Published:Updated:

ராசிபலன்

ஜனவரி 5 முதல் ஜனவரி 18 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

ஜனவரி 5 முதல் ஜனவரி 18 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

Published:Updated:

தவும் குணத்தால் உயர்ந்தவர்களே! 

ராசிபலன்

புதனும், சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உங்கள் செயலில் வேகம் கூடும். எதிர்பாராத பண வரவு உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 8ம் தேதி முதல் ராகு 5ம் வீட்டில் நுழைவதால், பிள்ளைகளுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும்.  மகளின் திருமண விஷயத்தில் நன்றாக விசாரித்து முடிவு செய்யவும். கேது லாப ஸ்தானத்தில் அமர்வதால், தொட்ட காரியம் துலங்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 15ம் தேதி முதல் சூரியன் 10ல் அமர்வதால், தந்தையின் உடல் நலம் சீராகும். புது வேலை கிடைக்கும். செவ்வாய் 7ல் நிற்பதால், உடல் உஷ்ணம், வேனல் கட்டி, சிறுசிறு நெருப்புக் காயங்கள் ஏற்படக்கூடும். கணவன்மனைவி அனுசரித்துப் போவது நல்லது. வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குரு 6ல் மறைந்திருப்பதால், எதிலும் ஈடுபாடற்ற நிலை, அவ்வப்போது அச்சம், வரவுக்கு மிஞ்சிய செலவுகள், பொருள் இழப்பு, ஏமாற்றம் வந்து செல்லும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், அவ்வப்போது மனக் குழப்பத்துக்கு ஆட்படுவீர்கள்.  மற்றவர்களுக்காக ஜாமீன் தர வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். வேலையாட்கள், பங்குதாரர்களை அனுசரித்துப் போகவும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுங்கள். கலைத்துறையினரே! தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எதிர்ப்புகளைக் கடக்கும் காலம் இது.

உழைப்பால் உயரும் உத்தமர்களே!

ராசிபலன்

சப்தமாதிபதி செவ்வாய் 6ல் வலுவாக அமர்ந்திருப் பதால், எதிர்ப்புகள் அடங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப் பீர்கள். கல்யாண முயற்சிகள் நிறைவேறும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாப கரமாக முடியும். கணவன்மனைவிக்குள் அந்நியோன் னியம் அதிகரிக்கும். சகோதரர்கள் உதவுவார்கள். 5ல் குரு அமர்ந்திருப்பதால், பிள்ளைகளின் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சுக்ரன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால், மனைவி வழியில் ஆதரவு பெருகும். என்றாலும், சனியுடன் சேர்ந்திருப்பதால், சோர்வு, களைப்பு வந்து செல்லும். சூரியன் சாதகமாக இல்லாததால், அரசு காரியங்கள் இழுபறியாகும். 8ம் தேதி முதல் ராகு 4ம் வீட்டிலும், கேது 10 வீட்டிலும் அமர்வதால், வேலைச்சுமை, முன்கோபம், வந்து செல்லும். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலமாவீர்கள்.

ரகசியம் காக்க வேண்டிய வேளை இது.  

பாசத்துக்குக் கட்டுப் பட்டவர்களே!

ராசிபலன்

உங்கள் ராசிநாதன் புதன் 7ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால், தைரி யம் பிறக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். 6ல் சனி நிற்பதால், கௌரவப் பதவிகள் கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனம் வாங்குவீர்கள். வேற்று மொழியினர்கள் உதவுவார்கள். சுக்ரனும் ராசிக்கு 6ல் மறைந்திருப்பதால், கணவன்மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. 8ம் தேதி முதல் ராகு 3ல் அமர்வதால், தைரியம் கூடும். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். ஆனால், கேது 9ம் வீட்டில் நுழைவ தால், தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். குரு சாதகமாக இல்லாததால், வேலைச்சுமை, டென்ஷன், மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அனுபவமிகுந்த பணியாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். கலைத் துறையினரே! உங்களைப் பற்றிய கிசுகிசுக்களும், வதந்திகளும் வரக்கூடும்.

தடைகளையும் தாண்டி முன்னேறும் தருணம் இது.

கள்ளம் இல்லாத உள்ளம் கொண்டவர்களே!

ராசிபலன்

சுக்ரனும், சூரியனும் சாதகமாக இருப்பதால், நினைத்தது நிறைவேறும். தடைப்பட்ட வேலைகள் முடியும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும். வீட்டை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். 8ம் தேதி முதல் 2ல் ராகுவும், 8ல் கேதுவும் அமர்வதால், சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். கண் எரிச்சல், பல் வலி வந்து செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவது நல்லது. 5ல் சனி நிற்பதால், பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து போகும். பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். குரு 3ல் நிற்பதால், எடுத்த வேலைகளை முதல் முயற்சியில் முடிக்க முடியாமல் போகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். கலைத்துறையினரே! எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

பொறுப்புகள் அதிகரிக்கும் நேரம் இது.

ஒளிவு மறைவில்லாமல் பேசுபவர்களே!

ராசிபலன்

குருபகவான் அதிசாரத் தில் 2ல் நிற்பதால், இங்கிதமாகவும், இதமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மழலை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளால் இருந்த பிரச்னைகள் நீங்கும். புது வீடு வாங்குவீர்கள். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். 8ம் தேதி முதல் ராசிக்குள்ளேயே ராகுவும், 7ல் கேதுவும் அமர்வதால், ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். சோர்வு, களைப்பு, உடல் வலி ஏற்படும். கணவன்மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். செவ்வாய் 3ல் நிற்பதால், சகோதர வகையில் ஆதரவு பெருகும். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களுக்காக மேலதிகாரியிடம் பரிந்து பேசுவீர்கள். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகள் கிடைத்து அதனால் மிகுந்த புகழடைவீர்கள்.

வளைந்து கொடுக்க வேண்டிய வேளை இது.

பிறரை மகிழ்வித்து மகிழ்பவர்களே!

ராசிபலன்

யோகாதிபதி சனி 3ம் வீட்டில் நிற்பதால், எதிலும் வெற்றி, பணவரவு உண்டு. குடும் பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். 8ம் தேதி முதல் ராகு உங்கள் ராசியை விட்டு விலகி 12ல் மறைவதால், உடல் நலம் சீராகும். பழைய பிரச்னை களுக்குத் தீர்வு காண்பீர்கள். என்றாலும், திடீர்ப் பயணங்கள் அதிகமாகும். அவ்வப்போது தூக்கம் குறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆனால், கேது ராசிக்கு 6ல் நுழைவதால், மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். 15ம் தேதி முதல் சூரியன் 5ல் நுழைவதால், பிள்ளைகளால் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். உறவினர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். குரு அதிசாரத்தில் ராசிக்குள் அமர்ந்திருப்பதால், செரிமானக் கோளாறு, மஞ்சள் காமாலை, அலர்ஜி வந்து செல்லும். வியாபாரத்தில் சில நுணுக் கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைக்கும்.

பொறுமையால் புகழடையும் தருணம் இது.

எளிமையாகப் பழகுபவர்களே!

ராசிபலன்

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உறவினர், விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அரசாங்கக் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தந்தை வழி உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். தாய்வழி உறவுகள் உங்களைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள். 8ம் தேதி முதல் ராகு லாப வீட்டில் அமர்வதால், தடைகளெல்லாம் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆனால், கேது ராசிக்கு 5ல் அமர்வதால், பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் தாமதமாகி முடியும். குரு ராசிக்கு 12ல் மறைந்திருப்பதால், பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைதூக்கும். கர்ப்பிணிப் பெண்கள் அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.  ராசியிலேயே செவ்வாய் அமர்ந்திருப்பதால், கணவன்மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். சிறுசிறு நெருப்புக் காயங்கள், எதிலும் ஒருவித தயக்கம் வந்து செல்லும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களைச் சொல்லித் தருவார். சக ஊழியர்களுடன் மோதல்கள் வந்து செல்லும். கலைத்துறையினரே! சம்பள விஷயத்தில் கறாராக இருக்கவேண்டியது அவசியம்.

கடினமாக உழைத்து முன்னேறும் வேளை இது.

மனசாட்சியை மதித்து நடப்பவர்களே!

ராசிபலன்

சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பேச்சில் கம்பீரம் தெரியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பணப் புழக்கம் அதிகரிக்கும். புது வேலை அமையும். ராசிக்கு 12ல் செவ்வாய் மறைந்திருப்பதால், எதிர்மறை எண்ணம், தூக்கமின்மை, சகோதர வகையில் அலைச்சல், பழைய கடனை நினைத்து பயம் வந்து நீங்கும். 8ம் தேதி முதல் ராகு 10ம் வீட்டிலும், கேது 4லும் நுழைவதால், வேலைச்சுமை, கௌரவக் குறைவான சம்பவங்கள், எதிலும் ஆர்வமின்மை, வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்து செல்லும். குரு லாப வீட்டில் நிற்பதால், பணம் வரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவீர்கள்.

வேலைச்சுமை அதிகரிக்கும் காலம் இது.

ஒற்றுமையே உயர்வு என்று நினைப்பவர்களே!

ராசிபலன்

செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால், தொட்டது துலங்கும். புது வேலை கிடைக்கும். வர வேண்டிய பூர்வீகச் சொத்து கைக்கு வரும். மகளுக்குத் திருமணம் முடியும். சகோத ரர்கள் உதவுவார்கள். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை உண்டு. திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். 15ம் தேதி முதல் உங்கள் ராசியை விட்டு விலகி சூரியன் 2ல் நுழைவதால், உடல் வலி, முன்கோபம் விலகும். 8ம் தேதி முதல் கேது 3ம் வீட்டில் அமர்வதால், சிக்கல்கள், வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆனால், ராகு 9ல் அமர்வதால், சேமிப்புகள் கரையும். தந்தையாருடன் மனக்கசப்பு, அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். கலைத்துறையினரே! புது வாய்ப்பு கிடைத்து அதிகம் சம்பாதிப்பீர்கள்.

விவேகமான முடிவுகளால் சாதிக்கும் தருணம் இது.

சமயோசித புத்தியால் சாதிப்பவர்களே!

ராசிபலன்

ராசிநாதன் சனிபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் நிர்வாகத் திறன் கூடும். சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். குரு 9ல் நிற்பதால், சாதுக்கள் மகான்களின் ஆசிகள் கிடைக்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். 8ம் தேதி முதல் ராகு 8லும், கேது 2லும் நுழைவதால், பணப்பற்றாக்குறை, ஒருவித படபடப்பு, பேச்சால் பிரச்னைகள், குடும்பத்தில் சலசலப்புகள் வந்து செல்லும். 12ல் மறைந்திருக்கும் சூரியன் 15ம் தேதி முதல் ராசிக்குள் நுழைவதால், தலைச்சுற்றல், பெற்றோருடன் வாக்குவாதம் வந்து செல்லும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். புது முதலீடு செய்வது பற்றி யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும்.

போராடி வெல்லும் நேரம் இது.

தராதரம் அறிந்து பழகுபவர்களே!

ராசிபலன்

சுக்ரன் சாதகமாக இருப்பதால், மனத்தெளிவு, உற்சாகம் பிறக்கும். தோற்றப் பொலிவு கூடும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். கணவன்மனைவிக்குள் அந்நியோன்னியம் அதிகரிக்கும். வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். நண்பர்கள், உறவினர்கள் சிலர் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். சூரியனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், பணம் வரும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். 8ல் குரு நிற்பதால், உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயல்வார்கள். 8ம் தேதி முதல் ராசிக்குள் கேது நுழைவதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். ராகு 7ல் அமர்வதால், கணவன்மனைவிக்குள் வீண் சந்தேகத்தை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் சில தந்திரங் களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். கலைத் துறையினரே! வெகுநாட்களாக தடைப்பட்ட வாய்ப்பு இனி கூடி வரும்.

சகிப்புத் தன்மை தேவைப்படும் வேளை இது.

அதர்மங்களைக் கண்டு வெறுப்பவர்களே!

சூரியனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய திட்டங்கள் நிறைவேறும்.

ராசிபலன்

உறவினர்களின் உண்மையான குணத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். புது பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை யடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.  வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 7ல் குரு நிற்பதால், சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். தூரத்து உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 8ம் தேதி முதல் கேது ராசியை விட்டு விலகுவதால், ஆரோக்கியம் சிறக்கும். சோர்வு, களைப்பிலிருந்து விடுபடுவீர்கள். வேற்றுமொழியினரால் ஆதாயம் உண்டு. ராகு 6ல் அமர்வதால், பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். வீடு கட்ட வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். அடகிலிருந்த நகை, பத்திரங்களை மீட்பீர்கள். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள். கலைத்துறையினரே! புதிய வாய்ப்புக்கள் வந்து சேரும். உங்களுடைய படைப்புகள் பாராட்டு பெறும். மற்றவர்களால் கௌரவிக்கப்படுவீர்கள்.

பட்டமரம் துளிர்க்கும் தருணம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism