Published:Updated:

ராசிபலன்

ஜுலை 21 முதல் ஆகஸ்ட் 3 வரை

ராசிபலன்

பொதுவுடைமைச் சிந்தனை மிகுந்தவர் நீங்கள்.

ராசிநாதன் செவ்வாய் 3-ல் நிற்பதால், வீட்டு மனை வாங்கும் யோகம் உண்டு. சகோதரர்கள், உங்களின் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் செவ்வாய் 4-ல் நுழைவதால், அலைச்சல் அதிகமாகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளும், பணப் பற்றாக் குறையும் அதிகரிக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சூரியன் 4-ம் வீட்டுக்குள் நுழைந்திருப்பதால், வீட்டை விரிவு படுத்துவீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது பயம் வரும். 5-ம் வீட்டில் குருபகவான் நுழைந்திருப்பதால், மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

பிள்ளைகள் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்று நடப்பர். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். வியாபாரத்தில் விளம்பர யுக்தி களைக் கையாளுவீர்கள். வியாபாரத்தின் மீதிருந்த சலிப்பு, வெறுப்பு நீங்கும். உத்தியோகத்தில் தொந்தரவு கொடுத்த அதிகாரி இடமாற்றம் செய்யப்படுவார். உங்களைப் புரிந்து கொள்ளக் கூடியவர் நியமிக்கப்படுவார். சக ஊழியர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். சிலருக்கு, புது வேலை கிடைக்கும்.

புதிய அணுகுமுறையால் முன்னேறும் நேரம் இது.

ராசிபலன்

டமையில் கண்ணாக இருப்பவர் நீங்கள்.

சூரியன் இந்த மாதம் முழுவதும் 3-ம் வீட்டில் இருப்பதால், தொட்டது துலங்கும். தடைகளெல்லாம் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள், அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் எல்லாம் உடனடியாக நிறைவேறும். வழக்குகள் சாதகமாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை அமையும்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வ தால் பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். எதிர்ப்புகள் விலகும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ராசிநாதன் சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வ தால், பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். ஓரளவு பண வரவு உண்டு.

4-ம் வீட்டில் குரு நுழைந்திருப்பதால், வேலை அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். கேது லாப வீட்டில் தொடர்வதால், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். உத்தியோகத்தில், ஆதரவான நிலை இருக்கும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

புதிய திட்டங்கள் நிறைவேறும் மாதம் இது.

ராசிபலன்

னசாட்சியின் சொற்படி செயல்பட்டு வெற்றிபெறுபவர் நீங்கள்.

உங்களின் ராசிநாதன் புதன் 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை கட்டுக்குள் வரும். தாய்வழி உறவினர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 2-ல் சூரியன் நிற்பதால், லேசாக பார்வைக்கோளாறு வந்து நீங்கும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு வேகமாகப் பேசுவீர்கள். வெளிவட்டாரத் தில் மதிப்பு அதிகரிக்கும்.

3-ம் வீட்டுக்குள் குரு நுழைந்துள்ள தால், மற்றவர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். இடைத்தரகர்களை தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் நுழைவ தால், தாயாருடன் மனத்தாங்கல் வரும்.

சுக்ரன் சாதகமாக இருப்பதால், புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. புதிய நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். இளைய சகோதர வகை யில் உதவிகள் கிடைக்கும்.

உங்கள் ராசியிலேயே செவ்வாய் நீடிப்பதால், தேக ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில், இதுவரையிலும் இருந்து வந்த தடுமாற்றங்கள் நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும்.

சமயோசித புத்தியால் சாதிக்கும் காலம் இது.

ராசிபலன்

ற்பனைத்திறன் மிகுந்தவர் நீங்கள்.

உங்கள் ராசிக்குள் சூரியன் நுழைந் திருப்பதால், வேலை அதிகமாகும். தவிர்க்க முடியாத பயணங்களும் இருக்கும்; தூக்கம் குறையும். மற்றவர்களின் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. வீண் விவாதங் களைத் தவிர்க்கவும்.

குருபகவான் 2-ம் வீட்டுக்குள் நுழைந்திருப்பதால், தடைப்பட்டிருந்த காரியங்கள், இனி நல்லவிதத்தில் முடிவடையும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்றுசேருவீர்கள். பணவரவு உண்டு. கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக தந்து முடிப்பீர்கள். சுக்ரன் உங்கள் ராசிக்கு 2-ல் தன ஸ்தானத்தில் நிற்பதால், குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பிள்ளைகளால் மதிப்பு மரியாதை கூடும். அக்கம்பக்கத்தாருடன் மோதல்கள் நீங்கும். 4-வது வீட்டிலேயே வக்ர சனி தொடர்வதால், அவ்வப்போது வெறுப்பு, விரக்தி வந்து நீங்கும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்யவும். வேற்று மொழிக்காரர்களால் ஆதாயம் கூடும். குரு பகவான் சாதகமாக இருப்பதால், உத்தியோகத்தில் எத்தகைய இடர்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு வெற்றி காணும் வழி கிடைக்கும். அதிகாரிகளில் ஒருவர் உங்களுக்கு எதிராகச் செயல்பட்டால், மற்றொருவர் சாதகமாக இருப்பார்.

திறமைகளால் வாய்ப்புகள் கைகூடும் காலம் இது.

ராசிபலன்

வறுகளை தயங்காமல் சுட்டிக் காட்டுபவர் நீங்கள்.

ராசி நாதன் சூரியன் ராசிக்கு 12-ம் வீட்டிலே நுழைந்திருப்பதால், இந்த மாதம் முழுக்க செலவுகள் கட்டுக்கடங்காது. திடீர் பயணங்கள் இருக்கும். செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால், உங்களுடைய திறமைகள் அதிகரிக்கும். பொது அறிவையும் வளர்த்துக்கொள்வீர்கள். சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்லவிதமாக நிறைவேறும். ஷேர் மூலம் பணம் வரும். பழைய கடனை அடைப்பதற்கு முயற்சி செய்வீர்கள்.

உங்கள் ராசிக்குள்ளே குரு நுழைந்து ஜென்ம குருவாக அமர்ந் திருப்பதால், அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது. வேலைச்சுமை அதிகரிக்கும். சில காரியங்களை நிறைவேற்றுவதில் அதீத முயற்சிகள் தேவைப்படும். ஆன்மிகத்தில் நாட்டம்  அதிகரிக்கும். ராகு 2-ல் நிற்பதால், மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். கேது உங்களுடைய ராசிக்கு 8-ம் வீட்டில் நிற்பதால், கழுத்து வலி வந்து நீங்கும்.

வியாபாரத்தில், கடந்த மாதத்தை விட இந்த மாதம் லாபம் அதிகரிக்கும். கமிஷன் வகைகளால் ஆதாயம் அடை வீர்கள். உத்தியோகத்தில், இதுவரை உங்களுக்குக் கிடைக்காத அங்கீகாரம் இனி கிடைக்கும்.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய மாதம் இது.

ராசிபலன்

பொது நலனில் அக்கறை மிகுந்தவர் நீங்கள்.

ராசிநாதன் புதனுடன் சூரியனும் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால், நீங்கள் பரபரப்பாக காணப்படுவீர்கள். புகழ், கௌரவம் உயரும். தடைப்பட்ட காரியங்களை சிறப்பாக முடித்துக் காட்டுவீர்கள். வேலை கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

தம்பதிக்கு இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். முகப் பொலிவு கூடும். கோபம் குறையும். பொது இயக்கங்களில் உயர்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். குடும்ப வருமானம் உயரும். தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உங்களு டைய கருத்துக்களை எல்லோரும் ஆதரிப்பார்கள்.

குரு 12-ம் வீட்டில் நுழைந்துள்ளார். எனவே, செலவுகள், அலைச்சல்கள் உண்டு. உங்களுடைய ராசிக்குள் ராகு நிற்பதால், உடல்நலனில் அக்கறை காட்டுவது நல்லது; உணவில் கவனம் தேவை. சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், புது வேலை கிடைக்கும்.
வியாபாரத்தில் வரவு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கை ஓங்கும். அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை வழங்குவர். கூடுதல் பொறுப்பு வகிப்பீர்கள்.

ஆளுமைத்திறன் அதிகரிக்கும் மாதம் இது.

ராசிபலன்

ல்லோருக்கும் உதவும் குணம் கொண்டவர் நீங்கள்.

சூரியனும், புதனும் உங்கள் ராசிக்கு 10-ல் அமர்ந்திருப்பதால், இழுபறியாக இருந்து வந்த வேலைகள்   இனி தடையின்றி நிறைவேறும். தந்தையின் உடல் நிலை சீராகும். அரசு காரியங்கள் சாதகமாகும். செல்வாக்கு கூடும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு  நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். வி.ஐ.பி-கள் அறிமுகம் ஆவார்கள். நிர்வாகத் திறமை கூடும்.

சனி பகவான் சாதகம் இல்லாத நிலையில் உள்ளதால், தலைசுற்றல், செரிமானக் கோளாறுகள் வந்து நீங்கும். எதிர்மறை எண்ணங்களுடன் பேசுபவர் களைத் தவிர்க்கவும்.

ராசிநாதன் சுக்ரன் லாப வீட்டில் அமர்வதால், வியாபாரத்தில் கடந்த மாதத்தைவிட இந்த மாதம் லாபம் அதிகரிக்கும். கமிஷன் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். வாகனம் வாங்குவது விற்பது லாபகரமாக அமையும்.

குரு பகவான் லாப வீட்டுக்குள் நுழைந்திருப்பதால், புத்திசாலித் தனமான செயல்பாடுகளால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். புதிய நட்புகள் உருவாகும்.ஷேர் மூலமாகவும் பணம் வரும். உத்தியோகத்தில் உங்களின் செல்வாக்கு கூடும். தடைப்பட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வுகளை இப்போது எதிர்பார்க்கலாம். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் யாவும் நீங்கும்.

வெற்றிகளை சுவைக்கத் தொடங்கும் காலம் இது.

ராசிபலன்

திலும் வெற்று ஆர்ப்பாட்டம் இல்லாமல் சாதனை புரிபவர் நீங்கள்.

ராசிநாதன் செவ்வாய் 8-ம் வீட்டிலேயே தொடர்வதால், உறவினர் களுடன் மோதல் வந்து விலகும். தவிர்க்க முடியாத செலவுகளும் பயணங்களும் அதிகரிக்கும். சூரியன் 9-ல் நுழைந்திருப்பதால் ஒரளவு அலைச்சல் குறையும். ஆனால், தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். சட்டத்துக்குப் புறம்பான வகையில் உதவிகள் வந்தால் ஏற்றுக் கொள்ளாதீர்கள்.

குரு ராசிக்கு 10-ல் நுழைந்திருப்ப தால், உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளும் வரும். சிலர், உங்களது பெயரை தவறாகப் பயன்படுத்துவார்கள்.

குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லவேண்டாம். மற்றவர்களின் அந்தரங்க விஷயங் களையும் வெளியில் பேசாமல் இருப்பது நல்லது.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இழந்த தொகையில் ஒரு பகுதியை மீண்டும் பெறுவீர்கள். சிலருக்கு ஷேர் மூலமாக பணம் வரும். மூலிகை, வாகன உதிரி பாகங்கள், பிளாஸ்டிக், துரித உணவு வகைகளால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். உங்க ளுக்கு ஆதரவு தந்த அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். புதிதாக வந்துசேரும் அதிகாரியுடன் ஒத்துப்போக முடியாத சூழல் உருவாகலாம். சக ஊழியர்களுடனும் விவாதம் எழலாம். பொறுமையாக செயல்படவும்.

வேலைச்சுமை அதிகரிக்கும் காலம் இது.

ராசிபலன்

யோசித்து முடிவெடுத்து வெற்றி பெறுபவர் நீங்கள்.

ராசிநாதன் குரு 9-ம் வீட்டுக்குள்  நுழைந்து இருப்பதால், பணப் பற்றாக்குறை நீங்கும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவார்கள். குடும்ப வருமானம் உயரும். அடகில் இருந்த நகைகளை மீட்க வழி கிடைக்கும். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். சிலர்,  புதிதாக முதலீடு செய்து தொழில் தொடங்குவார்கள்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த மனஸ்தாபம் நீங்கும். வெளி நாடு செல்ல விசா கிடைக்கும். சிலருக்கு, பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்கும். கேது 4-ம் வீட்டில் நுழைவதால், தாயாரின் ஆரோக்கியத் தில் கூடுதல் அக்கறை காட்டுங்கள். சனி, லாப வீட்டில் வலுவாக உள்ளதால் ஷேர் மூலம் பணம் வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புது முயற்சிகள் பலிதமாகும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்யும் வாய்ப்புகள் உண்டாகும். மின்னணு, மின்சார சாதனங்கள், கெமிக்கல் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோக ஸ்தானாதிபதி சூரியன் 8-ல் மறைந்தா லும், குரு வலுவாக இருக்கிறார். எனவே, இதுவரை தடைப்பட்டிருந்த பதவி மற்றும் சம்பள உயர்வுகளை இனி எதிர்பார்க்கலாம். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரியும் இனி சாதகமாக செயல்படுவார்.

நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் காலம் இது.

ராசிபலன்

ட்டதிட்டங்களில் அதீத பிடிப்பு உள்ளவர் நீங்கள்.

உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் சூரியன் அமர்ந்திருப்பதால் எடுத்த காரியங்களை முடிப்பதில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். செலவுகளும் அதிகமாகும். கண் எரிச்சல், இறுமல் போன்ற உபாதைகள் வந்துபோகும். முன்கோபத்தைத் தவிர்க்கவும்.

குரு பகவான் 8-ம் வீட்டில் நுழைந் திருப்பதால் செலவுகள் கட்டுக்கடங் காமல் போகும். அதற்கேற்ப வருமானத்தை உயர்த்துவது எப்படி என்று யோசனையில் ஆழ்வீர்கள்.  தங்க ஆபரணங்களைக் கவனமாகக் கையாளவும். வீடு மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட முக்கிய பத்திரங்களையும்  பாதுகாப்பாக வைப்பது நல்லது.

21-ம் தேதி முதல், கேது பகவான்  3-ம் வீட்டுக்குள் நுழைவதால் தாயாரின் உடல் நிலை சீராகும். வீடு கட்டுவது, வாங்குவது குறித்த முயற்சிகளில் இதுவரையிலும் இருந்துவந்த தொய்வு நிலை மாறும். உயர் கல்வியில் வெற்றி கிடைக்கும்.

வியாபாரத்தில் அதிரடியாக சில மாற்றங்களைச் செய்வீர்கள். பணியாளர் களில் பழையவர்களில் சிலரை நீக்கி விட்டு, நல்ல வேலையாட்கள் சிலரை பணியில் அமர்த்துவீர்கள். உத்தியோகத் தில் வேலைப்பளு கூடும்; கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும்.  எனினும், உயரதிகாரிகள் மத்தியில் உங்கள் மீதான நம்பிக்கை உயரும். சில முக்கிய பொறுப்புகள் வந்துசேரும். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் தேடிவரும்.

விட்டுக்கொடுத்து வெற்றி பெறவேண்டிய காலம் இது.

ராசிபலன்

ரந்த மனப்பான்மை கொண்டவர் நீங்கள்.

இந்த மாதம் முழுவதும் சூரியன் 6-ம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகளால் மகிழ்ச்சி பெருகும். ஷேர் மூலமாக பணம் வரும். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். 4-ம் தேதி முதல் புதன் 6-ம் வீட்டில் மறைவதால், நண்பர்கள் உறவினர்களிடம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது.

குரு பகவான் தற்போது 7-ல் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்ப்பதால், முகப்பொலிவு கூடும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தாம்பத்தியம் இனிக்கும்.

பண வரவு உண்டு. தடைப்பட்ட திருமணம் கைகூடி வரும். உடல் உபாதைகள் நீங்கும். குடும்பத் தினருடன் அதிக நேரத்தை செலவழிக் கும் வாய்ப்பு உண்டாகும். சுக்ரன் ராசிக்கு 7-ம் வீட்டில் வருவதால், எதிர்மறை எண்ணங்கள் நீங்கும்.

வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அவ்வப்போது உங்களிடம் எதிர்மறையாக பேசி வந்த பங்கு தாரர்கள் விலகுவார்கள். நேர்மறை எண்ணங்கள் வளரும். உத்தியோகத் தில் உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். பதவி - சம்பள உயர்வுகள் உண்டு. சிலருக்கு, அதிக சம்பளத்துடன் அண்டை மாநிலம் அல்லது வெளி நாட்டில் வேலை கிடைக்கும்.

தொட்டதெல்லாம் துலங்கும் மாதம் இது.

ராசிபலன்

ழப்புகள், ஏமாற்றங்களைக் கண்டு அஞ்சாதவர் நீங்கள்.

ராசிநாதன் குரு பகவான் 6-ம் வீட்டில் நுழைந்திருப்பதால், பயணங் கள், செலவினங்கள் அதிகரிக்கும். சிலர், புது வீட்டுக்கு மாறுவார்கள். அரசு  காரியங்களீல் எச்சரிக்கையுடன் செயல் படவும். அவ்வப்போது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து போகும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாட்களிடம் சொல்ல வேண்டாம்.

சூரியன் 5-ம் வீட்டில் நிற்பதால், அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். குளிர்ச்சி தரக்கூடிய காய், கனிகளை  உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

சுக்ரன் 6-ல் சென்று மறைவதால், அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். உங்கள் இருவருக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். வீண் சந்தேகத்தால் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ள வேண்டாம். இருவருக் கும் பொறுமை மிக அவசியம்.

ராகு பகவான் 7-ம் வீட்டில் நுழைவதால், உங்களின் வாழ்க்கைத் துணைவருக்கு சிற்சில உடல் உபாதை கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. 

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வசூலாகாமல் இருந்த பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். கடுமையாக உழைத்தும் அதற்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வில்லையே என்ற ஆதங்கமும் உங்களை வாட்டும்.

பேச்சு- செயலில் நிதானம் தேவைப்படும் காலம் இது.