Published:Updated:

ராசிபலன்

அக்டோபர் 27 முதல் நவம்பர் 9 வரை ‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

அக்டோபர் 27 முதல் நவம்பர் 9 வரை ‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

Published:Updated:

றாம் அறிவுக்கு அதிகம் வேலை தருபவர்களே! 

ராசிபலன்

நவம்பர் 3ம் தேதி முதல் சுக்கிரன் 6ல் மறைந்திருப்பதால், வாகனம் அடிக்கடி பழுதாகும். சிறுசிறு விபத்து களும் ஏற்படலாம். எனவே, வாகனங் களில் பயணிக்கும்போது கவனம் தேவை. சூரியன் 7ல் அமர்ந்திருப்பதால் எரிச்சல், கோபம் விலகும். தடைப்பட்ட அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். உங்கள் பெற்றோரின் உடல் நிலை சீராகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதன் சாதகமாக இருப்பதால் பழைய உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டு பேசுவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வந்துசேரும். ராசி நாதன் செவ்வாய் 5ல் அமர்ந்து இருப் பதால் பழைய சிக்கலைத் தீர்க்க புது சிந்தனை பிறக்கும். புதிய அணுகு முறையால் சொத்துப் பிரச்னைகள் தீரும். பிள்ளைகளின் அடிமனதில் இருக்கும் பயத்தை நீக்குவீர்கள். வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். சகோதரர்களின் அரவணைப்பு அதிகரிக்கும்.

வியாபாரத்தில் கணிசமான அளவுக்கு லாபம் உயரும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பழைய பங்குதாரர்கள் மீண்டும் வந்து இணைவார்கள்.

உத்தியோகத்தில், உயரதிகாரி சில நேரங்களில் உங்களைக் கடிந்து பேசினாலும், உங்களுக்கு ஆதரவாகவே செயல்படுவார். கலைத் துறையினருக்கு,    படைப்பாற்றல் அதிகரிக்கும்.

எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய வேளை இது!

கடின உழைப்பால் கனவுகளை நிஜமாக்கும் வல்லமை மிக்கவர்களே!

ராசிபலன்

ராகு 5ம் வீட்டிலேயே நீடிப்பதால், பிள்ளைகள் சில நேரங்களில் பிடிவாத மாக நடந்துகொள்வார்கள். அவர்களை அன்புடன் அரவணைத்து செல்லுங்கள்.ராசிக்கு 4ல் குரு நிற்பதால் அலைச் சல், வேலைச்சுமை, தூக்கமின்மை ஆகியன அதிகரிக்கும். தாயாருடன் பிரச்னைகள் ஏற்படலாம். அவருக்கான மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும்.

ஆனால், சூரியன் 6ம் வீட்டில் வலுவாக நிற்பதால் புகழ், கௌரவம் கூடும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வீட்டு விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். 6ல் புதன் மறைந்து இருப்பதால் நண்பர்கள், உறவினர் களுடன் மோதல்கள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புதுப் புது அனுபவங்கள் ஏற்படும். பூர்வீகச் சொத்து பாராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

வியாபாரத்தில், உங்களுக்கு இருந்த போட்டிகள் குறையும். நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கடையை விரிவுபடுத்தி கட்டுவதற்கு திட்டமிடுவீர்கள்.

உத்தியோகத்தில், சிற்சில பிரச்னை களைச் சந்திக்க நேரிடலாம்; கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கலைத் துறையினர், விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

சொந்த விஷயங்களை மட்டுமே  கவனிக்க வேண்டிய காலம் இது!

அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் அன்பர்களே!

ராசிபலன்

ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால், இளைய சகோதரர்களால் நிம்மதி உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். குரு 3ம் வீட்டில் முடங்கிக் கிடப்பதால் இனந்தெரியாத கவலைகள், சிலர் மீது நம்பிக்கையின்மை வந்து செல்லும்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வீடு கட்ட லோன் கிடைக் கும். வெள்ளிப் பொருட்கள் வாங்கு வீர்கள். தாய்வழியில் ஆதரவு பெருகும். செவ்வாயும் வலுவாக இருப்பதால், சாதிக்கும் எண்ணம் மேலோங்கும்.பணம் வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள்.

5ல் சூரியன் நிற்பதால், கர்ப்பிணிப் பெண்கள் கவனமுடன் செயல்படவும்.பிள்ளைகள் உங்களது கருத்தை ஏற்க மறுப்பார்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். 6ல் சனி வலுவாக அமர்ந்திருப்பதால், வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

வியாபாரத்தில், வெளிநாட்டு நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவீர்கள். கலைத் துறையினரே! உங்களை அலட்சியப்படுத்திய நிறுவனத்தில் இருந்து இப்போது அழைப்பு வரும்.

பழைய சிக்கல்களுக்கு தீர்வு காணும் நேரம் இது.  

எதையும் எளிதில் செய்து முடிக்கும் வல்லமை மிகுந்தவர்களே!

ராசிபலன்

குரு வலுவாக 2ல் தொடர்வதால் சாதுர்யமாகப் பேசுவீர்கள். அனுபவ அறிவால் பல காரியங்களைச் சாதிப்பீர்கள். அறிஞர்கள், கல்வியாளர் களின் நட்பு கிடைக்கும். பண வரவு திருப்தி தரும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலத் துக்காக சேமிக்கத் துவங்குவீர்கள்.

நவம்பர் 3ம் தேதி முதல் சுக்கிரன் 3ல் நிற்பதால், கார் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டாகும். புதிய வேலை அமையும். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றி அடையும்.

சூரியன் 4ல் நிற்பதால், சமயோசிதமான பேச்சால் சாதிப்பீர்கள். வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவல் ஆகும். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். தந்தையின் வழியில் ஆதாயம் உண்டு. அரசு காரியங்கள் விரைந்து முடியும். சொந்த ஊரில் இழந்தை செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

வியாபாரத்தில், நீங்களே வியக்கும் வண்ணம் அதிரடி லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். சரக்குகள் விற்றுத் தீரும்.

உத்தியோகத்தில், திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உங்களுடைய திறமையை, மூத்த அதிகாரிகள் புரிந்து கொண்டு உதவுவார். கலைத் துறையினருக்கு வசதி, வாய்ப்புகள் பெருகும்.

கடனில் ஒரு பகுதி அடைபடும் காலம் இது!

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்   பண்பாளர்களே!

ராசிபலன்

உங்கள் ராசிக்குள்ளேயே நின்ற சுக்கிரன், நவம்பர் 3ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 2ம் வீட்டுக்கு மாறுவதால், சாதுர்யமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வந்துசேரும். அக்கம் பக்கத்து வீட்டாருடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள்.

உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர் கள். வீடு வாங்கவும் கட்டவும் வங்கிக் கடன் கிட்டும். உங்களில் சிலர் வீடு மாறுவீர்கள். ஜென்ம குரு நீடிப்பதால், எதிலும் இழுபறி, தடுமாற்றம், முன்கோபம், பதற்றம் வந்துபோகும். ஆன்மிக பயணம் சென்று வருவீர்கள்.

ராசி நாதன் சூரியன் 3ல் அமர்ந்து இருப்பதால், உங்களின் பேச்சில் முதிர்ச்சி வெளிப்படும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அயல் நாட்டு பயணம் சாதகமாக அமையும்.

வியாபாரத்தில், அதிரடி திட்டங் களால் வெற்றி பெறுவீர்கள். வாடிக்கை யாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பர்.

உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு, மூத்த கலைஞர்களின் நட்பு கிடைக்கும்.

உறவினர்களுடன் இடைவெளி உண்டாகும் தருணம்  இது.  

மற்றவர்களின் மனம் புண்படாதபடி பேசுபவர்களே!

ராசிபலன்

நவம்பர் 3ம் தேதி முதல் ராசி யிலேயே சுக்கிரன் அமர்ந்திருப்பதால் தோற்றப்பொலிவு கூடும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ராசிநாதன் புதன் 2ம் வீட்டில் பரிவர்த்தன யோகம் பெற்றிருப் பதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

12ல் செவ்வாய் மறைவதால் சகோதரர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். சொத்துப் பிரச்னைகள் தலைதூக்கும். 3ல் நிற்கும் சனியால் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாடு, வேற்று மாநிலத்தில் இருப்பவர்கள் உதவுவார்கள்.

குரு 12ல் மறைந்திருப்பதால் ஆன்மிக பயணங்கள் சிறப்பாக அமை யும். புகழ் பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில், புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்க முயற்சி செய்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவு தேவை.

உத்தியோகத்தில், உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

அனுபவ அறிவால் சாதிக்கும் நேரம் இது!

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத சான்றோர்களே!

ராசிபலன்

ராசிநாதன் சுக்கிரன் நவம்பர் 3ம் தேதி முதல் 12ம் வீட்டில் மறைவதால், மறைமுக எதிர்ப்புகள், வாகனப் பழுது வந்து போகும். எனினும், புதன் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் புதனும் பரிவர்த்தன யோகம் அடைந்து இருப்ப தால், பிரச்னைகளை எளிதில் எதிர் கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

செவ்வாய் சாதகமாக இருப்பதால்  சமூகத்தில் அந்தஸ்து உயரும். திடீர் யோகம் உண்டாகும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்கள் ராசிக்குள்ளேயே சூரியன் நிற்பதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக செயல்படவேண்டும். சிலருக்கு, தலை வலி போன்ற சிறு சிறு உபாதைகள் வந்து தொல்லை கொடுக்கும்.

குரு பகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சுப நிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். கோயில் கும்பாபிஷேகம் போன்ற ஆன்மிகநற்காரியங்களை முன்னின்று நடத்து வீர்கள்.

வியாபாரத்தில், அயல்நாட்டு நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப செயல்படுவீர்கள்.

உத்தியோகத்தில், நீங்கள் எதிர் பார்த்திருந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. சக ஊழியர்களுக்காக பரிந்து பேசுவீர்கள். கலைத் துறை யினருக்கு, கற்பனைத் திறன் வளரும்.

சமூகத்தில் பாராட்டும் புகழும் கிடைக்கும் நேரம் இது!

அதிகாரத்துக்கு அடிபணியாதவர் அன்பர்களே!

ராசிபலன்

நவம்பர் 3ம் தேதி முதல் சுக்கிரன் லாப வீட்டில் நிற்பதால் திடீர் பணவரவு உண்டு. ஷேர் மூலம் லாபம் வரும். வீடு, மனை வாங்குவது, கட்டுவது போன்ற முயற்சிகள் வெற்றியடையும்.

உங்கள் ராசிநாதன் செவ்வாய்   10ம் வீட்டில் பலம் பெற்று அமர்ந்து இருப்பதால், உங்களின் திறமைகள் கூடும். எதிர்பாராத யோகம் உண்டு. புது பதவி, பொறுப்பு தேடி வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சொத்துக்கள் வாங்குவதிலும், விற்ப திலும் சாதகமான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் இருந்துவந்த மனவருத்தம் நீங்கும்.

ஜென்மச் சனி தொடர்வதால் மன இறுக்கம், ஒற்றைத் தலைவல ஆகியன வந்துபோகும். சூரியன் 12ல் மறைந்து இருப்பதால் தூக்கமின்மையும் பதற்றமும் வந்துபோகும். ஒருசிலருக்கு ஆன்மிகப் பயணங்கள் உண்டாகும்.

வியாபாரத்தில், பழைய சரக்கு களைப் போராடி விற்பனை செய்வீர்கள். கமிஷன், புரோக்கரேஜ், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றால் ஆதாயம் அடைவீர்கள்.

10ம் வீட்டில் குரு நீடிப்பதால், உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்த்தாலும் மூத்த அதிகாரியை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். கலைத் துறையினரின் படைப்புகள் எல்லோராலும் பாராட்டப் படும்.

தன்னடக்கத்தால் தடைகளை தாண்டும் வேளை இது!

காசு பணத்துக்கு விலை போகாத   நண்பர்களே!

ராசிபலன்

குருபகவான் 9ம் வீட்டில் நிற்பதால், ஏழரைச் சனியால் ஏற்படும் பிரச்னை களும், போராட்டங்களும் ஓயும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். அவர் வழி சொத்து கைக்கு வரும்.

நவம்பர் 3ம் தேதி முதல், 10ம் வீட்டில் சுக்கிரன் அமர்வதால் புது வேலை அமையும். வாகன வசதிகள் பெருகும். மூத்த சகோதரர் வகையில் நன்மை உண்டு. சூரியன் லாப வீட்டில் நிற்பதால் கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல் நலம் சீராகும். தந்தைவழி உறவினர்கள் மதிப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு.

செவ்வாய் 9ம் வீட்டில் வலுவாக அமர்திருப்பதால் பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். தாய்வழியில் அனுகூலம் உண்டு. தகுதிக்கேற்ற புது வேலை கிடைக்கும்.

வியாபாரம் தழைக்கும். வாடிக்கை யாளர்களின் கருத்தைக் கேட்டு, கடையை இடமாற்றம் செய்வீர்கள். கமிஷன், பிரிண்டிங் மற்றும் உணவு வகைகளால் லாபம் உண்டு.

உத்தியோகத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். சிலர், உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்பு வார்கள். அதைப் பொருட்படுத்த வேண்டாம்; வேலையில் மட்டும் கவனம் செலுத்தவும். கலைத் துறையினருக்கு வருமானம் உயர வழி பிறக்கும்.

எதிர்பாராத வெற்றிகளை சந்திக்கும் தருணம் இது!

புரட்சிகரமான சிந்தனையும் செயல் பாடுகளும் கொண்டவர்களே!

ராசிபலன்

சூரியன் 10ல் நிற்பதால் புது உத்தியோகம், சம்பள பாக்கி கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். அயல்நாட்டில் இருப்பவர்களால் உதவிகள் உண்டு. 8ல் குரு நிற்பதால் அறிஞர்கள், ஆன்மிகவாதிகளுடன் கருத்துமோதல்கள் வரக்கூடும்.

காரியம் ஆகும்வரை உங்களைப் பயன்படுத்திக்கொண்டு, பிறகு அலட்சியப்படுத்தும் நண்பர்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள்.எவரையும் முழுமையாக நம்பி பொறுப்பை ஒப்படைக்கவேண்டாம். எவருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.

சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் பண பலம் உயரும். புது வீடு, வாகனம் வாங்குவீர்கள். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். பிரபலங் கள் நண்பர்கள் ஆவார்கள்.  கணவன்மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

வியாபாரத்தில், உங்களின் கடின மான உழைப்பாலும் முயற்சியாலும் லாபம் அடைவீர்கள். புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்யவேண்டாம்.

உத்தியோகத்தில் செல்வாக்கு கூடும். அலுவலக நிமித்தமாக சிலர் வெளிமாநிலம், அயல்நாடு சென்று வருவீர்கள். சக ஊழியர்கள் இடையே மதிப்பு கூடும். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும் வேளை இது!        

விட்டுக்கொடுக்கும் குணம் அதிகம் கொண்ட அன்பர்களே!

ராசிபலன்

யோகாதிபதியான சுக்ரனும், புதனும் சாதகமாக பரிவர்த்தனைப் பெற்று திகழ்வதால், பழைய பிரச்னை களுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். சில நேரங்களில், பழைய கடனை நினைத்து பயம் உண்டாகும்.

2ல் கேது நிற்பதால் கண், காது, பல் வலி ஆகியன வந்து நீங்கும். 8ல் ராகு தொடர்வதால் கனவுத் தொல்லை, தூக்கமின்மை ஏற்படக்கூடும். செவ்வாய் 7ல் நிற்பதால் கணவன்மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, இடுப்பு வலி ஆகியன வந்து நீங்கும். சொத்துக்கள் வாங்குவதிலும் விற்பதிலும் எதிர்பாராத வில்லங்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, கவனமுடன் செயல்பட வேண்டும்.

வியாபாரத்தில், திடீர் யோகம் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆகும். வாகனம் மற்றும் கட்டட வகைகளால் உங்களுக்கு ஆதாயம் ஏற்படும்.

உத்தியோகத்தில், இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலதிகாரி களுடன் பனிப்போர் வந்து நீங்கும்.  சக ஊழியர்களுடன் வீண் பிரச்னைகள் வேண்டாம். அவர்களுடன் வளைந்து கொடுத்து போகவும். கலைத் துறைத் அன்பர்கள், புதுமையான படைப்பு களால் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

சாமர்த்தியமாகக் காய்நகர்த்த வேண்டிய வேளை இது!

நல்லது கெட்டதை பகுத்தறிந்து ஒழுகும் பண்பாளர்களே!

ராசிபலன்

8ல் சூரியன் நிற்பதால், பழைய கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். புதன் 8ல் மறைந்திருப்பதால் வெளி நாட்டில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. அவர்களின் உதவியும் விசாரிப்பும் உங்களுக்கு ஆறுதலாக இருக்கும்.  

சுக்கிரன் நவம்பர் 3ம் தேதி முதல் 7ல் அமர்வதால் மனைவியுடன் இருந்து வந்த மோதல்கள், பிணக்குகள் நீங்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள்.  

செவ்வாய் வலுவாக 6ல் அமர்ந்து இருப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்கள், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு. குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். குரு 6ல் மறைந்திருப்பதால் வீண் பழி, மறைமுக அவமானம் வந்து செல்லும்.

வியாபாரத்தில் பற்று  வரவு உயரும். வி.ஐ.பிகளும் வாடிக்கை யாளர்கள் ஆவார்கள். புது வேலை ஆட்கள் அமைவார்கள்.

உத்தியோகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டியது வரும். அதிகாரி கள் உங்களை நம்பி முக்கியப் பொறுப் புகளை ஒப்படைப்பார்கள். பாராட்டு களும் கிடைக்கும். கலைத் துறை யினருக்கு, எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

தகுதியறிந்து  செயல்படும் காலம் இது!