மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசிபலன்கள்

ராசிபலன்கள்

ராசிபலன்கள்

செப்டம்பர் 28-ம் தேதி முதல் அக்டோபர் 11-ம் தேதி வரை

ராசிபலன்கள்

ஆதாயம் பெருகும் நேரம்!

##~##

மேஷம்: பொதுவுடைமைவாதிகளே! சனிபகவான் வலுவாக இருப்பதால், பணப்புழக்கம் கணிசமாக உயரும். வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். ஆனால், சனியுடன் சூரியன் நிற்பதால் கணவருக்கு கொஞ்சம் அலைச்சல் இருக்கும். அதேசமயம், ஆதாயமும் உண்டு. 1-ம் தேதி முதல் 3-ம் தேதி காலை 9.30 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப் படுவீர்கள்.

ராசிபலன்கள்

வளைந்து கொடுக்க வேண்டிய வேளை!

ரிஷபம்: பழைய வாழ்க்கையை மறக்காதவர்களே! செவ்வாய் 3-ல் நிற்பதால், அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். 5-ம் தேதி முதல் சுக்கிரனும், புதனும் 6-ல் மறைவதால்... உடல் உபாதை, வாகனப் பழுது வந்து நீங்கும். 3-ம் தேதி காலை 9.30 மணி முதல் 5-ம் தேதி மாலை 3 மணி வரை சந்திராஷ்டமம் நடைபெறுவதால், யாரிடமும் கடுமையாக பேசாதீர்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களைக் குறை கூறினாலும் அனுசரித்துச் செல்லுங்கள்.

ராசிபலன்கள்

வெற்றி உங்கள் கையில்!

மிதுனம்: வித்தியாசமாக யோசிப்பவர்களே! ராசிநாதன் புதன் வலுவான வீடுகளில் செல்வதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். செவ்வாய் 2-ல் நிற்பதால் சில நேரங்களில் உணர்ச்சி வசப்படுவீர்கள். 5-ம் தேதி மாலை 3 மணி முதல் 7-ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.

ராசிபலன்கள்

எதிர்பாராத பணவரவு!

கடகம்: தொலைநோக்குச் சிந்தனை உள்ளவர்களே! சூரியன் 3-ல் இருப்பதால், வராது என்றிருந்த பணம் வரும். ராசிக்குள் செவ்வாய் நிற்பதால், சில நேரங்களில் உடல் உபாதை வந்து போகும். 8-ம் தேதி முதல் 10-ம் தேதி காலை 8.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், கவலைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். குரு 10-ல் தொடர்வதால் உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.

ராசிபலன்கள்

கவனம் தேவை!  

சிம்மம்: வெளுத்ததெல்லாம் பாலாக நினைப்பவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், தொட்டது துலங்கும். வீடு கட்ட  வங்கிக் கடன் கிடைக்கும்.  புது நகை வாங்குவீர்கள். ராசிநாதன் சூரியன், சனியுடன் சேர்ந்திருப்பதாலும், பாதச்சனி தொடர்வதாலும் மனக்கலக்கம், உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். 10-ம் தேதி காலை 8.30 மணி முதல் 11-ம் தேதி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால், எதிலும் முன் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். வியாபாரத்தில் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்யோகத்தில் பொறுப்புகள் தேடி வரும்.

ராசிபலன்கள்

அழகு, இளமை கூடும்!

கன்னி: நெருக்கடி நேரத்திலும் சிரிப்பவர்களே! ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால், பணவரவு அதிகரிக்கும். அழகு, இளமை கூடும். ராசிக்குள்ளேயே சூரியனும், சனியும் நிற்பதால் குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும். உடல் உபாதை வந்து நீங்கும். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். சகோதரர் ஓடி வந்து உதவுவார். வியாபாரத்தில் புதுத் தொடர்பால் லாபம் கொட்டும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளுடன் கருத்து மோதல் வந்தாலும், சக ஊழியர்களின் ஆதரவு பெருகும்.

ராசிபலன்கள்

திடீர் யோகம்!

துலாம்: பாகுபாடு பார்க்காமல் பழகுபவர்களே! செவ்வாய் 10-ல் அமர்ந்திருப்பதால், உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. 4-ம் தேதி வரை புதன் 12-ல் மறைந்திருப்பதால்... சுப செலவுகள், திடீர் பயணங்கள் ஏற்படலாம்.. 5-ம் தேதி முதல் ராசிநாதன் சுக்கிரன் ராசிக்குள் ஆட்சி பெற்று அமர்வதால், திடீர் யோகம் உண்டாகும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் இழந்த சலுகைகளைப் பெறுவீர்கள்.

ராசிபலன்கள்

இல்லம் களைகட்டும்!

விருச்சிகம்: தவறுகளை தட்டிக் கேட்பவர்களே! சூரியன் லாப வீட்டில் நிற்பதால், இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால்... படபடப்பு, வீண் விரயம் வந்து செல்லும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடும். கமிஷன் ஆதாயம் தரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் கவனம் தேவை. மூத்த அதிகாரியின் ஆதரவு கிட்டும்.

ராசிபலன்கள்

புதிய பாதையில் பயணம்!

தனுசு: முயற்சிகளிலிருந்து பின்வாங்காதவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். நவீன சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். 8-ல் செவ்வாய் மறைந்திருப்பதால் பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் தயக்கமில்லாமல் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும்.

ராசிபலன்கள்

திறமைக்கு மரியாதை!

மகரம்: பிறரை மதிக்கும் குணம் கொண்டவர்களே! உங்களின் யோகாதிபதிகளான சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் அமைதி நிலவும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். மகனுக்கு வேலை கிடைக்கும். மாமியார் உங்களிடம் புது பொறுப்புகளை ஒப்படைப்பார். செவ்வாய் ராசியைப் பார்ப்பதால், சகோதரி வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்து வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் ஆச்சர்யப்படும்படி பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

ராசிபலன்கள்

அலட்சியம் வேண்டாம்!

கும்பம்: 'விழுவதெல்லாம் எழுவதற்கே’ என்பதை அறிந்தவர்களே! 5-ம் தேதி முதல் பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் மட்டும் அலட்சியம் வேண்டாம். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். கணவருக்கு உடல் நலக் கோளாறு வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். 28-ம் தேதி சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருங்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் லாபம் ஈட்டுவீர்கள். புது ஏஜென்சி அமையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

ராசிபலன்கள்

வியாபாரம் ஓஹோ!

மீனம்: மற்றவர்களை ஏற்றிவிடும் ஏணிகளாக இருக்கும் மனிதாபிமானிகளே! குருவும், புதனும் சாதகமாக இருப்பதால், சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். பணம் வரும்... ஆனால், செலவுகளும் துரத்தும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். 5-ல் செவ்வாய் நிற்பதால், பிள்ளைகளின் பிடிவாதப் போக்கால் வருத்தப்படுவீர்கள். 29, 30 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் நடப்பதால், புதிய முயற்சிகள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களைக் கண்டு அஞ்சாதீர்கள்.

ராசிபலன்கள்