கோணாமல் நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில்,  உயர் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

எங்கும், எதிலும் வெற்றி வாகை சூடும் காலம் இது!

பலரும் பலவாறு பேசினாலும், எடுத்த முடிவிலிருந்து மாறாதவர் நீங்கள்!

உங்களுடைய ராசிக்கு 2ம் வீட்டிலேயே ராகு நிற்பதால், பண விஷயத்தில் கறாராக இருங்கள்.

ராசிபலன்

எந்த ஒரு வேலையும் இரண்டாவது, மூன்றாவது முயற்சியிலேயே முடியும். யோகாதிபதி செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால், எதிலும் வெற்றி உண்டு. பண வரவு அதிகரிக்கும். வீண் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள்.

பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தம்பதியரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வீடு மற்றும் வாகன வசதிகள் பெருகும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக அமையும்.

ஷேர் மூலம் பணம் வரும். உங்கள் ராசிக்குள் குரு நுழைந்திருப்பதால், வேலைச்சுமை இருக்கும். காரியங்கள் தடங்கலாகி முடியும். எந்த விஷயத்தையும் நேரடியாக முடிப்பது நல்லது. புரோக்கர், ஏஜென்டுகளை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். உங்களின் புகழ், கௌரவம் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஜூலை 7ம் தேதி மாலை 3.45 மணி முதல், 9ம் தேதி மாலை 6 மணி வரையி லும் எவருக்கும் ஜாமீன் கையொப்பம் இடவேண்டாம். வியாபாரத்தில், எதிர்பார்த்தபடி லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில், மறைமுக எதிர்ப்புக்கள் வந்து நீங்கும்.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய காலம் இது!

தோல்வி கண்டு துவளாதவர் நீங்கள்!

உங்கள் ராசிநாதன் புதன் வலுவான வீடுகளில் செல்வதால், சோர்வு நீங்கும். பெரிய மனிதர்களின்

ராசிபலன்

நட்பு கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக செயல்படுவார்கள். சிலருக்கு, தந்தைவழி சொத்து கைக்கு வரும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். சூரியன் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புது வேலை தொடர்பாக, நல்ல பதில் வரும். சிலருக்குப் புதிய பதவிகள் தேடி வரும். செவ்வாய் 10ம் வீட்டிலேயே நிற்பதால், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.

திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். சுப நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். அரசு காரியங்கள் உடனே முடியும். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. மனோபலம் கூடும். உங்கள் ராசியிலேயே ராகு தொடர்வதால், தலைச்சுற்றல் வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் சிக்கல்கள் நீங்கும். பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.

தொட்டதெல்லாம் துலங்கும் தருணம் இது!

காத்திருந்து காய் நகர்த்துவதில் வல்லவர் நீங்கள்!

கடந்த ஒரு வருட காலமாக பத்தாம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பாடாய்ப் படுத்திய குரு

ராசிபலன்

பகவான் இப்போது லாப வீட்டில் நுழைந்திருப்பதால், பணப் புழக்கம் அதிகரிக்கும். வீண் அலைச்சல், செலவுகள், குழப்பங்கள், தடுமாற்றங்கள் எல்லாம் நீங்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படும். கணவன்மனைவிக்குள் இருந்த கருத்து மோதல்கள் விலகும். ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி, முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

வீடுமனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். உங்கள் ராசிக்கு பாக்யாதிபதியான புதன் 9ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், தந்தை வழி சொத்து சேரும். வழக்குகள் சாதகமாக முடியும். வேலை கிடைக்கும். 17ம் தேதி முதல் சூரியன் 10ல் அமர்வதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பெரிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசாங்க வேலைகள் சாதகமாக முடியும். ஏழரைச் சனி நடை பெறுவதால் திடீர் செலவுகள், பயணங்கள், ஞாபக மறதி வந்து செல்லும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.

திருப்பங்களும் யோகங்களும் நிறைந்த வேளை இது!

தாமதமானாலும் நேர்வழியிலேயே சென்று இலக்கை அடைபவர் நீங்கள்!

ராசிக்கு லாப வீட்டில் ராகு நிற்பதால், உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். எங்கு

ராசிபலன்

சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். கணவன்மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. அரசு காரியங்கள் நல்ல விதத்தில் நிறைவேறும். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு. ஆன்மிகவாதிகள், நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். மாமனார்மாமியார் வகையில் ஆதரவு பெருகும். எதிர்பாராத பணவரவு உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள்.

சூரியன் சாதகமாக இல்லாததால், திடீர் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.   மற்றவர்கள் உங்களிடம் உதவி கேட்கும்போது, யோசித்து உதவவும். செவ்வாயும், குருவும் பலவீனமாக இருப்பதால், மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். ஏழரைச் சனி நடைபெறுவதால், பண பற்றாக்குறை அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை வெளியில் சொல்லாதீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பங்குதாரர்களிடம் கறாராக இருங்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும்.

அச்சம் விலகி அதிகாரம் பெருகும் வேளை இது!

பாகுபாடு பார்க்காமல் பழகுபவர் நீங்கள்.

குரு 9ம் வீட்டுக்குள் நுழைந்து உங்கள் ராசியை பார்த்துக்கொண்டிருப்பதால்,

ராசிபலன்

புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். சமயோசித புத்தியால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். பழைய நண்பர், உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேர்வார்கள். எதிலும் தெளிவு பிறக்கும். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும். கேது 4ம் வீட்டில் தொடர்வதால், வீண் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. கோயில் விழாக்களை நீங்கள்தான் முன்னின்று நடத்த வேண்டியிருக்கும்.

உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் சுக்ரன் தொடர்வதால், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் மாறுபட்ட அணுகுமுறையால் சாதிப்பீர்கள். ராசிநாதன் சூரியன் சரியில்லாததால், தாழ்வு மனப்பான்மை வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். வேலையாட்களின் பிரச்னைகள் ஓயும். உத்தியோகத்தில், சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். மறைமுகத் தொந்தரவுகளும் இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

புதிய பாதையில் பயணிக்கும் தருணம் இது!

தன்னம்பிக்கையுடன் போராடி தடைகளைக் கடந்து செல்பவர் நீங்கள்!

யோகாதிபதியான சுக்ரன் 8ல் மறைந்தாலும் 2ம் வீட்டைப் பார்ப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். சனி வக்ரமாகி இருப்பதால், தம்பதிக்கு இடையே வீண் பிரச்னைகள் வரக்கூடும்.

ராசிபலன்

அநாவசியமாக மற்றவர்களை வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். உறவினர், நண்பர்களாக இருந்தாலும், கொஞ்சம் இடைவெளி விட்டு கவனமாகப் பழகுவது நல்லது. புதன் 6ம் வீட்டில் 14ம் தேதி வரை தொடர்வதால், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். ராசிக்கு 17ம் தேதி முதல் சூரியன் 7ல் நுழைவதால், கொஞ்சம் படபடப்பு வரும்.

கேது 3ம் வீட்டிலும், செவ்வாய் 6ம் வீட்டிலும் நிற்பதால், எந்தத் தடைகள், பிரச்னைகள் வந்தாலும், சாமர்த்தியமாகச் சமாளிக்கும் சக்தி கிடைக்கும்.

வி.ஐ.பிகளால் சில வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். பங்குதாரருடன் சிற்சில பிரச்னைகள் வரும்; சமயோசிதமாக சமாளிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். 18ம் தேதி மாலை 7.30 முதல் 21ம் தேதி காலை 7 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், எதிலும் நிதானமாகச் செயல்படவும்.

பதற்றப்படாமல் பகுத்தறிவை பயன்படுத்த வேண்டிய வேளை இது!

அனுபவ அறிவு அதிகம் கொண்டவர் நீங்கள்!

ராசிபலன்

கடந்த ஒரு வருட காலமாக 6ல் மறைந்து உங்களை அவஸ்தைப்படுத்திய குரு பகவான், இப்போது ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேருவீர்கள். வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். உங்களின் யோகாதிபதியும், பூர்வ புண்ணியாதிபதியுமான புதன் 14ம் தேதி வரை 5ம் வீட்டில் நிற்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.

வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். சூரியன் 17ம் தேதி முதல் 6ம் வீட்டில் அமர்வதால், பழைய கடனைத் தீர்க்க வழி கிடைக்கும். வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள். ராசிக்கு 8ல் ராகு நிற்பதால், சின்னச் சின்ன மனக்குழப்பங்கள் வரக்கூடும். 21ம் தேதி சந்திராஷ்டமம் இருப்பதால், அன்றைய தினம் புதிய முடிவுகளைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். வேலையாட்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

பிரபலங்களின் மத்தியில் பேசப்படும் காலம் இது!

அன்புக்கு அடிமையானவர் நீங்கள்!

புதன் பலமாக இருப்பதால், அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். தெய்வ பலம் கூடிவரும்.

ராசிபலன்

மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். மதிப்பு கூடும். பெரிய பதவிகள், பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆன்மிக நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். ராசிநாதன் குரு 6ம் வீட்டில் மறைந்து இருப்பதால், தாழ்வு மனப்பான்மை வந்துபோகும். செவ்வாய் வலுவாக இருப்பதால், விலை உயர்ந்த பொருட்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

பழைய நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. சுக்ரன் 6ல் நிற்பதால், தூக்கம் குறையும். மனக்குழப்பங்கள், வீண் பிரச்னைகள் வரக்கூடும். பூர்வீகச் சொத்து விஷயத்தில் இப்போது தலையிட வேண்டாம். 7ல், ராகுவும் 8ல் வக்ர சனியும் நிற்பதால், கணவன்  மனைவிக்குள் வீண் சந்தேகத்தால், பிரிவு வரக்கூடும். இருவரும் பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில், வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக சில சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் வளைந்துகொடுத்துப் போவது நல்லது. மேலதிகாரிகளிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.

எதிர்ப்புகளையும், இழப்புகளையும் தாண்டி முன்னேறும் காலம் இது!