Published:Updated:

ராசிபலன்

பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 29 வரை ‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

பிரீமியம் ஸ்டோரி

தையும் திட்டமிட்டுச் செய்பவர்களே!

ராசிபலன்

சூரியன் லாப வீட்டில் வலுவாக நிற்பதால், பண வரவு உண்டு. அரசியல் வாதிகளின் தொடர்பு கிடைக்கும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிட்டும். விலகிச் சென்ற சொந்தங்கள் உங்களைப் புரிந்து கொண்டு வலிய வந்து பேசுவார்கள். பழைய வழக்கில் வெற்றி உண்டு.
ராகு 5-ல் தொடர்வதால், மன இறுக்கம், எதிர்மறை எண்ணம், வீண் டென்ஷன் வந்து போகும். பிள்ளை களின் வருங்காலம் குறித்து அதிகம் யோசிப்பீர்கள். உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.

சுக்ரனும் புதனும் வலுவாக இருப்பதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை வாங்குவீர்கள். ராசிக்கு 8-ல் சனி தொடர்வதால் அவநம்பிக்கை, பிடிப்பற்ற போக்கு ஏற்படும். சிறுசிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

25-ம் தேதி வரை 7-ல் செவ்வாய் தொடர்வதால், வாழ்க்கைத் துணைக்கு இடுப்புவலி, வேலைச்சுமை உண்டு.

வியாபாரத்தில், பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். பங்குதாரர் களை அனுசரித்துப் போகவும். உத்தி யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் மறைமுக தொந்தரவு வந்தாலும் சமாளிப்பீர்கள். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு வரவேற்பு அதிகரிக்கும்.

தொலைநோக்கு சிந்தனையால் இலக்கை எட்டிப் பிடிக்கும் தருணம் இது.

நன்றி மறவாதவர்களே!

ராசிபலன்

ராசிநாதன் சுக்ரன் சாதகமாக இருப்பதால், மாறுபட்ட அணுகு முறையால் சாதிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சிலர் வீடு மாற வேண்டி வரும். பிள்ளைகள் உங்கள் விருப்பப்படி செயல்படுவார்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு.

சூரியனும் புதனும் சாதகமாக இருப்பதால், புது பதவிக்கு தேர்ந்தெடுக் கப்படுவீர்கள். கல்யாண முயற்சிகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும்.

செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், சகோதரர்கள் மதிப்பார்கள். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். ராகு, கேது, சனி மற்றும் குருவின் போக்கு சாதகமாக இல்லாததால் தாயாருக்கு மருத்துவச் செலவு வந்து போகும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவது குறித்து ஆலோசிப்பீர்கள். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். சில நேரங் களில் மனக்குழப்பத்துக்கு ஆளாகி விரக்தியாகப் பேசுவீர்கள்.

வியாபாரத்தில், அதிரடி மாற்றங்கள் செய்து அதீத லாபம் ஈட்டுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். அதை திறம்படச் சமாளிப்பீர்கள். கலைத் துறை யினருக்கு புது வாய்ப்புகள் தேடி வரும்.

போராட்டங்களைக் கடந்து முன்னேறும் காலம் இது.

தடம் மாறாதவர்களே!

ராசிபலன்

ராகு வலுவாக இருப்பதால், நினைத்தது நிறைவேறும். அறிஞர்கள், கல்வியாளர்களின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வேற்று மொழி பேசுபவர் மற்றும் வேற்று நாட்டவரால் திடீர் திருப்பம் உண்டாகும். மகளுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவாள். கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள்.
சுக்ரன் சாதகமாக இருப்பதால், சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களில் சிலர், வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால், தந்தையுடன் கருத்துமோதல்கள், அவருக்கு உடல்நிலை பாதிப்பு வந்து போகும். உங்கள் ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வ தால், பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் பாராட்டுதலும், ஒத்துழைப்பும் கிடைக்கும். 

25-ம் தேதி வரை செவ்வாய் 5-ல் நிற்பதால், பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள், சகோதர வகையில் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

வியாபாரத்தில் பற்று-வரவு உயரும். புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பழைய பங்கு தாரரை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அலைக்கழிப்பும், அதிகாரிகளால் பிரச்னைகளும் வரக்கூடும். கலைத் துறையினர், தங்களின் படைப்புகளுக்காக கௌரவிக்கப்படுவார்கள்.

கடின உழைப்பின் மூலம் சாதிக்கும் நேரம் இது.

காலம்-சூழலை உணர்ந்தவர்களே!

ராசிபலன்

சுக்ரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உங்க ளின் புத்திசாலித்தனம் வெளிப்படும். வி.ஐ.பி-களின் ஆதரவு கிடைக்கும். பண வரவு உண்டு. பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். குடும்பத் தில் மகிழ்ச்சி தங்கும்.

பேச்சு சாமர்த்தியத்தால் கடன் பிரச்னையைச் சமாளிப்பீர்கள். உறவி னர் வீடு தேடி வருவார்கள். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குரு 2-ல் அமர்ந்திருப்பதால், கல்யாண முயற்சிகள் நல்லவிதத்தில் முடியும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். சூரியன் 8-ல் மறைந்திருப்பதால், அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வாழ்க் கைத் துணை வழியில் இருந்த பிணக் குகள் நீங்கும். ராகு 2-ல் நிற்பதால், பேச்சில் கடுமை காட்டாதீர்கள். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள்.

8-ல் கேது தொடர்வதால், ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். சனி 5-ல் நிற்பதால், பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோ கம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சி கள் தாமதமாகும். கர்ப்பிணிகளுக்கு உணவில் கட்டுப்பாடு அவசியம்.

வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைக ளையும் எளிதில் செய்துமுடிப்பீர்கள்.கலைத்துறையினரே! உதாசீனப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும்.

நிதானத்தால் நெருக்கடிகளைச் சமாளிக்கும் வேளை இது. 

கொள்கைப் பிடிப்பாளர்களே!

ராசிபலன்

யோகாதிபதி செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், புத்திசாலித் தனத்தால் முன்னேறுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். சிலர், சொத்தை விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

சுக்ரன் 6-ல் மறைந்திருப்பதால், சிறு சிறு விபத்துகள், வாகனப் பழுது, சளித் தொந்தரவு வந்து போகும். கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். ராசிக்குள் குருவும், ராகுவும் நிற்பதால், ஒருவித படபடப்பு, பதற்றம், முன்கோபம், பசியின்மை, செரிமானக் கோளாறு வந்து செல்லும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற அச்சம் வந்து செல்லும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.
ராசிநாதன் சூரியன் 7-ல் நிற்பதால், வேலைச் சுமை, வாழ்க்கைத் துணைக்கு வயிற்று வலி, அலைச்சல் வந்து போகும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்துவீர்கள். 24-ம் தேதி வரை புதன் 6-ல் மறைந் திருப்பதால், உறவினர், நண்பர்களுடன் மோதல்கள் வரக்கூடும்.

வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களால் விரயம் வரும். உத்தி யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாட வாய்ப்பு உண்டு; கவனம் தேவை.

அறிவால் வெற்றிக்கனி பறிக்க வேண்டிய காலம் இது.

சிந்தனை மிகுந்தவர்களே!

ராசிபலன்

உங்கள் தனாதிபதி சுக்ரன் சாதகமாக இருப்பதால், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். குடிநீர் மற்றும் காற்றோட்ட வசதியுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல செய்தி வரும்.

சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வீடு கட்ட தேவையான பணமும், கட்டட அப்ரூவலும் கிடைக் கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதக மாக அமையும்.

25-ம் தேதி முதல் ராசிநாதன் புதன் 6-ல் மறைவதால், உறவினர்களுடன் விரிசல்கள் வந்து போகும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். செவ்வாய் ராசிக்கு 2-ல் நிற்பதால், சேமிப்புகள் கரையும். வழக்கில் அவசரப்போக்கு வேண்டாம்; நிதானம் அவசியம்.

குருவும், ராகுவும் சரியில்லாததால், தர்ம சங்கடமான சூழ்நிலை, திடீர் பயணங்கள், தூக்கமின்மை, கனவுத் தொல்லை வந்து போகும்.

வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். சக ஊழியர் களுடன் பனிப்போர் வந்து நீங்கும். கலைத் துறையினரின் திறமையை வெளிப்படுத்த தகுந்த வாய்ப்பு வரும்.

தீய பழக்கங்களில் இருந்து விடுபடும் நேரம் இது.

மனசாட்சிக்குக் கட்டுப்பட்டவர்களே!

ராசிபலன்

ராகுவும், குருவும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பண வரவு அதிகரிக்கும். முன்பணம் கொடுத்து வைத்திருந்த சொத்துக்கு, மீதி பணத்தையும் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். குடும்பத்தாரின் விருப்பங் களை நிறைவேற்றுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. விசேஷங்களால் வீடு களைகட்டும்.

சூரியனும், கேதுவும் 5-ல் நிற்பதால், பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்க் கவும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், தடைகள் நீங்கும். வாழ்க் கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். வாகனப் பழுதை சரி செய்வீர் கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். நட்பால் ஆதாயம் உண்டு. வெளியூர்ப் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பாதச் சனி தொடர்வ தால், யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். கணுக்கால் வலிக்கும்.

வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். பழைய வாடிக்கையாளர்களும், பங்கு தாரர்களும் தேடி வருவார்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்தி யோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்து கொள்வார். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழ் அடைவீர்கள்.

சவால்களைச் சமாளிக்க வேண்டிய தருணம் இது.

தன்மானம் அதிகம் உள்ளவர்களே!

ராசிபலன்

புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய கோணத்தில் யோசிப்பீர்கள். பண வரவு திருப்தி தரும். வி.ஐ.பி-களின் நட்பு கிட்டும். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்தபடி வங்கிக் கடன் கிடைக்கும். குடும்பத்தில், சச்சரவுகள் நீங்கி  அமைதி நிலவும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். உறவினர் களும், நண்பர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

10-ல் ராகுவும், குருவும் நிற்பதால், அடுத்தடுத்த வேலைகளால் டென்ஷன் ஆவீர்கள். தேவையில்லாமல் எவருக் காகவும் எந்த வாக்குறுதியும் தர வேண் டாம். சூரியன் சாதகமாக இருப்பதால், அரசாங்க விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாக அமையும். அயல்நாட்டில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும்.  உங்களுக்கு ஜன்மச் சனி தொடர்வதால், செரிமானக் கோளாறு, நெஞ்சு எரிச்சல் வந்து போகும்.
கேது 4-ல் நிற்பதால், சேமிக்க முடியாதபடி, வரவுக்கு மிஞ்சிய செலவு கள் இருக்கும். அவ்வப்போது, எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்துபோகும். எதிர்பாராத திடீர் பயணங்கள் உண்டு.
வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். வேலையாட்கள், வாடிக்கையாளர்களுடன் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சக ஊழி யர்கள் ஏதேனும் குறை கூறிக்கொண்டு இருப்பார்கள். கலைத் துறையினருக்கு மூத்த கலைஞர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும்.

வளைந்து கொடுத்து வெற்றி பெறும் வேளை இது.

பொதுவுடைமைவாதிகளே!

ராசிபலன்

சூரியன் 3-ல் வலுவாக அமர்ந்து இருப்பதால், சவால்களில் வெற்றி, நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். அரசியலில் செல்வாக்கு கூடும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் நல்ல விதத்தில் அமையும். சிலருக்கு அயல் நாட்டில் வேலை கிடைக்கும். வழக்கு சாதகமாக அமையும்.

ராசிநாதன் குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். புதனும், சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பூர்வீகச் சொத்தை புதுப்பிப்பீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் உண்டு.

கேது 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், வாழ்வின் சூட்சு மத்தை அறிவீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் அறிமுகம் கிடைக்கும். உங்களைச் சுற்றியிருப்ப வர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள். சனிபகவான் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், பணம் வரும். வெளிநாட்டில் இருப்ப வர்கள் உதவுவார்கள்.

வியாபாரத்தில் பெரிய நிறுவனங் களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். வேலையாட்கள், பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் நற்பெயரை எடுப்பீர்கள். கலைத் துறை யினருக்கு அதிரடி மாற்றங்கள் உண்டு!

தொட்டதெல்லாம் துலங்கும் தருணம் இது.

மண் மணம் மாறாதவர்களே!

ராசிபலன்

ராசிநாதன் சனிபகவான் 11-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். புது பொறுப்புகள் தேடி வரும். பிள்ளைகள் உங்களின் உண்மையான பாசத்தைப் புரிந்துகொள்வார்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள்.
 
புதனும் சுக்ரனும் சாதகமாக இருப்பதால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சொந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். உங்களில் சிலருக்கு புது வேலை கிடைக்கும். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். தாயாரின் உடல் நலம் சீராகும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஒருசிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.


ராகுவும், குருவும் 8-ல் நிற்பதால், சிறு சிறு அறுவைசிகிச்சை, ஏமாற்றம், அடிவயிற்றில் வலி வந்து போகும். சிலர் உங்களை தவறான போக்குக்குத் தூண்டுவார்கள். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். சூரியன் ராசிக்கு 2-ல் நிற்பதால், கண், காது வலி வந்து நீங்கும். பேச்சில் நிதானம் தேவை.

வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். வேலை ஆட்க ளுடன் மனத்தாங்கல் வரும். உத்தியோ கத்தில், மற்றவர்கள் உங்களைத் தாக்கிப் பேசினாலும் பதற்றப்படாதீர்கள். சக ஊழியர்களுடன் விவாதங்கள் வரும். கலைத் துறையினருக்கு, நீண்ட நாள் கனவு நனவாகும்.

தடைப்பட்ட காரியங்கள்  முடியும் நேரம் இது.

சகிப்புத்தன்மை மிகுந்தவர்களே!

ராசிபலன்

செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புதிதாக வீடு, மனை வாங்கு வீர்கள். பிள்ளைகள் ஆக்கபூர்வமாக செயல்படுவார்கள். வழக்கால் இருந்த நெருக்கடி நீங்கும். சகோதரர்கள் உங்க ளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பார்கள்.

சுக்ரன் சாதகமாக இருப்பதால், பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கண்டும் காணாமல் சென்றுகொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பாகப் பிரிவினை சுமுகமாக முடியும்.

ராசிக்குள் கேது நிற்பதால், திடீர் நண்பர்களை நம்பாதீர்கள். கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்து போகும். முக்கிய விஷயங்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். ராசிக்குள் சூரியன் நிற்பதால் வேனல் கட்டி, காரிய தாமதம், முன்கோபம் வந்து செல்லும். அரசு காரியங்கள் இழுபறியாகும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். ராகு 7-ல் அமர்ந்திருப்பதால், வாழ்க்கைத் துணையுடன் கருத்து மோதல்கள், சில நேரங்களில் படபடப்பு, ஒருவித அச்சம் வந்து நீங்கும்.

வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வேலையாட்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். உத்தி யோகத்தில், அதிகாரிகள் மத்தியில்  மதிப்பு கூடும். சக ஊழியர்கள், சகல விதத்திலும் உங்களுக்கு உதவுவார்கள். கலைத் துறையினரின் கற்பனைத் திறன் வளரும்.

பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காணும் காலம் இது.

ஆராய்ச்சி மனம் கொண்டவர்களே!

ராசிபலன்

ராகு 6-ல் அமர்ந்திருப்பதால், எதிர்பார்ப்புகள் எளிதில் முடியும். வி.ஐ.பி-கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். புது வீடு கட்டி குடி புகுவீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். நண்பர்கள், உறவினர்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்வீர்கள்.

சுக்ரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். மனக் கசப்பால் ஒதுங்கி இருந்த உறவினர்கள் விரும்பி வந்து உதவுவர். செவ்வாய் 8-ல் நிற்பதால், சகோதரர்கள் சில நேரங்களில் கோபப் பட்டாலும் அனுசரித்துப் போவார்கள். சொத்துப் பிரச்னையை பேசித் தீர்ப்பது நல்லது. வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவது குறித்து யோசிப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு 12-ல் சூரியனும், கேதுவும் அமர்ந்திருப்பதால், வீண் டென்ஷன், திடீர் பயணம், தூக்கமின்மை வந்து போகும். 6-ல் குரு மறைந்திருப்பதால், முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப விஷயங் களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தின் தரம் உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். கலைத் துறையினர், புதுமை யான படைப்புகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

மனோபலத்தால் நினைத்ததை முடிக்கும் தருணம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு