தன்னம்பிக்கை
Published:Updated:

ராசி பலன்கள்

செப்டம்பர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை

சிக்கல்கள் தீரும் நேரம்!

ராசி பலன்கள்

மேஷம்: எதையும் ஆழமாக யோசிப்பவர்களே! சூரியன் 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். புதன் சாதகமாக இருப்பதால், நீங்கள் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். செப்டம்பர் 29-ம் தேதி முதல் சுக்கிரன் 5-ல் சாதகமாக இருப்பதால், சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். விலையுயர்ந்த ஆடைகள் வாங்குவீர்கள். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களுக்குப் பதவி உயர்வு கிட்டும். 

பழைய சிக்கல்கள் தீரும் காலமிது.

புதிய நட்பால் உற்சாகம்!

ராசி பலன்கள்

ரிஷபம்: அநாவசியமாக பேசுவதை விரும்பாதவர்களே! கேது லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், பணவரவு அதிகரிக்கும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால், கொடுத்த கடன் திரும்பி வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். 7-ல் சனி தொடர்வதால், தயக்கம், தடுமாற்றம் வந்து செல்லும். ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால்... வீடு, வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.

மூளைக்கு வேலை தர வேண்டிய வேளையிது.

உயர்பதவியில் அமரும் வேளை!

ராசி பலன்கள்

மிதுனம்: பரந்த மனசுக்கு சொந்தக்காரர்களே! ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால், பிள்ளைகளால் நிம்மதி கிடைக்கும். செவ்வாய் 3-ம் வீட்டிலேயே நீடிப்பதால், தைரியம் கூடும். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள். உறவினர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். சூரியன் 4-ல் நிற்பதால், அரசாங்க வேலைகள் வேகமாக முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு, லாபத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் நீங்கள் உயர்பதவியில் அமர்வீர்கள்.

வி.ஐ.பி-க்களால் பாராட்டப்படும் நேரமிது.

உத்வேகம் ஊற்றெடுக்கும்!

ராசி பலன்கள்

கடகம்: எதிலும் உடனடித் தீர்வை விரும்புபவர்களே! சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், மனோபலம் அதிகரிக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். செப்டம்பர் 28-ம் தேதி வரை சுக்கிரன் ராசிக்குள் தொடர்வதால், சோர்வு நீங்கி, சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குருபகவான் சாதகமாக இருப்பதால், சொந்தபந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர்கள்.  உத்யோகத்தில் உங்களின் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும்.

மனோபலத்தால் சாதிக்கும் தருணமிது.

குடும்பத்தில் குதூகலம்!

ராசி பலன்கள்

சிம்மம்: தளராத தன்னம் பிக்கையாளர்களே! ராசிநாதன் சூரியன் 2-ல் தொடர்வதால், பேச்சால் பிரச்னைகள் வந்து போகும். ஜென்ம குரு தொடர்வதால், உடல் நலத்தில் அக்கறை தேவை. புதன் சாதகமாக இருப்பதால், கடின உழைப்பால் வெற்றி பெறுவீர்கள். 28-ம் தேதி வரை சுக்கிரன் 12-ல் மறைந் திருப்பதால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். 4-ல் சனி நிற்பதால், எதிர்காலம் பற்றிய கவலைகள் ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மதிப்பார்கள்.

சமயோஜித புத்தியால் வெற்றி பெறும் வேளையிது.

காரிய தாமதம் விலகும்!

ராசி பலன்கள்

கன்னி: தர்மத்துக்கு தலை வணங்குபவர்களே! செவ்வாய் 12-ல் மறைந்திருப்பதால்... வீண் அலைச்சல், தூக்கமின்மை, கவலைகள் வந்து செல்லும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், புது டிசைனில் நகை வாங்கு வீர்கள். வீடு, நிலம் வாங்குவது, விற்பது சுமுகமாக முடியும். சூரியன் ராசிக்குள்ளேயே நிற்பதால், உடல்நலக் கோளாறு வந்து விலகும். ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால், தாமதமான காரியங்கள் உடனே நிறைவேறும். உத்யோகத் தில் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள்.

கடின உழைப்பால் இலக்கை எட்டும் காலமிது.

பராட்டுகளால் மகிழ்ச்சி!

ராசி பலன்கள்

துலாம்: எப்போதும் எளிமையை விரும்புபவர்களே! சூரியன் 12-ல் மறைந்திருப்பதால்... மன இறுக்கம் வந்து நீங்கும். 11-ல் குரு பகவான் வலுவாக நிற்பதால், கடன் வாங்கிய வர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள். ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். செவ்வாயும் புதனும் சாதகமாக இருப்பதால், திடீர் பணவரவு உண்டு. வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளின் பாராட்டால் மகிழ்ச்சியடைவீர்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறும் நேரமிது.

முதல் மரியாதை கிடைக்கும்!

ராசி பலன்கள்

விருச்சிகம்: அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களே! சூரியன் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், சுப நிகழ்ச்சிகளில் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். உறவினர், தோழிகள் மத்தியில் செல்வாக்கு உயரும். ஜென்மச் சனியால் உடல் உபாதை வந்து போகும். ராசிநாதன் செவ்வாய் 10-ல் தொடர்வதால், குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். வியாபாரத்தில், கமிஷன் மூலம் பணம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்.

முற்போக்குச் சிந்தனையால் சாதிக்கும் தருணமிது.  

ஆடை, ஆபரணம் சேரும்!

ராசி பலன்கள்

தனுசு: அழுத்தமான கொள்கைப் பிடிப்புள்ளவர்களே! சூரியன் 10-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், புது வேலை, பொறுப்புகள் தேடி வரும். வாழ்க்கைத் துணைவர் உதவிகரமாக இருப்பார். செப்டம்பர் 28-ம் தேதி வரை 8-ல் சுக்கிரன் மறைந்திருப்பதால்... ஆடை, ஆபரணம் சேரும். உடன்பிறந்தவர்கள் வீடு தேடி வருவார்கள். ராசிநாதன் குரு வலுவாக நிற்பதால், கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும்.

மரியாதை கூடும் வேளையிது.

மனப்போராட்டம் நீங்கும்!

ராசி பலன்கள்

மகரம்: `வளைந்துகொடுத்தால் வானம் போல் நிமிரலாம்’ என்பதை உணர்ந்தவர்களே! ராசிநாதன் சனிபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், வீட்டை அழகுபடுத்துவீர்கள். உறவினர்கள் உங்களின் சகிப்புத்தன்மையைப் பாராட்டுவார்கள். செப்டம்பர் 28-ம் தேதி வரை சுக்கிரன் 7-ல் அமர்ந்திருப்பதால், மனப்போராட்டங்கள் நீங்கும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்்கள். உத்யோகத்தில் உங்களுக்கு வேலைச்சுமையுடன் செல்வாக்கும் உயரும்.

அச்சம் விலகி, அதிகாரம் பெருகும் காலமிது.

வீடு வாங்கும் ஆசை நிறைவேறும்!

ராசி பலன்கள்

கும்பம்: காலத்துக்கு ஏற்ப கோலத்தை மாற்றிக்கொள்பவர்களே! குரு பகவான் 7-ல் நிற்பதால், சுப நிகழ்ச்சியால்  வீடு கலகலப்பாக இருக்கும். சூரியன் 8-ல் மறைந்திருப்பதால், வீண் டென்ஷன், விரயம் வந்து செல்லும். ராசிநாதன் சனிபகவான் 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். புதன் 7-ல் நிற்பதால், மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

புது அணுகுமுறையால் முன்னேறும் தருணமிது.

பொறுமை காக்க வேண்டிய நேரம்!

ராசி பலன்கள்

மீனம்: காத்திருந்து காய் நகர்த்து வதில் வல்லவர்களே! ராசிநாதன் குரு 6-ல் மறைந்திருப்பதால், கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். உங்களை யாரும் மதிக்கவில்லை என்ற எண்ணம் சில நேரங்களில் வந்து போகும்.  செப்டம்பர் 28-ம் தேதி வரை சுக்கிரன் 5-ல் சாதகமாக இருப்பதால், விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். 7-ல் சூரியன், ராகுவுடன் நிற்பதால், வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் முக்கியமான கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.

பொறுமை காக்க வேண்டிய நேரமிது.

`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்