Published:Updated:

சாயா கிரகங்கள் சாதிக்க வைக்குமா?

ராகு-கேது பொதுப்பலன்கள்!

சாயா கிரகங்கள் சாதிக்க வைக்குமா?

ராகு-கேது பொதுப்பலன்கள்!

Published:Updated:

நிகழும் மன்மத வருடம் மார்கழி மாதம் 23ம் நாள் (8.1.16) வெள்ளிக்கிழமை, கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி, மூலம் நட்சத்திரம், 'விருத்தி’ நாமயோகம், 'சகுனி’ நாம கரணம், ஜீவன் நிறைந்த அமிர்த யோக நாளில், நண்பகல் 12 மணிக்கு ராகு பகவான் கன்னியில் இருந்து சிம்மத்துக்கும், கேது பகவான்  மீனத்தில் இருந்து கும்ப ராசிக்கும் இடம் பெயர்கின்றனர். 

சேரும் கிரகம், அமரும் நட்சத்திரத்துக்கு உரிய கிரகம் மற்றும் பார்க்கப்படும் கிரகம் ஆகியவற்றுக்குத் தகுந்த பலனை வழங்குவதில், இவர்களுக்கு இணை எவரும் இல்லை. ஒருவரை செல்வந்தராக மாற்றுவது ராகுவின் வேலை என்றால், ஒருவருக்குப் பல சோதனைகளை ஏற்படுத்தி அவருக்கு மெய்ஞ்ஞானத்தைத் தருவது கேதுவின் செயலாகும். காலப் பிரகாசிகை, சுக்ர நீதி போன்ற பழம்பெரும் நூல்கள் ராகுவும், கேதுவும் ஈடு இணையற்ற வல்லமை பொருந்திய கிரகங்கள் எனக் கூறுகின்றன.

சாயா கிரகங்கள் சாதிக்க வைக்குமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிம்மத்தில் ராகு... மருத்துவத்துறை நவீனமாகும்!

புதன் வீடான கன்னி ராசியில் அமர்ந்திருந்த ராகு 8.1.16 முதல் 25.7.17 வரை சிம்மத்தில் சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் மருத்துவத் துறை நவீனமாகும். மருந்துகளின் விலை குறையும். தேர்வுகளில் புதிய முறை அமலாகும். அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகள் கிடைப்பதுடன் வேலைப் பளுவும் கூடும். ஓய்வு பெறும் வயது வரம்பு குறைக்கப்படும். சூரியன் வீட்டில் ராகு அமர்வதால் இதயம் தொடர்பான பிணிகள் அதிகரிக்கலாம். உலகெங்கும் போர் மேகங்கள் சூழும்.

8.1.16 முதல் 10.3.16 வரை: உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு மூட்டு வலி, எலும்புத் தேய்மானம் போன்ற உடற்பிணிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

11.3.16 முதல் 15.11.16 வரை: பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு அலர்ஜி, விபத்துகள், கணவன்மனைவிக்குள் கருத்து மோதல்கள் வந்து நீங்கும்.

16.11.16 முதல் 25.7.17 வரை: மகம் நட்சத்திரக்காரர்களுக்கு அறுவை சிகிச்சைகள், வழக்குகள் மற்றும் நிம்மதியற்ற நிலை உருவாகலாம். மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களில் கலவரங்கள், நிலநடுக்கம், ஆட்சியில் குழப்பங்கள் வந்து நீங்கும்.

ராகு கடந்து செல்லும் பாதை

8.1.16 முதல் 10.3.16 வரை உத்திரம் 1ல்

11.3.16 முதல் 12.5.16 வரை பூரம் 4ல்

13.5.16 முதல் 12.7.16 வரை பூரம் 3ல்

13.7.16 முதல் 13.9.16 வரை பூரம் 2ல்

14.9.16 முதல் 15.11.16 வரை பூரம் 1ல்

16.11.16 முதல் 17.1.17 வரை மகம் 4ல்

18.1.17 முதல் 20.3.17 வரை மகம் 3ல்

21.3.17 முதல் 23.5.17 வரை மகம் 2ல்

24.5.17 முதல் 25.7.17 வரை மகம் 1ல்

கும்ப ராசியில் கேது... தெய்வப் பிரார்த்தனைகள் அதிகரிக்கும்!

