Published:Updated:

ராசிபலன்

டிசம்பர் 8 முதல் டிசம்பர் 21 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

டிசம்பர் 8 முதல் டிசம்பர் 21 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

Published:Updated:

காலம் தவறாமையை கடைப் பிடிப்பவர்களே!

ராசிபலன்

உங்கள் ராசிக்கு சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை நல்ல விதமாக முடியும். மனைவிவழியில் சில உதவிகள் கிடைக்கும். மனைவியின் ஆரோக்கியம் சீராகும். பயணங்கள் இனிதாக அமையும். நீண்டகால பிரார்த்தனைகள் நிறைவேறும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் வீட்டில் நிற்பதால், சொத்து வாங்கும் அமைப்பு உண்டாகும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். வழக்குகள் சாதகமாகும். என்றாலும், ராகுவுடன் நிற்பதால், பிறர் மீது நம்பிக்கையின்மை, தோலில் நமைச்சல், சின்னச் சின்ன விவாதங்கள் வந்து போகும். குரு தொடர்ந்து உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், பிள்ளைகள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள்.

சூரியனும், சனியும் உங்களுக்குச் சாதகமாக இல்லாததால், அவ்வப்போது கோபப்படுவீர்கள். எதிலும் உஷாராக இருக்கவும். தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கையாளர்கள் உங்கள் மனம் போல் நடந்துகொள்வார்கள்.

உத்தியோகத்தில் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள்.

எதிர்ப்புகளையும் தாண்டி வெற்றி பெறும் நேரம் இது.

வெளுத்ததெல்லாம் பால் என நினைத்து ஏமாறுபவர்களே!

ராசிபலன்

கேது லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், போராட்டங்களைக் கடந்து முன்னேறத் துடிப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உறவினர், நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைத்தாலும் பற்றாக் குறையும் நீடிக்கும்.

பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். என்றாலும் 5-ல் ராகுவும், செவ்வாயும் தொடர்வதால், அவர்களால் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். சகோதரர்களுடன் சச்சரவு வரும். சொத்து வாங்குவது, விற்பதில் தடை, தாமதம் ஏற்படும். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். கல்யாண முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். ராசிநாதன் சுக்ரன் ராசிக்கு 6-ல் மறைந்திருப்பதால், அலர்ஜி, சளித் தொந்தரவு ஏற்படக்கூடும்.

கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். சூரியன் சாதகமாக இல்லாததால், அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். வேலையாட்கள், பங்குதாரர் களால் பிரச்னைகள் வெடிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். கலைத்துறை யினரே! உங்களுடைய படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.

எங்கும் எதிலும் பொறுமை காக்க வேண்டிய வேளை இது.

அனைவருக்கும் மனித நேயத்துடன் உதவுபவர்களே!

ராசிபலன்

சனிபகவான் 6-ல் நிற்பதால், சவாலில் வெற்றி பெறுவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். எதிர்பாராத தொகை ஒன்று கைக்கு வரக்கூடும்.

16-ம் தேதி வரை சூரியன் 6-ல் நிற்பதால், எதிர்த்தவர்கள் நண்பர்கள் ஆவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. 16-ம் தேதி முதல் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், அடிக்கடி கோபப்படுவீர்கள். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். செவ்வாய் 4-ல் நிற்பதால், சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். சொந்தங்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள்.

வியாபாரம் மந்தமாக இருக்கும். புது முதலீடுகளைத் தவிர்க்கவும். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் சின்னச் சின்ன அவமானங்கள் ஏற்படக்கூடும். மேலதிகாரி சில நேரத்தில் கடிந்து பேசினாலும் பல சமயங்களில் கனிவாக நடந்து கொள்வார். கலைத்துறை யினரே! கிசுகிசுத் தொந்தரவுகளும், வதந்திகளும் வந்து போகும்.
வாக்கு சாதுர்யத்தால் பிரச்னைகளைத் தீர்க்கும் தருணம் இது.

எதையும் உடனே கிரகிக்கும் அறிவாற்றல் மிக்கவர்களே!

ராசிபலன்

உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் சாதகமாக இருப்பதால், எதிலும் வெற்றி கிட்டும். எதிர்ப்புகள் அடங்கும். சகோதரர்களுக்கிடையே மனம் விட்டுப் பேசி நல்ல முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, மனை வாங்குவது சாதகமாக முடியும்.

மகளுக்கு நல்ல வரன் அமையும். சுக்ரன் சாதகமாக இருப்பதால், புது  வேலை கிடைக்கும். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். சிலர் நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.

17-ம் தேதி முதல் சூரியன் 6-ம் வீட்டில் அமர்வதால், வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். திடீர் பணவரவு உண்டு. அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும். குருபகவான் சாதகமாக இருப்பதால், திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தைவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. வேலையாட்களால் வியாபாரத் தின் தரம் உயரும். உத்தியோகத்தில் பதவி, சம்பள உயர்வு உண்டு. எதிர் பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கலைத் துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும்.

அச்சம் விலகி அதிகாரம் பெருகும் வேளை இது.

பிரச்னைகளைப் பெரிதுபடுத்தாமல் சமாதானத்தால் சாதிப்பவர்களே!

ராசிபலன்

உங்களுக்குச் சாதகமாக சுக்ரன் நிற்பதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீட்டை விரிவு படுத்தி கட்டுவது போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும். 16-ம் தேதி வரை ராசிநாதன் சூரியன் 4-ல் நிற்பதால், அரசால் ஆதாயம் உண்டாகும்.

வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். புறநகர்ப் பகுதியில் வீடு அல்லது மனை வாங்குவீர்கள். 17-ம் தேதி முதல் 5-ல் அமர்வதால், பிள்ளை களை அவர்களின் எண்ண ஓட்டத் திலேயே சென்று பிடிப்பது நல்லது.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், உறவினர்களால் உதவிகள் உண்டு. தாய்மாமன் வழியில் உதவிகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். ராசிக்கு 2-ல் செவ்வாயும், ராகுவும் தொடர்வதால், வீண் விரையம், கண் எரிச்சல், செரிமானக் கோளாறு வந்து நீங்கும். ராசியிலேயே குரு நிற்பதால், யாரை நம்புவது என்கிற குழப்பம் வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருக்கவும். 

வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த புது சலுகைகளை அறிமுகம் செய்வீர் கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். கலைத் துறையினரே! வெகுநாட்களாக தடைப்பட்ட வாய்ப்பு இப்போது உங்களுக்குக் கூடி வரும்.

தொடர் முயற்சியால் சாதிக்கும் காலம் இது.    

பழைய கலைப் பொருட்களை நேசிப்பவர்களே!

ராசிபலன்

சூரியன் சாதகமான வீடுகளில் சஞ்சாரம் செய்வதால், எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். நாடாளு பவர்களின் நட்பு கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த வகையில் பணம் வரும்.

விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். நவீன ரக சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சனி பகவான் 3-ம் வீட்டில் நிற்பதால், மனோ பலம் கூடும்.

வேற்று மாநிலத்தவர்கள், மாற்று மொழியினரால் ஆதாய மடைவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். ராசிக்குள்ளேயே ராகுவும், செவ்வாயும் நிற்பதால், மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உடன்பிறந்தவர்களால் மன வருத்தம் வரும். சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. பழைய கசப்பான சம்பவங்களை நினைவுகூர்ந்து கோபப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள்.

வியாபாரம் ஓரளவு லாபம் தரும். வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் பாராட்டுகள் கிடைக்கும். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார்.

நிதானத்தால் நெருக்கடிகளை நீந்திக் கடக்கும் நேரம் இது.  

விடாமுயற்சியால் முதலிடத்தைப் பிடிப்பவர்களே!

ராசிபலன்

ராசிநாதன் சுக்ரன் ராசியிலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், உடல் நலம் சீராகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். திடீர் பணவரவு உண்டு. எதிலும் ஆர்வம் உண்டாகும். 17-ம் தேதி முதல் சூரியன் 3-ல் நுழைவதால், மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். எதிர்பார்ப்புகள் யாவும் நல்ல விதத்தில் முடியும்.

உங்கள் பாக்கியாதிபதி புதன் வலுவாக இருப்பதால், உறவினர்கள், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். செவ்வாயும், ராகுவும் 12-ல் நிற்பதால், அடுத்தடுத்து வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவதற்காக கொஞ்சம் போராட வேண்டி வரும். பழைய கடனை நினைத்து அச்சப் படுவீர்கள். பாதச் சனி தொடர்வதால், யாரையும் எடுத்தெறிந்துப் பேச வேண்டாம்.

வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். கடையை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கோரிக்கையை மேலதிகாரி ஏற்பார். சக ஊழியர்களின் கடின உழைப்பால் நிர்வாகத்தின் லாபம் உயரும். கலைத் துறையினர்களே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.

கால நேரம் கனிந்து வரும் தருணம் இது.

பல துறைகளிலும் ஆழ்ந்த சிந்தனை கொண்டவர்களே!

ராசிபலன்

17-ம் தேதி முதல் உங்கள் ராசியை விட்டு சூரியன் விலகுவதால், மனஇறுக்கம், கண் வலியிலிருந்து விடுபடுவீர்கள். ஆனால் 2-ல் அமர்வதால், முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்க நேரிடும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து மோதல் விலகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். தள்ளுபடி விற்பனையில் வாகனம் வாங்குவீர்கள். புது டிசைனில் மனைவிக்கு ஆபரணம் வாங்கித் தருவீர்கள்.

நீண்ட நாட்களாக திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் கூடி வரும். செவ்வாய் சாதகமாக இருப்பதால், கௌரவம் ஒருபடி உயரும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். 11-ம் வீட்டில் ராகு நிற்பதால், வழக்கில் வெற்றி உண்டு. ஆன்மிகப் பெரி யோர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஏழரைச் சனி நடப்பதால், யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். தூக்கம் குறையும்.

வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள்.  அதனால் லாபம் கூடும். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

கடின உழைப்பால் இலக்கை எட்டும் வேளை இது.

மன்னிக்கும் மனப்பக்குவம் கொண்டவர்களே!

ராசிபலன்

உங்களின் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் வலுவாக இருப்பதால்,  புதிய முயற்சிகள் யாவும் பலிதமாகும். சகோதரர்களால் பயனடைவீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

17-ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால், சில நேரங்களில் எதிர்மறை எண்ணங்கள் வரும். சின்னச் சின்ன சச்சரவுகள் வரக் கூடும். அரசாங்க விஷயங்கள் தாமத மாக முடியும். சுக்ரன் சாதகமாக இருப்பதால், வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். 

சர்ப்பக் கிரகங்கள் உங்களுக்குச் சாதகமாக இல்லாததால், சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்த முற்படுவார்கள். குருபகவான் சாதகமாக இருப்பதால், பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். ஏழரைச் சனி தொடர்வதால், எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும்.

வியாபாரத்தில் திடீர் லாபம், யோகம் உண்டாகும். வாடிக்கை யாளர்களின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.       உங்களுடைய ஆலோசனைகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வார்கள். கலைத் துறையினரே! எதிர்பார்த்த நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும்.

பலவீனங்களைச் சரி செய்துகொள்ள வேண்டிய காலம் இது. 

உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் கடந்த காலத்தை மறக்காதவர்களே!

ராசிபலன்

3-ம் வீட்டில் கேது நிற்பதால், உங்களை வித்தியாசமாக யோசிக்க வைப்பார். மற்றவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் உங்களின் சிந்தனைக்கு உட்படுத்தி முடிவெடுப்பீர்கள். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால், தொட்ட காரியம் துலங்கும்.

குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளும் உங்களைப் புரிந்து கொள்வார்கள். படிப்படியாக குடும்ப வருமானம் உயரும். தொழிலுக்காக குறைந்த வட்டியில் புதுக் கடன் கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். சூரியன் 17-ம் தேதி முதல் 12-ல் மறைவதால், கொஞ்சம் அலைச்சல், தூக்கமின்மை, சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.

செவ்வாய் சாதகமாக இருப்பதால், உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலை களைப் பகிர்ந்துகொள்வார்கள். புதிதாக சொத்து வாங்குவீர்கள். குரு 8-ல் மறைந்திருப்பதால், மற்றவர்கள் விவகாரத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம்.

வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். கடையை இடமாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.

அனைவராலும் மதிக்கப்படும் நேரம் இது.

வந்தவர்களை வாழ வைப்பவர்களே!

ராசிபலன்

பிரபல யோகாதிபதிகளான சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். பழைய கடன் பிரச்னையைத் தீர்க்க வழி பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை முடிப்பீர்கள்.

உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். செவ்வாய் 8-ல் மறைந்திருப்பதால், சகோதரர்களால் அலைச்சல் இருக்கும். வீடு, நிலம் சம்பந்தப்பட்ட முக்கியமான பத்திரங்கள், வணங்களையெல்லாம் பாதுகாத்து வையுங்கள். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.புது வேலை கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.

குரு சாதகமாக இருப்பதால், புதிய சிந்தனைகள் உதயமாகும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும்.

வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் இல்லாமல் போகும். கலைத்துறையினரே! உங்களின் கற்பனைத் திறன் வளரும்.

சிந்தித்துச் செயல்பட வேண்டிய வேளை இது.

நடப்பதெல்லாம் நன்மைக்கே என நினைப்பவர்களே!

ராசிபலன்

உங்கள் ராசிநாதன் குருபகவான் 6-ம் வீட்டிலேயே இருப்பதால், எந்தக் காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். உங்களுக்குள் ஒரு சலிப்பு வரும். ஆனாலும், புதன் ஒரளவு சாதகமாக இருப்பதால், மகிழ்ச்சி உண்டாகும்.

பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் குறையும். மூத்த சகோதரர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். அவர்களால் பொருளுதவியும் கிடைக்கும். 9-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களுக்கும் தந்தையாருக்கும் இடையே மன வருத்தங்களை ஏற்படுத்தும் சூரியன் 17-ம் தேதி முதல் 10-ல் நுழைவதால், தந்தையாரின் உடல் நிலை சீராகும்.அரசால் அனுகூலம் உண்டு. வேலைக்கு யற்சித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால், பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றி புதிதாக வாங்குவீர்கள். ஆனால், சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால், கணவன்-மனைவிக்குள் சிலர் கலகத்தை உண்டாக்க முயற்சி செய்வார்கள்.

வியாபாரத்தில் பாக்கிகள் வசூலா கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆலோசனையின்றி புது முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள்.

ராஜ தந்திரத்தால் முன்னேறும் நேரம் இது.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism