Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 15 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 15 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

மேன்மையானவர்களே!

ராசிபலன்

உங்கள் தனாதிபதி சுக்ரன் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். செல்வாக்கு கூடும். இடம், பொருள் காலம் அறிந்து பேசி காரியத்தைச் சாதிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். திருமணம் கூடி வரும். வீடு, வாகனம் அமையும். புதிய ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்குவீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யோகாதிபதி சூரியன் 13-ம் தேதி முதல் லாப வீட்டில் அமர்வதால், மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். புதன் சாதகமாக இருப்பதால், வீண் செலவுகளைக் குறைப்பீர்கள். சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.

7-ல் செவ்வாய் நீடிப்பதால், வாழ்க்கைத் துணையுடன் கருத்து மோதல்கள், உடல்நல பாதிப்பு போன்றவை ஏற்படக்கூடும். ராகு சரியில்லாததால், மனஉளைச்சல், வீண் செலவுகள் வரக்கூடும். என்றாலும் 7-ம் தேதி முதல் குரு 5-ல் அமர்வதால், தடைப்பட்ட காரியங்கள் முடியும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வது பற்றி நம்பிக்கைக்கு உரியவர் களிடம் ஆலோசனை கேட்பீர்கள். வேலையாட்களை அனுசரித்துச் செல்லவும். உத்தியோகத்தில் அலு வலகச் சூழ்நிலை அமைதி தரும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். கலைத்துறையினரே! உங்களின் நீண்டநாள் கனவு நனவாகும்.

தொடர் முயற்சியால் சாதிக்கும் தருணம் இது. 

உண்மை பேசுபவர்களே!

ராசிபலன்

உங்களின் பூர்வ புண்ணியாதி பதியான புதன் சாதகமாக இருப்பதால், மனதில் தைரியம் பிறக்கும். தயக்கம் இல்லாமல் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிப்படையாக சில கருத்துக்களைத் தெரிவிப்பீர்கள். கல்யாணம், கிரகப்பிரவேசம் என பரபரப்பாகக் காணப்படுவீர்கள். மகனுக்கு வேலை கிடைக்கும். உறவினர், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள்.

12-ம் தேதி வரை தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். 13-ம் தேதி முதல் சூரியன் 10-ல் நுழைவதால், புது வேலை கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. ராசிநாதன் சுக்ரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், வீட்டை அழகுபடுத்தி, விரிவுபடுத்து வீர்கள். வி.ஐ.பி.-கள் நண்பர்களா வார்கள். ராகு 4-ல் தொடர்வதால், தாயாருக்கு கழுத்து, இடுப்பு வலி வந்து போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். 7-ல் சனி நிற்பதால், கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். என்றாலும் செவ்வாய் வலுவாக இருப்பதால், வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். சகோதர வகையில் பயனடைவீர்கள்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். வேலையாட்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் மறைமுகத் தொந்தரவுகள் வந்து போகும். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கு மளவுக்கு பிரபலமாவீர்கள்.

திட்டமிட்டு வெற்றி பெறும் வேளை இது.

சாதனையாளர்களே!

ராசிபலன்

சுக்ரன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால், உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.

பல மாதங்களாகத் தேடியும் உங்கள் ரசனைக்கேற்ப அமையாமல் போன வீடு, மனை இப்போது நீங்கள் எதிர்பார்த்தபடி அமையும். வங்கிக் கடன் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப் படுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வேலை அமையும். பூர்வீக சொத்தின்மூலம் வருமானம் வரும். ராகு 3-ல் நிற்பதால், வேற்று இனத்தவர்கள் நண்பர்களாவார்கள். வழக்கில் வெற்றி உண்டு.

பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். செவ்வாய் 5-ல் நிற்பதால், பிள்ளை களால் டென்ஷன் அதிகரிக்கும். சூரியனின் போக்கு சாதகமாக இல்லாததால், யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரம் செழிக்கும். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். வி.ஐ.பி.-களும் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் ஒரு பக்கம் வேலைச்சுமை அதிகமானாலும் மற்றொரு பக்கம் அதிகாரிகளின் பாராட்டுகளால் உற்சாகமடைவீர்கள். கலைத்துறையினரே! இதுவரை நீங்கள் எதிர்பார்த்திருந்த புது ஒப்பந் தங்கள் கையெழுத்தாகும்.

விட்டுக்கொடுத்து விட்டதைப் பிடிக்கும் காலம் இது.

உதவும் மனம் கொண்டவர்களே!

ராசிபலன்

செவ்வாய் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால், கோபம் குறையும். புது முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். பணத்தட்டுப்பாடு விலகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். காலி மனையை விற்று புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும்.

7-ம் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு 2-ல் அமர்வதால், பணவரவு அதிகரிக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவருடனான மோதல்கள் விலகும். சுக்ரன் 6-ல் மறைந்திருப்பதால், கணவன்-மனைவிக்குள் மனஸ் தாபங்கள் வந்து நீங்கும். வீட்டில் பராமரிப்பு செலவுகள் வந்து செல்லும்.

புதன் சாதகமாக இருப்பதால், அசதி, சோர்வு விலகும். நட்பால் பலனடைவீர்கள். உறவினர்கள் உதவி கரமாக இருப்பார்கள். 5-ல் சனி தொடர்வதால், பிள்ளைகள் கொஞ்சம் கோபப்படுவார்கள். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால், எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்கமுடியாது. வீண் பழி, வேலைச்சுமை, ஏமாற்றம் வந்து செல்லும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மேலதிகாரி ஆதரிப்பார். கலைத்துறையினரே! கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகள் வந்தாலும் அஞ்சமாட்டீர்கள்.

நண்பர்களால் மறுமலர்ச்சி உண்டாகும் வேளை இது.

பரபரப்பானவர்களே!

ராசிபலன்

உங்கள் ராசிநாதன் சூரியன் 12-ம் தேதி வரை சாதகமாக இருப்பதால், சவால்களைச் சமாளிப்பீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகனம் வாங்குவீர்கள். சிலர் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். புது வேலை கிடைக்கும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல குடும்பத் திலிருந்து மணப்பெண் அமைவாள். மகள் உங்களைப் புரிந்துகொள்வாள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

சுக்ரன் சாதகமாக இருப்பதால், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வி.ஐ.பி.-களின் அறிமுகத்தால் உற்சாகம் அடைவீர்கள். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால், அடிக்கடி கோபப்படுவீர்கள். வேலைச் சுமையால் சோர்வு, களைப்பு, மன இறுக்கம் வந்து செல்லும். ராகு ராசிக்குள் நிற்பதுடன், 7-ம் தேதி முதல் குருவும் உங்கள் ராசிக்குள் நுழைவதால், எதிலும் பிடிப்பற்ற போக்கு, பிறர் மீது நம்பிக்கையின்மை, வாயுத் தொந்தரவினால் நெஞ்சு வலி, காய்ச்சல் வரக்கூடும்.

செவ்வாய் சாதகமாக இருப்பதால், உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப் பார்கள். சொத்துச் சேர்க்கை உண் டாகும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிக்க வேண்டி வரும். கலைத் துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

பொறுத்துக் கொண்டால் வெற்றி பெறும் காலம் இது.

பொறுமைசாலிகளே!

ராசிபலன்

சனி வலுவாக 3-ல் நிற்பதால், எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெரிய பதவியில் இருப்ப வர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகள் உங்களின் அறிவுரைகளை ஏற்பார்கள். சுப நிகழ்ச்சிகள், உறவினர்கள், நண்பர் களின் வருகையால் வீடு களைகட்டும். 5-ல் அமர்ந்து அவ்வப்போது உங்களைப் படுத்தி எடுக்கும் சூரியன் 13-ம் தேதி முதல் 6-ல் அமர்வதால், மனம் தெளிவு அடையும். டென்ஷன் தீரும்.

எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். இழுபறியான வேலைகள் முடியும். சுக்ரன் சாதகமாக இருப்பதால், பணம் வரும். மனைவி உதவியாக இருப்பார். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வாகனத்தை மாற்றுவீர்கள். புதிதாக வீடு, மனை அமையும். தந்தை வழியில் அனுகூலம் உண்டு. குரு சாதகமாக இல்லாததால், வேலைச்சுமை இருக்கும். தூக்கம் குறையும். இனம் தெரியாத கவலைகள் மனதை வாட்டும்.

செவ்வாய் 2-ல் நிற்பதால், பல் வலி, காது வலி, பேச்சால் பிரச்னை வந்து போகும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். சொத்து வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம். ஆலயம் புதுப்பிக்க உதவுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். வேலையாட்கள் உதவு வார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சமயங்களில் உங்களைக் கடிந்து பேசினாலும் அன்பாக நடந்துகொள்வார். கலைத்துறையினரே! உங்களின் கற்பனைத் திறன் வளரும்.

அனுசரித்துப் போவதால் அதிகாரம் பெறும் நேரம் இது.

கடின உழைப்பாளிகளே!

ராசிபலன்

உங்கள் பாக்கியாதிபதி புதன் சாதகமாக இருப்பதால், புது திட்டங்கள் மனதில் உதிக்கும். பழைய கடனைப் பைசல் செய்ய புது உதவிகள் கிட்டும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். குடும்பச் சூழ்நிலையைப் புரிந்துகொள்வார்கள். ஆனால் 13-ம் தேதி முதல் சூரியன் 5-ல் அமர்வதால், முன்கோபம், காரியத் தடை, தூக்க மின்மை, உறவினர்களால் அன்புத் தொல்லைகள் வந்து விலகும்.
ராசிநாதன் சுக்ரன் சாதகமாக இருப்பதால், ஆளுமைத்திறன் அதிகரிக்கும். விலை உயர்ந்த எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். 11-ல் ராகு நிற்பதால், எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களின் மதிப்பு, மரியாதை கூடும். கோயில் கும்பாபிஷேகத்தை முன் னின்று நடத்துவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும்.

பாதச்சனி தொடர்வதால், வீண் செலவு, விரயம், கணுக்கால் வலி வந்து போகும். சுற்றி இருப்பவர்களின் ஆதரவு பெருகும். ராசிக்குள் செவ்வாய் அமர்ந்திருப்பதால், சிறுசிறு விபத்துகள், முன்கோபம், சகோதர வகையில் பிரச்னைகள், வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து செல்லும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தி யோகத்தில் பெரிய பொறுப்புக்குத் தேர்தெடுக்கப்படுவீர்கள். சக ஊழி யர்கள் பாராட்டுவார்கள். கலைத்துறை யினரே! புகழ்பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள்.

கலகலப்பாகப் பேசி காரியம் சாதிக்கும் தருணம் இது.

சிந்தனையாளர்களே!

ராசிபலன்

உங்களின் பிரபல யோகாதிபதி சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், மாறுபட்ட அணுகு முறையால் சாதிப்பீர்கள். வேலை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. சொத்துப் பிரச்னை தீரும். பகைவர்கள் ஒதுங்குவார்கள். வழக்கில் வெற்றி உண்டு. தாய்வழியில் ஒத்து ழைப்பு அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணம் அமையும். விசா கிடைக்கும். புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்ப தால், புது நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள்.

உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். மகளின் திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். மகனுக்கு வேலை கிடைக்கும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு அமையும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். குரு ராசிக்கு 10-ல் தொடர்வதால், சிலர் உங்களை தவறான போக்கிற்குத் தூண்டுவார்கள். சந்தேகத்தால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால், கடன் பிரச்னைகள் அவ்வப்போது மனதை வாட்டும். ஜென்மச் சனி தொடர்வதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

வியாபாரத்தில எதிர்பாராத தன லாபம் உண்டு. வேலையாட்களிடம் கறாராக இருக்கவும். உத்தியோகத்தில் முக்கியக் கோப்புகளைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம். மேலதிகாரியுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். கலைத்துறையினரே! தங்கள் படைப்புகள் வெளியாவது தாமதப்படும்.

வளைந்து கொடுத்து செல்லவேண்டிய நேரம் இது.

வெள்ளை மனம் கொண்டவர்களே!
 

ராசிபலன்

கேது 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், தொட்ட காரியங்கள் துலங்கும். மகான்கள், சித்தர்களின் ஜீவ சமாதிக்குச் சென்று வருவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையைப் புரிந்து நடந்துகொள்வார்கள். பழைய வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும்.

2-ல் அமர்ந்து ஏட்டிக்குப் போட்டியாகப் பேச வைக்கும் சூரியன் 13-ம் தேதி முதல் 3-ல் அமர்வதால், இங்கிதமாகப் பேசுவீர்கள். தடைப்பட்ட அரசு காரியங்கள் உடனே முடியும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால், மனைவியின் உடல்நிலை சீராகும். மனைவி வழியில் சொத்து சேரும். கல்யாண முயற்சிகள் வெற்றியடையும். செவ்வாய் 11-ம் வீட்டில் நிற்பதால், மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புள்ள நிறுவ னத்தில் வேலை கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள்.

வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். வேலை யாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவைப் பெறு வீர்கள். சக ஊழியர்கள் ஆச்சர்யப் படுமளவிற்கு சில வேலைகளைப் பரபரப்புடன் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

பிரபலங்களால் ஆதாயம் அடையும் வேளை இது.

நீதி, நெறி தவறாதவர்களே!

ராசிபலன்

ராசிநாதன் சனிபகவான் 11-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். உங்களின் இலக்கை நோக்கி முன் னேறுவீர்கள். உள் மனதில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களைத் தூக்கி எறிவீர்கள். இதமாகப் பேசுவீர்கள். கொஞ்சம் வளைந்து கொடுத்தால் வானம் போல் நிமிரலாம் என்பதை உணர்வீர்கள்.
ஷேர் மூலம் பணம் வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மகனுக்கு வேலை கிடைக்கும். 12-ம் தேதி வரை ராசிக்குள் நிற்கும் சூரியன்  உங்களை சீண்டிப் பார்க்கும். வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் வரும். 13-ம் தேதி முதல் உங்கள் ராசியை விட்டு சூரியன் விலகுவதால், சோர்வு, களைப்பு, வயிற்று வலி நீங்கும். அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள்.

கண் பார்வையைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். புதன் சாதகமாக இருப்பதால், வாகனத்தைச் சீர் செய்வீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் அன்பு அதிகரிக்கும். பணம் ஓரளவு வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பழைய சரக்கு களை தள்ளுபடி விலையில் விற்று முடிப்பீர்கள். வேலையாட்கள், பங்கு தாரர்களால் டென்ஷன் வந்து போகும். உத்தியோகத்தில் உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். கலைத்துறையினரே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நேரம் இது.

செய்நன்றி மறவாதவர்களே!

ராசிபலன்

புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் எண்ணங்கள் நிறைவேற வாய்ப்பு இருக்கிறது. மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். பிள்ளைகளிடம் முக்கியமான குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை. மகளுக்கு நல்ல வரன் கூடி வரும். ஏறிக்கொண்டே இருக்கும் விலைவாசியைக் கண்டு புறநகர்ப் பகுதியிலாவது வீட்டு மனை வாங்க நினைப்பீர்கள்.

உங்கள் ராசிநாதன் சனிபகவான் வலுவாக இருப்பதால், சொந்தங்களின் சுயரூபத்தை தெரிந்துகொண்டு அதற்கேற்ப இனி செயல்பட நினைப்பீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். 13-ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால், ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால், வாழ்க்கைத் துணைக்கு மருத்துவச் செலவுகள், இழப்புகள், ஏமாற்றம் வந்து செல்லும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சில விளம்பர யுத்தி களைக் கையாளுவீர்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்களால் சின்னச் சின்ன பிரச்னைகள் தலைதூக்கினாலும் சாதுர்யமாகப் பேசி சரி செய்வீர்கள். கலைத்துறையினரே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த புதுப்புது நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும்.

தன் பலம் பலவீனத்தை உணரும் காலம் இது.

உதவும் குணமுடையவர்களே!

ராசிபலன்

ராகு 6-ம் வீட்டில் நிற்பதால், தைரியம் கூடும். பணவரவு உண்டு. வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆன்மிக அறிஞர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புதன் சாதகமாக இருப்ப தால், உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் ஆலோசனையை நாடுவார்கள். நவீன ரக மின்னணுச் சாதனங்கள் வாங்குவீர்கள். சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், அரசாங்க விஷயங்கள் விரைந்து முடியும். பழைய கடனில் ஒரு பகுதி தீரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 8-ல் செவ்வாய் நிற்பதால், வாகன விபத்துகள், உடன் பிறந்தவர்களால் டென்ஷன், எதிர்பாராத செலவுகள் வந்து செல்லும். சொத்து வாங்கும்போது தாய்ப்பத்திரத்தை சரி பார்த்து வாங்குங்கள்.

வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். அவ்வப்போது விடுமுறையில் சென்ற வேலையாட்கள் இனி பொறுப்பாக நடந்துகொள்வார்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் கடினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டி அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். கலைத்துறையினரே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

சிரமம் இல்லாமல் இலக்குகளை எட்டிப்பிடிக்கும் வேளை இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism