Published:Updated:

ராசிபலன்

செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 12 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 12 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

Published:Updated:

மற்றவர்களுக்குக் கலங்கரை விளக்காகத் திகழ்பவர்களே! 

ராசிபலன்

5ம் தேதி முதல் புதன் 6ல் மறைவதால், பணத்தட்டுப்பாடு, நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் மனக்கசப்புகள் வரக்கூடும். பயணங்கள் அலைச்சல் தரும். ஆனால் சுக்ரன் 5ம் வீட்டில் நிற்பதால், கணவன்மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் இருந்த அதிருப்தி விலகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால், காரியத் தடை, முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழத்தல், வீண் விரயங்கள், திடீர் பயணங் களால் சோர்வு, களைப்பு வந்து செல்லும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். சூரியன் 6ல் வலுவாக அமர்ந்திருப்பதால், தாயாரின் உடல் நலம் சீராகும். புது வேலை கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த நவீன விளம்பர யுக்தி களைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கலைத்துறையினர்களே! புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

புதிய பாதையில் பயணிக்கும் தருணம் இது.

சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவர்களே!

ராசிபலன்

ராசிநாதன் சுக்ரன் சாதகமாக இருப்பதால், உங்கள் ரசனை மாறும். வி.ஐ.பி.களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். பழுதான வாகனத்தை சரி செய்வீர்கள். சிலர் வீடு மாற வேண்டுமென நினைப்பீர்கள். 5ம் தேதி முதல் புதன் 5ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், தூரத்து சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்.

சூரியன் 5ம் வீட்டில் நிற்பதால், முன்கோபம், வாக்குவாதங்கள் வரக்கூடும். பிள்ளைகளால் அலைச்சல், டென்ஷன் இருக்கும். அவர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வேலையாட்கள் உங்களைப் புரிந்துகொண்டு உதவுவார்கள். உத்தியோகத்தில் சவாலான காரியங்களை எடுத்து சாதித்துக் காட்டுவீர்கள். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவீர்கள்.

மனம் தளராது போராடவேண்டிய வேளை இது.

எப்போதும் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்பவர்களே!  

ராசிபலன்

ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். வாகன வசதி பெருகும். 10ல் கேது நிற்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால், வர வேண்டிய பணம் கைக்கு வரும்.

உடன் பழகுபவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சனிபகவான் 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், மகிழ்ச்சி தங்கும். ஷேர் மூலம் ஆதாயம் உண்டு. வேற்றுமொழி பேசுபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். கலைத்துறையினர்களே! கலைநயமிகுந்த உங்களின் படைப்புகள் பட்டிதொட்டியெங்கும் பேசப்படும். 

பொறுத்திருந்து செயல்படவேண்டிய தருணம் இது.

சிந்தனைத்திறனும், செயல்திறனும் கொண்டவர்களே!

ராசிபலன்

தனஸ்தானத்தில் குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கல்வியாளர்கள், அறிஞர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். ராகு 3ல் தொடர்வதால் தைரியம் கூடும். வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைக்கும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், பழைய நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள். பூர்வீக சொத்தில் சீர்திருத்தம் செய்வீர்கள்.

உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். வெளியூர்ப் பயணங்களால் பயனடைவீர்கள். சூரியன் 3ம் வீட்டில் நிற்பதால், அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். பேச்சில் கம்பீரம் பிறக்கும்.

அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கலைத்துறையினர்களே! வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்பு வரும்.

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வேளை இது.

பிறந்த மண்ணையும் பேசும் மொழியையும் நேசிப்பவர்களே!

ராசிபலன்

ராசிநாதன் சூரியன் 2ல் நிற்பதால், பேச்சில் கடுமை காட்டாதீர்கள். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். திடீர் பணவரவு உண்டு. உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும்.

சனி 4ல் நிற்பதால், தாயாருக்கு நெஞ்சு வலி, உங்களுக்கும் கை, கால் வலி, அசதி வந்து போகும். ஜென்ம குரு தொடர்வதால், எதிர்ப்புகள், எதிர்மறை எண்ணம், தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும்.

வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோத்தில் உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்கு பிரபலமாவீர்கள். 

சகிப்புத் தன்மையால் சாதித்துக் காட்டும் தருணம் இது.

கள்ளங்கபடமில்லாத வெள்ளையுள்ளம் கொண்டவர்களே!

ராசிபலன்

சனிபகவான் 3ம் வீட்டிலேயே நிற்பதால், எவ்வளவு பெரிய பிரச்னைகள், சிக்கல்கள், சூழ்ச்சிகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்து வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள். வேற்றுமொழி பேசுபவர்கள், வேற்றுமாநிலத்தைச் சேர்ந்தவர்களாலும் நன்மை உண்டாகும். ராசிக்குள் சூரியன் அமர்ந்திருப்பதால், முன்கோபம், காரியதாமதம், அலைச்சல் வந்து போகும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை விரைந்து செலுத்தப் பாருங்கள்.

ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பழைய உறவினர், நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள்.

புது பங்குதாரரைச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரி மட்டத்தில் செல்வாக்கு கூடும். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் பாராட்டுதலைப் பெறுவீர்கள்.

 துவண்டுபோகாமல் துடிப்புடன் செயல்படும் நேரம் இது.

நல்லது கெட்டது நான்கையும் அறிந்தவர்களே!

ராசிபலன்

குரு 11ல் சாதகமாக தொடர்வதால், மனோபலம் கூடும். பணப்பற்றாக்குறை நீங்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்கள் உதவுவார்கள். சூரியன் ராசிக்கு 12ல் மறைந்து நிற்பதால், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். தூக்கம் குறையும். அரசாங்க அதிகாரிகளால் தொந்தரவுகள் வந்து போகும். புதனும் ராசிநாதன் சுக்ரனும் சாதகமாக இருப்பதால், பிரபலங்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள்.

வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம், பேச்சு வார்த்தை மூலம் சுமுகமாக முடியும். தந்தைவழியில் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வது பற்றி யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

சிலரின் உள்மனதை உணரும் காலம் இது.

எப்பொழுதும் சுறுசுறுப்புடன் செயல்படுபவர்களே!

ராசிபலன்

ராசிநாதன் செவ்வாய் 10ல் அமர்ந்திருப்பதால், புதிய முயற்சிகள் பலிதமாகும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வேலை அமையும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். மூத்த சகோதரிக்கு இருந்த பிரச்னை தீரும். பிள்ளைகள் நல்ல வழிக்கு திரும்புவார்கள். ஜென்ம சனி தொடர்வதால், உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.

எதிர்காலம் பற்றிய கவலை அடி மனதில் நிழலாடும். யாரும் உங்களைப் புரிந்துகொள்ளவில்லையே என அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். சுக்ரனும், புதனும் வலுவான வீடுகளில் செல்வதால், திடீர் யோசனைகள் பிறக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். நட்பு வட்டம் விரியும். சூரியன் லாப வீட்டில் நிற்பதால், அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புத் திறன் வளரும்.

மனநிம்மதியுடன் செயல்படும் வேளை இது.

ஒதுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பவர்களே!

ராசிபலன்

சுக்ரன் சாதகமாக இருப்பதால் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.  செவ்வாய் 9ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், ஓரளவு பணப்புழக்கம் இருக்கும். சகோதரர்களும் ஆதரவாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சூரியன் 10ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.

நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். கணவன்மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். மகளின் அலட்சியப் போக்கு மாறும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமைவார். வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளை அரசு கௌரவிக்கும்.

சாமர்த்தியமான செயல்திறனால் சாதிக்கும் தருணம் இது.

எதிரிக்கும் நல்லதையே நினைக்கும் குணம் கொண்டவர்களே!

ராசிபலன்

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டுமென எண்ணுவீர்கள். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். சூரியன் 9ல் நிற்பதால், தந்தைக்கு வேலைச்சுமை, கை, கால் வலி வந்து போகும். செவ்வாய் நீச்சமாகி 8ல் மறைந்திருப்பதால், எளிதாக முடிய வேண்டிய வேலைகள் இழுபறியாகி முடியும். சில நேரங்களில் உணர்ச்சி வசப்படுவீர்கள்.

எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். கேது பகவான் 3ல் அமர்ந்ததால், திடீர் யோகம் உண்டாகும். டிரஸ்ட், சங்கம் தொடங்குவீர்கள். வேற்று மொழியினரால் நன்மை உண்டு. வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு.

வேலையாட்கள் உங்களின் பரந்த மனதைப் புரிந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் எதிராக இருந்த அதிகாரி மாற்றலாவார். சில ஊழியர்களுக்காக மேலதிகாரியிடம் பரிந்து பேசுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்களுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

புத்துணர்ச்சி பெருகும் காலம் இது.

எப்பொழுதும் மனசாட்சிக்கு உட்பட்டுச் செயல்படுபவர்களே!

ராசிபலன்

சுக்ரன் ராசிக்கு 7ல் வலுவாக அமர்ந்திருப்பதால், தடைப்பட்ட பல காரியங்களை இனி விரைந்து முடிப்பீர்கள். நல்ல செய்திகள் வந்து உங்களை மகிழ்விக்கும். கணவன்மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். சூரியன் 8ல் நிற்பதால், அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. குரு வலுவாக இருப்பதால், எதிலும் வெற்றி, லாபம் கிட்டும்.

சாமர்த்தியமாகப் பேசி சில காரியங்களை சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். புதிய ஆடை, அணிகலன்கள் சேரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் அடுத்தடுத்து வேலைச்சுமை இருந்தாலும் அலுத்துக் கொள்ளாமல் முடித்துக் காட்டுவீர்கள். கலைத்துறையினர்களே! இழந்த புகழை மீண்டும் பெற யதார்த்தமான படைப்புகளைக் கொடுங்கள்.

கிடைத்ததை வைத்து சுகமடையும் நேரம் இது.

பட்டம், பதவி, பணத்துக்கெல்லாம் மயங்காதவர்களே!

ராசிபலன்

சுக்ரன் 6ல் மறைந்திருப்பதால், சைனஸ் தொந்தரவு, காய்ச்சல், வீண் செலவுகள் வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் எதிர் விவாதம் வேண்டாம். டி.வி., ஃப்ரிட்ஜ், குடிநீர் குழாய் பழுதாகும். ஆனால் 5ம் தேதி முதல் புதன் 7ம் வீட்டுக்குள் நுழைவதால், உறவினர்கள், நண்பர்களுடனான கருத்து வேறுபாடுகள் மறையும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

கணவன்மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சூரியன் 7ல் அமர்ந்திருப்பதால் முன்கோபம், உடல் உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி, மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து போகும்.

உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் செல்வார்கள். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னை வரும். கலைத்துறையினர்களே! மறைமுக விமர்சனங்களும், கிசுகிசு தொந்தரவுகளும் வரும். 

தட்டுத்தடுமாறி கரையேறும் தருணம் இது.