மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள்!

ஜனவரி 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

பணம் வரும்!

ராசி பலன்கள்!

மேஷம்: தள்ளி நின்று வேடிக்கை பார்க்காமல், தவறுகளைத் திருத்து பவர்களே! உங்கள் பூர்வ

ராசி பலன்கள்!

புண்யாதிபதி சூரியன் 15-ம் தேதி முதல் ராசிக்கு 10-ல் அமர் வதால், பணவரவு உண்டு. ராசிநாதன் செவ்வாய் 7-ல் நிற்பதால், உடல்நலக் கோளாறு வந்து நீங்கும். 8-ல் சனி இருப்பதால், நன்றி மறந்தவர் களை நினைத்து நீங்கள் வருந்துவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளைத் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.

பிரச்னைகள் தீரும்!

ராசி பலன்கள்!

ரிஷபம்: பெரிய குறிக்கோளு டன் வாழ்பவர்களே! சப்தமாதிபதி செவ்வாய் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப் பதால், பழைய பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். வீட்டைப் புதுப் பிக்க திட்டமிடுவீர்கள். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால்... வேலைச்சுமை அதிகரிக்கும். 15-ம் தேதி முதல் சூரியன் 9-ம் வீட்டில் நுழைவதால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் புது நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வரலாம்.

நண்பரால் நன்மை !

ராசி பலன்கள்!

மிதுனம்: சலனப்படாமல் சங்கடங்களை எதிர் கொள்பவர்களே! சனியும், ராகுவும் வலுவாக அமர்ந் திருப்பதால், புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். செவ்வாய் 5-ல் நிற்பதால், பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காணுங்கள். குரு சாதகமாக இல்லாததால்... சலிப்பு வந்து செல்லும். 20-ம் தேதி முதல் சுக்கிரன் சாதகமாவதால், குடும்பத்தில் மன வருத்தம் விலகும். வியாபாரத்தில் வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம்.

போராட்டங்கள் ஓயும்!

ராசி பலன்கள்!

கடகம்: பிறர் சுதந்திரத்தில் தலையிடாதவர் களே! செவ்வாய் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால், போராட்டங்களை சளைக்காமல் சமாளிப்பீர்கள். புதன் 6-ல் மறைந்திருப்பதால்... உறவினர், தோழிகளுடன் பிணக்கு வந்து நீங்கும். 15-ம் தேதி முதல் சூரியன் 7-ல் அமர்வ தாலும், 20-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ல் மறைவதாலும், உடல்நலக்கோளாறு வந்து செல்லும். வியாபாரம் சுமார்தான், உத்யோகத்தில் நீங்கள் கூடு தலாக வேலை பார்க்க வேண்டி வரும்.

வருமானம் உயரும்!

ராசி பலன்கள்!

சிம்மம்: உண்மையை உரக்கச் சொல்பவர்களே! 15-ம் தேதி முதல் ராசிநாதன் சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் அமர்வதால்... வருமானம் உயரும். உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாத தால், பேச்சால் பிரச்னை வந்து போகும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால், தாயாருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து தக்க முடிவு எடுப்பீர்கள். உத்யோகத் தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது.

போட்ட திட்டம் பலிக்கும்!

ராசி பலன்கள்!

கன்னி: மன்னிக்கும் குணம் உள்ளவர்களே! 3-ல் சனியும், 6-ல் கேதுவும் வலுவாக அமர்ந்திருப்பதால், நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். 15-ம் தேதி முதல் 5-ல் சூரியன் அமர்வதால்,  மனக் கலக்கம் ஏற்படலாம். ஜென்ம குரு தொடர்வதால், எதிர்காலம் பற்றிய பயம் வந்து செல்லும். வியாபாரத்தில், லாபத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில், அலுவலக ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

புதன், சுக்கிரன் சாதகம்!

ராசி பலன்கள்!

துலாம்: நாசூக்காக பேசத் தெரிந்தவர்களே! புதனும், சுக்கிர னும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பூர்வீக சொத்தை சீர்செய்வீர்கள். ராசிக்குள் செவ்வாயும், 2-ல் சனியும் தொடர்வதால், அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள்.

வீடு களைகட்டும்!

ராசி பலன்கள்!

விருச்சிகம்: விடாமுயற்சியும், விவேகமும் அதிகம் உள்ளவர்களே! 15-ம் தேதி முதல் சூரியன் 3-ம் வீட்டில் நுழைவதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். உறவினர் வருகை யால் வீடு களைகட்டும். புது சொத்து வாங்குவீர்கள். 2-ல் செவ்வாயும், ராசிக்குள் சனியும் தொடர்வதால்... அலைச்சல், தூக்கமின்மை வந்து செல்லும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் நீங்கள் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

கனவுகள் நனவாகும்!

ராசி பலன்கள்!

தனுசு: தன்னலம் கருதாமல் உதவி செய்பவர்களே! 3-ம் வீட்டில் கேது வலுவாக அமர்ந் திருப்பதால், உங்கள் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். ஆடை, அணிகலன் சேரும். ராசிநாதன் குரு 10-ல் அமர்திருப்பதால், மறைமுக விமர்சனம் வந்து செல்லும். 15-ம் முதல் சூரியன் 2-ல் அமர்வதால், கோபம் குறையும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால், நீங்கள் அலைக் கழிக்கப்படுவீர்கள்.

இலக்கு வசப்படும்!

ராசி பலன்கள்!

மகரம்: கலகலப்பாக பேசுபவர்களே! குரு 9-ல் நிற்பதால், இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். 15-ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் அமர்வதாலும், சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததாலும்... முன்கோபம், காரிய தாமதம் வந்து செல்லும். வியாபாரத்தில் சில நுணுக்கங் களைக் கற்றுக்கொள்வீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

தைரியம் கூடும்!   

கும்பம்: பரந்த மனசு கொண்டவர் களே! ராசிநாதன் சனிபகவான் 10-ம் வீட்டில் வலுவாக அமர்ந் திருப்பதால்... தைரியம் கூடும். வருமானத்தைப் பெருக்க முயற்சி் மேற்கொள்வீர்கள். ராகு, கேது மற்றும்

ராசி பலன்கள்!

குரு ஆகிய கிரகங்களின் போக்கு சரியில்லாததால், தூக்கமின்மை, வீண் செலவுகள் வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரம் சுமார் தான். உத்யோகத்தில் நீங்கள் கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும்.

பாராட்டுகள் குவியும்!

ராசி பலன்கள்!

மீனம்: சோர்ந்து வருபவர்களை தேற்றிவிடுபவர் களே! முக்கிய கிரகங்கள் உங் களுக்கு சாதகமாக இருப்பதால், தொட்டது துலங்கும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். 8-ல் செவ்வாய் நிற்பதால்... வீண் விரயம், சகோதர வகையில் மனவருத்தம், சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து நீங்கும். வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் திறமைக்கு பாராட்டுகள் குவியும்.