Published:Updated:

இயற்கைச் சீற்றங்கள் தொடருமா?

இயற்கைச் சீற்றங்கள் தொடருமா?

இயற்கைச் சீற்றங்கள் தொடருமா?

இயற்கைச் சீற்றங்கள் தொடருமா?

Published:Updated:

ன்மத வருடம், மார்கழி மாதம் 15-ம் தேதி, வியாழக்கிழமை (நள்ளிரவு), கிருஷ்ண பட்சத்து சப்தமி திதி, உத்திர நட்சத்திரம் முதல் பாதம், சிம்ம ராசி, கன்னி லக்னம், ரிஷப நவாம்சத்தில்... `சௌபாக்கியம்’ நாம யோகத்திலும், `பத்தரை’ நாமகரணத்திலும், நேத்திரம் நிறைந்த மந்த யோகத்திலும் 2016-ம் ஆண்டு பிறக்கிறது.

எண் ஜோதிடப்படி 2016-ம் ஆண்டின் கூட்டு எண்ணாக அங்காரகனாகிய செவ்வாயின் ஆதிக்க

இயற்கைச் சீற்றங்கள் தொடருமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எண்ணான ஒன்பது (2+0+1+6=9) வருவதால், இந்த ஆண்டு பரபரப்பு மிகுந்ததாக இருக்கும்.
ஆட்சியாளர்கள் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள கடுமையாகப் போராட வேண்டியது இருக்கும். வன்முறை, அரசியல் குழப்பங்கள், போர் அச்சம் ஆகியன அதிகரிக்கும். ஆண்டின் விதி எண்ணாக  சந்திரனின் ஆதிக்க எண்ணான இரண்டு வருவதால், விவசாயம் செழிக்கும். மக்களிடம் தொலைநோக்குச் சிந்தனை குறையும். சிறு சிறு ஆசை கள் அதிகரிக்கும்.

புது வருடம் பிறக்கும்போது, தன காரகனான குரு அதிசாரத்தில் கன்னி ராசியில் அமர்ந்திருக்கிறார். ஆகவே, வங்கிகள் விதிமுறைகளைத் தளர்த்தும். அதேநேரம், கடனை வசூலிப்பதில் கெடுபிடிகள் அதிகரிக்கும். வருடத்தின் இறுதியில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

குரு பகவான் 1.1.16 முதல் 7.2.16 வரை கன்னியிலும், 8.2.16 முதல் 1.8.16 வரை சிம்மத்திலும், 2.8.16 முதல் வருடம் முடியும் வரை மீண்டும் கன்னியிலும் மாறி மாறி சஞ்சரிப்பதால், இந்தக் கால கட்டத்தில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும்.

ஆகஸ்ட் முதல் தங்கத்தின் விலை அதிகரிக்கும். வங்கிகளில் வீட்டுக் கடன் வட்டி விகிதம் குறையும். மக்களிடையே சேமிப்பு குறையும். பெண் குழந்தைகள் பிறப்பு அதிகரிக் கும். பெண்கள் பல துறைகளிலும் சாதிப்பார்கள். அந்நிய முதலீடுகள் அதிகரிக்கும்.

இயற்கைச் சீற்றங்கள் தொடருமா?

லக்னாதிபதியும் வித்யா காரகனுமாகிய புதன் குருவின் வீட்டி லும், குருபகவான் புதன் வீட்டிலுமாக பரிவர்த்தனை யோகம் பெற்று அமர்ந்திருப்பதால், வேலை வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் புதிய கல்வித் திட்டங்கள் நடைமுறைக்கு வரும். கல்விக் கடன் பெறும் முறை எளிதாகும். வட்டார மொழிகளின் ஆதிக்கம் பெருகும்.

பூமிகாரகனான செவ்வாய் கட்டட காரகனாகிய சுக்கிரனின் வீட்டிலும், சுக்கிரன் செவ்வாயின் வீட்டிலும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில்கள் வளர்ச்சி பெறும். மக்களிடையே கண், காது, மூக்கு தொடர்பான நோய்கள் அதிகரிக்கும். களத்திரக்காரகனாகிய சுக்கிரன் சனியுடனும், புத்தாண்டு லக்னமாகிய கன்யா லக்னத்தின் சப்தமாதிபதியாகிய  குரு பகவான் ராகுவுடனும் சேர்ந்து காணப்படுகின்றனர். இதனால் கலப்புத் திருமணங்கள் அதிகரிக்கும். சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி ஆகிய துறைகளைச் சேர்ந்த மருத்துவர்களால் அதிக செயல்திறன் வாய்ந்த மருந்துகள் கண்டறியப்படும்.

27.2.16 முதல் 9.9.16 வரை எதிரெதிர் கிரகங்களான செவ்வாயும் சனியும் செவ்வாயின் வீட்டில் சேர்ந்து காணப்படுவதால், உலகெங்கும் அழிவுகள் அதிகரிக்கும். தீவிரவாதம் வளர்ச்சி பெறும். உலகெங்கிலும் ஆட்சியாளர்களுக்கு எதிரான கோஷங்கள் அதிகரிக்கும்.

30.4.16 முதல் 1.7.16 வரை செவ்வாய் தன் சொந்த வீட்டில் வக்கிரம் ஆவதால் நிலநடுக்கம், சுனாமி, வெள்ளப் பெருக்கு முதலான இயற்கைச் சீற்றங்கள் நிகழலாம். மழை பருவம் தவறும். குண்டு வெடிப்பு, ஆட்சிக் கவிழ்ப்பு, தலைவர்களின் உயிருக்கு ஆபத்து, கனிம-கரிம வளங்கள் கொள்ளை போகுதல் ஆகியனவும் நிகழும். 28.3.16 முதல் 15.8.16 வரை, சனி தனது சொந்த நட்சத்திரமான அனுஷத்தில் வக்கிரமாவதால் சாலை விபத்துகளும், எல்லைகளில் போர்ச் சூழலும், மதக் கலவரங்களும் அதிகரிக்கும்.

மத்திய அரசுக்கு எதிர்ப்புகள் அதிகரிக்கும். நீதிமன்றத் தீர்ப்பால் பல மாற்றங்கள் நிகழும். தேர்தல் கூட்டணிகள் இறுதிவரையிலும் இழுபறியாகத் திகழும். தமிழகத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு உண்டு.

அரசு ஊழியர்கள் அதிக ஆதாயம் அடைவார்கள். கணினித் துறை எழுச்சி பெறும். வேலையில்லா திண்டாட்டம் குறையும். விளையாட்டுத் துறையினர், சிறுபான்மை மக்கள், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் இடஒதுக் கீடு - சிறப்பு சலுகையால் அதிக வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்.

பரிகாரம்: புது வருடத்தில் செவ்வாய் பலவீனமாக இருப்பதாலும், அவருடைய வீட்டில் சனி தொடர்வதாலும், வீண் வதந்திகளை பரப்புரை செய்யாமல் இருப்பது நல்லது. அதேபோல், குடும்பத்திலும் அனைவரையும் அனுசரித்துச் செல்வதால் அமைதியான வாழ்க்கையைப் பெறலாம். மேலும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும், போரில் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கும்  உதவி செய்யுங்கள். இயன்றால், கள்ளக்குறிச்சி அருகில் உள்ள ரிஷிவந்தியம் எனும் ஊரில் அருளும் அர்த்த நாரீஸ்வரரைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; வாழ்க்கை செழிக்கும்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism