மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள்!

ராசி பலன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்!

ஜனவரி 27-ம் தேதி முதல் பிப்ரவரி 9-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்ஜோதிடம்

பிள்ளைகளால் மகிழ்ச்சி!

ராசி பலன்கள்!

மேஷம்: மற்றவர்களுக்கு கலங்கரைவிளக்கமாக திகழ்பவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் நல்லவிதமாக நடந்துகொள்வார்கள். என்றாலும் ராகு, சனி மற்றும் செவ்வாயின் போக்கு சரியில்லாததால்... படபடப்பு வந்து செல்லும். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் மறைமுக நெருக்கடிகள் வந்து போகும்.

இல்லத்தில் குதூகலம்!

ரிஷபம்: சிந்தனைத் திறனும், செயல் திறனும் கொண்டவர்களே! ராசிக்கு 6-ல் செவ்வாய் நிற்பதால்,

ராசி பலன்கள்!

உறவினர், தோழிகளின் வருகையால் வீடு கலகலப்பாக இருக்கும். சூரியன் 9-ல் நிற்பதால், அரசு காரியங்கள் தாமதமாக முடியும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால்,  வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.

உறவுகள் மதிக்கும்!

மிதுனம்: மனிதாபிமானத்துடன் நடந்துகொள்பவர்களே! ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில்

ராசி பலன்கள்!

செல்வதால், உங்கள் வீட்டை விரிவுபடுத்துவீர்கள். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். ராகு வலுவாக அமர்ந்ததால், நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சூரியன் 8-ல் நிற்பதால், உடல் உபாதை வந்து செல்லும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.

விடாமுயற்சி சாதிக்க வைக்கும்!

கடகம்: பிறந்த மண்ணை  நேசிப்பவர்களே! செவ்வாய் 4-ல் நிற்பதால், விடாமுயற்சியால் நீங்கள் சில

ராசி பலன்கள்!

வேலைகளை முடிப்பீர்கள். சொத்து வாங்குவது, விற்பது சுமுகமாக முடியும். என்றாலும், முக்கிய கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாததால்... முன்கோபம், அலைச்சல் வந்து செல்லும். வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்களால் நஷ்டம் ஏற்படும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.    

வீடு வாங்கும் யோகும்!

ராசி பலன்கள்!

சிம்மம்: நல்லது கெட்டதை நன்கு அறிந்தவர்களே! பிப்ரவரி 6-ம் தேதி வரை அதிசாரத்தில் குரு 2-ம் வீட்டில் நிற்பதால், புது வீடு வாங்குவீர்கள். 7-ம் தேதி முதல் குரு ராசியிலேயே ஜென்ம குருவாக அமர்வதால், ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால், வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் அதிகம் உழைக்க வேண்டி வரும். உத்யோகத்தில் நீங்கள் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள்.

துணிச்சல் துணை நிற்கும்!

கன்னி: கள்ளங்கபடமில்லாத உள்ளம் கொண்டவர்களே! சனி 3-ம் வீட்டில் நிற்பதால், துணிச்சலாக சில

ராசி பலன்கள்!

முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாழ்க்கைத் துணைவர் அனுசரணையாக இருப்பார். சூரியன் 5-ல் நிற்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும்.  பிப்ரவரி 6-ம் தேதி வரை ராசியிலேயே குரு அமர்ந்திருப்பதால், உடல் உபாதை வந்து செல்லும். வியாபாரத்தில் வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியப்பார். 

உத்யோகத்தில் முன்னேற்றம்!

துலாம்: சமயோஜித புத்தி அதிகமுள்ளவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், வருமானம்

ராசி பலன்கள்!

உயரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். ராசிக்குள் செவ்வாயும், 2-ல் சனியும் நிற்பதால்... சகோதர வகையில் பிணக்குகள், வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து செல்லும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள்.       

மதிப்பு, மரியாதை கூடும்!

விருச்சிகம்: போராட்டங்கள், ஏமாற்றங்களைக் கண்டு புலம்பாதவர்களே! சூரியன் 3-ம் வீட்டில் நிற்பதால்,

ராசி பலன்கள்!

எதிர்பார்த்த காரியத்தில் வெற்றி உண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். 12-ல் செவ்வாயும், ராசிக்குள் சனியும் தொடர்வதால், கவலை, பணப்பற்றாக்குறை வந்து செல்லும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மனோபலம் அதிகரிக்கும்!

ராசி பலன்கள்!

தனுசு: ஊர் கூடி எதிர்த்தாலும் கொள்கையை மாற்றிக்கொள்ளாதவர்களே! லாப வீட்டில் செவ்வாய் நிற்பதால், மனோபலம் அதிகரிக்கும். திடீர் பயணங்கள் உண்டு. 2-ல் சூரியன் நிற்பதால், பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். பிப்ரவரி 6-ம் தேதி வரை 10-ல் குரு நீடிப்பதால், சில சமயங்களில் ஏமாற்றம் ஏற்படலாம். வியாபாரத்தை புது முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது.

பணப் புழக்கம்... பலே!

மகரம்: ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில்

ராசி பலன்கள்!

செல்வதால், புதுப் பதவியும், பொறுப்பும் தேடி வரும். பணப் புழக்கம் அதிகரிக்கும். ராசிக்குள் சூரியன் இருப்பதால், உடல் உபாதை வேலைச்சுமை வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

வாழ்க்கைக் கலை வசப்படும்!

ராசி பலன்கள்!

கும்பம்: பட்டம், பதவி, பணத்துக்கு மயங்காதவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். ராசிக்குள் கேதுவும், 7-ல் ராகுவும் நிற்பதால், தூக்கம் குறையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில், சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். 

விரும்பியது கிடைக்கும் !

மீனம்: நெருக்கடி நேரத்திலும் நிதானம் தவறாதவர்களே! சூரியனும், சுக்கிரனும் லாப வீட்டில் நிற்பதால்,

ராசி பலன்கள்!

நினைத்த காரியம் நிறைவேறும். பணவரவு உண்டு. 8-ல் செவ்வாய் தொடர்வதால், மனப்போராட்டம் வந்து போகும். ராகு 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புதுக் கிளை தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை மதிப்பார்கள்.