Published:Updated:

ராசிபலன்

நவம்பர் 24 முதல் டிசம்பர் 7 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

நவம்பர் 24 முதல் டிசம்பர் 7 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

Published:Updated:

திலும் வித்தியாசத்தை விரும்புபவர்களே! 

ராசிபலன்

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். சகோதரர் உங்கள் வளர்ச்சிக்கு உதவுவார். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். என்றாலும், ராசிநாதன் ராகுவுடன் நிற்பதால், அலர்ஜி, படபடப்பு, பதற்றம் வந்து போகும். 29ம் தேதி வரை சுக்ரனும் 6ல் மறைந்து இருப்பதால், வாழ்க்கைத் துணைவருடன் மோதல்கள், தொண்டைப் புகைச்சல், மின்னணு, மின்சாதனப் பழுது வரக்கூடும்.

30ம் தேதி முதல் சுக்ரன் உங்கள் ராசியைப் பார்ப்பதால், கணவன்மனைவிக்குள் இருந்து வந்த மனஸ் தாபம் நீங்கும். ராகுவும் 6ம் வீட்டில் நிற்பதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஷேர் மூலம் லாபம் வரும். குருபகவான் 5ல் நிற்பதால், மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார். மகளுக்கு வேலை கிடைக்கும்.

பூர்வ புண்ணியாதிபதி சூரியன் சனியுடன் சேர்ந்து 8ல் நிற்பதால், பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண் காணிப்பது நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டி களை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களை விட்டுப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள். கலைத்துறையினரே! புது வாய்ப்புகள் தேடி வரும்.

விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய வேளை இது.

உணர்ச்சிவசப்பட்டுப் பேசி வருத்தப்படுபவர்களே!

ராசிபலன்

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீட்டை விரிவுபடுத்தும் பணி சிறப்பாக முடியும். உங்கள் ராசிநாதன் சுக்ரன் 30ம் தேதி முதல் பாபகிரகங்களின் பிடியிலிருந்து விடுபடுவதால், தடைகள் நீங்கும் என்றாலும், 6ம் வீட்டில் சென்று மறைவதால் காய்ச்சல், தலைச்சுற்றல், கழுத்து வலி, தோலில் நமைச்சல் வந்து போகும்.

வாகனம் பழுதாகும். கணவன்மனைவிக்குள் வீண் சந்தேகம் வரக் கூடும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். 5ல் செவ்வாயும், ராகுவும் நிற்பதால், பிள்ளைகளிடம் அவ்வப் போது குறைகளைக் கண்டுபிடித்து வருத்தமடைவீர்கள். நிறைகளையும் பாராட்டத் தயங்காதீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் உணவு விஷயத்தில் மருத்துவரின் ஆலோசனையை ஏற்பது நல்லது.

பூர்வீகச் சொத்தில் பிரச்னை வந்து விலகும். சுகாதிபதி சூரியன் சனியுடன் 7ல் நிற்பதால், வாழ்க்கைத் துணை வருக்கு  ஆரோக்கியம் பாதிக்கக் கூடும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். வேலை யாட்களால் பிரச்னைகள் வெடிக்கும். பங்குதாரர்களுடன் கவனமாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் பொறுப் புகள் அதிகரிக்கும். கலைத் துறையினரே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

தன் பலம் பலவீனம் உணரும் தருணம் இது.  

உள்மனதில் ஓயாமல் சிந்தித்துக் கொண்டிருப்பவர்களே!

ராசிபலன்

உங்கள் பூர்வ புண்ணியாதிபதி சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், மாறுபட்ட யோசனைகள் மனதில் உதயமாகும். எதிர்பார்த்த பணம் வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கு வேலை கிடைக்கும். மகளின் ஆரோக்கியம் சீராகும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வது, விற்பது போன்ற முயற்சிகள் சாதகமாக அமையும்.

6ல் சூரியன் வலுவாக நிற்பதால், புது வேலை அமையும். அரசு காரி யங்கள் சாதகமாக முடியும். சர்ப்ப கிர கங்கள் உங்களுக்குச் சாதகமாக இல்லாததால், வேலைச் சுமை, வீண் பழி, வீடு, வாகனப் பராமரிப்புச் செல வுகள் வந்து போகும். செவ்வாய் சாத கமாக இருப்பதால், திடீர் பணவரவு உண்டு.

சனிபகவானும் 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய் வீர்கள். ராசிநாதன் புதன் 30ம் தேதி வரை 6ல் நிற்பதால், அலுப்பு, சலிப்பு, நரம்புக் கோளாறு, வீண் செலவுகள் வந்து போகும். 1ம் தேதி முதல் ராசிநாதன் சனியின் பிடியிலிருந்து விலகுவதால், உறவினர்களுடன் இருந்து வந்த விரிசல்கள் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவீர்கள்.

உழைப்பால் உயரும் வேளை இது.

காலம் தவறாதவர்களே!

ராசிபலன்

யோகாதிபதி செவ்வாயும், பாக்கி யாதிபதி குருபகவானும் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். விவாதங்கள், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகமாகும். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

உடன்பிறப்புக்கள் உங்களின் தியாக உள்ளத்தைப் புரிந்துக் கொள்வார்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும். 6ல் சுக்ரன் மறைந்திருப்பதால், கணவன்மனைவிக்குள் கருத்து மோதல், பிரிவு வந்து செல்லும். வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை.

5ல் நிற்கும் சனியுடன் சூரியனும் அமர்ந்திருப்பதால், பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனை யின்றி எந்த மருந்தும் உட்கொள்ள வேண்டாம். உறவினர் பகை வந்து நீங்கும். வியாபாரத்தில் புது நிறுவனங் களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சிகளை அதிகாரி கள் பாராட்டுவார்கள். கலைத் துறையினரே! உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

செல்வம், செல்வாக்கு கூடும் காலம் இது.

சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர்களே!

ராசிபலன்

சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், எதையும் திட்டமிட்டு செய்வீர்கள். இங்கிதமாகப் பேசுவீர்கள். புது வேலை கிடைக்கும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் மதிப்பு, மரியாதை கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள்.

உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். ராசிநாதன் சூரியன் சனியுடன் சேர்ந்து 4ம் வீட்டில் இருப்பதால், முன்கோபம், டென்ஷன், படபடப்பு வந்து போகும். ஜென்ம குரு தொடர்ந்துக் கொண்டிருப்பதால், புதியவர்களிடம் எச்சரிக்கையாகப் பழகவும். சிலரின் நம்பிக்கை துரோகத்தை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள்.

2ல் ராகுவும், செவ்வாயும் தொடர்வதால், ரத்த அழுத்தம், பேச்சால் பிரச்னை, கணுக்கால் வலி, பார்வைக் கோளாறு வந்து நீங்கும். பணப்பற்றாக் குறை ஏற்படும். வியாபாரத்தில் புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களைத் தேடுவீர்கள். பங்குதாரர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்ற ஒரு சந்தேகம் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருக்கும். கலைத் துறை யினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் நேரம் இது.

இடம், பொருள், ஏவல் அறிந்து எதையும் செய்பவர்களே!

ராசிபலன்

சூரியன் 3ல் அமர்ந்திருப்பதால், புதிய முயற்சிகள் யாவும் பலிதமாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தைரியம் பிறக்கும். சனிபகவானும் 3ல் வலுவாக அமர்ந்திருப்பதால், ஷேர் மூலம் பணம் வரும். சுக்ரன் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த பணம் வரும்.

தந்தைவழிச் சொத்து கிட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். ராகுவும், செவ்வாயும் ராசிக்குள் நிற்பதால், பிறர் மீது நம்பிக்கையின்மை, எதிலும் ஆர்வமின்மை, செரிமானக் கோளாறு, வாயுக் கோளாறால் நெஞ்சு வலி வந்து நீங்கும். சேமிப்புகள் கரையும்.

உங்கள் ராசிநாதன் புதனும் 30ம் தேதி வரை சனியுடன் நிற்பதால், கண், காது வலி, தொண்டைப் புகைச்சல் வந்து நீங்கும். 1ம் தேதி முதல் புதன் சாதகமாவதால், உறவினர், நண்பர் களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. வாடிக்கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். கலைத் துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

நினைப்பவை நிறைவேறும் தருணம் இது.

சுத்தம், சுகாதாரத்தை விரும்புபவர் களே!

ராசிபலன்

உங்கள் ராசிநாதன் சுக்ரன் 30ம் தேதி முதல் உங்கள் ராசிக்குள்ளேயே ஆட்சி பெற்று அமர்வதால், தொட்டது துலங்கும். எதிர்ப்புகள் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். ஆடை, அணிகலன்கள் சேரும். திருமணம் தள்ளிப் போனவர் களுக்கு கூடி வரும். சூரியனும், சனியும் 2ல் நிற்பதால், கண், பல் வலி வந்து நீங்கும்.

செலவினங்கள் அதிகமாகும். பிள்ளைகளை அன்பால் அர வணைத்துப் போகவும். அரசு காரி யங்கள் தாமதமாக முடியும். 6ல் கேது வலுவாக நிற்பதால், எதிர்பாராத பணவரவு உண்டு. நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு, மனை வாங்குவீர்கள். குரு 11ல் வலுவாக அமர்ந்திருப்பதால், ஆலயங்களைப் புதுப்பிக்க உதவுவீர்கள்.

எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் அனு கூலம் உண்டு. ராகுவும், செவ்வாயும் ராசிக்கு 12ல் மறைந்திருப்பதால், தூக்கமின்மை, வாழ்க்கைத் துணை வருக்கு மன உளைச்சல், அலர்ஜி, திடீர்ப் பயணங்கள், கடன் தொந்த ரவுகள் வந்து போகும். வியாபாரத்தில் அனுபவ அறிவைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத் துறையினரே! உங்களின் கலைத் திறன் வளரும்.

எதையும் சாதிக்கும் வல்லமை பெறும் வேளை இது.

நேர்வழியிலேயே பயணிப்பவர் களே!

ராசிபலன்

செவ்வாயும், ராகுவும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். குடும்பத் தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். புது இடம் வாங்குவது குறித்து யோசிப் பீர்கள். சகோதரர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். நட்பு வட்டம் விரியும்.

வேற்று மாநிலம், மாற்று மொழியி னரால் உதவிகள் உண்டு. சின்னச் சின்ன ஏமாற்றம், வீண் விரயம், சிறு சிறு நெருப்புக் காயங்கள் ஏற்படக்கூடும். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், இங்கிதமாகப் பேசத் தொடங்குவீர்கள். கொடுத்த பணத்தையும் நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். கல்யாண முயற்சியில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். சிலர் திடீரென வீடு மாற வேண்டி வரும்.

குருபகவான் 10ல் நீடிப்பதால், மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். சனியும், சூரியனும் ராசிக்குள் நிற்பதால், சோர்வு, களைப்பு, வீண் டென்ஷன், மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் ரசனையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப சில மாற்றங்களைச் செய்யுங்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. கலைத்துறையினரே! வருமானம்  வழி பிறக்கும்.  

விடாமுயற்சியால் வெற்றி பெறும் காலம் இது.

முன்வைத்த காலை பின் வைக்காதவர்களே!

ராசிபலன்

9ல் நிற்கும் ராசிநாதன் குருவாலும், 10ல் நிற்கும் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாயாலும் தொட்ட காரியங்கள் துலங்கும். அசாத்தியமான துணிச்சல் அதிகரிக்கும். வீரியத்தை விட காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வதற்கு முயல்வீர்கள்.

மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு வரும். இளைய சகோதரியின் திரு மணத்தை முன்னின்று நடத்துவீர்கள். சகோதரரின் பிரச்னையைத் தீர்த்து வைப்பீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஆனாலும், பாக்கி யாதிபதி சூரியன் சனியுடன் 12ல் நிற்பதால், அடுத்தடுத்து செலவுகளும், வீண் டென்ஷனும் இருக்கும். தந்தை யின் உடல் நலத்தில் கவனம் தேவை.

30ம் தேதி வரை புதனும் 12ல் நிற்பதால், பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள் இனி உங்களைப் புரிந்து நடப்பார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். கலைத்துறையினரே! பெரிய நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும்.  

தொடர் உழைப்பால் தொடங்கியதை முடிக்கும் தருணம் இது.    

மரியாதை தந்து மரியாதை பெறுபவர்களே!

ராசிபலன்

8ல் நிற்கும் குருவால், அவ்வப் போது சோர்ந்து போவீர்கள். உங்கள் மீதான நம்பிக்கை கொஞ்சம் குறையும். வருங்காலத்தை நினைத்து அவ்வப் போது அச்சப்படுவீர்கள். கவலைப் படாதீர்கள். சூரியனும், ராசிநாதன் சனியும் பதினோராவது வீட்டில் நிற்பதால், கேட்ட இடத்தில் ஓரளவு பணம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். மூத்த சகோதரர் உதவுவார்.

அரசால் ஆதாயம் உண்டு. வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சிலருக்கு வேலை கிடைக்கும். சுக்ர னும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், சுபச் செலவுகள் அதிக மாகும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டுத் திருமணம், நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். தடைப்பட்ட திருமணப் பேச்சு நல்ல விதத்தில் முடியும்.

செவ்வாய், ராகுவுடன் நிற்பதால், சொத்துப் பிரச்னை தலைதூக்கும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். உடன்பிறந்தவர்களை அனுசரித்துப் போகவும். வியாபாரத்தில் லாபத்தை பெருக்க நவீன விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். புது வாடிக்கை யாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தி யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். கலைத் துறையினரே! மூத்த கலைஞர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள்.

அனுபவ அறிவால் சாதிக்கும் வேளை இது.

குற்றம் பார்க்காத பண்பாளர்களே!

ராசிபலன்

உங்களின் பிரபல யோகாதி பதிகளான சுக்ரனும், புதனும் சாதக மான வீடுகளில் செல்வதால், பணம் எதிர்பார்த்த வகையில் வரும். ஷேர் மூலம் பணம் வரும். வீடு வாங்குவது, கட்டுவது சாதகமாக அமையும். பிள்ளை களை உற்சாகப்படுத்த அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மூத்த சகோதரர்கள் மதிப்பார்கள். ராகுவும், செவ்வாயும் 8ல் நிற்பதால், வீடு, மனை வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரிபார்த்து வாங்குங்கள்.

தலைச்சுற்றல், செரிமானக் கோளாறு, சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. சூரியனும், புதனும் 10ல் நிற்பதால், வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். தந்தை வழியில் உதவிகள் கிட்டும். பதவிகள் தேடி வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் குறையும். வேலையாட்கள், வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். பங்குதாரர்களுடன் வளைந்து கொடுத்துப் போகவும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை அதிகாரிகள் குறைத்து மதிப்பிடுவார்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புத் திறன் வளரும்.

முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டிய காலம் இது.

எதிலும் தரத்தை விரும்புபவர்களே!

ராசிபலன்

புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். உங்களின் நட்பு வட்டம் விரியும். உலக நடப்புக்கேற்ப உங்களையும் கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். புது வேலை அமையும். திடீர்ப் பயணங்கள் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். சொந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள்.

செவ்வாய் 7ல் நிற்பதால், சகோத ரர்களால் செலவினங்கள் இருந்தாலும் நிம்மதி உண்டு. நெஞ்சு எரிச்சல், பின்மண்டையில் வலி வந்து போகும். சனி சாதகமாக இருப்பதால், சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வீடு, மனை, வாகனம் அமையும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்த எண்ணுவீர்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சூரியன் 9ல் சனியுடன் நிற்பதால், தந்தையாருடன் மனக்கசப்பு, அவருக்கு கை, கால் வலி வந்து போகும்.

ராகு 7ல் நீடிப்பதால், வாழ்க்கைத் துணைவருடன் விவாதம் வேண்டாம். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வேலையாட் களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. பழைய பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். உத்தி யோகத்தில் நிம்மதியற்ற போக்கு நில வும். சக ஊழியர்களால் பிரச்னைகள் வெடிக்கும். கலைத்துறையினரே! சம்பள பாக்கி கைக்கு வரும்.

ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்கும் நேரம் இது.