Published:Updated:

ராசிபலன்

டிசம்பர் 22 முதல் ஜனவரி 4 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

டிசம்பர் 22 முதல் ஜனவரி 4 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

Published:Updated:

னவலிமை மிக்கவர்களே! 

ராசிபலன்

புதனும், சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உங்களின் புத்திசாலித்தனம் வெளிப் படும். பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் பொறுப்பு உணர்வு அதிகமாகும். விலை உயர்ந்த பொருட்கள், வீட்டு உபகரணங்கள் வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். 27ம் தேதி வரை ராசிநாதன் செவ்வாய் சாதகமாக இருப்பதால், உடன்பிறந்தவர்களால் நிம்மதி அடைவீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 28ம் தேதி முதல் செவ்வாய் 7ல் அமர்வதால், வாழ்க்கைத் துணைக்கு தலைச்சுற்றல், முழங்கால் மற்றும் அடிவயிற்றில் வலி வந்து போகும். குரு வக்ரமாகி 6ல் மறைந் திருப்பதால், தாழ்வு மனப்பான்மை, இனம்தெரியாத கவலைகள், வீண் விரயம் வந்து செல்லும். சூரியன் 9ம் வீட்டில் நிற்பதால், சேமிப்புகள் கரையும்.

அஷ்டமத்துச்சனி தொடர்வதால், உங்கள் மனம் எதையோ தேடியபடி இருக்கும். பழைய கசப்பான நிகழ்ச்சி களை இப்போது நினைத்து கலங்கா  தீர்கள். மாணவர்கள் உயர்கல்வியில் கவனம் செலுத்தப் பாருங்கள். வியாபா ரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவீர்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும்.

சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறும் நேரம் இது.

செயல்திறன் அதிகம் உள்ளவர்களே!

ராசிபலன்

குருபகவான் 5ம் வீட்டில் வக்ரமாகி நிற்பதால், புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். வி.ஐ.பி.கள் நண்பர்களாவார் கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். புதனும், சூரியனும் சேர்ந்து நிற்பதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வராது என்றிருந்த பணம் வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புது வேலை கிடைக்கும்.

26ம் தேதி முதல் சுக்ரன் 7ல் நுழைந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், ஆரோக்கியம் கூடும். பழுதான மின்னணு, மின்சார சாதனங் களை மாற்றுவீர்கள். கணவன்மனை விக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகி சுமுக நிலை நிலவும். 28ம் தேதி முதல் செவ்வாய் 6ல் நிற்பதால், சகோதரர்களால் பயனடைவீர்கள். சூரியன் 8ல் நிற்பதால், முன்கோபம், மருத்துவச் செலவுகள் வந்து போகும்.

சனி 7ல் நிற்பதால், தர்ம சங்கடமான சூழ்நிலை, செரிமானக் கோளாறு வந்து போகும். வியாபாரத்தில் லாபம் வரும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி நெருக்கமாக இருந்தாலும், உடன் பணிபுரிபவர்கள் குறை கூறத்தான் செய்வார்கள்.

கலைத்துறையினரே! உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறும் காலம் இது.

நல்லது செய்வதில் ஆர்வம் உள்ளவர்களே!

ராசிபலன்

ராசிநாதன் புதன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால், மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்கள், பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். 27ம் தேதி வரை செவ்வாய் ராசிக்கு 5ல் அமர்வதால், பழைய கடனை நினைத்து அவ்வப் போது கலங்குவீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போகவும்.

சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். சொத்து வாங்குவது, விற்ப தில் அலட்சியம் வேண்டாம். 26ம் தேதி முதல் சுக்ரன் 6ல் மறைவதால், வீண் செலவுகள், சிறுசிறு விபத்து, மின்னணு, மின் சாதனப் பழுது வந்து நீங்கும். சூரியன் 7ல் நிற்பதால், அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, மனைவிக்கு வயிற்றில் வலி வந்து நீங்கும்.

குரு தொடர்ந்து சாதகமாக இல்லாத தால், வேலைச்சுமை, வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்து செல்லும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். உத்தி யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். கலைத் துறையினரே! உங்களுடைய படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.

கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய தருணம் இது.

சிந்தனைச் சிற்பிகளே!

ராசிபலன்

சூரியன் 6ம் வீட்டில் நிற்பதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். அரசியலில் செல்வாக்கு கூடும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சுக்ரன் சாதகமாக இருப்பதால், வி.ஐ.பி.களுக்கு நெருக்கமாவீர்கள்.

மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த லோன் கிடைக்கும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். புதன் 6ல் மறைந்திருப்பதால், உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டுத் தொந்தரவு தருவார்கள். எதிர்பாராத பயணம் உண்டு. குரு ராசிக்கு 3ல் வக்ரமாகி நிற்பதால், முயற்சிகளில் தாமதம், வீண் டென்ஷன், எதிலும் பிடிப்பற்ற போக்கு வந்து செல்லும்.

செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப் பட்டாலும், சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கலைத்துறையினரே! எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும் நேரம் இது.

மனசாட்சி உள்ளவர்களே!

ராசிபலன்

குருபகவான் 2ம் வீட்டில் வக்ரமாகி அமர்ந்திருப்பதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சொத்தை நல்ல விலைக்கு விற்று உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும்.பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். புது வீடு கட்டி முடிப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். ஷேர் மூலம் பணம் வரும்.

தந்தைவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.  புதன் சாதகமான வீடு களில் செல்வதால், இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. உறவி னர்களிடம் மதிப்பு மரியாதை கூடும்.

28ம் தேதி முதல் யோகாதிபதி செவ்வாய் 3ல் நுழைவதால், சொத்து வாங்குவீர்கள். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சூரியன் 5ல் நிற்பதால், முன்கோபம் வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தி யோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மேலதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர் களின் நட்பால் சாதிப்பீர்கள்.

மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் தருணம் இது.

கூடிவாழும் குணம் கொண்டவர் களே!

ராசிபலன்

உங்கள் யோகாதிபதி சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், சமயோசிதமாகச் சமாளிப்பீர்கள். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். பிள்ளைகளை உற்சாகப்படுத்த அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். புதனும், சூரியனும் சாதகமாக இருப்பதால், பழைய உறவினர்கள், நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

பூர்வீகச் சொத்தில் உங்கள் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். யோகாதிபதி சனி 3ம் வீட்டில் வலுவாக நிற்பதால், பணவரவு உண்டு. ஆலயங் களைப் புதுப்பிக்க உதவுவீர்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். ராசிக்குள்ளேயே குருவும் ராகுவும் நிற்பதால், வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். ரத்த சோகை, பசியின்மை வந்து செல்லும். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும்.

28ம் தேதி முதல் செவ்வாய் ராசியை விட்டு விலகுவதால், கோபம் குறையும். சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் அதிரடிச் சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். வேலையாட்கள், வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிக்க வேண்டி வரும். கலைத்துறையினரே! உதாசீனப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும்.

உங்களின் பலம் பலவீனத்தை உணரும் நேரம் இது.

எளிமையை விரும்புபவர்களே!

ராசிபலன்

3ம் வீட்டில் சூரியனும், புதனும் நிற்பதால், தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிள்ளைகளின் அடிமனதிலிருக் கும் பயத்தைப் போக்குவீர்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கிக் கடன் கிடைக்கும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ராசிநாதன் சுக்ரன் சாதகமாக இருப்பதால், சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள்.

வீட்டை அழகுபடுத்துவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றி நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பாதச் சனி தொடர்வதால் சோர்வு, களைப்பு, கண் எரிச்சல், கணுக்கால் வலி வந்து செல்லும். குருவும் ராகுவும் சாதகமாக இல்லாததால், அவ்வப்போது குடும்பத்தில் சலசலப்பு, ஒருவித படபடப்பு, பயம் வந்து செல்லும்.

யாரை நம்புவது என்கிற மனக் குழப்பத்துக்கு ஆளாவீர்கள்.

வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். கலைத் துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள்.

புதிய பொறுப்புகள் தேடி வரும் காலம் இது.

உதவும் மனம் கொண்டவர்களே!

ராசிபலன்

குருபகவான் லாப வீட்டில் வக்ரமாகி அமர்ந்திருப்பதால், உங்களின் நிர்வாகத் திறமை கூடும். தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். அயல்நாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். அரை குறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள்.

மனைவிவழி உறவினர்களின் ஆதரவு பெருகும். சூரியன் ராசிக்கு 2ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். கண் வலி ஏற்படக்கூடும். ஜென்மச் சனி தொடர்வதால், மறைமுக விமர்சனங் களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து நீங்கும்.

தலைச்சுற்றல், கோபம் வந்து செல்லும். ராசிநாதன் செவ்வாய் 28ம் தேதி முதல் 12ல் மறைவதால், வீண் செலவுகள், தூக்கமின்மை, சகோதர வகையில் மனத்தாங்கல், திடீர்ப் பயணங்கள் ஏற்படும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். சந்தை நிலவரம் அறிந்து புது முதலீடுகள் செய்வது நல்லது. வேலையாட்கள், பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் உங்களைக் குறை கூறிக் கொண்டிருந்த அதிகாரியின் மனம் மாறும். கலைத் துறையினரே! எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

நல்லவர்களின் நட்பால் சாதிக்கும் நேரம் இது.

நீதி, நெறி தவறாதவர்களே!

ராசிபலன்

சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன்மனைவிக்குள் அந்நியோன்னியம் உண்டாகும்.

பிள்ளைகளால் மதிப்பு கூடும். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். மனைவியின் உடல் நலம் சீராகும். சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். செவ்வாய் சாதகமாக இருப்பதால்,  கௌரவப் பதவிகள் தேடி வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். சொத்து வாங்குவீர்கள்.

வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சூரியன் ராசிக்குள் நிற்பதால், தந்தையின் உடல் நலம் சீராகும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசிகளைப் பெறுவீர்கள். குரு ராசிக்கு 10ல் வக்ரமாகி அமர்ந்திருப்பதால், கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினரே! உங்களின் திறமைகள் வெளிப்படும்.

தன்னம்பிக்கையால் வெற்றி பெறும் தருணம் இது.

எதிலும் உடனடித் தீர்வை எதிர்பார்ப்பவர்களே!

ராசிபலன்

குருபகவான் வக்ரமாகி ராசிக்கு 9ல் அமர்ந்திருப்பதால், தன்னம்பிக்கை பிறக்கும். வீடு, வாகனம் வாங்க லோன் கிடைக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகள் தீய பழக்கங்களில் இருந்து விடுபட உதவுவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

புதனும் சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். ராசிநாதன் சனி லாப வீட்டில் நிற்பதால், தடைகள் நீங்கும். வி.ஐ.பி.கள் உதவுவார்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

வேற்று மொழியினரால் ஆதாயம் உண்டு. செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வழக்கு சாதகமாகும். புண்ணிய ஸ்தலங்களுக் குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. வேலையாட்கள் உங்களிடம் தொழில் யுக்திகளைக் கற்றுக் கொள்வார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சி களுக்குத் தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலமாவீர்கள்.

செல்வம், செல்வாக்கு கூடும் வேளை இது.

கொடுத்து உதவும் குணமுடையவர் களே!

ராசிபலன்

ராசிநாதன் சனி வலுவாக 10ல் நிற்பதால், பயம் விலகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். கணவன்மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள்.

உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். செலவு களைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். தள்ளிப் போன வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். சூரியன் லாப வீட்டில் வலுவாக நிற்பதால், அரசால் ஆதாயம் உண்டு. தாயாரின் உடல் நலம் சீராகும். மூத்த சகோதரர் பாசமழை பொழிவார்.

சுக்ரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பாராத பணவரவு உண்டு. திருமணம், கிரகப்பிரவேசம் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். குரு 8ல் மறைவதால், சில காரியங்களைப் போராடி முடிக்க வேண்டி வரும். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். 28ம் தேதி முதல் செவ்வாய் ராசிக்கு 9ம் வீட்டில் நுழைவதால், சகோதர வகையில் இருந்து வந்த மோதல்கள் விலகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங் களைத் தீட்டுவீர்கள். வாடிக்கையாளர் களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். கலைத்துறையினரே! எதிர்பார்த்திருந்த சம்பள பாக்கி கைக்கு வரும்.

தைரியமாக முக்கிய முடிவுகள் எடுக்கும் நேரம் இது.

சமாதானத்தை விரும்புபவர்களே!

ராசிபலன்

சூரியன் 10ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆள்பவர்கள் அறிமுக மாவார்கள். புது வேலை கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த அயல்நாடு செல்லும் வாய்ப்பு சாதகமாக அமையும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வ தால், பணப்புழக்கம் அதிகரிக்கும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். புதன் சாதகமான வீடுகளில் செல்வ தால், ஒதுங்கி இருந்த உறவினர்கள் இனி தேடி வந்து பேசுவார்கள்.

நண்பர்கள், விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால், முன்கோபத்தை தவிர்க்கப் பாருங்கள். நகை, பணம் தொலையாமல் பார்த்துக் கொள்ளுங் கள். 28ம் தேதி முதல் செவ்வாய் 8ல் மறைவதால், ஏமாற்றம், வீண் விரயம், சிறுசிறு விபத்துகள் வந்து செல்லும். சொத்துப் பிரச்னை தலைதூக்கும். வியாபாரத்தில் லாபம் குறையாது. கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர் களின் ஆதரவு பெருகும். கலைத்துறை யினரே! மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவீர்கள்.

எதிர்ப்புகளை சமாளிக்கும் தருணம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism