Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்

ராசி பலன்கள்

ராசி பலன்கள்

Published:Updated:

வருமானம் அதிகரிக்கும்!

ராசி பலன்கள்

மேஷம்: போராட்ட குணம் கொண்டவர் களே! உங்களின் பூர்வபுண்யாதிபதி சூரியன் 5-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். புதன் 6-ல் மறைந்திருப்பதால், பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். குருபகவான் சாதகமாக இருப்பதால், வியாபாரத்தில் புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையிலிருந்து விடுபடுவீர்கள். சம்பளம்
உயரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இங்கிதமான பேச்சால் சாதிக்கும் காலமிது.

உடன்பிறந்தோரால் உதவி! 

ராசி பலன்கள்

ரிஷபம்: ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு அஞ்சாதவர்களே! 3-ல் செவ்வாயும், ராசிநாதன் சுக்கிரனும் சாதகமாக இருப்ப தால், உடன்பிறந்தோர் உதவுவார்கள். பூர்வபுண்யாதிபதி புதன் 5-ல் நிற்பதால், பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பொறுப்பாக இருப்பார்கள். 4-ல் சூரியன் நிற்பதால், உடல்நலக் கோளாறு ஏற்படலாம். குருபகவான் 4-ல் நிற்பதால், தூக்கமின்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம்.

நினைத்ததை நடத்திக் காட்டும் நேரமிது.

பேச்சில் நிதானம் தேவை!

ராசி பலன்கள்

மிதுனம்: சுற்றத்தாரை அனுசரித்து வாழக்கூடியவர்களே! ராசிநாதன் புதன் 4-ல் ஆட்சிபெற்று அமர்ந்ததால், குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பிள்ளைகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். சுக்கிரன் 2-ல் அமர்வதால், விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். 2-ல் செவ்வாயும் நிற்பதால், பேச்சில் நிதானம் அவசியம். 10-ல் கேது நிற்பதால் சில காரியங்களைப் போராடி முடிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் செல்வாக்கு உயரும்.

முன்னேற்றம் தரும் வேளையிது.

மனப்போராட்டங்கள் ஓயும்!

ராசி பலன்கள்

கடகம்: வேகமாகவும், விவேகமாகவும் செயல்படுபவர்களே! செவ்வாய் ராசிக்குள் நிற்பதால்... முன்கோபம், உடல் உபாதை வந்து செல்லும். புதன் சாதகமாக இருப்பதால், சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். உறவினர் மதிப்பார்கள். குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், மனப்போராட்டங்கள் ஓயும். எதிர்பாராத பணவரவு உண்டு. சொந்தபந்தங்கள் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை உயரதிகாரி பாராட்டுவார்.

அனுபவ அறிவால் வெற்றி பெறும் காலமிது.

பணபலம் உயரும்!

ராசி பலன்கள்

சிம்மம்: மனதில் பட்டதை `பளிச்’சென்று பேசும் குணமுடையவர்களே! 12-ல் செவ்வாய் இருப்பதால்... மன உளைச்சல், உறவினருடன் மனத்தாங்கல் ஏற்படலாம். ராசிநாதன் சூரியன் ராசிக்குள் ஆட்சி பெற்று அமர்வதால், பணபலம் உயரும். சுக்கிரன் 12-ல் மறைந்திருப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். குரு ராசிக்குள்ளேயே நிற்பதால், யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தை முன்னேற்ற சில முயற்சிகள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார்.

அடுத்தடுத்த செலவுகளால் திணறும் தருணமிது.

தன்னம்பிக்கை உச்சத்தில்!

ராசி பலன்கள்

கன்னி: உண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். செவ்வாய் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். குரு 12-ல் மறைந்திருப்பதால்...  ஏமாற்றம், இனம்தெரியாத கவலைகள் வந்து செல்லும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளை விமர்சனம் செய்யாதீர்கள்.

புதிய நட்பால் நிம்மதி பெறும் நேரமிது. 

நன்மைகள் குவியும் நேரம்!

ராசி பலன்கள்

துலாம்: பாரம்பர்யத்தை மதித்து செயல்படக்கூடியவர்களே! ராசிநாதன் சுக்கிரன் 10-ல் அமர்ந்திருப்பதால்... அழகு, இளமை கூடும். வாழ்க்கைத் துணைவர் பாசமழை பொழிவார். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். குருபகவான் வலுவாக லாப வீட்டில் அமர்ந்திருப்பதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

தடைகள் நீங்கும் தருணமிது.

நீண்ட நாள் பிரச்னைகள் தீரும்!

ராசி பலன்கள்

விருச்சிகம்: எல்லோரிடமும் சமமாக பழகுபவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால்... சோர்வு, சலிப்பு நீங்கும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். செவ்வாய் 9-ல் நிற்பதால், வழக்குகளில் அவசரம் வேண்டாம். சூரியன் 10-ல் நுழைந்திருப்பதால், நீண்ட நாள் பிரச்னைகள் முடிவுக்கு வரும். குரு 10-ல் தொடர்வதால், யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் லாபம் வரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

செல்வாக்கு கூடும் காலமிது.

உறவினர்களால் ஆதாயம்!

ராசி பலன்கள்

தனுசு: யாருக்கும் அஞ்சாமல் அதிரடி முடிவெடுப்பவர்களே! புதன் வலுவாக இருப்பதால், வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வீடு வாங்குவது, விற்பது சாதகமாக அமையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. செவ்வாய் 8-ல் மறைந்திருப்பதால், சமையலறையில் நெருப்பு, மின்சாரத்தைக் கவனமாக கையாளுங்கள். குருபகவான் வலுவாக இருப்பதால், மனத்தெளிவு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.

சவால்களில் வெற்றி பெறும் வேளையிது.

எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்!

ராசி பலன்கள்

மகரம்: புதுமையை விரும்புபவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், நீங்கள் தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். சூரியன் 8-ல் மறைந்திருப்பதால், அரசு காரியங்கள் விரைந்து முடியும். தினந்தோறும் எதிர்பார்த்த தொகை உங்கள் கைக்கு வரும். கேது பகவான் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், மனவலிமை அதிகரிக்கும். புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் தேடி வரும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் பிரச்னைகள் ஏற்படலாம். உத்யோகத்தில் உயரதிகாரிகளுடன் விவாதங்கள் வரும்.

சகிப்புத் தன்மையால் முன்னேறும் நேரமிது.

திறமை வெளிப்படும்!

ராசி பலன்கள்

கும்பம்: முயற்சிகளிலிருந்து பின் வாங்காதவர்களே! சுக்கிரன் 6-ல் மறைவதால்... உடல் உபாதை, வாகனப் பராமரிப்புச் செலவு வந்து செல்லும். செவ்வாய் 6-ல் நிற்பதால், வாழ்க்கைத் துணைவர் வெளியில் இருக்கும் கோபத்தை வீட்டில் காட்டக்கூடும். நீங்கள் அனுசரித்துச் செல்லுங்கள். 7- ல் சூரியன் நிற்பதால், உடல் உஷ்ணம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக செல்ல நினைத்திருந்த புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் ஆதரவு கூடும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும்.

எதிர்பாராத திருப்பங்கள் சூழும் தருணமிது.

மனவருத்தம் மறையும்!

ராசி பலன்கள்

மீனம்: எளிமையாகவே வாழ ஆசைப்படுபவர்களே! சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், வீட்டைப் புதுப்பிப்பீர்கள்.புதன் 7-ல் அமர்ந்திருப்பதால், உறவினர் களுடன் இருந்த மனவருத்தங்கள் விலகும். சுக்கிரன் 5-ல் சாதகமாக இருப்பதால், குழந்தை இல்லாதவர்களுக்கு, மழலை பாக்கியம் கிடைக்கும். செவ்வாயும் 5-ல் நிற்பதால், பிள்ளைகளின் உரிமையில் தலையிட வேண்டாம். சனி 8-ல் நிற்பதால், நன்றி மறந்தவர்களை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் மதிப்பார்கள்.

எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய காலமிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism