Published:Updated:

ஆங்கில புத்தாண்டு பொதுப் பலன்கள்

ஆங்கில புத்தாண்டு பொதுப் பலன்கள்

ஆங்கில புத்தாண்டு பொதுப் பலன்கள்

ஆங்கில புத்தாண்டு பொதுப் பலன்கள்

Published:Updated:

- 'ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

விசாக நட்சத்திரம், துவாதசி திதி, சூலம் நாமயோகம், தைத்துலம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் கூடிய சித்தயோக நன்னாளில், 2011-ஆம் ஆண்டு பிறக்கிறது.

ஆங்கில புத்தாண்டு பொதுப் பலன்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பங்குச்சந்தை சூடுபிடிக்கும்!

எண் ஜோதிடப்படி ராகு, சுக்கிரனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், வாகன உற்பத்தி அதிகரிக்கும். கம்ப்யூட்டர், கார், டி.வி., ஃபிரிஜ், ஏ.சி, சமையலறை சாதனங்கள் மற்றும் காய்கறி விலை குறையும்.

நகரத்தை ஒட்டியிருக்கும் பகுதிகள் நவீனமாகும். விளை நிலங்கள் வீட்டு மனைகளாவதைத் தடுக்கச் சட்டம் வரும். கைம்பெண்களும் விவாகரத்து வாங்கியவர்களும் சமூகத்தில் சாதித்துக் காட்டுவார்கள். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, நிலக்கரி, இரும்பு போன்ற கனிம- கரிம பொருட்களின் விலை உயரும். புதிய கட்சிகளும் புதிய கூட்டணிகளும் உதயமாகும். சில கட்சிகள் காணாமல் போகும். பங்குச் சந்தை வருடத்தின் மத்தியப் பகுதியிலிருந்து சூடுபிடிக்கும். தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயரும்.

குரு பகவான் என்ன செய்யப்போகிறார்?

குரு பகவான் 7.5.2011 வரை மீன ராசியிலும், 8.5.2011 முதல் வருடம் முடிய மேஷத்திலும் அமர்வதால் கல்வித் துறை பாதிக்கும். அரசாங்கத்துக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இடையே பனிப்போர் அதிகரிக்கும்.

இந்த புத்தாண்டு முழுக்க சுக்கிரன் வக்கிரம் இல்லாமல் இருப்பதால், மழை அதிகம் இருக்கும்; மண் வளம் பெருகும். கலைத் துறையினர் சாதிப்பர். தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் கிடைக்கும். மொசைக், டைல்ஸ், கிரானைட் விலை குறையும்.

ஆங்கில புத்தாண்டு பொதுப் பலன்கள்

தொலைத்தொடர்பு துறை என்னவாகும்?

புதன் அவ்வப்போது வக்கிரமாவதால், தொலைத் தொடர்பு துறை நிறுவனங்கள் பாதிப்படையும். ஆனால், மொபைல் போன் சேவையில் முன்னேற்றம் ஏற்படும்.

வானில் புதிய நட்சத்திரங்களும், அதிக ஆற்றல் வாய்ந்த நட்சத்திர பால்வெளி மண்டலங்களும் கண்டறியப்படும். வருட மத்தியிலிருந்து அமெரிக்காவின் கை ஓங்கும். ஆடை உற்பத்தி அதிகரிக்கும். இரும்புக் கம்பி விலை உயரும்.

6.9.2011 முதல் 16.12.2011 முடிய குரு வக்கிரம். இந்தக் கால கட்டத்தில் ஹவாலா மோசடி, கள்ள நோட்டுப் புழக்கம், அரசியல் தலைவர்கள் இழப்பு மற்றும் நாட்டுப் பாதுகாப்புக்குச் சவாலான சம்பவங்கள் நிகழும்.

##~##
பதவியில் இருப்போரின் பலம் குறையுமா?

22.01.2011 முதல் 7.06.2011 வரை சனி வக்கிரம். இந்தக் கால கட்டத்தில் விமான விபத்துகள், சுரங்க விபத்துகள், சாலை விபத்துகள் அதிகரிக்கும். மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் தீய சக்திகள் தலைதூக்கும். நீதிமன்ற தீர்ப்புகள், அரசியல்வாதிகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும்படி அமையும். குழந்தைத் தொழிலாளர்கள் குறைவர். கோயில் சொத்துகள் நூதன முறையில் திருடு போகும். வன விலங்குகளைப் பாதுகாக்க புதிய சட்டங்கள் வரும். இளைஞர்கள், அரசு வேலை மற்றும் ஆராய்ச்சிக் கல்வியில் ஆர்வம் காட்டுவர்.    

முருகப்பெருமானின் சம்ஹார நட்சத்திரமான விசாகத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், நாட்டில் பரபரப்பான சம்பவங்கள் நிகழ்ந்தேறும். பட்டணத்தில் பதவியில் இருப்பவர்களைவிட பட்டிதொட்டிகளில் இருப்பவர்களது பலம் அதிகரிக்கும். பிரபலங்களின் திரைமறைவு வாழ்க்கை வெளிச்சத்துக்கு வரும்.

ஆங்கில புத்தாண்டு பொதுப் பலன்கள்

மனை விலை உயரும்... கட்டட விலை குறையும்!

கால புருஷனின் 8-வது ராசியான விருச்சிகத்தில் புத்தாண்டு பிறப்பதால், சாலை விபத்துகள் அதிகரிக்கும். ரத்த அணுக்களைப் பாதிக்கும் புதிய கிருமிகள் தோன்றும். இயற்கை வளங்கள் நலிவுறும். இயற்கைச் சீற்றங்களால் விவசாயம் பாதிப்படையும். கடல் வாழ் உயிரினங்களும் பாதிப்புகளைச் சந்திக்கும்.

செவ்வாயுடன் ராகு நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால் சிவில், சைபர் கிரைம், ஹவாலா தொடர்பான வழக்குகள் அதிகரிக்கும். உணவுப் பயிர்கள், வித்தியாசமான கிருமிகளால் பாதிப்படையும். பூமி விலை உயரும்; கட்டட விலை குறையும். இயற்கையைப் பாதுகாக்க சுற்றுச் சூழல் நிபுணர்கள் ஆர்வம் காட்டுவர். நீர்நிலைகளைக் காக்க அதிரடி ஆணைகள் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும்; ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் அகற்றப்படும்.

ஆங்கில புத்தாண்டு பொதுப் பலன்கள்

அண்டை நாடு சீனாவால் ஆபத்தா?

ராணுவத்தில் நவீன ஏவுகணைகள் சேர்க்கப்படும். இந்தியப் பாதுகாப்பு ரகசியங்கள் வெளியில் கசியக்கூடும். ராணுவத்தில் பெரிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மாற்றப்படுவார்கள். இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், தீவிரவாதிகளைக் கண்காணிக்கவும் அதிநவீன செயற்கைக் கோள்கள் ஏவப்படும். நீரிலும், வான்வெளியிலும் தாக்குதல் நிகழ்த்தும் நவீன ரக போர்த் தளவாடங்களை இந்தியா தயாரிக்கும். சீனாவுடன் ஒருபக்கம் நட்பும், மறுபக்கம் பகையும் உருவாகும். இந்தியச் சந்தையில் சீனப் பொருட்களின் ஆதிக்கம் அதிகரிக்கும்.

ஆங்கில புத்தாண்டு பொதுப் பலன்கள்

ஆட்சி மாற்றம் நிகழுமா?

வருடப்பிறப்பின்போது சனி பகவான் வலுத்திருப்பதால், அயல்நாட்டு நிறுவனங்களின் முதலீடு அதிகரிக்கும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். வேலையில்லாத் திண்டாட்டம் குறையும். தொழிலாளர்களின் தினக்கூலி உயரும். சாஃப்ட்வேர் துறை சூடுபிடிக்கும். வங்கிகளின் நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்; பிரபலங்களிடம் இருந்து வராத கடன்களும் வசூலாகும். விளையாட்டுத் துறையில் இந்தியா சாதிக்கும். கிரிக்கெட்டில் இந்தியா கோப்பை வெல்லும்.

புதிய நெல் ரகங்கள் மற்றும் உணவு தானியங்களை விஞ்ஞானிகள் கண்டறிவார்கள். கல்வித் துறையில் மாணவர்களின் பாடச்சுமை குறையும். அரசுப் பொதுத் தேர்வுக்கான முக்கியத்துவம் குறையும். சிறுபான்மை மக்கள் கல்வியில் முன்னேறுவர். மேலும் சில சலுகைகள் பெறுவர்.

ஜனவரி 15 முதல் மார்ச் 14 வரை; மார்ச் 24 முதல் ஏப்ரல் 17 வரை; மே 16 முதல் ஜூன் 15 வரை; ஜூலை 24 முதல் செப்டம்பர் 10 வரை; செப்டம்பர் 18 முதல் நவம்பர் 3 வரை; நவம்பர் 17 முதல் டிசம்பர் 12 வரை... இந்தக் கால கட்டங்களில் நில நடுக்கம், புயல், ஆட்சி மாற்றங்கள், விமான விபத்துகள் ஏற்படலாம்.

ஆங்கில புத்தாண்டு பொதுப் பலன்கள்

மருத்துவத் துறையில் மகத்தான சாதனை!

மருத்துவத் துறையில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த நவீன மருந்துகள் நடைமுறைக்கு வரும். எய்ட்ஸ் மற்றும் புற்றுநோயைக் குணப்படுத்துவது குறித்த புதிய ஆய்வுகள் வெற்றியடையும். குறைப் பிரசவங்கள், விநோத உடலமைப்புடனான குழந்தைகள் பிறப்பு அதிகரிக்கும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, மக்களுக்குத் தைரியத்தையும், பகுத்தறியும் திறனையும் அதிகரிக்கச் செய்வதுடன், இன்பங்களைத் துய்க்கும் நாட்டத்தையும் தருவதாக அமையும்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism