Published:Updated:

ராசி பலன்கள்

ஜூலை 15-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை

ராசி பலன்கள்

ஜூலை 15-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை

Published:Updated:

விட்டதை பிடிக்கும் வேளை!

ராசி பலன்கள்

மேஷம்: அதர்மங்களைக் கண்டு அஞ்சாதவர்களே! ராசிநாதன் செவ்வாய் வலுவாக 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், வருமானம் உயரும். பிள்ளைகளின் படிப்பில் கூடுதல் அக்கறை காட்டுவீர்கள். சூரியன் 4-ல் நிற்பதால், அரசாங்க விஷயங்கள் சற்று தாமதமாக முடியும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், கற்பனை வளம் பெருகும். உறவினர், தோழிகள் உங்கள் உதவியை நாடுவார்கள். சமையலறையை நவீனமயமாக்கு வீர்கள். வியாபாரத்தில் புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை ஆதரிப்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இழந்ததைப் பெறும் வேளையிது.

சம்பளம் உயரும்!

ராசி பலன்கள்

ரிஷபம்: நினைத்ததை முடிக்கும் மனபலம் கொண்டவர்களே! உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 4-ல் நிற்பதால், உறவினருடன் கருத்து மோதல் வரும். 2-ல் இருக்கும் செவ்வாயால், சகோதர வகையில் செலவுகள் வந்து போகும். உங்கள் ராசிக்கு ராகு 5-ம் வீட்டுக்குள் அமர்ந்திருப்பதால், பிள்ளைகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். ஆனால்... சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால், தொட்ட காரியங்கள் துலங்கும். வியாபாரத்தை புது முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் சம்பளம் உயரும்.

அந்தஸ்து ஒருபடி உயரும் நேரமிது.

அவமானங்கள் நீங்கும்!

ராசி பலன்கள்

மிதுனம்: மற்றவர்களுக்கு முன்னுதாரண மாக வாழ்பவர்களே! ராசிக்குள்ளேயே செவ்வாய் நிற்பதால், முன்கோபம் அதிகமாகும். குருபகவான் 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், ஏமாற்றம் வந்து நீங்கும். ராசிநாதன் புதனும், பூர்வ புண்யாதி பதி சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். வக்ர சனி 5-ல் தொடர்வதால், வீண் விரயம் ஏற்படலாம். சூரியன் சாதகமாக இல்லாததால், உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் மறைமுக அவமானங்கள் நீங்கும்.

உழைப்பால் உயரும் தருணமிது.

ஆபரணம் வந்து சேரும்!

ராசி பலன்கள்

கடகம்: ஒற்றுமையின் மேன்மையை  உணர்ந்தவர்களே! குருபகவான் சாதக மாக இருப்பதால், பெரிய திட்டங்கள் நிறைவேறும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால்... தங்க, வெள்ளி ஆபரணங்கள் சேரும். ஜூலை 17-ம் தேதி முதல் ராசிக்குள்ளேயே சூரியன் நுழைவதால்... கோபம், சலிப்பு உண்டாகும். சனி 4-ல் நிற்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். ராகு வலுவாக 3-ம் வீட்டிலேயே தொடர்வதால், கொடுத்த கடன் திரும்ப வரும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள்.

சாதுர்யமாகப் பேசி சாதிக்கும் காலமிது.

உணவில், பேச்சில் உஷார்!

ராசி பலன்கள்

சிம்மம்: நம்பிக்கையுடன் போராடி முதலிடம் பிடிப்பவர்களே! ஜென்ம குரு தொடர்வதால், உணவு விஷயத்திலும், மற்றவர்களிடம் பேசும்போதும் எச்சரிக்கை தேவை. செவ்வாய் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், பிரச்னை களுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். ராசிநாதன் சூரியன் 12-ல் நிற்பதால், சோர்வு வந்து நீங்கும். வக்ரசனி 3-ல் அமர்ந்திருப்பதால், உங்கள் குடும்பத்தின் செல்வாக்கு ஒருபடி உயரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும்.

பொறுப்புகள் அதிகரிக்கும் வேளையிது.

கௌரவம், வருமானம் உச்சத்தில்!

ராசி பலன்கள்

கன்னி: `வாழ்க்கை வாழ்வதற்கே’ என நினைப்பவர்களே! முக்கிய கிரகங்கள் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்க ளின் கௌரவம் உயரும்; வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக்கொண்டு இருந்ததை வாங்கித் தருவீர்கள். சுக்கிரன் 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால்... மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகலாம். ராசிக்குள்ளேயே ராகு தொடர்வதால், உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.
 
சாதித்துக் காட்டும் வேளையிது.

திடீர் பணவரவு!

ராசி பலன்கள்

துலாம்: இங்கிதமான பேச்சால் மற்றவர் களை வியக்க வைப்பவர்களே! உங்கள் ராசிநாதன் சுக்கிரனுடன் குருவும் லாப வீட்டில் இருப்பதால், திடீர் பணவரவு உண்டு. உடல்நலக் கோளாறு நீங்கும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். சூரியனும், புதனும் 10-ம் வீட்டில் நிற்பதால், உங்களின் திறமை கூடும். செவ்வாய் சாதகமாக இருப்பதால், உடன்பிறந்தவர்களுடனான மனத்தாங்கல் நீங்கும். வியாபாரத்தில் அதிரடி முன்னேற்றம் காண்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உதவுவார்.

இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும் நேரமிது.

அடிப்படை வசதி அதிகரிக்கும்!

ராசி பலன்கள்

விருச்சிகம்: எதிலும் உடனடி தீர்வை விரும்புபவர்களே! 10-ல் குரு நிற்பதால் தடைகளும், ஏமாற்றங்களும் வரும். சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால், சேமிப்புகள் கரையும். செவ்வாய் 8-ல் நிற்பதால் வாழ்க்கைத் துணைவரின் ஆரோக் கியத்தில் அக்கறை காட்டுங்கள். உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் ராகு நிற்பதால்... அடிப்படை வசதி பெருகும். 5-ல் கேது நிற்பதால், பிள்ளைகளால் செலவினங்கள் அதிகமாகும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து, சரக்குகளை வாங்குங்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களைப் புரிந்துகொள்ள மாட்டார்கள்.

எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய தருணமிது.

புதிய முயற்சிகள் பலிதமாகும்!

ராசி பலன்கள்

தனுசு: வெளிவேஷம் போடுவதை விரும்பாதவர்களே! ராசிநாதன் குருபக வான் 9-ல் அமர்ந்திருப்பதால், பழைய பொருட்கள், சமையலறை சாதனங்களை மாற்றுவீர்கள். சூரியன் 8-ல் இருப்பதால் வாழ்க்கைத் துணைவர் கோபப்படுவார். சிக்கனமாக இருக்க முயற்சித்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், புதிய முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் போட்டியாளர்களைத் திகைக்கச் செய்வீர்கள். உத்யோகத்தில் வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு தேடி வரும்.

தன்னம்பிக்கை துளிர்விடும் வேளையிது.

முன்னேறும் வேளை!  

ராசி பலன்கள்

மகரம்:  பாகுபாடு பார்க்காமல் பழகும் குணமுடையவர்களே! செவ்வாய் 6-ம் வீட்டில் நிற்பதால், எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். புதன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், நீண்ட நாட்களாக தாமதமான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். ராசிநாதன் சனிபகவான் வக்ரமாகி நிற்பதால், சலிப்பு வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புது வேலைக்கு மாறுவது பற்றி யோசித்து செயல்படுங்கள்.

கடின உழைப்பால் வெற்றி பெறும் தருணமிது.

சொந்த வீடு அமையும்!

ராசி பலன்கள்

கும்பம்: வெள்ளையுள்ளமும், வெகுளித் தனமான பேச்சும் கொண்டவர்களே! சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், வருமானம் உயரும். வீடு கட்டத் தொடங்குவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ராகு 8-ல் தொடர்வதால், சில நேரங்களில் வெறுப்பாக உணர்வீர்கள். குரு 7-ம் வீட்டில் நிற்பதால், நவீன ரக ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். உத்யோகத்தில் உங்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

வசதி, வாய்ப்புகள் பெருகும் நேரமிது.

அமைதி காக்க வேண்டிய நேரம்!

ராசி பலன்கள்

மீனம்: ’உலகம் ஒரு சந்தை மடம்’ என்பதை உணர்ந்தவர்களே! 5-ல் சூரியன் நிற்பதால்... உடல் உபாதை வந்து செல் லும். ராசிநாதன் குரு 6-ல் முடங்கிக் கிடப்பதால், காரிய தாமதம் ஏற்படும். கேது ராசிக்குள் நிற்பதால், உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுப்பதை தவிர்க்கவும்.  புதன் சாதகமாக இருப்பதால் புதிய நட்பால் உற்சாகம் அடைவீர்கள். வக்ரசனி 8-ல் நிற்பதால், சாதாரணமாக பேசுவதுகூட சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் சிரமம் இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும்.

வளைந்து கொடுக்க வேண்டிய காலமிது.

‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism