Published:Updated:

ராசி பலன்கள்

ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை

ராசி பலன்கள்

ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை

Published:Updated:

காரியங்கள் கைகூடும்!

ராசி பலன்கள்

மேஷம்:  எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களே! செவ்வாய் 4-ல் நிற்பதால்... திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். வீடு மாறுவது, கட்டுவது சாதகமாக அமையும். ஒருபுறம் பணம் வந்தாலும், மறுபுறம் பற்றாக்குறையும் நீடிக்கும்.  22-ம் தேதி  முதல் புதன் 6-ல் மறைவதால்...  உடல் உபாதை ஏற்படலாம். குருபகவான் 5-ம் வீட்டில் தொடர்வதால்... உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உத்யோகத்தில் கடினமான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சின்னச் சின்ன ஆசைகள் நிறைவேறும் நேரமிது.

இல்லறம் இனிக்கும்!

ராசி பலன்கள்

ரிஷபம்: முன் வைத்த காலை பின் வைக்காதவர்களே! சூரியன் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். கணவன் - மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும். சனி பலம் பெற்று அமர்ந்திருப்பதால், மனபக்குவம் கிடைக்கும். குரு 4-ம் வீட்டிலேயே நீடிப்பதால்... மனக்குழப்பம், வேலைச்சுமை வந்து செல்லும். வியாபாரத்தில் போட்டியாளர்களை முறியடிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். உத்யோகத்தில் சின்னச் சின்ன நெருக்கடிகளை சமாளிப்பீர்கள்.

சுற்றியிருப்பவரின் சுயரூபத்தை அறியும் காலமிது.

உறவுகள் மதிக்கும்!

ராசி பலன்கள்

மிதுனம்: எல்லோரிடமும் எளிமையாகப் பழகுபவர்களே! ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சூரியன் 2-ல் அமர்ந்திருப்பதால், உடல்நலக் கோளாறு வந்து போகும். ஆனால், 18-ம் தேதிக்குப் பிறகு 3-ம் வீட்டில்  நுழைவதால்... சோர்வு, களைப்பு நீங்கும். குரு 3-ம் வீட்டில் நிற்பதால், காரிய தாமதம் ஏற்படும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பணவரவு உண்டு.  உத்யோகத்தில் சில முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு மாறும்.

நாவன்மையால் வெல்லும் நேரமிது.

வீண் செலவு குறையும்!

ராசி பலன்கள்

கடகம்: மனதில் பட்டதை ‘பளிச’்சென்று பேசுபவர்களே! சூரியன் இப்போது ராசிக்குள் நுழைந்திருப்பதால்... வீண் அலைச்சல், செலவுகள் குறையும். சுக்கிரன் வலுவாக இருப்பதால்... வீடு வாங்குவது, கட்டுவது நல்ல விதத்தில் முடியும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், தோழிகளை சந்தித்து மகிழ்வீர்கள். குருபகவான் வலுவாக இருப்பதால், அனுபவபூர்வமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில், தேவையற்ற விவாதங்களைத் தவிருங்கள்.

சிக்கனம் தேவைப்படும் தருணமிது.

விட்டுக்கொடுக்க வேண்டிய வேளை!  

ராசி பலன்கள்

சிம்மம்: கொள்கைப் பிடிப்பு அதிகம் உள்ளவர்களே! ஜென்ம குரு தொடர்வதால், கணவன் - மனைவிக்குள் வீண் சச்சரவுகள் வரக்கூடும். விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. சூரியன் 12-ல் மறைந்திருப்பதால், செலவுகள் அதிகரிக்கும். தந்தையாருடன்  மனத்தாங்கல் ஏற்படலாம். 18-ம் தேதிமுதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால், முன்கோபம் ஏற்படும். புதன் சாதகமான வீடுகளில் செல்லவிருப்பதால், சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள் புதிய திட்டங்கள் நிறைவேறும்.
சிந்தனைத் திறனால் வெற்றி பெறும் காலமிது

பணப்புழக்கம்... நிறைவு தரும்!

ராசி பலன்கள்

கன்னி: ‘தன் கையே தனக்கு உதவி’ என்று நினைப்பவர்களே! ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் நிற்பதால், உங்களின் உடல் நிலை பாதிக்கப்படலாம். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பணப்புழக்கம் திருப்தி தரும். செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால், உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். குரு 12-ல் நீடிப்பதால், உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்துகொள்வீர்கள். சூரியன் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால், அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் வரவு உயரும். உத்யோகத்தில் சம்பள பாக்கி கைக்கு வரும்.

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படும் வேளையிது.

தொட்டது துலங்கும்!

ராசி பலன்கள்

துலாம்:  தடைகள் வந்த போதும் தளராதவர்களே! ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், ஷேர் மூலம் பணம் வரும். புதன் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால், கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். 12-ல் ராகுவும், 6-ல் கேதுவும் நிற்பதால்... மனக்குழப்பம், நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். செவ்வாய் 10-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதை தொட்டாலும் வெற்றியில் முடியும். குரு லாப வீட்டில் நீடிப்பதால், வியாபாரத்தை நவீனமயமாக்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள்.

சொந்தங்கள் மத்தியில் செல்வாக்கு கூடும் காலமிது.

பிள்ளைகளால் மகிழ்ச்சி!

ராசி பலன்கள்

விருச்சிகம்: இயற்கையை மதிப் பவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், திடீர் யோகம் உண்டாகும். உங்களுக்குப் பிடித்த நகையை வாங்குவீர்கள். செவ்வாய் 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். 9-ல் சூரியன் நிற்பதால், பணப்பற்றாக்குறை ஏற்படலாம். புதன் சாதகமாக இருப்பதால், நிம்மதி உண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள். 10-ல் குரு நீடிப்பதால், உத்யோகத்தில் சிலர் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள்.

திடீர் திருப்பங்கள் நிறைந்த வேளையிது. 

அதிரடி முன்னேற்றம்!

ராசி பலன்கள்

தனுசு: தொலைநோக்குச் சிந்தனையால் வெற்றி பெறுபவர்களே! குருபகவான் சாதகமாக இருப்பதால், உங்கள் வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். 8-ல் செவ்வாய் மறைந்திருப்பதால், சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வரக்கூடும். 8-ல் சூரியன் நிற்பதால், வீட்டில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்படும். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், பணவரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி முன்னேற்றமும், லாபமும் உண்டு. பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தம் கிடைக்கும். உத்யோகத்தில் மரியாதை கூடும்.

ஆளுமைத் திறன் அதிகரிக்கும் தருணமிது.

எதிர்ப்புகளை சமாளிக்கும் வேளை!

ராசி பலன்கள்

மகரம்: எல்லோரும் நலமாக இருக்க வேண்டுமென நினைப்பவர்களே! 3-ம் வீட்டில் கேது நிற்பதால், தாயாரின் உடல் நிலை சீராகும். ராகு 9-ம் வீட்டில் நிற்பதால், பணப்புழக்கம் ஓரளவு இருக்கும். 8-ம் வீட்டில் சுக்கிரனும், புதனும் மறைந்திருப்பதால்... பணம் வந்தாலும், செலவுகளும் அதிகமாகும். குரு 8-ல் மறைந்திருப்பதால், பயணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது முதலீடுகள் செய்வது நல்லது. உத்யோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

எதிர்ப்புகளை சமாளிக்கும் வேளையிது.

நினைத்தது நிறைவேறும்!

ராசி பலன்கள்

கும்பம்: எதிரிகளும் பாராட்டும் செயல்திறன் கொண்டவர்களே! ராசிக்கு 7-ல் குரு அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டிருப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 2-ல் கேது நிற்பதால், உடல் உபாதை வந்து நீங்கும். 8-ல் ராகு தொடர்வதால், கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்து செல்லும். புதன் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த பணம் வரும். சூரியன் 6-ல் நிற்பதால், வாகனச் செலவு அதிகமாகும். வியாபாரத்தில் லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும்.

புகழ், கௌரவம் கூடும் நேரமிது.

உத்யோகத்தில் உஷார்!

ராசி பலன்கள்

மீனம்: எல்லோரையும் அன்பால் அரவணைப்பவர்களே! 5-ல் சூரியன் நிற்பதால், அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். சுக்கிரன் 6-ல் நிற்பதால், வீட்டு உபயோக சாதனங்கள் பழுதாகலாம். கேது ராசிக்குள் வந்தமர்வதால், உடல் உபாதை ஏற்பக்கூடும். 7-ல் ராகு நிற்பதால், வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குரு பலவீனமாக இருப்பதால், சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்தி பேசுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்களுக்குப் பிரச்னைகள் வரக்கூடும். 

சகிப்புத்தன்மையால் முன்னேறும் தருணமிது.

‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism