Published:Updated:

ராசிபலன்

அக்டோபர் 13 முதல் 26 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

அதிர்ஷ்டத்தை அதிகம் நம்பாதவர்களே!

ராசிபலன்

னி 6ல் தொடர்வதால், வேற்று இனத்தவர்களால் ஆதாயம் உண்டு. வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். புதன் 6ல் மறைந்திருப்பதால், உறவினர் பகை, நண்பர்களுடன் கருத்துவேறுபாடு என வரக்கூடும். சுக்ரன் 5ம் வீட்டில் நிற்பதால், கணவன்மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் இருந்த அதிருப்தி விலகும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

18ம் தேதி முதல் பூர்வ புண்ணியாதிபதி சூரியன் 7ல் அமர்ந்ததால், அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். மனை விக்கு கர்பப்பை வலி வந்து நீங்கும். காரியத் தடை, முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழத்தல், வீண் விரயங்கள், திடீர் பயணங்களால் சோர்வு, களைப்பு வந்து செல்லும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம்.

வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். புதிய பங்குதாரர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளின் நம்பிக்கையைப் பூரணமாகப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு கூடும். அலுவலகத்தை நவீன மயமாக்கத் திட்டமிடுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார். எச்சரிக்கை யாக இருக்கவும்.  

எதிர்நீச்சல் போட வேண்டிய வேளை இது.

காலநேரம் பார்க்காமல் உழைப்பவர்களே!

ராசிபலன்

ராசிநாதன் சுக்ரன் சாதகமாக இருப்பதால், நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாகனம் வாங்குவீர் கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கேது வலுவாக அமர்ந்திருப்பதால், ஷேர் லாபம் தரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்துகொள்வீர்கள். ஆலயங் களைப் புதுப்பிக்க உதவுவீர்கள்.

வெளிநாட்டில் இருப்பவர்களால் திருப்பம் உண்டாகும். 4ல் குரு நிற்பதால், தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். செவ்வாய் 4ல் நிற்பதால், உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்துகொள்வார்கள். புதனும் சாதகமாக இருப்பதால், பிரச்னை களைச் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். 18ம் தேதி முதல், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்து கொள்வார்கள். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும்.

வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்க புது விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆச்சர்யப்படுமளவுக்கு சில காரியங்களை பரபரப்புடன் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் கற்பனைத் திறன் வளரும். படைப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

புதிய அணுகுமுறையால் முன்னேறும் தருணம் இது.  

ராசிபலன்

மூக அவலங்களைத் தட்டிக் கேட்கத் தயங்காதவர்களே! 

செவ்வாய் 3ல் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். சொத்தை விற்று பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. ராசிநாதன் புதன் 4ம் வீட்டில் இருப்பதால், பால்ய நண்பர்களின் சந்திப்பால் உற்சாகம் அடைவீர்கள். விலகிச் சென்ற சொந்தபந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள்.

ராசிக்கு 3ம் வீட்டில் சுக்ரன் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு. பழைய கடனை பைசல் செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். குடும்பத் தினரின் விருப்பங்களை நிறைவேற் றுவீர்கள். கணவன்மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். அவ்வப்போது முன்கோபம் வரும். குரு 3ம் வீட்டில் தொடர்வதால், சில காரியங்களைப் போராடி முடிக்க வேண்டி வரும். காரியங்கள் தாமதமாகும்.  

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வேலையாட்கள் உங்களைப் புரிந்துகொண்டு உதவுவார்கள். வாடிக்கையாளர்கள் உங்கள் மனம் கோணாமல் நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் சவாலான காரியங்களை எடுத்து சாதித்துக் காட்டுவீர்கள். கலைத் துறையினர் மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளி வார்கள்.

வி.ஐ.பிக்களால் இனம் கண்டறியப்படும் நேரம்  இது.

இனப்பற்றும், மொழிப்பற்றும் உள்ளவர்களே!

ராசிபலன்

2ம் வீட்டில் சுக்ரன் நிற்பதால், சாதுர்யமாகவும், சமயோசிதமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். அக்கம்பக்கத்து வீட்டாருடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு வாங்குவது, கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவி கிட்டும். சிலர் வீடு மாறுவீர்கள்.

3ல் ராகு வலுவாக அமர்ந்திருப்பதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 9ல் கேது நிற்பதால், வீண் செலவு, தந்தைக்கு நெஞ்சு வலி வந்து போகும். 18ம் தேதி முதல் அதிகாரப் பதவியில் இருப் பவர்கள் அறிமுகமாவார்கள். வீடு வாங்குவது, கட்டுவதில் இருந்த தடைகள் நீங்கும். தாயாரின் உடல் நலம் சீராகும்.

சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். புதுப்புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்தி யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியந்து பாராட்டுவார். சக ஊழியர்களும் நட்புறவாடுவார்கள். கலைத் துறையினர்களே!  கலைநயம் மிகுந்த உங்களின் படைப்புகள் பட்டிதொட்டியெங்கும் பேசப்படும்.

வசதி, வாய்ப்புகள் பெருகும் காலம் இது.

பண்பாட்டையும், கலாசாரத்தை யும் மீறாதவர்களே!

ராசிபலன்

ராசிக்குள்ளேயே சுக்ரன் நிற்பதால், மனதிலே ஒரு தெளிவு, முகமலர்ச்சி, அழகு, ஆற்றல், உற்சாகம் அதிகரிக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். புதன் 2ல் வலுவாக அமர்ந்தி ருப்பதால், பணம் வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். தொண்டை வலி, தொண்டைப் புகைச்சலும் அவ்வப் போது வரக்கூடும். உடல் நலத்தில் கவனம் தேவை.

4ம் வீட்டிலேயே சனி அமர்ந்தி ருப்பதால், சில காரியங்கள் தடைப்பட்டு முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். 18ம் தேதி முதல் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஜென்ம குரு தொடர்வதால், எதிர்ப்புகள், எதிர்மறை எண்ணம், தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். உணவுக் கட்டுப் பாடு அவசியம்.  

வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். கடையை நவீனப் படுத்துவீர்கள். புது வாடிக்கை யாளர்கள் அறிமுகமாவார்கள். பங்கு தாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பர். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. கலைத்துறையினர்களே! மற்றவர் களால்  கௌரவிக்கப்படுவீர்கள். பண வரவு கூடும்.

குடும்ப ரகசியங்களை காக்க வேண்டிய வேளை இது.

ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக சாதிப்பவர்களே!

ராசிபலன்

சனிபகவான் 3ம் வீட்டிலேயே நிற்பதால், எவ்வளவு பெரிய பிரச்னைகள், சிக்கல்கள், சூழ்ச்சிகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்து வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பிக்கள் அறிமுகமாவார்கள். ராசிக்குள் ராகு நிற்பதால், உடம்பில் இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து குறையும்.

7ல் கேதுவும் தொடர்வதால், வீண் சந்தேகம் வந்து செல்லும். ஆனால், ராசிநாதன் புதன் ராசிக்குள் நிற்பதால் பண வரவு உண்டு. தொல்லை தந்த கடனை பைசல் செய்வீர்கள். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். 12ல் செவ்வாய் இருப்பதால், தலைச்சுற்றல், செரிமானக் கோளாறு, மனஇறுக்கம் வந்து செல்லும்.

உடன் பிறந்தவர்கள் உங்களை தவறாகப் புரிந்துகொள்வார்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறு வீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களைப் புரிந்து கொண்டு வலிய வந்து உதவுவார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துகொள்வார்கள். கலைத் துறையினர்களே! உங்கள் படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வசதி, வாய்ப்புகள் பெருகும்.

சமயோசித புத்தியால் சாதிக்கும் தருணம் இது.  

கறைபடியாத களங்கமற்ற மனம் கொண்டவர்களே!

