'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

அக்டோபர் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை

செயல் வேகம் கூடும்!

மேஷம்: முற்போக்கு சிந்தனையாளர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்கள் செயலில் வேகம் கூடும். பணவரவு அதிகரிக்கும். 18-ம் தேதி முதல் சூரியன் 7-ல் அமர்வதால், உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ராசிக்குள் குருவும், 2-ல் கேதுவும் தொடர்வதால், வீண் செலவு ஏற்படக்கூடும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் அடுக்கடுக்கான வேலைகளால் மன இறுக்கம் அதிகரிக்கும்.

புதிய முயற்சிகள் பலிக்கும்!

ரிஷபம்: கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பவர்களே! செவ்வாய் வலுவாக நிற்பதால், புதிய முயற்சிகள் பலிதமாகும். சுக்கிரனும், புதனும் 6-ல் மறைந்திருப்பதால், உடல் உபாதை வந்து நீங்கும். உறவினர்கள், தோழிகளுடன் இடைவெளி தேவை. 18-ம் தேதி முதல் சூரியன் 6-ல் அமர்வதால் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் குறைகளை சுட்டிக்காட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

பெரிய பதவி... புதிய சலுகை!

மிதுனம்: பேச்சைவிட செயலில் வேகம் அதிகம் உள்ளவர்களே! குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால்... செல்வம், செல்வாக்கு கூடும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். கணவர், பிள்ளைகள் உங்களை மதிப்பார்கள். 4-ல் சனியும், 2-ல் செவ்வாயும் தொடர்வதால், வீண் டென்ஷன், பேச்சால் பிரச்னை வரலாம். வியாபாரத்தில் ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு, புதிய சலுகைகள் கிடைக்கும்.

உறவு, நட்பு உங்கள் பக்கம்!

கடகம்: மனதில் எதையும் மறைக்காதவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், தோற்றப் பொலிவு கூடும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். ஒதுங்கியிருந்த உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். நட்பு வட்டம் விரியும். ராசிக்குள் செவ்வாய் நிற்பதால் சோர்வு, உடல் உபாதை வந்து போகும். வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.

வரவு, மதிப்பு உச்சத்தில்!

சிம்மம்: நடுநிலையாளர்களே! குருபகவான் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிநாட்டில் இருப்பவர்களால் உதவிகள் உண்டு. 18-ம் தேதி முதல் ராசிநாதன் சூரியன், சனியை விட்டு விலகி 3-ல் அமர்வதால், டென்ஷன் விலகும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். 12-ல் செவ்வாய் மறைந்திருப்பதால் அலைச்சல், செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் வரவு அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

மன இறுக்கம் விலகும்!

கன்னி: இனிமையாக பேசுபவர்களே! செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால், கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். வீடு கட்டும் வேலை சுறுசுறுப்படையும். 18-ம் தேதி முதல் சூரியன் ராசியை விட்டு விலகுவதால் மன இறுக்கும் நீங்கும். ஆனால் 2-ல் அமர்வதால் உடல் உபாதை வந்து போகும். 12-ம் தேதி இரவு 8 மணி முதல் 14-ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடைபெறுவதால், காரிய தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகளை அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் மனம் விட்டு பேசுவார்கள்.

ஆனந்தம் விளையாடும் வீடு!

துலாம்: நியாயம், தர்மம் பார்ப்பவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். 18-ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால்... உடல்நலக் கோளாறு வந்து போகும். 15-ம் தேதி முதல் 17-ம் தேதி மாலை 5.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், உணர்ச்சிவசப்பட வேண்டாம். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.

பேச்சில் காரம் வேண்டாம்!

விருச்சிகம்: எதையும் உடனடியாக முடிப்பதில் வல்லவர்களே! சனிபகவான் வலுவாக இருப்பதால், புது சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்து கொள்வார்கள். 17-ம் தேதி மாலை 5.30 மணி முதல் 19-ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடைபெறுவதால், யாரையும் உதாசீனமாக பேசாதீர்கள். குருவால் வீண் டென்ஷன் வந்து செல்லும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.

காசு மேல காசு வரும் காலம்!

தனுசு: தாராள மனசுள்ளவர்களே! சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பணவரவு அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். உறவினர்களால் உதவிகள் உண்டு. 8-ல் செவ்வாய் மறைந்திருப்பதால்... வாகனப் பழுது, சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். 20, 21 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால், எதிலும் அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.

அயல்நாடு செல்ல விசா!

மகரம்: எதிலும் தெளிவான முடிவு எடுப்பவர்களே! புதன் சாதகமாக இருப்பதால், இழுபறியாக இருந்த வேலைகள் விரைவில் முடியும். 18-ம் தேதி முதல் சூரியன் 10-ல் நுழைவதால், அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 4-ல் குரு நிற்பதால், தாயாருக்கு மருத்துவச் செலவு ஏற்படலாம். 22-ம் தேதி முதல் 24-ம் தேதி காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், சில வேலைகளை போராடி முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள்.

உழைப்புக்கு அங்கீகாரம்!

கும்பம்: சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படுபவர்களே! செவ்வாய் வலுவாக நிற்பதால், நிர்வாகத் திறன் கூடும். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். 24-ம் தேதி காலை 9 மணி முதல் 25-ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால்... சோர்வு வந்து நீங்கும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், மற்றவர்கள் பேச்சைக் கேட்டு பெரிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

சவாலே சமாளி!

மீனம்: எதிர்நீச்சல் போடுபவர்களே! ராசிநாதன் குருபகவான் வலுவாக இருப்பதால், சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத வகையில் பணம் வரும். ஆனால், 7-ல் சனி தொடர்வதால் அடிக்கடி வாக்குவாதங்கள் வரும். 18-ம் தேதி முதல் சூரியன் 8-ல் மறைவதால் வீண் டென்ஷன், உடல் உபாதை வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார்.