இதுவரை குரு பகவானின் வீடான மீனத்தில் அமர்ந்திருந்த கேது 8.1.16 முதல் 25.7.17 வரை கும்ப ராசியில் அமர்ந்து ஆட்சி செலுத்தப் போகிறார். சனி வீட்டில் கேது அமர்வதால், மக்களிடையே உழைக்கும் குணம் குறையும். பழைய தொழிற்சாலைகள் நலிவடையும். பரம்பரை பணக்காரர்களும், பாரம்பரிய குடும்பத்தைச் சார்ந்தவர்களும் பாதிப்பு அடைவார்கள். வழிபாட்டுத் தலங்கள் வன்முறையால் சேதம் அடையும். யோகா, தியானம், கூட்டுப் பிரார்த்தனைகள்  முதலானவை அதிகரிக்கும். பஞ்சாப், குஜராத், டெல்லி மாநிலங்களில் அமைதியற்ற சூழ்நிலைகள் நிலவும்.

8.1.16 முதல் 12.7.16 வரை: பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு குடும்பப் பிரச்னைகளால் மனநிம்மதி இன்மை, பணப் பற்றாக்குறை வந்து நீங்கும்.

13.7.16 முதல் 20.3.17 வரை: சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு விபத்துகள், வழக்குகள் மற்றும் மரியாதைக் குறைவான சம்பவங்கள் ஏற்படும்.

21.3.17 முதல் 25.7.17: அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு தைராய்டு உள்ளிட்ட ஹார்மோன் பிரச்னைகள், பசியின்மை, முன்கோபத்தால் கணவன்மனைவிக்குள் பிரிவு ஆகியன வந்து நீங்கும்.

கேது கடந்து செல்லும் பாதை...

8.1.16 முதல் 10.3.16 வரை பூரட்டாதி 3ல்

11.3.16 முதல் 12.5.16 வரை பூரட்டாதி 2ல்

13.5.16 முதல் 12.7.16 வரை பூரட்டாதி 1ல்

13.7.16 முதல் 13.9.16 வரை சதயம் 4ல்

14.9.16 முதல் 15.11.16 வரை சதயம் 3ல்

16.11.16 முதல் 17.1.17 வரை சதயம் 2ல்

18.1.17 முதல் 20.3.17 வரை சதயம் 1ல்

21.3.17 முதல் 23.5.17 வரை அவிட்டம் 4ல்

24.5.17 முதல் 25.7.17 வரை அவிட்டம் 3ல்

பரிகாரம்:

நீதி, நேர்மை, அதிகாரம், தூய்மை, உண்மை, போன்ற பண்புகளுக்கு உரிய கிரகமான சூரியனின் வீட்டில் ராகு அமர்வதால், உணவு, உடையில் ஆடம்பரத்தைத் தவிர்த்து எளிமையைப் பின்பற்றுவோம். ஆத்ம, பிதுர்காரகனின் வீடான சிம்மத்தில் ராகு அமர்வதால், பித்ரு வழிபாடு செய்து அவர்களின் ஆசிகளைப் பெறுவோம்.

பூமியைப்போல் பொறுமை, மன்னிக்கும் குணம் கொண்ட சனி பகவா னின் வீடான கும்பத்தில் கேது அமர்வதால், அன்றாட வாழ்வில் ஏற்படும் சவால்களை பொறுமையால் வெல்வோம்; எதிலும் வேகமும் கோபமும் வேண்டாம். இயன்றவரையிலும் மற்றவர்களுக்கு உதவி செய்து, அவர்களை மகிழ்வித்து நாமும் மகிழ்வோம்.

ஆக மொத்தத்தில், பித்ரு வழிபாடுகளும், கூட்டுப்பிரார்த்தனைகளும், சமூக உதவிகளும் சாயா கிரகங்களான ராகுகேதுக்களின் பரிபூரண திருவருளைப் பெற்றுத் தந்து, நம்மை சாதிக்கவைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism