அவள் 16
Published:Updated:

ஆன்லைன் ராசிபலன்!

ஆன்லைன் ராசிபலன்!

ப்போது யூத் உலகத்தில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ஹைக், ஸ்டேட்டஸ், லைக், ஷேர் என்றுதான் பேச்சு. இவர்களுக்கு எல்லாம் ஆன்லைன் ஸ்டேட்டஸ் எப்படி இருக்கும் என்று ஒரு ராசிபலன் எழுதினால் என்ன..?!

ஆன்லைன் ராசிபலன்!

மேஷம் கலாய்த்தாலும் சளைக்காமல் போட்டோ போடும் மேஷ ராசி அன்பர்களே! சென்ற வாரம் நீங்கள் அப்லோடு செய்த ஃபேஸ்புக் புரொஃபைல் பிக்சருக்கு இன்னும் லைக்ஸ் குவியவில்லை என்று கவலைப்பட வேண்டாம். இந்த வாரம் அதையே லைட்டாக போட்டோஷாப் செய்து அப்டேட் செய்யுங்கள். 500+ லைக்ஸ் ரெண்டே நாளில் குவியும். தவறாமல் போஸ்ட் போட்டு ‘நான் உசுரோடதான் இருக்கேன்’ என்று அறிவித்து வந்தால், கூடிய விரைவில் வைரல் ஆவீர்கள்.

ரிஷபம் மீமில் மேட்டரே இல்லையென்றாலும் ஷேர் செய்யும் ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் நீங்கள் ஷேர் செய்யும் மீம்கள் எல்லாம் படுஹிட் ஆகி கமென்ட்ஸ் குவியும். கமென்ட்களுக்கு ரிப்ளை செய்வதால் ஆதாயம் உண்டு. நீங்கள் உங்கள் ஃப்ரெண்ட்ஸை கலாய்த்து போடும் ட்வீட்டுக்கு சம்பந்தமே இல்லாமல் யாரிடம் இருந்தாவது ரீ-ட்வீட் வம்பு வந்தால் ஜாக்கிரதை.

மிதுனம் காறித் துப்பினாலும் கேம் ரெக்வஸ்ட் அனுப்பும் மிதுன ராசி அன்பர்களே! ‘கிரிமினல் கேஸ்’ விளையாட்டில் இந்த வாரம் சிறிது சறுக்கல் ஏற்படும். உங்கள் ஃப்ரெண்டின் பிறந்த நாளுக்கு நீங்கள் போடும் ஸ்டேட்டஸுக்கு லைக்ஸ் பிய்த்துக்கொள்ள, அதனால் உங்களுக்கு ட்ரீட் கிடைக்கும் ஆதாயம் உண்டு.

கடகம் பாரபட்சம் பார்க்காமல் எல்லோருக்கும் லைக் போடும் கடக ராசி அன்பர்களே! போன வாரம் நீங்கள் போட்ட டப்ஸ்மாஷ் பெரிய ஹிட் அடித்த அதே உத்வேகத்தோடு, இந்த வாரமும் செலக்டிவ்வாக டயலாக் எடுத்து முயற்சி செய்தால் ஹிட்டோ ஹிட்டுதான்! ரொம்ப நாள் தூங்கிக்கொண்டிருக்கும் உங்கள் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் வாட்ஸ்அப் குரூப் இந்த வாரம் திடீரென ஆக்டிவ் ஆகும். 3G பேக் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம் வாட்ஸ்அப் குரூப்பில் தனியாகப் பேசும் விருச்சிக ராசி அன்பர்களே! ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அனுப்பும்போது கவனத்துடன் சரிபார்த்து கிராப் செய்து அனுப்பாவிட்டால், சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரலாம். நெருங்கிய தோழியின் பிறந்தநாளுக்கு டக்கராக ஒரு கொலாஜ் போடுங்கள். அப்போது மற்ற நண்பர்களை பிளாக் செய்வது மற்ற சர்ச்சைகளைத் தவிர்க்கும்.

சிம்மம் எல்லாவற்றுக்கும் எடக்கு மடக்காகவே கமென்ட் செய்யும் சிம்ம ராசி அன்பர்களே! டச்சிலேயே இல்லாத பழைய தோழி உங்களை போக் செய்வார். பெண்டிங்கிலேயே வைத்திருந்த வீடியோவை ஃப்ரீ டைமில் பார்க்க யூடியூபில் தேடுவீர்கள். கிடைக்காமல் போகலாம். மனசைத் தளரவிட வேண்டாம்.

கன்னி சொந்த மூஞ்சியை புரொஃபைல் பிக்சராக வைக்காத கன்னி ராசி அன்பர்களே! இது உங்களுக்கு சுத்தல் வாரம். எதை அப்லோடு/டவுன்லோடு செய்தாலும் நெட் சிக்னல் கொடுக்காது; பொறுமை அவசியம். நீங்கள் போடும் மொக்கை போஸ்ட்டுக்கும் லைக்ஸ் அண்ட் கமென்ட்ஸ் குவியும்போது நெட்வொர்க் படுத்தின பாடு மறந்துபோகும்.

துலாம் ஒரு DSLR வாங்கி விட்டு போட்டோகிராஃபி பேஜ் ஆரம்பித்த துலாம் ராசி அன்பர்களே! தெரியாத நம்பர், மெம்பரிடம் இருந்து ஹைக் மெசேஜோ, ஃபேஸ்புக் சாட்டோ வர வாய்ப்புகள் அதிகம்... உஷார்! சரியில்லை என்று மனசுக்குப் பட்டால் உடனே பிளாக் செய்துவிடவும்.

மகரம் வாட்ஸ்அப் குரூப்பில் அமைதியாக இருக்கும் மகர ராசி அன்பர்களே! எப்போதும் ஃபர்வோர்ட்ஸ் அனுப்பியே கொல்லும் ஒரு குரூப்பின் அட்மினை நேரில் சந்திக்க நேரிடலாம். ‘ஏன் குரூப்ல ஆக்டிவ்வா இல்ல?’ என்று அவர் கேட்டால், ‘மொக்கையா இருக்கு!’ என்று உண்மையைச் சொல்லாமல் சமாளிக்கவும்.

தனுசு ‘லைக் மை புரொஃபைல் பிக்சர்’ என்று மெசேஜ் செய்யும் தனுசு ராசி அன்பர்களே! போன வாரம் எக்ஸாம் பிஸியில் இருந்துவிட்டு, இந்த வாரம் ஆவலோடு fb வந்தால் 45 நோடிஃபிகேஷன்ஸ், 19 ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட், 26 மெசேஜ்கள் காட்டும். எக்ஸாம்ஸ்தான் முடிந்துவிட்டதே... பச்சைப் பொட்டு வைத்துக்கொண்டு என்சாய் ஆன்லைனில்!

கும்பம் தவறாமல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மாற்றும் கும்ப ராசி அன்பர்களே! புளூ டிக்கால் உங்களுக்கு ஆபத்து வரலாம், ஜாக்கிரதை. வாட்ஸ்அப் மெசேஜ் படித்துவிட்டு, ஏதாவது முக்கிய வேலையில் ரிப்ளை அனுப்ப மறந்தால், புளூ டிக் காட்டிக்கொடுத்துவிடும். பவர் ஸ்டார் மீம்களை கைவசம் வைத்திருப் பது பாதுகாப்பு.

மீனம் எல்லா குரூப்புக்கும் மொக்கை மெசேஜ் டொனேட் செய்து கொல்லும் மீன ராசி அன்பர்களே! வித்தியாசமாக யோசித்து மீம், காமெடி, ட்ரோல் எல்லாம் உருவாக்கி நண்பர்களிடம் பகிரும்போது, ‘எங்கேர்ந்து மச்சி சுட்ட?’ கேள்வியை எதிர்கொள்ளலாம். விஜய்காந்த்தின் பக்கம் போகாமல் இருப்பது நலம்.

தா.நந்திதா, பா.அபிரக்‌ஷன்ஓவியம்: பிரேம் டாவின்சி