Published:Updated:

ராசிபலன்

நவம்பர் 10 முதல் நவம்பர் 23 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

நவம்பர் 10 முதல் நவம்பர் 23 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

Published:Updated:

செய்நன்றி மறவாதவர்களே! 

ராசிபலன்

குரு வலுவாக நிற்பதால், எதிர் பார்ப்புகள் நிறைவேறும். பெரிய பதவி யில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். தடைப்பட்ட திருமணம் கூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். என்றாலும் சூரியன் சாதகமாக இல்லாததால், பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங் களைத் திணிக்க வேண்டாம். கர்ப்பிணி கள் பயணங்களைத் தவிர்க்கவும். கணவன்மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து போகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுக்ரனும் 6ல் மறைந்திருப்பதால், வாழ்க்கைத் துணைவருக்கு சிறுசிறு உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் 6ம் இடத்தில் அமர்ந்திருப்பதால், பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். என்றாலும் செவ்வாய் ராகுவுடன் சேர்ந்து நிற்பதால், ரத்த சோகை, நெஞ்சு வலி, ஒற்றைத் தலைவலி வந்து போகும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், மற்றவர்களை நம்பி முக்கிய விஷயங்களை ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.

கடின உழைப்பால் இலக்கை எட்டும் காலம் இது!  

உண்மை நிறைந்த அன்பர்களே!

ராசிபலன்

கேது லாப வீட்டில் வலுவாக நிற்ப தால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அறிஞர்களின் நட்பால் தெளிவடை வீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

ராசிநாதன் சுக்ரன் 5ல் நிற்பதால், வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். என்றாலும் சுக்ரன் ராகுவுடன் சேர்ந்து நிற்பதால், இறுமல், தலைவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படலாம். சப்தமாதிபதி செவ்வாய் 5ம் இடத்தில் இருப்பதாலும், கண்டகச் சனி தொடர்வதாலும் கணவன்மனை விக்குள் வீண் சந்தேகம் எழக்கூடும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போகவும். சூரியனும் சாதகமாக இல்லாததால், அரசு காரியங்கள் இழுபறியாகும்.

குருவும் 4ல் நீடிப்பதால், தாயாரின் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். 12ம் தேதி முதல் புதன் சாதகமாவதால், உறவினர், நண்பர் களின் அன்புத் தொல்லைகள் விலகும்.

வியாபாரத்தில் லாபம் சம்பாதிப்பீர் கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். கலைத் துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் முன்னேறுவீர்கள்.

வளைந்து கொடுக்கவேண்டிய நேரம் இது!

கொடுத்து உதவும் குணமுடையவர் களே!

ராசிபலன்

சனிபகவான் வலுவாக 6ல் நிற்பதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். புறநகர்ப் பகுதிகளில், உங்கள் மனதுக்குப் பிடித்தமான வகையில், வீட்டுமனை வாங்குவீர்கள்.

புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மறைமுக எதிரி களால் ஆதாயமடைவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்கள் ராசி நாதன் புதனின் போக்கு சரியில்லாத தால், உறவினர் மற்றும் நண்பர்களில் சிலர் உதவி கேட்டு, உங்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவார்கள்.

4ல் ராகுவும், செவ்வாயும் நிற்பதால், சகோதர வகையில் சச்சரவுகள் வரும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். தாயாருக்கு மூட்டு வலி, நெஞ்சு எரிச்சல் வரக்கூடும். 17ம் தேதி முதல் சூரியன் 6ல் அமர்வதால், தடைப்பட்ட அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

வியாபாரத்தில், லாபம் சுமாராக இருக்கும். புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். உத்தியோகத்தில், அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டாலும் சக ஊழியர் களால் உதவிகள் உண்டு. கலைத் துறையினரே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

நெருக்கடிகளை நீந்திக் கடக்கும் வேளை இது!

கள்ளம் இல்லாத அன்பர்களே!

