Published:Updated:

ராசிபலன்

ஆகஸ்ட் 18 முதல் 31 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

ஆகஸ்ட் 18 முதல் 31 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

Published:Updated:

மற்றவர்கள் நலனுக்காகப் பாடுபடுபவர்களே! 

ராசிபலன்

சூரியனும், சுக்ரனும் 5ல் நிற்பதால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பண வரவு அதிகரிக்கும். நாடாளுபவர்களின் தொடர்பு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. புதன் 22ம் தேதி முதல் 6ல் மறைவதால், மனைவி வழி உறவினர்களுடன் மோதல்கள் வரும். நண்பர்கள், உறவினர்களால் அலைச்சல், செலவுகள் வந்து நீங்கும். செவ்வாயும் சாதகமாக இருப்பதால், தைரியமாக எதையும் முடிப்பீர்கள். பணம் வரும். வீடு மாறுவீர்கள். புதிய  வீட்டு மனை வாங்குவீர்கள்.

சகோதர வகையில் நன்மை உண்டு. புது வேலை கிடைக்கும். குருபகவான் 5ம் வீட்டில் நிற்பதால், உங்களின் வசதி வாய்ப்புகளும், வாழ்க்கைத் தரமும் ஒருபடி உயரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். தள்ளி போன சுபகாரியங்கள் கூடி வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்பு களை ஒப்படைப்பார்.  

திட்டமிடுதல் மூலம் சாதிக்கும் காலம் இது.

கொள்கை, கோட்பாடுகளுடன் வாழ்பவர்களே!

ராசிபலன்

சூரியனும் ராசிநாதன் சுக்ரனும் வலுவாக நிற்பதால், எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். வி.ஐ.பி.கள் உதவுவார்கள். வீடு வாங்குவது, கட்டுவது சாதகமாகும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணர்வார்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் உடனே முடியும். பெற்றோரின் உடல் நலம் சீராகும். 22ம் தேதி முதல் புதன் சாதகமாக இருப்பதால், உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும்.

வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். செவ்வாய் வலுவாக இருப்பதால், வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். குருபகவான் 4ல் அமர்ந்திருப்பதால், திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை போராடி முடிக்க வேண்டி வரும்.

மற்றவர்களை நம்பி வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம். சந்தை நிலவரத்தை அறிந்துகொள்ளும் அறிவாற்றலைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் வேலை நிலைக்குமோ, நிலைக்காதோ என்ற ஒரு பயம் இருந்து கொண்டேயிருக்கும்.

அணுகுமுறையால் வெற்றி பெறும் நேரம் இது.

மலர்ந்த முகத்துடன், வசீகரப் பேச்சால் எல்லோரையும் கவர்பவர்களே!

ராசிபலன்

உங்கள் ராசிநாதன் புதன் 22ம் தேதி முதல் 4ல் அமர்வதால், திடீர் யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப் பார்கள். புது வேலை அமையும். பக்கு வமாகப் பேசி சாதிப்பீர்கள். சூரியனும், சுக்ரனும் 3ல் அமர்ந்திருப்பதால், முயற்சிகள் பலிதமாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள்.

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை கைகூடும். 2ல் செவ்வாய் அமர்ந்திருப்பதால், முன்கோபம் அதிகரிக்கும். கணவன்மனைவிக்குள் வீண் விவாதம் வந்து போகும். வழக்கில் அலட்சியம் வேண்டாம்.

குருபகவான் 3ம் வீட்டில் நிற்பதால், முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம்.  குடும்பத்தினர் உங்களின் குறைகளை எடுத்துச் சொன்னால், கோபப்படாமல் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவித்து பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் திறமை இருந்தும், கடினமாக உழைத்தும் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டேயிருப்பீர்கள்.

எதிர்பாராத நன்மைகள் சூழும் தருணம் இது.

தீர்க்கமான முடிவெடுத்து, நிதானமாகச் செயல்படுபவர்களே!

ராசிபலன்

உங்கள் ராசிக்குள்ளேயே செவ்வாய் நின்றிருப்பதால், சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவீர்கள். முன் கோபத்தால் சில நண்பர்களை இழப் பீர்கள். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். சுக்ரன் 2ல் நிற்பதால், உங்கள் செயலில் வேகம் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமா வார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்மனைவிக்குள் இருந்த ஈகோ விலகும். புது வேலை கிடைக்கும். சிலர் வேறு வேலைக்கு மாறுவீர்கள்.

பூர்வீகச் சொத்தை மாற்றியமைப் பீர்கள். தனாதிபதி சூரியன் ஆட்சி பெற்றிருப்பதால், தொட்டது துலங்கும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். கண், பல் மற்றும் முதுகு வலி குறையும். பேச்சிலே தெளிவு பிறக்கும். குருபகவான் 2ம் வீட்டில் அமர்வதால், எதிர்பார்த்த வகையில் பணம் வந்து எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால், வீடு களைகட்டும்.

முகம் மலரும். தோற்றப் பொலிவு கூடும். ராகு 3ல் வலுவாக அமர்ந் திருப்பதால், திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிற மொழி பேசுபவர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்பை அதிகாரிகள் புரிந்து கொள்வார்கள். வேலையில் ஆர்வம் பிறக்கும்.  

தன்னம்பிக்கையால் வெல்லும் வேளை இது.

கஷ்ட, நஷ்டங்களைக் கண்டு கலங்காதவர்களே!

ராசிபலன்

உங்கள் ராசிநாதன் சூரியன் ராசிக்குள் ஆட்சி பெற்றிருப்பதால், எதிலும் வெற்றி கிட்டும். நிர்வாகத் திறமை அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. அழகு, இளமை கூடும். தன்னம்பிக்கை, தைரியம் பிறக்கும். அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும்.

ராசிக்குள்ளேயே சுக்ரன் வலுவாக நிற்பதால், பரபரப்பாகச் செயல்பட்டு பல வேலைகளையும் முடிப்பீர்கள். எதிலும் ஆர்வம் பிறக்கும். 22ம் தேதி முதல் 2ம் வீட்டில் புதன் அமர்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். சோர்வு, களைப்பு நீங்கும். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். செவ்வாய் 12ல் மறைந்திருப்பதால், எதிலும் டென்ஷன், ஏமாற்றம், ஒருவித சலிப்பு, பகை, தூக்கமின்மை வந்து போகும். உடல் உஷ்ணம் அதிகமாகும்.

சகோதர வகையில் செலவுகள் வரும். குருபகவான் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்மகுருவாக இருப்பதால், ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். காய், கனி, கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் ஏற்றஇறக்கங்கள் இருக்கும். போட்டிகளைச் சமாளிக்க கடுமையாக உழைக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் வளைந்துக் கொடுத்து போவது நல்லது.

கடின உழைப்பால் சாதித்துக் காட்டும் நேரம் இது.

நெருக்கடியிலும், அடுத்தவர்களிடம் உதவி கேட்கத் தயங்குபவர்களே!

ராசிபலன்

ராசிநாதன் புதன் 22ம் தேதி முதல் சாதகமாக இருப்பதால், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். புதியவர்கள் நண்பர்களா வார்கள். உறவினர்கள், உடன்பிறந்த வர்கள் உங்களின் தியாக உணர்வைப் புரிந்துகொள்வார்கள். செவ்வாய் 11ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்பாராத பணவரவு உண்டு. தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும்.

கணவன்மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். பிள்ளைகள் உங்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வர். யோகாதிபதி சுக்ரன் வலுவிழந்திருப்பதால், திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும். விருந்தினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். சூரியனும் 12ல் நிற்பதால், தூக்கமின்மை, டென்ஷன், தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும்.  

குருபகவான் 12ம் வீட்டில் நிற்பதால், அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். கணவன்மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க கடையை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவீர்கள். உத்தியோ கத்தில் அலட்சியம் வேண்டாம். உங்களை சிலர் விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

வேலைச்சுமை அதிகரிக்கும் தருணம் இது.

தன் பத்து விரல்களையே சொத்தாக நினைப்பவர்களே!

ராசிபலன்

சூரியனும், சுக்ரனும் லாப வீட்டில் நிற்பதால், அரசாங்க அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். 22ம் தேதி முதல், புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். வி.ஐ.பி.கள் நண்பர்களாவார்கள். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், பெரிய பதவிகள் தேடி வரும்.

கம்பீரமாகப் பேசுவீர்கள். சகோதரிக்கு இருந்த பிரச்னை தீரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கமிஷன் வகைகளால் லாபம் வரும். ராசிக்கு 12ல் ராகு தொடர்வதால், பார்த்தும் பார்க்காமல் போனவர்கள் வலிய வந்து பேசுவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். குருபகவான் ராசிக்கு லாப வீடான 11ம் வீட்டில் தொடர்வதால், அரசாங்க அதிகாரிகள், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.

கணவன்மனைவிக்குள் அந்நியோன்னியம் அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். பிள்ளைகளை கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். பெண்களுக்கு, திருமணப் பேச்சு வார்த்தை கைகூடும். வியாபாரத்தில் புதிதாக முதலீடு செய்து போட்டியாளர்களை திக்குமுக்காட வைப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

கோபத்தை அடக்குவதால் மகிழ்ச்சி பொங்கும் காலம் இது.

மனதில் பட்டதை பளிச்சென்று சொல்பவர்களே!

22ம் தேதி முதல் புதன் சாதகமாக இருப்பதால், பழைய பிரச்னைகளுக்கு யதார்த்தமான

ராசிபலன்

முடிவுகள் எடுப்பீர்கள். மனைவி வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். செவ்வாய் 9ம் வீட்டில் நிற்பதால், தந்தையுடன் கருத்து மோதல்கள் வரும். திடீர்ப் பயணங்க ளால் அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் பிரபல யோகாதிபதி சூரியன் ஆட்சி பெற்று பலமாக நிற்பதால், நிர்வாகத் திறமை கூடும்.

புது வேலை அமையும். தந்தை வழிச் சொத்துக்கள் வந்து சேரும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். பிள்ளைகளால் இருந்த பிரச்னைகள் நீங்கும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். வழக்கால் இருந்த பயம் விலகும். போட்டித் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். சுக்ரன் 10ல் நிற்பதால், மனைவி வழியில் அலைச்சல் இருக்கும். தடைப்பட்டிருந்த திருமணம் கைகூடும்.

குருபகவான் 10ம் வீட்டில் தொடர்ந்திருப்பதால், ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளைப் பார்க்கவேண்டி வரும். சில சமயங்களில் எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்க முடியாமல், மன இறுக்கத்துக்கு ஆளாவீர்கள். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். வியாபாரத்தில் அனுபவ மிக்க வேலையாட்கள், திடிரென்று பணியை விட்டு விலகுவார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும்.

சமயோசித புத்தியால் சாதிக்கும் நேரம் இது.

கறைபடியாத, களங்கமில்லாத மனம் கொண்டவர்களே!

ராசிபலன்

ராசிநாதன் குரு 9ல் வலுவாக அமர்ந்திருப்பதால், ஓரளவு நன்மை உண்டு. அரசு காரியங்கள் விரைந்து முடியும். வேற்று மொழி பேசுபவர்கள் உதவுவார்கள். வரும் 22ம் தேதி முதல் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், கௌரவப் பதவியில் அமர்வீர்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். செவ்வாய் 8ல் மறைந்திருப்பதால் விபத்து, நம்பிக்கை யின்மை, முன்கோபம் வந்து செல்லும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும்.

ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சொத்தை இழக்க நேரிடும். சுக்ரன் 9ம் வீட்டில் நிற்பதால், உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பண வரவு திருப்தி தரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். மகளின் கல்யாண முயற்சிகள் வெற்றியடையும். தங்கைக்குத் திருமணம் முடியும்.

சூரியன் 9ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், சவாலான வேலைக ளையும் உடனே முடிப்பீர்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் ஆகும். வங்கிக் கடன் கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வாய்ப்புகள் வரும்.  உங்களின் புது முயற்சிகளுக்கு பெற்றோர் உதவுவர். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும், சலுகைகளும் கிடைக்கும்.

வெற்றிக் கனியைப் பறிக்கும் வேளை இது.  

சச்சரவுகளுடன் வருபவர்களை சமாதானப்படுத்துபவர்களே!

ராசிபலன்

புதன் 22ம் தேதி முதல் 9ல் அமர்வதால், மனைவி வழியில் ஆதாயம் உண்டு. அவரின் உடல் நலம் சீராகும். உறவினர்கள் மதிப்பார்கள். 7ல் செவ்வாய் நிற்பதால், மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் அயல்நாட்டில் அமையும். 8ல் சூரியன் மறைந்திருப்பதால், உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள்.

சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறியும் வாய்ப்பு வரும். 8ல் சுக்ரன் மறைந்தாலும், பணப்புழக்கம் உண்டு. ஆனாலும், வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் கடன் வாங்க வேண்டி வரும். உறவினர் வீட்டுக் கல்யாணத்தை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டா ரத்தில் மரியாதை கூடும். ராசிநாதன் சனி பகவான் 10ல் தொடர்வதால், பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர் கள். கடன் பிரச்னை முடிவுக்கு வரும்.

குருபகவான் 8ம் வீட்டில் மறைவதால், கணவன்மனைவிக்குள் அந்நியோன்னியம் அதிகரிக்கும். என்றாலும், வீண் சந்தேகத்தால் அவ்வப்போது விவாதங்கள் வரும். சில முக்கிய வேலைகளை உங்கள் மேற்பார்வையில் முடிப்பது நல்லது. அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் யாருக்கும் அதிக முன் பணம் தர வேண்டாம். பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட அதிகாரி, இப்போது உங்களை ஆதரிப்பார்.

முற்போக்குச் சிந்தனையால் முன்னேறும் தருணம் இது.

தளராத தன்னம்பிக்கை உடையவர்களே!

ராசிபலன்

ராசிநாதன் சனிபகவான் வக்ரமாகி 9ல் நிற்பதால், உங்கள் மனதில் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை துளிர்விடும். வசதியான வீட்டுக்கு  மாறுவீர்கள். சூரியன் வலுவாக இருப்பதால், எதிர்ப்புகள் அடங்கும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். ஒரு சொத்தைக் காப்பாற்ற, மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும்.  

குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். அரசால் அனுகூலம் உண்டு. சுக்ரன் 7ல் நிற்பதால், மனைவிக்கு இருந்த முதுகு வலி, மூட்டு வலி, சோர்வு நீங்கும். வீடு மாறுவீர்கள். திருமணம் கூடி வரும். குருபகவான் 7ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை எல்லாம் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

நீண்ட நாட்களாக குடும்பத்தில் இருந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வெற்றியாளர்களின் நட்பு கிடைக்கும். வீட்டு மனை வாங்குவீர்கள். பெற்றோரை அனுசரித்துப் போவது நல்லது. வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. பெரிய வாய்ப்புகளும் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் மேலதிகாரியை வியக்க வைப்பீர்கள்.  உதாசீனப் படுத்திய அதிகாரிகளே உங்களை அழைத்துப் பேசி, உயர் பதவிக்கு வாய்ப்பு தருவார்கள்.

தன்னடக்கத்தால் தடைகளை தாண்டும் நேரம் இது.

காசு பணத்துக்காக விலைபோகாதவர்களே!

ராசிபலன்

புதன் 22ந் தேதி முதல் 7ல் நுழைவதால், மனஇறுக்கம், கோபம், ஏமாற்றம் குறையும். வீண் விவாதங்களை நீங்களே தவிர்ப்பீர்கள். வெளிவட்டாரத்தில் சிலர் உங்களை நம்பிப் பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். 5ல் செவ்வாய் நிற்பதால், வீண் டென்ஷன், இரத்த அழுத்தம் வந்து செல்லும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும்.

6ல் சூரியன் வலுவாக அமர்ந்திருப்பதால், செல்வாக்கு கூடும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். திடீர் பண வரவு உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். 6ல் சுக்ரன் மறைந்திருப்பதால், மனைவி யுடன் மனக் கசப்பு, டென்ஷன், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். குருபகவான் 6ல் மறைந்திருப்பதால், பணம் எவ்வளவு வந்தாலும், பற்றாக்குறையாகி வெளியில் கடன் வாங்க வேண்டி வரும்.

கணவன்மனைவிக்குள் ஒளிவு மறைவில்லாமல் பழகுவது நல்லது. பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக்கொண்டே போகும். குடும்பத்தில் மாறி மாறி மருத்துவச் செலவுகள் வரும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மூத்த அதிகாரிகளின் பாராட்டுதலால் ஆறுதல் கிடைக்கும்.

அமைதி காக்க வேண்டிய வேளை இது.