அவள் 16
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

வியாழக்கிழமை, கிருஷ்ண பட்சத்து சப்தமி திதி, உத்திரம் நட்சத்திரம் முதல் பாதம், சிம்ம ராசி, கன்னி

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

லக்னம் மற்றும் ரிஷப நவாம்சத்தில், சௌபாக்கியம் நாம யோகத்தில், பத்தரை நாமகரணத்தில் நேத்திரம் நிறைந்த மந்த யோக நன்னாளில் நள்ளிரவு மணி 12.00

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

மணிக்கு 2016-ம் ஆண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப்படி (2+0+1+6=9), 2016-ம் ஆண்டின் கூட்டு எண்ணாக, அங்காரகனாகிய செவ்வாயின் ஆதிக்க எண்ணாகிய ஒன்பது வருவதால்... இந்த ஆண்டு பரபரப்பு மிகுந்த ஆண்டாக இருக்கும். பெண்கள் கல்வியிலும், ராணுவம் உள்ளிட்ட பல துறைகளிலும் சாதிப்பார்கள். வருடத்தின் இறுதிப் பகுதியில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

ந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் பிறப்பதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளை களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பீர்கள். 8.1.2016 முதல் ராகு 5-ம் வீட்டில் நுழைவதால், மகளின் திருமணம் தாமதமாகும். மகனின் நட்பு வட்டத்தைக் கண்காணிப்பது நல்லது. என்றாலும், கேது லாப ஸ்தானத்தில் அமர்வதால், தொட்ட காரியங்கள் துலங்கும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 7.2.2016 வரை மற்றும் 2.8.2016 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைவதால், சில காரியங்களைப் போராடி முடிக்க வேண்டி வரும். ஆனால், 8.2.2016 முதல் 1.8.2016 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்வதால், புதிய டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். 27.2.216 முதல் 9.9.2016 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய், சனியுடன் சேர்வதால்... குடும்பத்தில் சச்சரவுகள், பணப்பற்றாக்குறை வரக்கூடும். இந்த ஆண்டு முழுக்க சனி உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாக தொடர்வதால், மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்காதீர்கள்.

இந்த 2016-ம் ஆண்டு சுயமுயற்சியால் ஓரளவு முன்னேற்றம்தருவதாக அமையும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

ங்கள் ராசிக்கு சுக வீட் டில் சந்திரன் நிற்கும்போது இந்தப் புத் தாண்டு பிறப்ப தால், அடிப்படை வசதிகள் மேம் படும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 7.2.2016 மற்றும் 2.8.2016 முதல் வருடம் முடியும் வரை உங்களுடைய ராசிக்கு 5-ம் வீட்டில் குருபகவான் அமர்வதால், வருமானம் உயரும். சிலர் புது வீட்டில் குடிபுகுவீர்கள். ஆனால்,  8.2.2016 முதல் 1.8.2016 வரை குரு 4-ல் அமர்வதால், செலவுகள் அதிகமாகும். வருடம் பிறக்கும் நேரத்தில் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சனியுடன் சேர்ந்து நிற்ப தாலும், இந்த ஆண்டு முழுக்க சனி 7-ல் அமர்ந்து கண்டகச் சனியாக தொடர்வதாலும், உடல்நலத் தில் அக்கறை செலுத்துங்கள். 8.1.2016 முதல் ராகு 4-ம் வீட்டி லும், கேது 10-ம் வீட்டிலும் அமர்வதால், தாயாரின் உடல்நிலை பாதிக்கப்படக்கூடும். 27.2.2016 முதல் 9.9.2016 வரை செவ்வாயுடன் சனி சேர்வதால், சொத்து சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பின்னடைவு, சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து செல்லும்.

இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் உங்களைத் துவள வைத்தாலும், இறுதியில் வெற்றி பெற வைக்கும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

ங்களுடைய ராசியை ராசிநாதன் புதனும், சேவகாதிபதி சூரியனும் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால்... அழகு, ஆரோக்கியம் கூடும். உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். விலை உயர்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். 8.1.2016 முதல் வருடம் முடிய உங்கள் ராசிக்கு 3-ல் ராகு நுழைவதால், மனோபலம் அதிகரிக்கும். தாமதமான அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். 9-ம் வீட்டில் கேது அமர்வதால், மகளுக்கு நல்ல வரன் அமையும். இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் உங்களுடைய ராசிக்கு 6-ம் வீட்டிலேயே வலுவாக அமர்ந்திருப்பதால்... எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும், அவற்றை எதிர்கொள்ளக்கூடிய சக்தி கிடைக்கும். இந்த ஆண்டு முழுக்க குருபகவான் சாதகமாக இல்லாததால், ஓய்வெடுக்க முடி யாதபடி வேலைச்சுமை இருக்கும். சில சமயம் தவிர்க்க முடியாத செலவுகளால் திணறுவீர்கள். மன அழுத்தம், டென்ஷன் ஏற்படும். தங்க நகைகளை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம்.

இந்தப் புத்தாண்டு உங்களைத் தன்மானத்துடன் தலைநிமிரச் செய்வதாக அமையும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

ங்களின் யோகாதிபதி செவ்வாய் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், `எதையும் சாதிக்க முடியும்’ என்ற நம்பிக்கை பிறக்கும். சிலர் சொந்த வீடு வாங்குவீர்கள். உங்களுக்கு 2-வது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால், குடும்பத்தில் நிம்மதி நிலவும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 7.2.2016 வரை மற்றும் 2.8.2016 முதல் வருடம் முடியும் வரை குரு ராசிக்கு 3-ம் வீட்டில் மறைந்திருப்பதால், மன உளைச்சல் வந்து நீங்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 8.2.2016 முதல் 1.8.2016 வரை குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்வதால், சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். 8.1.2016 முதல் உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல்  கேதுவும் நிற்பதால்... சலிப்பு, வாழ்க்கைத் துணைவருடன் விவாதங்கள் ஏற்படும். இந்த ஆண்டு முழுக்க சனி 5-ல் நிற்பதால்... முடிவுகள் எடுப்பதில் குழப்பம், பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து செல்லும்.

இந்தப் புத்தாண்டு ஒரு பக்கம் உங்களை உணர்ச்சிவசப்பட வைத்தாலும், மறுபக்கம் மன நிறைவைத் தரும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

ங்கள் ராசி யிலேயே இந்தப் புத்தாண்டு பிறப்பதால், பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அடுக்கடுக்காக செலவுகள் இருக்கும். என்றாலும், அதற்கேற்ற வருமானமும் உண்டு. உங்களின் பாக்யாதிபதி செவ்வாய் 3-ம் இடத்தில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். இந்த ஆண்டு முழுக்க சனி 4-ம் வீட்டில் அமர்ந்து, அர்த்தாஷ்டமச் சனியாக தொடர்வதால், முன்கோபத்தை தவிருங் கள். 8.1.2016 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ஜென்ம ராசியிலேயே ராகுவும், 7-ல் கேதுவும் அமர்வதால், உணவு விஷயத்தில் கூடுதல் அக்கறை தேவை. புத்தாண்டின் தொடக்கம் முதல் வக்கிரமாகி 7.2.2016 வரை மற்றும் 2.8.2016 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். 8.2.2016 முதல் 1.8.2016 வரை குரு உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்வதால்... பொறுப்புகளும், வேலைச்சுமையும் கூடுதலாகும்.

இந்தப் புத்தாண்டு உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறியவைப்பதாக அமையும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

ங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் சூரியனும், புதனும் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்ப தால், எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டிலேயே தொடர்வதால், பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்கும் யோகமும் உண்டாகும். 8.1.2016 முதல் ராகு உங்கள் ராசியை விட்டு விலகி... வருடம் முடியும் வரை 12-ம் வீட்டிலும், கேது 6-வது இடத்திலும் மறைவதால், தோற்றப் பொலிவு கூடும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். புத்தாண்டின் தொடக்கம் முதல் குரு வக்கிரமாகி, 7.2.2016 வரை மற்றும் 2.8.2016 முதல் வருடம் முடியும் வரை ராசியிலேயே அமர்வதால், அவ்வப்போது பலவீனமாக உணருவீர்கள். 8.2.2016 முதல் 1.8.2016 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் மறைவதால், சில நாட்களில் தூக்கம் குறையும். 27.2.2016 முதல் 9.9.2016 வரை செவ்வாயுடன் சனி சேர்வதால்... சொத்துப் பிரச்னைகள், பொருள் இழப்புகள், ஏமாற்றங்கள் வந்து செல்லும்.

இந்த 2016-ம் ஆண்டு சுக வீனங்களைத் தந்தாலும், அவற்றை சமாளிக்கும் சக்தியையும் தரும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

ங்கள் ராசிக்கு பதினோராவது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். ஆண்டின் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சனியுடன் சேர்ந்து நிற்பதால், உடல் உபாதை வந்து நீங்கும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 7.2.2016 வரை மற்றும் 2.8.2016 முதல் வருடம் முடியும் வரை குரு 12-ம் வீட்டில் மறைவதால்... வீண் செலவுகள், வெளியூர் பயணங்கள், கவலைகள் ஏற்படும். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். ஆனால், 8.2.2016 முதல் 1.8.2016 வரை குரு லாப வீட்டிலேயே தொடர்வதால், தொட்டது துலங்கும். 8.1.2016 முதல் கேது 5-ம் வீட்டில் நுழைவதால், பிள்ளைகளின் உயர் கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். ராகு லாப வீட்டில் அமர்வதால், ஷேர் மூலம் பணம் வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். இந்த ஆண்டு முழுவதும் பாதச் சனி தொடர்வதால், சாதாரணமான பேச்சுகூட சில சமயம் சண்டையில் முடிய வாய்ப்பு உண்டு. 

இந்தப் புத்தாண்டு அவ்வப் போது அலைக்கழித்தாலும், உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

ந்தப் புத் தாண்டு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது பிறப்பதால், எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டாகும். இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் உங்கள் ராசியிலேயே அமர்ந்து ஜென்மச் சனியாக தொடர்வதால், உடல்நலம் பாதிக்கப்படும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். 1.1.2016 முதல் 7.2.2016 வரை மற்றும் 2.8.2016 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்வதால், எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். ஆனால், 8.2.2016 முதல் 1.8.2016 வரை குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால், யாரும் உங்களை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். 27.2.2016 முதல் 9.9.2016 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் சனியுடன் சம்பந்தப்பட்டு பலவீன மடைவதால்... சகோதர வகையில் சங்கடம், பணப்பற்றாக்குறை வந்து செல்லும். 8.1.2016 முதல் கேது 4-ம் வீட்டிலும், ராகு 10-ம் வீட்டிலும் அமர்வதால், வாகனத்தில் செல்லும்போது கூடுதல் எச்சரிக்கை தேவை. 

இந்தப் புத்தாண்டு மருத்துவச் செலவுகளையும், நிம்மதி குறை வையும் தந்தாலும், அந்தஸ்தை அதிகப்படுத்தும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

ங்களுக்கு 9-வது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால், உங்க ளின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 7.2.2016 வரை மற்றும் 2.8.2016 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 10-ம் வீட்டில் நிற்பதால், வேலைச்சுமை அதிகரித்துக்கொண்டே போகும். சிறுசிறு ஏமாற்றங்கள் ஏற்படும். ஆனால், 8.2.2016 முதல் 1.8.2016 வரை குரு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்வதால், உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். வீடு வாங்குவது, கட்டுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். 8.1.2016 முதல் ராகுபகவான் ஒன்பதாம் வீட்டில் நுழைவதால், எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடிவடையும். கேது 3-வது வீட்டில் அமர்வதால், கௌரவப் பதவிகள் தேடி வரும்.விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். இந்த வருடம் முழுக்க சனிபகவான் ராசிக்கு 12-ம் வீட்டில் ஏழரைச்சனியின் ஒருபகுதியான விரயச் சனியாக தொடர்வதால், இனம்தெரியாத கவலைகள், வீண் செலவுகள், தூக்கமின்மை வந்து செல்லும்.

இந்தப் புத்தாண்டு  வேலைச் சுமையை தந்தாலும், உங்களை மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்க வைக்கும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

செவ்வாய் பக வான் 10-ம் வீட் டில் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்கள் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், உயர்ரக வாகனம் வாங்குவீர்கள். 8.1.2016 முதல் கேது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டிலும், ராகு 8-ம் வீட்டிலும் அமர்வதால்... பேச்சால் பிரச்னைகள், உடல் உபாதை வந்து நீங்கும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 7.2.2016 வரை மற்றும் 2.8.2016 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 9-ம் வீட்டில் நிற்பதால், வாழ்க்கைத் துணைவர் மிகவும் அனுசரணையாக இருப்பார். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வீட்டில் சுப காரியங்கள் நடந்தேறும். உங்களின் இல்லக் கனவு இந்த வருடத்தில் நனவாகும். உறவினர்களின் ஆலோ சனைகள் சரியாக இருப்பின் ஏற்றுக்கொண்டு செயல்படுங்கள். 8.2.2016 முதல் 1.8.2016 வரை குரு உங்கள் ராசிக்கு 8-ல் மறைந்திருப்பதால், அலைச்சலுடன் ஆதாயத்தைத் தருவார்.

இந்தப் புத்தாண்டு சின்னச் சின்ன இடையூறுகளைத் தந்தாலும், உங்களை முன்னேறவும் வைக்கும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

ங்கள் ராசிக்கு 7-வது வீட்டில் சந்திரன் அமர்ந்து உங்களைப் பார்த்துக் கொண் டிருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால், நீங்கள் உடல்நலக் கோளாறுகளில் இருந்து விடுபடுவீர்கள். உறவினர் வகையில் மகிழ்ச்சி தங்கும். இந்த வருடம் முழுக்க உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10-ம் வீட்டிலேயே தொடர்வதால், உங்களின் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 7.2.2016 வரை மற்றும் 2.8.2016 முதல் வருடம் முடியும் வரை குரு 8-ம் வீட்டில் மறைந்திருப்பதால், முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன் சட்ட நிபுணர்களைக் கலந் தாலோசிப்பது நல்லது. 8.2.2016 முதல் 1.8.2016 வரை 7-ம் வீட்டில் குரு அமர்வதால், புது வாகனம் வாங்குவீர்கள். திருமணம் தாமதமானவர்களுக்கு விரைவில் கூடி வரும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 8.1.2016 முதல் வருடம் முடிய உங்கள் ராசிக்குள் கேதுவும், 7-ம் வீட்டில் ராகுவும் அமர்வதால், வாழ்க்கைத் துணைவருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். சகோதர  வகையில்   மனத்தாங்கல் வந்து போகும்.  

இந்தப் புத்தாண்டு நாலா விதத்திலும் நன்மை அடையச் செய்யும்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

ங்களுடைய ராசிக்கு 6-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். 8.1.2016 முதல் கேது 12-ம் வீட்டிலும், ராகு 6-ம் வீட்டிலும் அமர்வதால் உற்சாகமடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். திடீர் பயணங்கள் உண்டு. புத்தாண்டின் தொடக்கத்தில் செவ்வாய் 8-ல் நிற்பதால், சில நேரங்களில் வாழ்க்கை மீது வெறுப்பு உணர்வு வந்து செல்லும். சகோதர வகையில் பிணக்குகள் ஏற்படலாம். புத்தாண்டின் தொடக்கம் முதல் 7.2.2016 வரை மற்றும் 2.8.2016 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 7ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக்கொண் டிருப்பதால்... அழகு, ஆரோக்கியம் கூடும். 8.2.2016 முதல் 1.8.2016 வரை குரு 6-ம் வீட்டிலேயே மறைந்திருப்பதால், மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் 9-ம் வீட்டிலேயே இருப்பதால், தன்னம்பிக்கை பிறக்கும். செல்லும் இடமெல்லாம் நல்ல மரியாதை கிடைக்கும். சிலர் சொந்தமாக இடம் வாங்கு   வீர்கள்.

சின்னச் சின்ன சுகங்களை இழந்து, பெரிய சாதனைகளைப் படைக்கத் தூண்டும் வருடமிது.