ராசிபலன்

ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசிக்கு சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், தைரியமாக சில பெரிய முடிவுகள் எடுக்கலாம். சிலர் கொஞ்சம் கடன்பட்டு வீடு, மனை வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். செவ்வாய் லாப வீட்டில் வலுவாக நிற்பதால், எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

எதிர்பாராத பண வரவு உண்டு. ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள். கணவன்மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் பிரச்னையைத் தீர்த்து வைப்பீர்கள்.

18ம் தேதி முதல், தந்தையின் உடல் நலம் சீராகும். ஆனால் உங்களுக்கு வேலைச்சுமை, முன்கோபம் வந்து செல்லும். வியாபாரத்தில் கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். வேலையாட்கள் விடுப்பில் செல்வார்கள். வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் வந்து போகும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். கலைத் துறையினர்களே! புதிய நிறுவனங்கள் உங்களை அழைத்து பேசும்.

சிக்கனமும், சகிப்புத் தன்மையும் தேவைப்படும் நேரம் இது.

மற்றவர்களின் வெற்றிக்காகப் பாடுபடுபவர்களே!

ராசிபலன்

ஜென்மச் சனி தொடர்வதால், மறதி, மந்தம், தூக்கமின்மை, விரக்தி வந்துசெல்லும். எதிர்மறை எண்ணங் களுடன் பேசுபவர்களின் நட்பைத் தவிர்ப்பது நல்லது. சுக்ரன் சாதகமாக இருப்பதால், பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள். ஓரளவு பணப்புழக்கம் இருக்கும் என்றாலும், பழைய கடனை நினைத்துக் கவலை கொள்வீர்கள்.

11ம் வீட்டில் ராகு வலுவாக நிற்பதால், எதையும் தாங்கும் மன வலிமை கிட்டும். வேற்று இனத்த வர்களால் உதவி கிடைக்கும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பழைய நண்பர்கள் உதவுவார்கள். உடன் பிறந்தவர்களின் சுயநலத்தை நினைத்து வருந்துவீர்கள்.

ராசிநாதன் செவ்வாய் 10ம் வீட்டிலேயே வலுவாக நீடிப்பதால், புது வேலை கிடைக்கும். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.

வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். வேலையாட்கள் விசுவாசமாக நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். கலைத்துறையினர்களே! வேற்று மொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.

சுபச் செலவுகளும், திடீர் பயணங்களும் அதிகரிக்கும் காலம் இது.

பிரச்னையென வந்துவிட்டால் சட்டம் பேசுபவர்களே!

ராசிபலன்

ராசிநாதன் குருபகவான் வலுவாக இருப்பதால், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். தந்தைவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். செவ்வாய் 9ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், ஓரளவு பணப் புழக்கம் இருக்கும்.

சகோதரர்களும் ஆதரவாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.  புதன் சாதகமான வீடுகளில் பயணிப்பதால், எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம், உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் அவ்வப் போது நிலவிவந்த குழப்பமெல்லாம் நீங்கும். கணவன்மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.18ம் தேதி முதல் அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். தந்தையின் உடல்நலம் சீராகும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

அரசால் ஆதாயம் உண்டு. தாயாரின் உடல் நலம் சீராகும். மூத்த சகோதரர் பாசமழை பொழிவார். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். வேலையாட் களிடம் கறாராக இருங்கள். சொந்த கடை வாங்க முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் கடுமையான உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

பழைய பிரச்னைகள் தீரும் வேளை இது.  

நெருக்கடி நேரத்திலும் அடுத்தவர்களிடம் உதவி கேட்கத் தயங்குபவர்களே!

ராசிபலன்

கேது வலுவாக 3ல் அமர்ந் திருப்பதால் வாழ்வின் சூட்சுமத்தை அறிவீர்கள். சாதுக்கள் உதவுவார்கள். பழைய இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். செவ்வாய் 8ல் நிற்பதால், உடன் பிறந்தவர்கள் கோபப்படுவார்கள். சொத்து விஷயத்தில் கறாராக இருக்கவும். வழக்கில் அவசரம் வேண்டாம். புதன் சாதகமான நட்சத்திரங்களில் பயணிப்பதால்,  பிரபலங்கள் சிலர் அறிமுகமாவார்கள்.

அவர்களின் சுபகாரியங்களில் பங்கேற்பீர்கள். நெடுநாளாக போக நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங் களுக்குச் சென்று வருவீர்கள். 18ம் தேதி முதல் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நாடாளுபவர்கள் அறிமுகமாவார்கள். புது வேலை கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

வியாபாரத்தில் போட்டியாளர்கள் உங்களின் வேகத்தைக் கண்டு வியப்பார்கள். வாடிக்கையாளர்களிடம் நற்பெயரைச் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். கலைத் துறையி னர்களே! மூத்த கலைஞர்களின் ஆலோசனை கிடைக்கும். அதனால் பயனும் உண்டாகும்.

ராஜ தந்திர யுக்திகளால் வெற்றி பெறும் தருணம் இது.

மற்றவர்களின் பலம் பலவீனம் அறிந்து செயல்படுபவர்களே!

ராசிபலன்

குருபகவான் வலுவாக இருப்பதால், நினைத்த காரியம் நிறைவேறும். பணவரவு திருப்தி தரும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். வீட்டில் தள்ளிப் போன சுபகாரியங்கள் கூடி வரும். குடும் பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். பிள்ளைகளால் மதிப்பு கூடும். செவ்வாய் 7ல் நிற்பதால், உடல் உஷ்ணம், தலைவலி, சிறுசிறு நெருப்புக் காயங்கள் ஏற்படக்கூடும்.

சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்க வேண்டாம். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள். புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வந்து போகும்.  18ம் தேதி முதல் சேமிப்புகள் கரையும். தந்தைக்கு அலைச்சல், டென்ஷன் வந்து நீங்கும்.

வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். வேலையாட்களிடம் அதிகமாகக் கண்டிப்பு காட்ட வேண்டாம். புது ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். இடமாற்றங்கள், சின்னச் சின்ன அவமானங்கள் ஏற்படக்கூடும். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புத் திறன் வளரும்.

தானுன்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய காலம் இது.        

சச்சரவுகளுடன் வருபவர்களை சமாதானப்படுத்துபவர்களே!

ராசிபலன்

செவ்வாய் 6ல் வலுவாக இருப்பதால், தைரியம் கூடும். வழக்கு சாதகமாகும். உடன்பிறந்தவர்கள் வலிய வந்து உதவுவார்கள். தாய் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்பீர்கள். புதன் 7ம் வீட்டுக்குள் நிற்பதால், உறவினர்கள், நண்பர்களுடனான கருத்து வேறுபாடுகள் மறையும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

பிள்ளைகளின் வருங் காலத்துக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். 18ம் தேதி முதல் முன்கோபம், சிறுசிறு காயங்கள், மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும். சனி பகவான் வலுவாக இருப்பதால், தாழ்வுமனப்பான்மை நீங்கும். ஏதேனும் சாதித்துக் காட்ட வேண்டுமென்ற எண்ணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.

வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். வேலையாட்கள், வாடிக்கையாளர்களால் டென்ஷன் அதிகரிக்கும். பங்குதாரர்களால் நெருக்கடிகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் கொஞ்சம் பிரச்னைகள் இருக்கவே செய்யும். வேலைச் சுமை அதிகரிக்கும். இட மாற்றம் உண்டு. கலைத் துறையினர்களே! உங்களின் படைப்பு களைப் போராடி வெளியிட வேண்டி வரும். உரிய அங்கீகாரம் கிடைப்பதும் தாமதப்படும்.

முற்பகுதி முள்ளாக இருந்தாலும், பிற்பகுதி இனிக்கும் நேரம் இது.