ராசிபலன்

செவ்வாயும், ராகுவும் உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் நிற்பதால், தன்னம்பிக்கை அதிகமாகும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். சகிப்புத் தன்மையும் அதிகரிக்கும். கணவன்மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உடன்பிறந்த வர்கள் உதவியாக இருப்பார்கள்.

மகளுக்கு நல்ல வரன் அமையும். புதனும், சுக்ரனும் சாதகமான வீடுக ளில் செல்வதால், உறவினர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். பழைய நண்பர்களின் சந்திப்பால் உற்சாகம் அடைவீர்கள். புதிதாக வாகனம், புது டிசைனில் நகை வாங்குவீர்கள். சனி 5ல் தொடர்வதால், சில நேரங்களில் படபடப்பாக இருப்பீர்கள்.

பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக நடந்துகொண்டால் நலமாக இருக்குமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். தெளிவான முடிவு கள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவு கள் அதிகமாகும்.

குருபகவான் வலுவாக இருப்பதால், வியாபாரத்தில் பற்று  வரவு உயரும்.  இதுவரையிலும் பங்குதாரருடன் இருந்து வந்த பகைமை நீங்கும். உத்தியோகத்தில் செல்வாக்கு கூடும். அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். கலைத் துறை யினரே! பழைய நிறுவனத்தில் இருந்து புது வாய்ப்புகள் வரும்.

வெற்றிக்கு வித்திடும் தருணம் இது!

நீதி நெறி தவறாதவர்களே!

ராசிபலன்

புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், எத்தனை பிரச்னைகள், போராட்டங்கள் வந்தாலும் சளைக்காமல் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர், நண்பர் களின் பாசமான விசாரிப்புகள் ஆறுதல் தரும். ஜென்ம குரு தொடர்வதால், பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை வந்து போகும். செரிமானக் கோளாறு வந்து நீங்கும். மற்றவர்களை குறை கூறிக் கொண்டிருக்காமல் உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதனை அறிந்து அதற்கேற்ப செயல்படுவது நல்லது.

2ம் வீட்டிலேயே ராகுவும், செவ்வாயும் தொடர்வதால், அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங் கள். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் அதிகரிக்கும். 17ம் தேதி முதல் சூரியன் 4ல் நிற்கும் சனியுடன் சேருவ தால், தாயாரின் உடல் நலம் பாதிக்கும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும்.

வியாபாரத்தில் நஷ்டங்கள் ஏற்படக் கூடும். வேலையாட்களிடம் கண்டிப்பு வேண்டாம்; விட்டுப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில், அதிகாரிகள்   உங்கள் குறைகளைச் சுட்டிக்காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். அவரிடம் வீண் விவாதம் வேண்டாம். கலைத்துறையினரே! உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும்.

இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய காலம் இது!

சிந்தனையாளர்களே!

ராசிபலன்

சனிபகவான் 3ம் வீட்டிலேயே தொடர்வதால், நெருக்கடிகளைச் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். புது வேலை அமையும். என்றாலும் ராசிநாதன் புதன் 12ம் தேதி முதல் சனியுடன் சேருவதால் சளித் தொந்தரவு, காய்ச்சல், நரம்புச் சுளுக்கு வந்துபோகும். உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.

உங்களுடைய ராசியிலேயே செவ்வாயும், ராகுவும் நிற்பதால், முன்கோபம் அதிகரிக்கும். உடன்பிறந்த வர்களுடன் மனத்தாங்கல் வரும். வீடு, மனை வாங்கும்போது பட்டா, வில்லங்கச் சான்றிதழ்களைச் சரி பார்த்து வாங்குவது நல்லது. வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். 17ம் தேதி முதல் சூரியன் 3ல் இருப்பதால், தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். அரசு காரியங்கள் உடனே முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். சுக்ரன் சாதகமாக இருப்பதால், பணப் பற்றாக்குறையைச் சமாளிப்பீர்கள்.

வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். வேலையாட்களால் விரயம் ஏற்படும். பங்குதாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும். உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும்; கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புத் திறன் வளரும்.

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது!

கடின உழைப்பாளிகளே!

ராசிபலன்

குரு பகவான் வலுவாக இருப்பதால், விடாமுயற்சியால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். வி.ஐ.பி.கள் உதவுவர். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். வேலைக்கு விண்ணப்பம் செய்து காத்திருப்பவர்களுக்கு, நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். ராசிக்கு 12ம் வீட்டிலேயே ராகுவும், செவ்வாயும் தொடர்வதால், கணவன்மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாழ்க்கைத் துணைவருக்கு சிறுசிறு உடல்நலக் குறைபாடு ஏற்படலாம். உடன் பிறந்தவர்கள் உங்களை தவறாகப் புரிந்துகொள்வார்கள்.

வீடு, மனை வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம். சூரியனின் போக்கு சாதகமாக இல்லாததால், வேனல் கட்டி, அடிவயிற்றில் வலி, கண் எரிச்சல், பார்வைக் கோளாறு, கணுக் கால் வலி வந்து நீங்கும். அரசு காரியங் கள் தாமதமாகி முடியும். சனி 2ல் தொடர்வதால், மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்காதீர்கள்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தி யோகத்தில் உங்களின் மதிப்பு உயரும்.  மேலதிகாரி, உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத் துறையினருக்கு புகழும் பெருமையும் கூடும்.

அனுபவ அறிவால் வெற்றி பெறும் வேளை இது!

பொறுமைசாலிகளே!

ராசிபலன்

மூன்று கிரகங்கள் லாப ஸ்தானத் தில் வலுவாக அமர்ந்திருப்பதால், தொட்ட காரியங்கள் துலங்கும். பணப் புழக்கம் கணிசமாக உயரும். வீடு கட்ட லோன் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று புது இடம் வாங்குவீர்கள். வெளி நாடு செல்லும் வாய்ப்பு வரும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் அடங்கும். சகோதரிக்குத் திருமணம் முடியும். என்றாலும் உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் ராகுவுடன் சேர்ந்து நிற்பதால், சிறுசிறு அறுவை சிகிச்சை, அலைச் சல்கள் வந்து போகும். அரசாங்க விஷயங்கள் தடைப்பட்டு முடியும்.

10ல் குரு தொடர்வதால், வருங் காலம் பற்றிய பயம், மறைமுக அவமானம், வீண் விமர்சனங்கள் வந்து விலகும். ஜென்மச் சனியும் தொடர்வ தால், உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். மனச் சஞ்சலங்கள், எதிலும் ஆர்வமின்மை வந்துபோகும். புதிய நட்பால் உற்சாகம் அடைவீர்கள்.

வியாபாரத்தில் புது சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். வேலையாட் கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளைக் கற்றுக்கொள்வார்கள்.உத்தியோகத்தில் சிறு சிறு இடையூறுகளைச் சமாளிக்க வேண்டி வரும். கலைத்துறையினருக்கு புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும்.

வி.ஐ.பிகளால் உதவி பெறும் தருணம் இது!

பரபரப்பு மிகுந்த அன்பர்களே!

ராசிபலன்

செவ்வாய் ராசிக்கு 10ல் நிற்பதால், திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உறவினர்களால் நன்மை உண்டு. அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். ராசிநாதன் குரு வலுவாக இருப்பதால், பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

கட்டட வேலைகளைத் தொடங்கு வீர்கள். லோன் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வெளியூர்ப் பயணங்கள் திருப்திகரமாக அமையும். 12ல் சனி தொடர்வதால், வீண் பகை, மனஉளைச்சல், தூக்கம் இல்லாமை, செலவுகள் வந்து போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். அனுபவமிக்க வேலையாட்களைப் பணியில் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். என்றாலும் சக ஊழியர் களின் விவகாரத்தில் மூக்கை நுழைக் காதீர்கள். கலைத்துறையினரே! சம்பள பாக்கி கைக்கு வரும்.

தன்னம்பிக்கையால் சாதிக்கும் வேளை இது!

ஆறுதலாக இருப்பவர்களே!

ராசிபலன்

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், கடினமான காரியங்களை யும் எளிதாக செய்து முடிப்பீர்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். புது வேலை கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

பணப்புழக்கம் அதிகரிக்கும். புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், கணவன்மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். வங்கிக் கடன் கிடைக்கும். பால்ய நண்பர்களால் ஆதாயம் அடை வீர்கள். சனியும், கேதுவும் சாதகமாக இருப்பதால், ஆன்மிகவாதிகளின் ஆசி கிட்டும்.

முக்கிய விழாக்களுக்குத் தலைமை தாங்குவீர்கள். வெளியூர்ப் பயணங்கள் திருப்திகரமாக அமையும். செவ்வாய் சாதகமாக இருப்பதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். குரு 8ல் நிற்பதால், வீண் பழி, சின்னச் சின்ன ஏமாற்றங்கள், இழப்புகள் வந்துபோகும்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபமும் அதனால் மகிழ்ச்சியும் உண்டு. புதியதோர் இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

தொலைநோக்கு பார்வையால் வெற்றி பெறும் காலம் இது.  

சாதனையாளர்களே!

ராசிபலன்

குரு பகவான் வலுவாக இருப்பதால், புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பண வரவு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

சுக்ரனும், புதனும் சாதகமான வீடு களில் சென்று கொண்டிருப்பதால், புதிய வாகனம் வாங்குவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கடந்த கால சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் தோன்றும். செவ்வாயும், ராகுவும் 8ல் நிற்பதால், நெஞ்சு வலிக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைய வாய்ப்பிருக்கிறது. இரும்புச் சத்து அதிகமுள்ள காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உடன் பிறந்த வர்களால் டென்ஷன் அதிகரிக்கும்.

சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. வழக்கில் அவசரம் வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். 17ம் தேதி முதல் சூரியன் 10ல் நுழைவதால், அரசால் ஆதாயம் உண்டு. தந்தையாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் கூடுதலாக கடன் வாங்கி விரிவுபடுத்து வீர்கள், அழகுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய தொலைநோக்குச் சிந்தனைக்கு பாராட்டுகள் கிடைக்கும். கலைத்துறையினரே! எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

குருவருளால் திருவருள் கூடும் நேரம் இது.  

மேன்மையானவர்களே!

ராசிபலன்

சுக்ரன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால், உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். ஆரோக்கியம் கூடும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.

12ம் தேதி முதல் புதன் 9ம் வீட்டில் அமர்வதால், பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். மனைவி வழியில் உதவிகள் உண்டு என்றாலும் 7ல் ராகுவும், செவ்வாயும் நிற்பதால், வாழ்க்கைத் துணைவருக்கு உடல் உபாதைகள் வந்து நீங்கும். வீடு, மனை வாங்கும்போது தாய்ப் பத்திரத் தைச் சரிபார்த்து வாங்குவது நல்லது.

உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண் டிய சூழல் உருவாகும். சூரியன் 17ம் தேதி முதல் 9ல் நுழைவதால், தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வரக் கூடும். குருவும், கேதுவும் சாதகமாக இல்லாததால், அவ்வப்போது பலவீன மாக உணருவீர்கள்.

வியாபாரத்தில்  வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். பங்குதாரர் களுடன் பகைமை வரக்கூடும். உத்தி யோகத்தில் வேலை அதிகரிக்கும். பணிச் சுமையால் சோர்வடைவீர்கள். கலைத்துறையினருக்கு, ரசிகர்கள் அதிகரிப்பார்கள்.

சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் அறியும் காலம் இது!   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism