Election bannerElection banner
Published:Updated:

இந்த வார ராசிபலன் ஜனவரி 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்

இந்த வார ராசிபலன் ஜனவரி 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்
இந்த வார ராசிபலன் ஜனவரி 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்

இந்த வார ராசிபலன் ஜனவரி 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கும்

மேஷம்:

மேஷராசி அன்பர்களே! எதிர்பார்த்த பணவரவு இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.   செலவுகளைச் சமாளிக்கத் தேவையான பணம் கடனாகக் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறிய அளவில் பாதிக்கப்பட்டாலும் உரிய சிகிச்சையினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். திருமணத்துக்குக் காத்திருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமைவது மகிழ்ச்சி தரும்.

அலுவலகத்தில் வேலை  பார்ப்பவர்களுக்கு பணியின் காரணமாக வெளி மாநிலங்களுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அதனால் சில சலுகைகளும் கிடைக்கும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என்று சொல்வதற்கு இல்லை. பணியாளர் களிடம் போதிய அளவு ஒத்துழைப்பு கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை.

கலைத்துறையினருக்கு எதிர்பாராத நல்ல வாய்ப்புகளும், அதனால் அதிக பணவரவும் கிடைத்து மகிழ்ச்சி தரும்.

மாணவ மாணவியரைப் பொறுத்தவரை பாடங்களில் மிகவும் ஆர்வம் உண்டாகும். நினைவாற்றலும் புரிந்துகொள்ளும் திறனும் அதிகரிக்கும்.

குடும்பநிர்வாகத்தில் உள்ள பெண்மணிகளுக்கு பெரிதாக கஷ்டம் எதுவும் இல்லை. வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
அசுவினி: 16,17,18,20,21; பரணி: 17,18,19,21; கார்த்திகை: 15,18,19,20 

அதிர்ஷ்ட எண்கள்: 3,4

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
அசுவினி: 15,19; பரணி:15,16,20; கார்த்திகை: 16,17,21

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்கண்ட  பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விருத்தன் ஆகி, பாலன் ஆகி, வேதம் ஓர் நான்கு உணர்ந்து
கருத்தன் ஆகி, கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்;
அருத்தன் ஆய ஆதிதேவன் அடியினையே பரவும்
நிருத்தர்கீதர் இடர்களையாய், நெடுங்களம் மேயவனே

ரிஷபம்:

ரிஷபராசி அன்பர்களே! பணவரவுக்குக் குறைவில்லை. கணவன் - மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் தங்கள் தேவை அறிந்து உதவ முன்வருவார்கள். வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும். 

அலுலகத்தில் உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயரும் பாராட்டுகளும் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த நீங்கள் எதிர்பாராத இடங்களில் இருந்தும் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். பற்று வரவு விஷயத்தில் மட்டும் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு சிறுசிறு தடைகளுக்குப் பிறகே வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது எதிர்காலத்துக்கு நல்லது.

மாணவ மாணவியர் பழக்கவழக்கங்களில் கவனமாக இருப்பது அவசியம். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல முறையில் தேர்ச்சி பெற முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மிகவும் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். அலுவலகத்தில் சம்பள உயர்வு போன்ற சலுகைகளை எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:
கார்த்திகை:15,18,19,20; ரோகிணி: 15,16,19,20,21; மிருகசீரிடம்: 15,16,17,20,21

அதிர்ஷ்ட எண்கள்: 5,9

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
கார்த்திகை: 16,17,21; ரோகிணி: 17,18; மிருகசீரிடம்: 18,19

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்- விநாயகனே
விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனுமாந் தன்மையினாற்
கண்ணிற பணிமின் கனிந்து

மிதுனம்:  

மிதுனராசி அன்பர்களே! தாராளமான பணவரவு உண்டு. நெருங்கிய உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சையினால் நிவாரணம் பெறுவீர்கள். வீண் செலவுகள் ஏற்படாது என்பது ஆறுதலான விஷயம்.

அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்னைகள் இப்போது சரியாகும். அதனால் மனதில் தெளிவு பிறக்கும். பணிகளை முழு ஈடுபாட்டுடன் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

வியாபாரத்தில் கடுமையாக உழைத்தால் மட்டுமே ஓரளவாவது லாபம் எதிர்பார்க்கமுடியும். தேவையான உதவிகள் உங்களைத் தேடி வரும்.

கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகள் கிடைக்கவும் அதனால் தாராள பணவரவுக்கும் வாய்ப்பு உள்ளதால் உற்சாகமாக இருப்பீர்கள்.

மாணவ மாணவியர் விளையாட்டாக இருக்காமல் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு போதிய பணவரவு இருப்பதால் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். வேலைக்குச் செல்பவர்கள் அலுவலகத்தில் சிற்சில சலுகைகளை எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
மிருகசீரிடம்: 15,16,17,20,21; திருவாதிரை: 16,17,18,21; புனர்பூசம்: 15,17,18,19

அதிர்ஷ்ட எண்கள்: 7,9

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
மிருகசீரிடம்: 18,19; திருவாதிரை: 15,19,20; புனர்பூசம்: 16,20,21

வழிபடவேண்டிய தெய்வம்: மகா விஷ்ணு

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27  முறை பாராயணம் செய்யவும்.

ஊரிலேன் காணியில்லை உறவுமற் றொருவரில்லை
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர்க் களைக ணம்மா அரங்கமா நகருளானே.

கடகம்:

கடகராசி அன்பர்களே! வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு வரும். வீண்செலவுகள் ஏற்பட சாத்தியமில்லை. கணவன் - மனைவியிடையில் கருத்துவேறுபாடு தோன்றக்கூடும் என்பதால் ஒருவரை ஒருவரை அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

வேலைக்குச் செல்பவர்கள் அலுவலகத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.

வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணம் கொடுப்பதிலும் வாங்குவதிலும் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த அளவுக்கு வருமானமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமான சூழ்நிலை நிலவும்.

மாணவ மாணவியர் மனதில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்பட்டு படிப்பில் கவனம் செலுத்தமுடியாதபடி செய்துவிடும் என்பதால் தியானம் செய்வது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு நிம்மதியான வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகள் சக பணியாளர்களிடம் அன்பாகப் பழகவும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
புனர்பூசம்: 15,17,18,19; பூசம்: 15,16,18,19,20; ஆயில்யம்: 15,16,17,19,20,21

அதிர்ஷ்ட எண்கள்: 4,5

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
புனர்பூசம்: 16,20,21; பூசம்: 17,21; ஆயில்யம்: 18

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்

பரிகாரம்: தினமும் காலையில்  வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டே எமக்கவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடென்ன கூட்டினியே! 

சிம்மம்:

சிம்மராசி அன்பர்களே! பணவரவு திருப்தி தரும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். அவ்வப்போது சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.

அலுவலகத்தில் நீங்கள் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் உரிய அங்கீகாரம் கிடைப் பதற்கு தடங்கல் ஏற்படும். அதைப் பெரிது படுத்தாமல் உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துவது எதிர்காலத்துக்கு நல்லது.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் உற்சாகமாக வேலை செய்வார்கள். இந்த வாரம் கடன் வாங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு கலைநிகழ்ச் சியில் கலந்துகொள்வதற்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

மாணவ மாணவியர்கள் உற்சாகமாக படிப்பில் கவனம் செலுத்துவார்கள். வெளிநாடு சென்று படிக்க விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்பும் பண உதவியும் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் இந்த வாரம் எல்லா விஷயங்களிலும் பொறுமை காப்பது மிகவும் நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகத்தில் இந்த வாரம் எந்த சலுகையையும் எதிர்பார்க்கமுடியாது.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
மகம்: 16,17,18,20,21; பூரம்: 17,18,19,21; உத்திரம்: 15,18,19,20 

அதிர்ஷ்ட எண்கள்: 4,7 

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
மகம்: 15,19; பூரம்: 15,16,20; உத்திரம்: 16,17,21

வழிபடவேண்டிய தெய்வம்: சூரிய பகவான்

பரிகாரம்:  தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நாடினர் காண்கிலர் நான்முகனுந் திருமால் நயந்தேத்தக்
கூடலர் ஆடலர் ஆகிநாளுங் குழகர் பலிதேர்வார்
ஏடலர் சோர எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்
பாடலர் ஆடல ராய்வணங்கும் பருதிந் நியமமே.

கன்னி:

கன்னிராசி அன்பர்களே! வருமானம் திருப்தி தருவதாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.  நெருங்கிய உறவினர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி சுமுகமான உறவு நீடிக்கும்.  குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகக் கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். திருமணத்துக்கு வரன் தேடி வந்தவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.

வேலைக்குச் செல்பவர்கள் அலுவலகத்தில் பொறுமையாக இருப்பதுடன், வேலைகளில் கூடுதல் கவனத்துடன் ஈடுபடுவது மிகவும் அவசியம். 

வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் லாபம் குறைவாகத்தான் இருக்கும். வியாபா ரத்தில் புதிய முதலீடுகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். கடனும் வாங்க வேண்டாம்.

கலைத்துறையினருக்கு உடல்நலன் சற்று பாதிக்கப்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும். உங்கள் வளர்ச்சி மற்றவர்களை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

மாணவ மாணவியருக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை நன்றாகப் புரிந்துகொள்ளும் திறமை கூடும். விளையாட்டு மற்றும் போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரம் இது. பணவரவு திருப்தி தரும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகத்தில் தங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
உத்திரம்:15,18,19,20; அஸ்தம்: 15,16,19,20,21; சித்திரை: 15,16,17,20,21

அதிர்ஷ்ட எண்கள்: 2,6

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
உத்திரம்: 16,17,21; அஸ்தம்: 17,18; சித்திரை: 18,19

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
சுந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.

துலாம்:

துலாம்ராசி அன்பர்களே! எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு உண்டு. தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கு இல்லை. கணவன் - மனைவி இடையில் அந்நி யோன் யம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நீண்டநாள்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்தி இப்போது உங்களுக்குக் கிடைக்கும்.

வேலை பார்த்து வரும் அன்பர்கள் இந்த வாரம் தங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் தாங்களே செய்வது நல்லது. சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. ஆனாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் தடை இல்லாமல் கிடைக்கும். ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைப்பது தள்ளிப்போகும்.

மாணவ மாணவியர் தங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். மற்றபடி படிப்பில் பிரச்னை எதுவும் இருக்காது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சந்தோஷம் தரும் வாரம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் தங்கள் பணிகளில் கவனமாக இருக்கவேண்டும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
சித்திரை: 15,16,17,20,21; சுவாதி: 16,17,18,21; விசாகம்: 15,17,18,19

அதிர்ஷ்ட எண்கள்: 6,9

தவிர்க்க வேண்டிய நாள்கள்: 
சித்திரை: 18,19; சுவாதி: 15,19,20; விசாகம்: 16,20,21

வழிபடவேண்டிய தெய்வம்: ஷண்முகக் கடவுள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஆலுக் கணிகலம் வெண்டலை மாலை யகிலமுண்ட
மாலுக் கணிகலம் தண்ணந் துழாய்மயி லேறுமையன்
காலுக் கணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில்
வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனு மேருவுமே.

விருச்சிகம்:  

விருச்சிகராசி அன்பர்களே! எதிர்பார்த்ததை விடவும் பணவரவு கூடுதலாக இருக்கும். அதேபோல் நீங்கள் எதிர்பார்க்காத செலவுகளும் வந்து சேரும். கோர்ட் வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான போக்கே காணப்படுகிறது. குடும்பத்தில் மனைவி மற்றும் பிள்ளைகளிடம் பொறுமையாக நடந்துகொள்ளவும்.

வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதிகப் பணிச்சுமையின் காரணமாக மற்றவர்களிடம் அலுத்துக்கொண்டு பேசவேண்டாம். 

வியாபாரத்தில் அதிகம் உழைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். பணியாளர்களிடம் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்கமுடியாது.

கலைத்துறையினரைப் பொறுத்தவரை இந்த வாரம் மிகவும் சுமாரான  வாரம்தான். வாய்ப்புகள் கிடைப்பதிலும் எதிர்பார்த்த பணம் வருவதிலும் தடைகள் ஏற்படக்கூடும்.

மாணவ மாணவியர் தங்கள் உடல் நலனில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். உணவு விஷயத்தில் அக்கறை தேவை.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகள் அதிகரிப்பதால் கடன் வாங்கவும் நேரும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு  வேலையின் காரணமாக சோர்வு உண்டாகும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
விசாகம்: 15,17,18,19; அனுஷம்: 15,16,18,19,20; கேட்டை: 15,16,17,19,20,21

அதிர்ஷ்ட எண்கள்: 1,3

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
விருச்சிகம்: 16,20,21; அனுஷம்: 17,21; கேட்டை: 18

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன்
எம்பெருமா னீச னெழில்வேங் கடமலைமேல்
தம்பமாய் நிற்கும் தவமுடையே னாவேனே

தனுசு:  

தனுசுராசி அன்பர்களே! பணவரவுக்கு ஒரு குறைவும்  இல்லை. அதேபோல் செலவுகளுக்கும் குறைவில்லை. ஆனால், சுபச் செலவுகள் என்பதால் மனதுக்குச் சற்று ஆறுதலாக இருக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அளவாகப் பழகவும். வெளியில் செல்லும்போது கைப்பொருளை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்.

அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு முயற்சி செய்து வருபவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

வியாபாரத்தில் லாபம் சற்று குறைவாகத்தான் இருக்கும். சக வியாபாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்தும் அதைப் பயன்படுத்திக் கொள்ளமுடி யாத சூழ்நிலை ஏற்படக்கூடும்.

மாணவ மாணவியர்க்கு நினைவாற்றலும் பாடங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு கல்விச் சுற்றுலா செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகள் ஊதிய உயர்வு போன்ற சலுகைகளை எதிர் பார்க்கலாம்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
மூலம்: 16,17,18,20,21; பூராடம்: 17,18,19,21; உத்திராடம்: 15,18,19,20

அதிர்ஷ்ட எண்கள்: 1,2

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
மூலம்: 15,19; பூராடம்: 15,16,20; உத்திராடம்: 16,17,21

வழிபடவேண்டிய தெய்வம்:  அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை

பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் - பிறைமுடித்த 

ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கே - அன்பு முன்பு 

செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே!

மகரம்:

மகரராசி அன்பர்களே! பணவரவு தாராளமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் இல்லை என்பதால் சிறிது சேமிக்கவும் கூடும். வாரத்தின் முற்பகுதியில் முக்கிய முடிவுகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.

அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். சிலருக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

வியாபாரம் சற்று ஏற இறங்கத்தான் இருக்கும்.வியாபார விஷயமாக வெளியூர் செல்லும் போது கைப்பொருளை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடை எதுவும் இல்லை. ஆனாலும், வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள கடுமையாக உழைக்கவேண்டி இருக்கும்.

மாணவ மாணவியர் ஆர்வத்துடன் படிப்பில் ஈடுபடுவர். வெளிநாடு சென்று மேல்படிப்பு படிக்க விரும்புபவர்களுக்குச் சாதகமான வாரம் இது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சந்தோஷமான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
உத்திராடம்:15,18,19,20; திருவோணம்: 15,16,19,20,21; அவிட்டம்: 15,16,17,20,21

அதிர்ஷ்ட எண்கள்: 4,5

தவிர்க்க வேண்டிய நாள்கள்: 
உத்திராடம்: 16,17,21; திருவோணம்: 17,18; அவிட்டம்: 18,19

வழிபடவேண்டிய தெய்வம்:  ஆஞ்சநேயர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே  ஒன்று பெற்ற அணங்கைகண்டு; அயலான் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன்  நம்மை அளித்து காப்பான் 

கும்பம்:

கும்பராசி அன்பர்களே! பொருளாதார நிலை திருப்திகரமாகவே உள்ளது. தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிட்டு அதன் காரணமாக உடலில் அசதியும் சோர்வும் உண்டாகும். பணியின் காரணமாக சிலர் குடும்பத்தை விட்டு தற்காலிகமாகப் பிரிந்திருக்க நேரிடும்.

அலுவலகத்தில் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன் கிடைப்பதில் சிறிது தாமதம் ஏற்படலாம். ஆனாலும் உற்சாகமாக உங்கள் வேலைகளைச் செய்வீர்கள்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வராது. வியாபார விஷயமாக சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.

கலைஞர்களுக்கு உற்சாகமான வாரம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

மாணவ மாணவியர் படிப்பில் உற்சாகம் காட்டுவார்கள். பழைய நண்பர்களைச் சந்தித்துப் பேசுவீர்கள். மகிழ்ச்சியான வாரம் இது.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதளவில் சோர்வு உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகமாக இருக்கும் என்பதால் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:
அவிட்டம்: 15,16,17,20,21; சதயம்: 16,17,18,21; பூரட்டாதி: 15,17,18,19

அதிர்ஷ்ட எண்கள்: 7,9

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
அவிட்டம்: 18,19; சதயம்: 15,19,20; பூரட்டாதி: 16,20,21

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

உளன்கண்டாய் நன்னெஞ்சே! உத்தம னென்றும்
உளன்கண்டாய் உள்ளுவா ருள்ளத்து – உளன்கண்டாய்
வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தி னுள்ளானென்று ஓர்.

மீனம்:

மீனராசி அன்பர்களே! பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். திருமண முயற்சிகள் அனுகூலமாக முடியும். உடல்நலன் சற்று பாதிக்கப்படும் என்பதால் கவனமாக இருக்கவும். கோர்ட்டில் வழக்கு எதுவும் இருந்தால்  உங்களுக்குச் சாதகமாக முடியும்.

அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

வியாபாரத்தில் லாபம் சற்று குறைவாகத்தான் இருக்கும். வேலையாள்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கவேண்டாம். பங்குதாரர்களிடம் கவனமாக இருக்கவும்.

கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

மாணவ மாணவியர் ஆர்வமாகப் பாடங்களில் கவனம் செலுத்துவார்கள். போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லும் வாய்ப்பும் உள்ளது. 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரம். தேவையான அளவு பணவரவு இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:
பூரட்டாதி: 15,17,18,19; உத்திரட்டாதி: 15,16,18,19,20; ரேவதி: 15,16,19,20,21

அதிர்ஷ்ட எண்கள்: 2,8

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
பூரட்டாதி: 16,20,21; உத்திரட்டாதி: 17,21; ரேவதி: 18 

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய்க் கதியாய்
விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. 

 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு