Published:Updated:

ராகு-கேது பெயர்ச்சி பலன்

ராகு-கேது பெயர்ச்சி பலன்

ராகு-கேது பெயர்ச்சி பலன்

ராகு-கேது பெயர்ச்சி பலன்

Published:Updated:
ராகு-கேது பெயர்ச்சி பலன்
ராகு-கேது பெயர்ச்சி பலன்

ராகுவின் பலன்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுவரையிலும் கன்னி ராசியில் இருந்தபடி உங்களுக்கு பலாபலன்களை வழங்கிக் கொண் டிருந்த ராகு பகவான் ஜனவரி 8 முதல் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால், உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.

உங்களில் சிலர் உயர் கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். மகளின் திருமணத்துக்கு வெளியில் கடன் வாங்கவேண்டி வரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

8.1.16 முதல் 10.3.16 வரை: பிள்ளைகளின் கல்வி, வேலை, திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் வெற்றியடையும். அரசால் அனுகூலம் உண்டு.

11.3.16 முதல் 15.11.16 வரை: திருமணத் தடையால் கலங்கியவர்களுக்கு, தடைகள் நீங்கி மணமாலை சூடும் வாய்ப்பு உருவாகும். வாழ்க்கைத் துணைவரின் தேக ஆரோக்கியம் சீராகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

16.11.16 முதல் 25.7.17 வரை: நிதானமும் பொறுமையும் தேவைப்படும் காலகட்டம். எதிலும் நம்பிக்கை இன்மை, ஏமாற்றங்கள், இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. 

மாணவ-மாணவிகள் வேறு விஷயங்கள் எவற்றிலும் நாட்டம் செலுத்தவேண்டாம். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவந்தால் வெற்றி நிச்சயம். கலைத் துறையினருக்கு, நல்ல நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எனினும் சம்பள விஷயத் தில் கவனம் தேவை.

வியாபாரத்தில், தேங்கிக் கிடக்கும் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். புதிய முதலீடு களைத் தவிர்க்கவும். பிளாஸ்டிக், மூலிகை, துரித உணவகம் வகைகளால் லாபம் அடைவீர்கள். சிலருக்கு, அரசாங்க கெடுபிடிகள் வந்துபோகும். பங்குதாரர்களுடன் வீண் சச்சரவுகள் வேண்டாம்; அவர்களை அனுசரித்துப் போகவும்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானா லும் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.

கேதுவின் பலன்கள்

இதுவரையிலும் மீன ராசியில் இருந்தபடி உங்களுக்கு பலாபலன்களை வழங்கிக் கொண் டிருந்த கேது பகவான், ஜனவரி 8 முதல் உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ம் வீட்டில் அமர்கிறார்.

தடைப்பட்ட காரியங்கள் முடியும். ஷேர் மூலமாக பணம் வரும். ஆன்மிகவாதிகள், சாதுக் களின் தொடர்பால் தெளிவு அடைவீர்கள். எதிர்பார்த்த வகையில் பண வரவு உண்டு. குழந்தை பாக்கியம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

8.1.16 முதல் 12.7.16 வரை: தொட்ட காரியம் துலங்கும். பெரிய பதவிகள் உங்களைத் தேடி வரும். சிலர் அயல்நாடுகளுக்குச் சென்று வருவீர்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.

13.7.16 முதல் 20.3.17 வரை: காலத்தில், வீண் டென்ஷன், முன்கோபம், பணப்பற்றாக்குறை வந்து செல்லும். வீண் பழிச் சொல்லுக்கு ஆளாகக் கூடும். மனம் தளரவேண்டாம். தெய்வத் துணை யுடன் பிரச்னைகளில் இருந்து மீள்வீர்கள்.

21.3.17 முதல் 25.7.17 வரை: அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். சகோதரர்கள் வகையில் நீங்கள் எதிர்பார்த்த ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். கடன் பிரச்னைகள் குறையும்.

வியாபாரத்தில், முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களது உதவியால் பெரிய நிறுவனங்களுடனான புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும்.

உத்தியோகத்தைப் பொறுத்த வரையிலும், மேல் அதிகாரிகள் உங்களைக் கலந்து ஆலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தடையின்றி கிடைக்கும்.

மொத்தத்தில், உங்களுக்கு ராகு பகவானால் கொஞ்சம் டென்ஷன் ஏற்பட்டாலும், கேது பகவான் அருளால், உங்கள் வாழ்வில் உயர்ந்த அந்தஸ்தை பெறுவதுடன், பொருளாதார முன்னேற்றமும் உண்டாகும்.

பரிகாரம்

நாகப்பட்டினத்தில் அருள்புரியும் அருள்மிகு நீலாயதாட்சி உடனுறை ஸ்ரீகாயாரோகணேஸ்வரரைத் தரிசித்து, அந்த சிவனாருக்கு வில்வார்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும்.

ராகு-கேது பெயர்ச்சி பலன்

ராகுவின் பலன்கள்

இதுவரையிலும் கன்னி ராசியில் இருந்தபடி உங்களுக்கு பலாபலன்களை வழங்கிக் கொண் டிருந்த ராகு பகவான் ஜனவரி 8 முதல் உங்கள்  ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்கிறார். எனவே, உங்களின் பிள்ளைகள் மிகுந்த பொறுப்புடன் செயல்படுவார்கள்.

வேலைக்காகக் காத்திருந்த உங்கள் மகனுக்கு நல்ல நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். மகளுக்கு, எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும்.

நீங்கள் செய்ய நினைத்திருந்த குலதெய்வப் பிரார்த்தனைகளை குறையின்றி நிறைவேற்று வீர்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். வழக்குகள் தள்ளிப்போகும்.

8.1.16 முதல் 10.3.16 வரை: மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோரின் உடல் நலம் சீராகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் நல்ல விதமாக நிறைவேறும்.

11.3.16 முதல் 15.11.16 வரை: சோம்பல் நீங்கி உற்சாகம் பிறக்கும். பணப் பற்றாக்குறை விலகும். எனினும் சிலருக்கு தொண்டை வலி, சளித் தொந்தரவு, தோலில் நமைச்சல் ஆகியன வந்து நீங்கும்.

16.11.16 முதல் 25.7.17 வரை: இந்த கால கட்டத்தில் ஒருவித மன இறுக்கம் ஏற்படலாம்.மேலும் காரியத் தடங்கல், உடல்நல பாதிப்பு, எதிர்பாராத பயணங்கள் ஆகியவை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

மாணவ - மாணவிகள் பொழுதுபோக்கு அம்சங்களில் கவனம் செலுத்துவதைத் தவிர்க் கவும். கலைத் துறையினருக்கு, வயதில் இளைய சக கலைஞர்களால் நன்மைகள் நடக்கும்.

வியாபாரத்தில், புதிய வியூகங்களால் லாபம் ஈட்டுவீர்கள். இரும்பு, ரசாயனம், கட்டட உதிரி பாகங்கள் ஆகியவற்றின் மூலம் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில், மாறுதலாகி உங்கள் கிளைக்கு  வரும் புதிய அதிகாரியால் மதிக்கப்படுவீர்கள்.

கேதுவின் பலன்கள்

இதுவரையிலும் மீன ராசியில் இருந்தபடி உங்களுக்கு பலாபலன்களை வழங்கிக் கொண் டிருந்த கேது பகவான், ஜனவரி 8 முதல் உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் அமர்கிறார்.

வேலைச்சுமை அதிகமாகும். எத்தனை காலம்தான் இப்படி கஷ்டப்படுவது என்ற ஆதங் கமும் அவ்வப்போது வெளிப்படும். தலைகுனிய வைக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் வந்துபோகும்.

சிலருக்கு, அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பணப் பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
8.1.16 முதல் 12.7.16 வரை: ஒருவித பதற்றமும் பயமும் அடிமனதில் தோன்றி மறையும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.

13.7.16 முதல் 20.3.17 வரை: குடும்பத்தில் சின்னச் சின்ன சலசலப்புகள் வரும். வேலைச் சுமையால் டென்ஷன் அதிகமாகும்.

21.3.17 முதல் 25.7.17 வரை: சகோதரர்களால் பணம் - பொருள் உதவிகள் உண்டு. வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியம் சீராகும். சிலர், அண்டை மாநிலங்களில் உள்ள பிரசித்திப் பெற்ற  புண்ணிய தலங்களுக்குக் குடும்பத்துடன் சென்று தரிசித்து வழிபட்டு வருவீர்கள்.

வியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறு வதற்கு கடுமையாகப் போராட வேண்டி வரும். எனினும், கடும் உழைப்பால் சாதிப்பீர்கள்.

உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளும், உயர் அதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டாலும், அவர்களின் மூலம் உங்களுக்கு வேலைப்பளுவும் அதிகரிக்கும். எனினும் திறம்பட சமாளிப்பீர்கள்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி,சிறு சிறு தோல்விகளையும் அதன் மூலம் மன இறுக்கத்தையும் உங்களுக்குத் தருவதாக அமைந் தாலும், தெய்வ பலத்தாலும், கடின உழைப்பாலும் இலக்கை அடையவைப்பதாக அமையும்.

பரிகாரம்

சுவாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில், பஞ்சபூத திருத்தலங்களில் வாயு திருத்தலமான காளஹஸ்திக்குச் சென்று, அங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீகாளத்தீஸ்வரரைத் தரிசித்து, அவருக்கு நெய் விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள். தடைகள் யாவும் விலகும்.

ராகு-கேது பெயர்ச்சி பலன்

ராகுவின் பலன்கள்

இதுவரையிலும் கன்னி ராசியில் இருந்தபடி உங்களுக்கு பலாபலன்களை வழங்கிக் கொண் டிருந்த ராகு பகவான் ஜனவரி 8 முதல் உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானமான 3-ல் அமர்கிறார்.

எனவே உங்களின் மன கலக்கங்கள் மறைந்து,  மனோபலம் கூடும். ஷேர் மூலம் பணம் வரும். நிரந்தர வருமானத்துக்கான வழிவகை கிடைக்கும். மன இறுக்கங்கள் நீங்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

தாயாரின் நோய் குணமாகும். கணவன்-மனைவிக்குள் வேறுபாடுகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

8.1.16 முதல் 10.3.16 வரை: புதிய முயற்சிகள் பலிதமாகும். சொத்துப் பிரச்னைக்கு சுமூகத் தீர்வு கிடைக்கும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும்.   

11.3.16 முதல் 15.11.16 வரை: பண வரவு உண்டு. சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டா கும். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். அடிக்கடி தூக்கமின்மை வந்து செல்லும்.

16.11.16 முதல் 25.7.17 வரை: சிலர், உங்கள் குடும்பத்தில் கூச்சல், குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். சிலருக்கு நெஞ்சு எரிச்சல், கால் வீக்கம் வந்து செல்லும்.

மாணவ-மாணவிகளுக்கு வேற்று மாநிலம் அல்லது வெளிநாட்டில் உயர் கல்வி படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். கலைத் துறையினருக்கு ரசிகர்கள் அதிகரிப்பார்கள். புகழ் பெருகும்.

வியாபாரத்தில் பற்று - வரவு உயரும். பெரிய நிறுவனங்களுடன் போட்டி போட்டு அதிக லாபம் ஈட்டுவீர்கள். கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட், ஸ்பெகுலேஷன், அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவர். சம்பளம் பதவி உயர்வு களும் கிடைக்கும். சிலருக்கு, அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்

இதுவரையிலும் மீன ராசியில் இருந்தபடி உங்களுக்கு பலாபலன்களை வழங்கிக் கொண் டிருந்த கேது பகவான், ஜனவரி 8 முதல் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் அமர்கிறார்.

தீர்வு காண முடியாமல் உங்களை அலைக் கழித்துக் கொண்டிருந்த பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர்கள். எனினும், உங்களின் தந்தைக்கு ஆரோக்கியக் குறைவு உண்டாக வாய்ப்பு உண்டு. அவரின் உடல்நலனில் அக்கறை செலுத்தவும்.

8.1.16 முதல் 12.7.16 வரை: வாழ்க்கைத் துணைவர் உங்களின் குறை-நிறைகளைச் சுட்டிக்காட்டினால், அமைதியாக ஏற்றுக் கொள் ளுங்கள். அவரது கருத்தும் அறிவுரையும் உங்களுக்கு நன்மையே செய்யும் என்பதைப் புரிந்து, அதற்கேற்ப செயல்படுங்கள். சிலருக்கு, வி.ஐ.பி-களின் அறிமுகம் கிடைக்கும்.

13.7.16 முதல் 20.3.17 வரை: வீண் வம்பும் பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடவோ, கருத்து சொல்லவோ வேண்டாம். சிலருக்கு சிறுநீரகத் தொற்று, தலைசுற்றல் வந்து நீங்கும்.

21.3.17 முதல் 25.7.17 வரை: சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும் என்றாலும் எதிர்ப்புகளும் இருக்கும். கடனை நினைத்து கலங்கும் நிலையும் உண்டு. புது வேலை கிடைக்கும். உடன்பிறந்த வர்களால் அலைச்சல்களும் ஆதாயமும் ஏற்படும்.

வியாபாரத்தில், தொழில் ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து, அதற்கேற்ப செயல்பட்டு முன்னேறுவீர்கள். அரசாங்கத்தால் கெடுபிடிகள் வந்து செல்லும். உத்தியோகத்தில், இதுவரையிலும் இருந்துவந்த வேலைச் சுமை குறையும். உழைப்புக்கு ஏற்றபடி அங்கீகாரம் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி ஒரு புறம் உங்களுக்கு அலைச்சலைத் தந்தாலும்,  மறு புறம் உங்களை முன்னேற வைப்பதுடன், பண வரவையும் மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்

பிரதோஷ நாட்களில், கோவை மாவட்டம், செம்மேடு அருகிலுள்ள முட்டம் எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீமுத்துவாளியம்மன் உடனுறை ஸ்ரீநாகேஸ்வரரைத்  தரிசித்து, செவ்விளநீர் சமர்ப்பித்து வணங்கி வழிபட்டு வாருங்கள். தீமைகள் யாவும் நீங்கி, நன்மைகள் கைகூடும்.

ராகு-கேது பெயர்ச்சி பலன்

ராகுவின் பலன்கள்

இதுவரையிலும் கன்னி ராசியில் இருந்தபடி உங்களுக்கு பலாபலன்களை வழங்கிக் கொண் டிருந்த ராகு பகவான், ஜனவரி 8 முதல் உங்கள் ராசிக்கு 2-ல் அமர்கிறார்.

உங்களின் யதார்த்த பேச்சுகளும் மற்றவர்களால் தவறாகவே புரிந்துகொள்ளப்படும். ஆகவே, எதிலும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக பேசவும், செயல்படவும் முயற்சியுங்கள். சில வேலைகள் தடைப்பட்டு முடிவடையும். பணம் வந்தாலும் அதற்குத் தகுந்த செலவுகளும் இருந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். கண், காது, பல் வலி வந்து போகும். யாருக்காகவும் சாட்சி கையொப்பம் இட வேண் டாம். வழக்குகளில் கவனமாக இருக்கவும்.

8.1.16 முதல் 10.3.16 வரை: அறிவுப்பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த வகையில் பண உதவிகள் கிடைக்கும். உங்களின் உடல் ஆரோக்கியம் சீராகும்.

11.3.16 முதல் 15.11.16 வரை: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். சிலருக்கு, புது வேலை அமையும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மகளுக்கு தள்ளிப் போன திருமணம் முடியும்.

16.11.16 முதல் 25.7.17 வரை: வேலைச்சுமை அதிகரிக்கும். முடிந்தவரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துகொண்டால் நல்லது.

மாணவ-மாணவிகளுக்கு மறதி பெரும் பிரச்னையாக அமையும். பாடங்களை ஒருமுறைக்கு பலமுறை படிக்கவும். கலைத் துறையினரின் படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டிவரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனை களுக்கு ஏற்ப முதலீடு செய்வது நல்லது. ஏற்றுமதி -இறக்குமதி, உணவு, கெமிக்கல், ஆட்டோ மொபைல் வகைகளால் லாபம் உண்டு. கடையை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

கேதுவின் பலன்கள்

இதுவரையிலும் மீன ராசியில் இருந்தபடி உங்களுக்கு பலாபலன்களை வழங்கிக் கொண் டிருந்த கேது பகவான்,  ஜனவரி 8 முதல் ராசிக்கு 8-ம் வீட்டில் சென்று மறைகிறார்.

எனவே, எந்தவொரு செயலையும் திட்டமிட்டு  செய்யவேண்டும். உங்கள் தந்தையுடனான மன வருத்தம், இதுவரையிலும் அவருக்கு இருந்து வந்த மருத்துவச் செலவுகள் நீங்கும்.

ஆடம்பரத்தைக் குறைத்து சேமிக்கத் தொடங் குவீர்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போகவும். அரசு காரியங்கள் இழுபறி யாகும். திட்டமிடாத பயணங்களும், செலவுகளும் தொடரும்.

8.1.16 முதல் 12.7.16 வரை: பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பாதியிலேயே நின்றுபோன பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். குழந்தை பாக்கியம் உண்டாகும். ஷேர் மூலம் பணம் வரும்.

13.7.16 முதல் 20.3.17 வரை: சோம்பல், களைப்பு, ஏமாற்றம், பிறர் மீது நம்பிக்கையின்மை, வீண் விரக்தி வந்து நீங்கும். பொறுமையுடன் இருப்பது அவசியம்.

21.3.17 முதல் 25.7.17 வரை: பிள்ளைகளால் மதிப்பு கூடும். பூர்வீகச் சொத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.    
வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். புது சலுகைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள்.

உத்தியோகத்தில், சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். உங்களுக்கு நெருக்கமான உயர் அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். புதிய அதிகாரிகள் மூலம் சில நெருக்கடிகளைச் சந்திக்கலாம்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, உலக அனுபவங்களைப் பெற்றுத் தருவதுடன், உங்கள் பலம் - பலவீனத்தை உங்களுக்கு உணர்த்துவதாக அமையும்.

பரிகாரம்

பெளர்ணமி தினங்களில், தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூருக்குச் சென்று, அங்கே ‘கீழுர்’ எனும் பகுதியில் அருள்பாலிக்கும்  ஸ்ரீசிவானந்தவல்லி உடனுறை  ஸ்ரீவீரட்டேஸ்வரருக்கு பாலபிஷேகம் செய்து, வணங்கி  வழிபட்டு வாருங்கள். சிரமங்கள் யாவும் குறையும்.

ராகு-கேது பெயர்ச்சி பலன்

ராகுவின் பலன்கள்

ராகு பகவான் உங்கள் ஜன்ம ராசியிலேயே நுழைவதால், பிரச்னைகள் வெகுவாகக் குறையும். குடும்பத்தினருடன் இருந்து வந்த பனிப்போர் நீங்கும். ஆனால், ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. செரிமானக் கோளாறு, சிறுநீர் பாதையில் அழற்சி, வாய்ப்புண், அலர்ஜி வரக் கூடும். ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் அடிக்கடி மனஅழுத்தங்களும் வரக்கூடும். புது முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

8.1.16 முதல் 10.3.16 வரை: அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். வழக்கால் நெருக்கடிகள் உருவாகலாம்.

11.3.16 முதல் 15.11.16 வரை: பண வரவு உண்டு. தைரியம் கூடும். புது முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் மதிப்பு கூடும். புது வேலை, நல்ல வீடு அமையும்.

16.11.16 முதல் 25.7.17 வரை: பண விஷயத்தில் கறாராக இருங்கள். நெருங்கியவர்களிடம் கூட குடும்ப விஷயங்களை சொல்லிக் கொண்டிருக் காதீர்கள்.

மாணவ-மாணவிகளுக்கு கடுமையான உழைப்பு தேவை. போட்டித் தேர்வுகளில் சற்றே பின்னடைவு ஏற்படும். கலைத் துறையினரின் புது முயற்சிகள் மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றி அடையும்.

வியாபாரத்தில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கவே செய்யும். போட்டிகளைச் சமாளிக்க கடுமையாக உழைக்க வேண்டி வரும். கடையை வேறு இடத்துக்கு மாற்றியாக வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். பங்குதாரர்களுடன் வீண்  சச்சரவுகள் வர வாய்ப்பு உண்டு.

உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளை திருப்திப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவால் ஆறுதல் அடைவீர்கள். சிலர், அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம், அயல்நாடுகளுக்குச் செல்ல வேண்டி வரும்.

கேதுவின் பலன்கள்

கேது ராசிக்கு 7-ல் அமர்வதால், எதையும் சமாளிக்கும் சாமர்த்தியத்தைக் கற்றுக் கொள்வீர்கள். ஆனால், களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் கேது அமர்வதால், கணவன்-மனை விக்குள் மனக்கசப்புகள் வரும். பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். சின்னச் சின்ன அறுவை சிகிச்சைகளும் வந்துபோகும். வழக்குகளில் வழக்கறிஞரின் போக்கு சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது நீங்கள் ஆராய்வது நல்லது. கல்யாண முயற்சிகள் தாமதமாகும்.

8.1.16 முதல் 12.7.16 வரை: குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தினருடன் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று நேர்த்திக்கடனை செலுத்துவீர்கள். பூர்வீகச் சொத்தை விரிவுபடுத் துவது போன்ற முயற்சிகள் பலிதமாகும்.

13.7.16 முதல் 20.3.17 வரை: எல்லாப் பிரச்னை களுக்கும் மற்றவர்களை நீங்கள் குறை கூறுவீர்கள். சிக்கனம் அவசியம்; வீண் ஆடம்பரச் செலவுகளைத் தவிருங்கள்.   

21.3.17 முதல் 25.7.17: எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய கடன் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உடன்பிறந்தவர்களின் கோபம் குறையும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். தாயாரின் உடல் நலம் சீராகும்.

வியாபாரத்தில் லாபம் குறைவாக வருவதற் கான காரணத்தைக் கண்டறிவீர்கள். கூட்டுத் தொழிலைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில், உயரதிகாரிகள் உங்கள் திறமையை சோதிப் பார்கள். நீங்கள் பொறுப்பாக நடந்துகொண்டாலும், மேலதிகாரி குறை கூறத்தான் செய்வார்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி,  சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை அறிய வைப்பதாகவும், சாதிப்பதற்கு சகிப்புத் தன்மையும் விடாமுயற்சியும் அவசியம் என்பதை உணர்த்துவதாகவும் அமையும்.

பரிகாரம்

திருச்சியிலிருந்து சேலம் செல்லும் வழியில் காவிரிக்கரையில் அமைந்திருக்கும் தலம்  குணசீலம். திருவோண நட்சத்திர நாட்களில் இவ்வூருக்குச் சென்று, இங்கே அருளும் ஸ்ரீலஸ்ரீமி உடனுறை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாளுக்கு துளசி மாலை சமர்ப்பித்து வணங்குங்கள். துன்பங்கள் குறையும்.

ராகு-கேது பெயர்ச்சி பலன்

ராகுவின் பலன்கள்

ராகு பகவான் இப்போது உங்கள் ஜன்ம ராசியை விட்டு விலகி 12-ம் விட்டுக்குள் இடம் பெயர்கிறார். மகிழ்ச்சி பெருகும். உடல்நலம் சீராகும். தடைப்பட்ட காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்பு கூடும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.  வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எனினும், வீண் அலைக்கழிப்புகளும் இருக்கத்தான் செய் யும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும்.

8.1.16 முதல் 10.3.16 வரை: அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடன் தொகையை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள்.

11.3.16 முதல் 15.11.16 வரை: தொட்ட காரியம் துலங்கும். பணப்புழக்கம் அதிகமாகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். தந்தையாரின் உடல் நிலை சீராகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள்.

16.11.16 முதல் 25.7.17 வரை: மனஅழுத்தம், சின்னச் சின்ன இழப்புகள் ஏற்படக்கூடும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லவேண்டியது அவசியம்.

மாணவ-மாணவிகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். விரும்பிய பாடப் பிரிவில் சேர்வதற்கு, விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடக்கும். கலைத்துறையினர், அறிமுகக் கலைஞர்கள் மூலம் ஆதாயம் அடைவார்கள்.

வியாபாரத்தில் குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகம் ஆவார்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். துரித உணவு, கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். எதிர் பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்

இதுவரையிலும் மீன ராசியில் இருந்து உங்களுக்கு பலாபலன்களை வழங்கிக் கொண்டிருந்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால், எதிர்ப்புகள் விலகும். ஷேர் மூலம் பணம் வரும். வருமானம் உயரும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள்.

வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். அண்டை மாநிலம், வெளி நாட்டிலிருக்கும் நண்பர்களால் உதவிகள் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். 

8.1.16 முதல் 12.7.16 வரை: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். மனைவி வழியில் செல்வாக்கு உயரும். தாய்வழி சொத்து கைக்கு வரும்.

13.7.16 முதல் 20.3.17 வரை: காய்ச்சல், மூச்சுத் திணறல், படபடப்பு வந்து செல்லும். தன்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே என்று ஆதங்கப் படுவீர்கள்.

21.3.17 முதல் 25.7.17 வரை: சொத்துப் பிரச்னை தலைதூக்கும். சகோதரர்கள் கோபப் பட்டாலும் நீங்கள் அனுசரித்துப் போவது நல்லது. சிறுசிறு நெருப்புக் காயங்கள் ஏற்படக்கூடும். 

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்து, லாபத்தைப் பெருக்க முயற்சி செய்வீர்கள்.  சிலர், மொத்த வியாபாரத்தில் அடியெடுத்து வைப்பீர்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். பங்கு தாரர்கள் உங்கள் பேச்சுக்கும் கருத்துக்கும் மதிப்பு கொடுப்பார்கள். உத்தியோகத்தில் உங்க ளுடைய நிர்வாகத் திறமை அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.  

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்களை வளம் பெற வைப்பதுடன், சமூகத்தில் மதிப்பு மரியாதையையும், வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்

விருத்தாசலம் அருகிலுள்ள ராஜேந்திரபட்டணம் எனும் ஊரில் அருள்பாலிக்கும்  ஸ்ரீநீலமலர்கன்னியம்மை உடனுறை  ஸ்ரீநீலகண்ட நாயகேஸ்வரரை, சதயம் நட்சத்திரம் நடைபெறும் நாட்களில் வணங்கி வழிபட்டு வாருங்கள். தடைகள் யாவும் நீங்கி, வாழ்வில் அதிரடி முன்னேற்றம் உண்டாகும்.

ராகு-கேது பெயர்ச்சி பலன்

ராகுவின் பலன்கள்

ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால், உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். திடீர் யோகம், பணவரவு எல்லாம் உண்டாகும். தொழிலதிபர்களின் நட்பு கிட்டும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வீடு கட்டும் வாய்ப்பு அமையும். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசு காரியங்கள் சுமுகமாக முடியும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

8.1.16 முதல் 10.3.16 வரை: எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

11.3.16 முதல் 15.11.16 வரை: அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். பணவரவு இருந்தாலும் செலவுகளும் இருந்துகொண்டே இருக்கும். பயணங்களால் அலைச்சல் இருக்கும். வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும்.

16.11.16 முதல் 25.7.17 வரை: எந்த விஷயமாக இருந்தாலும், நன்றாக யோசித்து செயல்படுவது நல்லது. அவ்வப்போது தர்ம காரியங்களுக்கு உதவி செய்வீர்கள்.

மாணவ-மாணவிகளே! படிப்பில் மதிப்பெண் கூடும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. நீங்கள் விரும்பிய உயர்கல்வியில் சேரமுடியும். கலைத் துறையினரின் படைப்புகள் வெளியாவதில் இருந்த தடைகள் நீங்கும். அரசால் கௌரவிக்கப் படுவீர்கள்.

வியாபாரத்தில் அனுபவ அறிவால் லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப புதுத் துறையில் முதலீடு செய்வீர்கள். ஹார்டுவேர், ஹோட்டல், ஸ்பெகுலேஷன், பதிப்பகம் ஆகியவற்றால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில், உங்களுடைய திறமையை மேலும் அதிகரித்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சக ஊழியர்களும் உங்கள் வேலையைப் பகிர்ந்துகொள்வார்கள்.

கேதுவின் பலன்கள்

கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்கிறார். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை அறிவுபூர்வமாக அணுகுவது நல்லது.

கணவன்-மனைவிக்குள் ஒளிவு, மறைவு இல்லாமல் பழகுவது நல்லது. எந்தவிதப் பிரச்னைகள் ஆனாலும் இருவரும் சேர்ந்துபேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்.

பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்துபோகும். மகளின் திருமண விஷயத்தில், அவசரம் வேண்டாம். சிலர் உயர்கல்வி, உத்தி யோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். புதிய நண்பர்களால் பயன் அடைவீர்கள்.

8.1.16 முதல் 12.7.16 வரை: சொந்த முயற்சியால் முன்னேற நினைப்பீர்கள். வங்கிக் கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள்.

13.7.16 முதல் 20.3.17 வரை: அவ்வப்போது ஒருவித வெறுமையை உணருவீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்திட்டு பணம் வாங்கித் தர வேண்டாம். தந்தையாரின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

21.3.17 முதல் 25.7.17 வரை: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

வியாபாரத்தில் சில நுணுக்கங்களைத் தெரிந்துகொள்வீர்கள். பங்குதாரரால் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்வீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். உத்தியோகத்தில், பணியில் ஆர்வம் பிறக்கும். பழைய பிரச்னைக்கு நல்ல தீர்வு காண்பீர்கள். சக ஊழியர்களிடம் இதமாகப் பேசி வேலை வாங்குவீர்கள்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்களை எதிர்நீச்சல் போட வைத்து, வருமா னத்தை உயர்த்துவதாகவும், உங்களின் தேவை களைப் பூர்த்தி செய்வதாகவும் அமையும்.

பரிகாரம்

சதுர்த்தசி திதி நாட்களில், தஞ்சைக்கு அருகில் உள்ள திருஆலம்பொழில் எனும் ஊருக்குச் சென்று, அங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீஞானாம்பிகை அம்மை உடனுறை ஸ்ரீஆத்மாரதேசுவரரை வணங்கி வழிபட்டு வாருங்கள். பிரச்னைகள் நீங்கும்; வாழ்க்கையில் சந்தோஷம் நிலைக்கும்.

ராகு-கேது பெயர்ச்சி பலன்

ராகுவின் பலன்கள்

ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்குப் பத்தாவது வீட்டில் அமர்கிறார். உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள்.

சிலர், புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். பிரிந் திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தேறும். ஷேர் மூலம் பணம் வரும். பழைய கடனில் ஒருபகுதியை அடைக்கும் அளவுக்கு பண வரவு உண்டு.  இந்த ராகு சுயமாக சிந்திக்க வைப்பதுடன், சுயமாக செயல்படும் வாய்ப்பினை ஏற்படுத்துவார். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வேலைச்சுமை அதிகமாகும்.

8.1.16 முதல் 10.3.16 வரை: அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலை அமையும்.

11.3.16 முதல் 15.11.16 வரை: பணப்பற்றாக்குறை நீங்கும். தவணை முறையில் பணம் செலுத்தி வாகனம் வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். வழக்குகள் சாதகமாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

16.11.16 முதல் 25.7.17 வரை: முன்கோபம், சிறுசிறு விபத்துகள், பேச்சால் பிரச்னைகள் வந்து போகும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.

மாணவ-மாணவிகள், ஆசிரியரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. கலைத்துறையினருக்கு சம்பளப் பாக்கி கைக்கு வந்து சேரும். யதார்த்தமான படைப்புகளைக் கொடுப்பீர்கள். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். கணிசமான லாபம் வரும். அவ்வப்போது சிறு நஷ்டங்கள் ஏற்படக்கூடும். மருந்து, கெமிக்கல், ஸ்டேஷனரி தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம், மறைமுக எதிர்ப்புகள் வந்துசேரும்.

கேதுவின் பலன்கள்

கேது இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்வதால், எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டா கும். தடைப்பட்ட குலதெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். மகளின் திருமணம் நல்லபடியாக முடியும். மகனின் உயர் கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் வெற்றி அடையும். தாயாரின் ஆரோக்கியம் பாதிக்கக்கூடும். உங்களுடைய சொத்துக்களை அவ்வப்போது சென்று கவனிக்கவும்; மற்றவர்களால் ஆக்கிரமிக் கப்பட வாய்ப்பு உள்ளது.

8.1.16 முதல் 12.7.16 வரை: செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள்.   பிள்ளைகள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பார்கள். தெய்விக நம்பிக்கை அதிகமாகும். பூர்வீகச் சொத்தில் மராமத்துப் பணிகள் மேற்கொள்வீர்கள்.  

13.7.16 முதல் 20.3.17 வரை: வேலைகளை உடனே முடிக்கவேண்டுமென்று நினைப்பீர்கள். நீங்கள் யதார்த்தமாகப் பேசினாலும் சிலர் உங்க ளைக் குறை கூறுவார்கள்.    

21.3.17 முதல் 25.7.17 வரை: முன்கோபத்தால் இழப்புகள் ஏற்படும். சொத்து வாங்குவதில் வில்லங்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், வழக்கறி ஞரின் ஆலோசனையைக் கேட்பது நல்லது. உடன்பிறந்தவர்களுடன் மனத்தாங்கல் வரும்.

வியாபாரத்தில் வருமானம் சுமாராகத்தான் இருக்கும். புதிய முதலீடுகள் எதுவும் வேண்டாம். பங்குதாரர்களுடனான பிரச்னைகளை சுமுகமாகக் கையாளவும். அவருடன் தர்க்கமோ, சர்ச்சைகளோ வேண்டாம். உத்தியோகத்தில், கூடுதல் பணி களின் காரணமாக சில நேரங்களில் சலிப்பு ஏற்படும். சக ஊழியர்கள் உங்களைப் புரிந்து கொள்ளமாட்டார்கள்.

மொத்தத்தில், இந்த ராகு-கேது பெயர்ச்சி அடுக்கடுக்கான வேலைகளையும், உழைப்பையும் ஏற்படுத்தி உங்களை அலைக்கழித்தாலும், இடைவிடாத முயற்சியால் எண்ணியதை எட்டிப் பிடிக்கவைப்பதாக அமையும்.

பரிகாரம்

மயிலாடுதுறை அருகில் உள்ள திருஇந்தளூருக்கு தேய்பிறை துவாதசி திருநாட்களில் சென்று, அங்கு கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீபரிமள ரங்கநாயகி உடனுறை ஸ்ரீபரிமள ரங்கநாதரைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள். குடும்பத்தில் குழப்பங்கள் யாவும் அகன்று மகிழ்ச்சி பெருகும்.

ராகு-கேது பெயர்ச்சி பலன்

ராகுவின் பலன்கள்

ராகுபவான் உங்களுக்கு 9-ம் வீட்டில் அமர்வதால், முடங்கிக் கிடந்த நீங்கள் இனி புத்துயிர் பெறுவீர்கள். தன்னம்பிக்கை பிறக்கும். துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.

திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பூர்விகச் சொத்துப் பிரச்னை தொல்லை தரும். குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக் கடனை முடிப்பீர்கள்.  

8.1.16 முதல் 10.3.16 வரை: நினைத்தது நிறைவேறும். புது வேலை அமையும். அயல்நாடு சென்று வருவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அரசு காரியங்கள் சுமுகமாக முடியும். தந்தையின் ஆரோக்கியம் சீராகும்.

11.3.16 முதல் 15.11.16 வரை: பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வாகனம் அடிக்கடி பழுதாகும்.

16.11.16 முதல் 25.7.17 வரை: வேற்றுமொழி பேசுபவர்கள் நண்பர்களாவார்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பெரிய பதவியில் இருக்கும் பழைய நண்பர்களால் உதவிகள் உண்டு.        

மாணவ-மாணவிகளே! உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். விரும்பிய பாடப் பிரிவில் சேருவீர்கள். கலைத்துறையினருக்குப் புகழ் கூடும். அவர்களின் படைப்புத் திறன் அதிகரிக்கும். அரசு விருது கிடைக்கும்.

வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். லாபம் கணிசமாக உயரும். கடையை நவீனமாக விரிவுபடுத்துவீர்கள்.  புது ஏஜென்சி எடுப்பீர்கள். இரும்பு, நெசவு, புரோக்கரேஜ், கடல் வாழ் உயிரி னங்களால் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

கேதுவின் பலன்கள்

கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்கிறார். ராஜதந்திரமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். கௌரவ பதவிகள் தேடி வரும். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் நிலவும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும்.

வேலை தேடுபவர்களுக்கு, புதியதொரு வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி உங்களின் செயல்பாடுகள் அமையும். ஆன்மிகவாதிகள், சித்தர்களின் தொடர்பும் ஆசிகளும் கிடைக்கும்.      

8.1.16 முதல் 12.7.16 வரை: எதிர்பார்த்த உதவிகள் வி.ஐ.பி-களிடம் இருந்து கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

13.7.16 முதல் 20.3.17 வரை: சிலர், உங்களைப் பற்றி விமர்சிப்பார்கள். வாழ்க்கைத் துணைக்கு சிறுநீரகத்தில் கல், கழுத்து நரம்பில் பிரச்னை போன்ற ஆரோக்கியப் பிரச்னைகள் தோன்றும்.

21.3.17 முதல் 25.7.17 வரை: புதிய திட்டங்கள் நிறைவேறும். மகளின் திருமணம் நிச்சயமாகும். மகன் பொறுப்பாக நடந்துகொள்வார். பூர்வீகச் சொத்தால் பணம் வரும். திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் ஏற்படும்.

வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தங்கள் செய்வதன் மூலமாக உங்கள் நிறுவனத்தின் பெயரும் புகழும் கூடும். உத்தி யோகத்தில் அலுவலகப் பிரச்னைகளை மட்டுமின்றி, மேலதிகாரிகளின் சொந்தப் பிரச்னை களையும் தீர்த்துவைப்பீர்கள். நீங்கள் எதிர் பார்த்தபடி உங்களின் சம்பளம் உயரும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, ஒடுங்கி, ஒதுங்கியிருந்த உங்களை சமுதாயத்தில் முன்னுக்கு கொண்டு வருவதுடன், விவேகமான முடிவுகளால் வெற்றி பெற வைப்பதாக அமையும்.

பரிகாரம்

மன்னார்குடிக்கு வடக்கில் சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள தலம் பாமணி. இங்கு சுயம்புலிங்கமாக அருளும்  ஸ்ரீநாகநாதரையும்,  ஸ்ரீஅமிர்தநாயகியையும் ரோகிணி நட்சத்திர நாட்களில் சென்று தரிசித்து வழிபட்டு வாருங்கள். தோல்விகள் அகலும்; நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.

ராகு-கேது பெயர்ச்சி பலன்

ராகுவின் பலன்கள்

ராகு பகவான் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமாகிய எட்டாம் இடத்தில் அமர்கிறார். மன அமைதி உண்டாகும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை சுமுகமாக முடியும். தந்தையாரின் ஆரோக்கியம் சிறக்கும். திட்டமிடாத பயணங்களும் அலைச்சலும் இருந்துகொண்டே இருக்கும். இடமாற்றம் இருக்கும். சிலர், வீடு மாற வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாவீர்கள். 

8.1.16 முதல் 10.3.16 வரை: வீட்டு விசேஷங் களில் உங்களுக்கு முக்கியத்துவம் தர மாட்டார் கள். வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமோ, முடியாதோ என்றெல்லாம் சில நேரங்களில் சங்கடப்படுவீர்கள்.

11.3.16 முதல் 15.11.16 வரை: வர வேண்டிய பணம் கைக்கு வரும். புது வேலை கிடைக்கும். கௌரவ பதவி தேடி வரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். 

16.11.16 முதல் 25.7.17 வரை: வீட்டில் தள்ளிப் போன திருமணம் கூடி வரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆன்மிகப் பெரியோர்களை சந்தித்து ஆசி பெறுவிர்கள்.

மாணவ-மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. விரும்பிய கல்விப் பிரிவில் சேர சிலரின் சிபாரிசு தேவைப்படும். கலைத் துறையினருக்கு வீண் பழிகள், வதந்திகள் வந்து சேர வாய்ப்பு உண்டு. அவர்களின் படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.

வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பார்த்த சலுகைகளையும், சம்பள உயர்வையும் போராடிப் பெற வேண்டி வரும். சிலருக்கு இடமாற்றம் வரும்.

கேதுவின் பலன்கள்

கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் அமர்கிறார். காரியத்தில் கவனம் செலுத்தவும். எதையும் அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. பல் வலி, காது வலி வந்து போகும். கண்ணைப் பரிசோதித்துக் கொள்ளுங் கள். பேச்சில் கவனம் தேவை. சிக்கனமாக இருக்க நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்புடன் அரவணைத்துச் செல்லுங்கள்.

8.1.16 முதல் 12.7.16 வரை: திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். ஆன்மிகப் பயணங்களால் புத்துணர்ச்சிப் பெறுவீர்கள்.

13.7.16 முதல் 20.3.17 வரை: வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். அடுத்தவர்களைக் குறை கூறவேண்டாம். மற்றவர் களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.

21.3.17 முதல் 25.7.17 வரை: தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும். வழக்குகளில் சாதகமான நிலை உண்டாகும். அடகிலிருந்த பத்திரங்கள், நகைகளை மீட்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். 

வியாபாரத்தில் பழைய சரக்குகளைப் போராடி விற்க வேண்டி வரும். புதிய முதலீடுகள் செய்வ தைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் எழலாம். சக ஊழியர் களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள் ளுங்கள். உயரதிகாரிகள் உங்கள் குறை நிறைகளைச் சுட்டிக்காட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். அவருடன் வீண் தர்க்கம் செய்துகொண்டிருக்க வேண்டாம்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்களை சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல் செயல்பட வைப்பதுடன், புது அனுபவங் களைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்

ஏதேனும் ஒரு சனிக்கிழமை அன்று திருவரங்கத்துக்குச் சென்று, அங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீரங்கநாதப் பெருமாளைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள். ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். தடைகளும் மனச்சோர்வுகளும் நீங்கி, வாழ்வில் புத்தொளி பிறக்கும்.

ராகு-கேது பெயர்ச்சி பலன்

ராகுவின் பலன்கள்

ராகு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்வதால், உங்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகள் வெளிப்படும். சோம்பல் நீங்கி உற்சாகம் அடைவீர்கள். எனினும், களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் ராகு அமர்வதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு; பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போகவும்.

வாழ்க்கைத் துணைவருக்கு ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஒரு சொத்தை விற்று, வேறொரு சொத்தை வாங்கும் யோகம் உண்டாகும்.

8.1.16 முதல் 10.3.16 வரை: தடைப்பட்ட சுப காரியங்கள் நடக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியப்போக்கு மாறும். வேனல் கட்டி, உடல் உஷ்ணம், அடிவயிற்றில் வலி வந்து போகும். வாழ்க்கைத் துணைவருக்கும் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். 

11.3.16 முதல் 15.11.16 வரை: பணம் வரும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். சிலர் வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். பெற்றோரின் உடல்நிலை சீராகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உறவினர்கள் மதிப்பார்கள்.

16.11.16 முதல் 25.7.17 வரை: வீண் சந்தேகத் தால் குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.  

மாணவ-மாணவிகளுக்கு, மறதியால் மதிப்பெண்கள் குறையலாம். கலைத் துறையினர், திறமையைப் பயன்படுத்தி முன்னேறுவார்கள். அவர்கள், சிறு வாய்ப்புகளையும் தவறவிடாமல் பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தை விரிவு படுத்துவதில் கவனம் தேவை. கூட்டுத் தொழில் வேண்டாம். கமிஷன், ரியல் எஸ்டேட், மூலிகை, வாகன உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டாம். சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போகவும். சிலர் வழக்கில் சிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

கேதுவின் பலன்கள்

கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு உள்ளேயே அமர்வதால், தடுமாறிக் கொண்டிருந்த உங்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். குடும்பத் தாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

பணம் வந்தாலும் செலவுகளும் இருந்து கொண்டேயிருக்கும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை வந்து நீங்கும். தகுதி இல்லாதவர் களுக்கு உதவி செய்வதால், உபத்திரவத்தில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு உண்டு. எனவே, கவனம்  தேவை.

8.1.16 முதல் 12.7.16 வரை: மாறுபட்ட அணுகுமுறையால் பாதியில் நின்ற வேலைகளை முடிப்பீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

13.7.16 முதல் 20.3.17 வரை: மனஇறுக்கம், வீண் குழப்பம், எதிலும் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்து செல்லும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்க வேண்டி வரும்.

21.3.17 முதல் 25.7.17 வரை: பரபரப்பாகக் காணப்படுவீர்கள். சிறுசிறு விபத்துகள் வரக் கூடும். சகோதர வகையில் பிணக்குகள் வரும். சொத்து வாங்கும்போது வில்லங்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, தாய் பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். 

வியாபாரத்தில் சூட்சுமங்களைத் தெரிந்து கொள்வீர்கள். உங்களின் பங்குதாரர்கள் மூலம் சில மறைமுகப் பிரச்னைகள் ஏற்படலாம். அவற்றை சாமர்த்தியமாகச் சமாளிக்கப் பாருங்கள். அதேபோல், தொழிலில் லாபம் ஈட்டுவ தற்குக் கூடுதலாக உழைக்கவேண்டியது வரும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, அடிமனதில் ஒருவித அச்சத்தையும் பதற்றத் தையும் தந்தாலும், பணிவாலும் உழைப்பாலும் உங்களை உயர வைப்பதாக அமையும்.

பரிகாரம்

கும்பகோணம்-நன்னிலம் மார்க்கத்தில் உள்ள ஸ்ரீவாஞ்சியத்தில் அருள்பாலிக்கும்  ஸ்ரீமங்கள நாயகி உடனுறை ஸ்ரீவாஞ்சிலிங்கேஸ்வரரை, புனர்பூச நட்சத்திர நாளில் தரிசித்து வழிபடுங்கள். தடைகள் யாவும் நீங்கும்; வெற்றிகள் குவியும்.

ராகு-கேது பெயர்ச்சி பலன்

ராகுவின் பலன்கள்

ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்தமர்கிறார். வீண் சந்தேகம், ஈகோவால் பிரிந்த கணவன்-மனைவி ஒன்றுசேருவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். அதிக வட்டிக் கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். திருமணம் கூடி வரும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

8.1.16 முதல் 10.3.16 வரை: பிற மொழியினர், வெளி மாநிலத்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அரசாங்க பதவி சிலருக்கு தேடி வரும்.

11.3.16 முதல் 15.11.16 வரை: வேலைச் சுமை யால் டென்ஷன், காரியத் தடைகள், ஆடம்பரச் செலவுகள் வந்துபோகும். பண வரவு உண்டு. வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும்.

16.11.16 முதல் 25.7.17 வரை: திடீர்ப் பயணங் களால் அலைச்சல் அதிகமாகும். சுற்றி உள்ள வர்களில், நல்லவர்-கெட்டவரை இனம் காண்ப தில் குழப்பம் ஏற்படும்.

மாணவ-மாணவிகளுக்கு, போட்டிகளில் வெற்றியும் பரிசுகளும் கிடைக்கும். கலைத் துறையினரின் படைப்புக்கு மதிப்பு, மரியாதை கூடும். மூத்த கலைஞர்களின் நட்பும் அதன் மூலம் பல நன்மைகளும் கிடைக்கும்.

வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்து போட்டியாளர்களை திக்குமுக்காட வைப்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக் கும். ஆட்டோமொபைல், ஸ்டேஷனரி, மருந்து, எண்ணெய் வித்துக்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பதவியில் அமர்வீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சம்பளம் உயரும். புது பொறுப்புகளும், சலுகைகளும் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் புகழ் பரவும். 

கேதுவின் பலன்கள்

கேது இப்போது உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் சென்று மறைகிறார். ஆரோக்கியம் சீராகும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப் படும். மற்றவர்களின் உள்மனதைப் புரிந்து கொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். ஆன்மிகப் பயணங்கள் சென்று வருவீர்கள்.

எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் துரத்தும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து சேமிப்பதில் கவனம் செலுத்துங்கள். சொத்துப் பிரச்னைகள் நல்ல விதத்தில் முடிவடையும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பணப் பற்றாக் குறை நீடித்தாலும், கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். 

8.1.16 முதல் 12.7.16 வரை: உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். திடீர் பணவரவு உண்டு. புண்ணிய ஸ்தலங் களுக்குச் சென்று வருவீர்கள். 

13.7.16 முதல் 20.3.17 வரை: ஏதோ ஒன்றை இழந்ததைப் போல மனதில் இனம்புரியாத கவலைகள் தோன்றும். கடந்த காலத்தில் ஏற்பட்ட நம்பிக்கைத் துரோகங்களை நினைத்தும் வருந்து வீர்கள்.

21.3.17 முதல் 25.7.17 வரை: மன இறுக்கங்கள் குறையும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு பெருகும்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். வேலையாட்கள், வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அலுவலகப் பிரச்னைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். நீங்கள் விருப்பப்பட்ட இடத்துக்கே இடமாற்றம் உண்டு.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி பிரச்னைப் புயலில் சிக்கியிருந்த உங்களைக் கரையேற்றுவதுடன், வாழ்வில் அதிரடி முன்னேற் றங்களை அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்

பிரதமை திதி நாட்களில் கும்பகோணம் சென்று, அங்கு கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீநாகேஸ்வரரையும், ஸ்ரீபெரியநாயகியையும் தரிசித்து வழிபட்டு வாருங்கள்.துன்பங்கள் நீங்கும்; மனதில் நிம்மதி பிறக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism